திங்கள், நவம்பர் 19, 2012

அம்மாவின் நினைவு அலைகள்-9


அம்மாவின் நினைவு அலைகள்-9

பழனியில் அம்மா மூன்று இடங்களில் பள்ளி நடத்தினார்.இதில் திடீரென்று காஞ்சிப்பெரியவரின் ஜனகல்யாண்  பெயரைச்சொல்லி சுப்ரமணியன் என்பவர் தலையிட்டு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தினார். இதனால்சண்முகபுரம் கிளை மூடப்பட்டது. இது குறித்து  காஞ்சி மடம்  பெரியவருக்கு எழுதிய கடிதத்திற்குப் பதில் இல்லை. ஜனகல்யாண்  பெயரில் பல ஏமாற்றங்கள் நடந்துள்ளது.
இப்படி பல சோதனைகள்.பலர் அம்மாவிடம் நேரடியாக பள்ளியை ஏற்று நடத்த கோரிக்கைவைத்தனர்.
அவர் தன்  போக்கில்  மன தைரியத்தால் குறைந்த கட்டணத்தில் பள்ளிகளை நடத்திவந்தார்.ஆசிரிகைகளும் குறைந்த ஊதியத்தில் திறம்பட உழைத்தனர். நான் அரசு உதவி பெரும் பள்ளியில்  வேலை கிடைத்து சென்னைக்கு வந்துவிட்டேன். என் பெரி யமாமாவிற்கு ஏழு  குழந்தைகள்.
மூத்த மகள் கோமதிக்கும் எனக்கும் திருமணம் நடந்தது.அத்தைக்கு சிறிதும் இஷ்டமில்லை.அம்மா எனக்குத்தெரிந்து அண்ணன் வீட்டிற்கு சென்று எவ்வித உதவியும் பெற்றதில்லை.அவரும் உதவி செய்யும் நிலையில் இல்லை. அண்ணனின் கஷ்டத்திற்கு அம்மா உதவி செய்துள்ளார். என் மனைவி கோமதி அமைதி;பொறுமை திறமை அன்பு அடக்கம் உழைப்பு மரியாதை குணக்குன்று என்று சொல்லலாம்.திருமணம் ஆன பின்  இரண்டு குழந்தை பெற்ற பின் தான் எனக்கு சென்னையில் வேலை கிடைத்தது.அம்மாவிற்கு ஒரு பயம். மகன் பிரிந்து தனியாக சென்ருவிடுவானோ என்று. என் மாமாவிற்கு திருமணமான பின் மாமா என் பாட்டிக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. அதற்கு அத்தை ஒரு காரணம் என்று பாட்டி சொன்னதால் சொல்லிக்கொண்டே இருந்ததால் அடிக்கடி எனக்கும் அம்மாவிற்கும் சண்டை வரும்.எனது பேச்சு,நடைமுறை அனைத்தும் மாறிவிட்டத சண்டை போடுவார். ஒருநாள் கூட என் மனைவி என் தாயாரிடம் கோபமாக பேசியோ சண்டபோட்டதோ கிடையாது.எனக்குத்தான் கோபம் வரும். இருப்பினும் வேலை கிடைத்து 10 ஆண்டுகள் காலாண்டு,அரையாண்டு,முழுஆண்டு விடுமுறை என சென்னையில் இருந்து பழனி சென்று வருவோம்.ஊதியம் தவிர வேறு வருமானம் கிடையாது. சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.என் மனைவியும் இது பற்றி பேசியதும் இல்லை. 525 ரூபாய் ஊதியம். வீட்டுவாடகை 100/-எப்படி சமாளித்தாளோ ?நான் M.A;B.Ed;MEd; படித்து முடிக்கும் வரை எதிலும் ஈடுபடவில்லை.வேலை;படிப்பு; தேர்வு;B.Ed; சார்ட்,படம்,கற்பிக்கும் உபகரணங்கள் எல்லாம் மனைவியே.எல்லாம் முடிந்து முதுகலைப்பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்று ஹிந்து மேல் நிலைப்பள்ளியில்  பணியில் சேர்ந்தேன்.நான்கு ஆண்டுகள் கழிந்தன. நிம்மதி என்ற நிலையில்
நடைபாதையில் சென்ற என் மீது புது கார் வாங்கியர் மோதினார்.படுத்த படுக்கை.55 நாட்கள்.
இதற்கு மேலும் நடந்த சோதனைகள். தங்கையின் திருமணம். அம்மா பட்ட மனவேதனை. அப்பாவின் மரணம். மாப்பிளையின் மரணம் என்பவை பெரும் கதைகள்.
தொடரும்.

சனி, நவம்பர் 17, 2012

அம்மாவின் நினைவலைகள்--பகுதி 8

அம்மாவின் நினைவலைகள்--பகுதி 8

அம்மா பல துன்பங்களை எதிர்த்துப் போராடி ஒரு அமைதிநிலை எட்ட இறைவன் விடுவதே இல்லை.எங்கள் பெரிய வீடு மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டது.என் தாத்தா முன் பகுதி எங்களுக்கு என்று கூறி இருந்தார்.எங்களுக்கோ,என் பெரியப்பாவிற்கோ  வீடு பாகப்பிரிவினை செய்யும் எண்ணம் இல்லை. எங்கள் அத்தை நெம்மேனியில்  இருக்கும் பூர்வீக வீட்டைத் தன பெயரில் மாற்ற இந்த பழனி வீடு  மூன்று  பாகமாகப்  பிரிக்கப்பட்டது. என் தாத்தாவின் ஆஸ்தி அந்த ஒரு வீடுதான்.இன்னும் அதிகமாக சொத்து இருந்திருந்தால் என்ன ஆகுமோ தெரியாது.அண்ணன் தம்பிகளுக்குள் பெரிய யுத்தம்.கடைசியில் திருவுளச்சீட்டு போட்டு சமாதானமாக வீடு பிரிக்கப்பட்டுவிட்டது.பெரிய கூடம்.நடுவில் ஒரு சுவர் எழுப்பப்பட்டது.பெரியப்பா வெங்கடேஸ்வரருக்கு எவ்வித கெட்ட  பழக்கம் 
இல்லை என்றாலும் சாமியார் ஜோதிடம் நம்பிக்கை அதிகம். பல ஆண்டுகள் அவர் குடும்பத்துடன் எங்கோ சென்றுவிட்டார். தாத்தாவின் மரணத்திற்குக் கூட அவர் வரவில்லை.அவருக்கு ஒரு ஜோதிடர்.எங்கள் பெரியப்பா மகாதேவா அய்யர் அரசியல் வாதி.ம.போ.சிவஞானம் ஆரம்பித்த தமிழரசுக்கழகத்தில்  அடிப்படை உறுப்பினர். தமிழரசுக் கழக வேட்பாளராக நின்று நகரமன்ற உறுப்பினர் ஆனவர். சம்பாதிக்கத் தெரியாதவர்.அவருக்கு பச்சை என்ற நண்பர். அவர் ஒரு தலால்.அவர் எப்படியோ அவரை மடக்கி வீடு விற்பதற்கு சம்மதம் வாங்கிவிட்டார்.பெரியப்பா வெங்கடேஸ்வரருக்கு ஜோதிடர் வந்து வீட்டை விற்கவில்லை என்றால் பெரும் கஷ்டம் வரும் என்று கூறி வீடு விற்கத்  தயாரானார். இருவருமே கெட்டிக்காரர்கள்.என் அப்பா சேது என்றாலே சாது.அனால், அவர்  வீடு விற்கும் விஷயத்தில் மட்டும் தன அண்ணன்கள் சொல்வதை கேட்கவில்லை.வீட்டு வரைபடம் "ட " வடிவம்.இதில் எங்கள் பாகம் நடுவில்.மூன்றடி நடை பாதை.அதை வாங்கிய கணேசன் செட்டியாருக்கும் எங்களுக்கும் சண்டை வந்து கொண்டே இருக்கும்.இந்த சண்டையில் எங்களுக்கு உள்ளூர் பெரியவர்கள் ஆதரவு அதிகம். எங்களுக்காக எங்கள் எதிர்வீட்டில் இருக்கும்   துரை,கந்தசாமி போன்றோர் அடிதடியில் இறங்கி காவல் நிலையம் செல்வோம். இது அம்மாவிற்கு நிம்மதியில்லை.அப்பாவிற்கும்.அந்தவீட்டில்தான் மழலையர்,பள்ளி ஹிந்தி வகுப்புகள்.
அவரின் பலவித எதிர்ப்புகள் நடுவில் இரண்டுமே நன்றாக நடந்தது.நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜ சண்முகம்,தங்கராஜ்,நகர்மன்றத்தலைவர் கோவிந்தராஜ்,தலைவர் காணியாளர் கே.சின்னப்பன்,p.s.கே.லக்ஷ்மிபதிராஜ் ,லக்ஷ்மணன் செட்டியார்.எம்.கே.எம். அப்துல் காதர்,. போன்ற அனைவரும் எங்களுக்கு பேராதரவு வழங்கினர். செட்டியாரிடம் வீடு கை மாறியது, அவர்முதலில் வீட்டிற்குப் பின்னல் வீடு கட்டினர்.அதை ஒரு  பாலசமுத்திரம் அய்யங்கார் வாங்கினார்.அனைவருக்குமே நாங்கள் வீட்டை விற்றுவிடுவோம் என்ற எண்ணமே.நாங்கள் விற்கவில்லை என்றதும் அவர் ஒரு தாசில் தா ருக்கு விற்றார். சில நாட்கள் மிக நட்பாயிருந்தவர்  வீடு விற்கமாட்டோம் என்பதை அறிந்ததும் முதலில் தன செல்வாக்கைப்பயன்படுத்தி பள்ளி நடத்த விடாமல் ஒரு நீதிமன்ற இடைக்கல் உத்திரவு போல் தன மேலதிகாரியிடம் வாங்கினார். பள்ளி கோடை விடுமுறைக்குப்பின் திறக்க ஐந்து நாட்களே. அம்மாவிடம் பணம் இல்லை. எப்படியோ சமாளித்து ச,வெங்கடாசலம் வழக்கறிஞர் மூலம் இடைக்காலத்தடையை வுயர் நீதிமன்றம் மூலம் நீக்கி பள்ளி ஆரம்பித்தார். இந்த மனோ திடம் பொருளாதார வசதியின்றி எப்படி?இது ஒரு தெய்வ பலம்.அனைவரின் ஆதரவு. எதிரிகள் பணபலம் மிக்கவர்கள்.என் தாத்த ஆசீர்வாதம் உள்ளூர்  பெரியவர்கள் எங்கள் குடும்பத்தின் மீது காட்டிய அக்கறை.எல்லாம் இறைவன் அருள்.
அங்கு எங்கள் காவல் தெய்வம் கருப்பணசாமி இருந்து காப்பதாக எங்களுக்கு பல அனுபவம்.அதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர்,எதிர் வீட்டு சுயமடத்தில் இருந்த பெரியவர்கள் நேரில் 
கண்டதாகவும் கூறுவார். எதோ ஒரு ஆற்றல் மனிதர்களை ஆட்டி வைக்கிறது என்பது உண்மை.
தொடரும்.

வெள்ளி, நவம்பர் 16, 2012

அம்மாவின் நினைவு அலைகள்-7

அம்மாவின் நினைவு அலைகள்-7
1968ஆம்  ஆண்டு பள்ளி திறந்ததும்,அம்மா இலவச ஹிந்தி வகுப்புகள் நடத்தினார். நானும் நடத்த ஆரம்பித்தேன்.அதற்கு சபா மூலம் மாதம் 120 ரூபாய் மத்திய அரசு மானியமாக வழங்கினர். அதுவும் ஓராண்டிற்கு ஒரு முறை வரும்.நாற்பது மாணவர்கள் கட்டாயம் தேர்வு எழுதவேண்டும்.நுழைவுக்கட்டணம் ரூபாய் ஒன்று  என்ற விகிதத்தில் வசூலித்துத் தரவேண்டும்.சபாவுக்கு வருமானாம். ஹிந்தி போராட்டத்தால் சபாவின்  மாணவர்கள் குறைந்த நேரத்தில் நாங்கள் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டோம்.அப்பொழுது சபாவில் பணியாற்றிய செயலர், அமைப்பாளர்கள் பிரசாரகர்களை சந்தித்து  உற்சாகப் படுத்தினர். செயலாளர்   தி.பி.வீரராகவன் ஜீ ,அமைப்பாளர்கள் ஈ.தங்கப்பன் ஜீ ,சுமதீந்திரா ஜீ ,எம்.சுப்ரமணியன் ஜி, வி.எஸ்.ராதாக்ருஷ்ணன் ஜி, போன்றோர் சபாவை காப்பதற்குப் போராடினர். எங்கள் வீட்டிற்கும் கல்லூரி மாணவர்கள் ஹிந்தி வித்தியாலயத்தை மூடவேண்டும் என்று ஊர்வலமாக வந்தனர்.நான் மூடிவிடுகிறேன், இங்கு விரும்பி வருபவர்களுக்கே கற்பிக்கிறேன். எனக்கு மாத வருவாய் வேண்டும் என்றேன். மாணவர்கள் சென்று விட்டனர். அன்று மாலையே சில கல்லூரி மாணவர்கள் ஹிந்தி பயில வந்தனர்.
அன்றைய சபா செயலர்கள்,அமைப்பாளர்கள் அனைவரும் எங்கள் சேவையைப் பாராட்டினார். ஆனால் அங்கும்  தேர்தல். ஜாதி,போராட்டம். ஜே,எஸ்,ராமதாஸ் செயலராக வந்ததும் என் தாயாரின் முழு நேர வித்யாலயம் பகுதி நேரமாக மாற்றப்பட்டது. நேர்மையான பிரசாரகர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.சென்ற ஆடு வயதான ப்ரசாகர்களுக்குப் பாராட்டுவிழா நடத்தினர். அதற்கு என் அம்மாவிடமே  ரூபாய் 600/-கட்டணம் வாங்கி உள்ளனர். அம்மா வயதானதால் , ஆடோவில் தான் செல்லவேண்டும் .இரண்டாயிரம் செலவு. அங்கு பாராட்டி எதுவும் பேசவில்லை. பிரசாரகர்கள்  ஊக்குவிக்கப் படவில்லை. ஆனால் ,ஹிந்தி பிரசாரம் மட்டும் நடந்துவருகிறது. பலர் சபாவை எதிர்பார்ர்க்காமல் ஹிந்தி பிரசாரம் செய்கின்றனர்.ஏனென்றால் பொதுமக்கள் விரும்பி படிக்கின்றனர். நிரந்தரமான பிரசாரகர்கள் இன்றியே ,மாநில அரசின் உதவியும் இன்றி லக்ஷக்கணக்கில் மாணவர்கள் ஹிந்தி படிப்பது மகாத்மா காந்தி அடிகளின் தீர்க்க தரிசனம் தான். அவர் சென்னையில் 1918இல் சபாவை ஆரம்பித்தார்.
தொடரும்.

இளைஞர்கள் வலைத்தளம், இந்தியாவின் எதிர்காலம்


 





தர்மத்தால் செல்வம் குறையாது
?????????? 26,2012,
09:09  IST
* நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர். ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொள்ளாதீர். 
* பொறாமை மனிதனுடைய நன்மைகளை அழித்து விடுகிறது.
* வசதி இல்லாத ஒருவன் மனம் நொந்தவனாக உங்களிடம் ஏதாவது கேட்டால் அவனை விரட்டாதீர்கள். கொஞ்சமேனும் கொடுங்கள். 
* ஒருவர் தர்மம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நல்லெண்ணத்தின் காரணமேயாகும். கஞ்சத்தனம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட தவறான எண்ணத்தின் காரணமேயாகும்.
* கஞ்சத்தனத்தைப் பற்றி பயந்து கொள்ளுங்கள். கஞ்சத்தனம் ஷைத்தானின் குணமாகும். 
* தர்மம் கொடுப்பதினால் இருக்கும் செல்வம் அழிந்து போவதில்லை. தர்மம் செய்கின்றபோது வருகின்ற துன்பமும் துயரமும் அல்லாஹ்வின் கருணையின் அறிகுறியாகும்.
* துர்பாக்கியமுள்ளவனிடமிருந்து இரக்க சிந்தனை அகற்றப்படுகின்றது.
- நபிகள் நாயகம்


 இடுகைகள்  பல ,
கணினி  பிறப்பிக்கிறது
வலைத்தளங்கள் மூலமாக.
இளைஞர்கள்  வலைத்தளம்,
இந்தியாவின்  எதிர்காலம் 
ஒளிமயமானது  என்பதற்கே 
ஒரு ஒளிச்சுடராக விளங்குகிறது.
அதில் வெளிநாட்டு வேதனைகள் ,
சஹிக்கும்  நாங்கள்,
மத வேற்றுமை மறக்கிறோம்.
மொழி வேற்றுமை  மறக்கிறோம்.
அழகுதேவதைகள் கண் முன் தோன்றினாலும்.
எண்களின் பார்வை,அவர்களின் மேல் 
படுவதில்லை. புலன் அடக்கம் கற்றுக்கொள்கிறோம் .
புலால் உண்பதில் சில சமயம் ஜாதி வேறுபாடு மறக்கிறோம்.
தம்பி,தங்கைகளுக்காக,அம்மாவிற்காக ,உற்றார் உறவினர்களுக்காக,
சிக்கனைத்தை  கடைபிடிக்கிறோம்.
தாய்நாட்டில்  இல்லா வேதனை இருந்தாலும் 
நாங்கள் இருக்குமிடத்தில்,
வையகம் வாழ்கிறது.
ஜாதி வேற்றுமைகள் இல்லை.
மொழி வேற்றுமைகள் இல்லை.
மத வேற்றுமைகள் இல்லை.
வசுதைவ குடும்பகம் என்ற நம் ஆன்றோர் 
கூற்று இங்கு மெய்யாகிறது,
இது ஒரு வெளிநாட்டு இளைஞரின் கவிதை.(surukkam)
வெளிநாட்டுப்பிரிவில் அவர் காணும் சுகம்.
பாரதநாடு பலம் பெரும் நாடாக  
இளையர்கள் கனவில் ஏற்படும் தடைகள் 
மத-இன-ஜாதிக் கலவரங்கள்.
மீண்டும் மீண்டும் ஒளிக்க  வேண்டிய 
அவ்வையின் பாடல்:
இட்டார் பெரியார் ;இடாதார் இழி குலத்தோர்.
பாரதியின் பாடல் 
ஜாதிகள் இல்லையடி பாப்பா.
ஆனால் இன்று ஜாதி என்ற பெயரில்.
3% விகித முள்ள ஜாதியைமட்டும் 
மிகக் கீழ்த்தரமாக தாக்கும் கூட்டம்.
இது பொறாமையா?இயலாமையா?
அந்தப்  பிரிவு இல்லை என்றால் 
சுபகாரியங்கள் யாரும் நடத்த 
ஒரு அச்சம்.
திதி கொடுக்க அந்த இனம் வேண்டும்.
புதிய தொழில் துவங்க 
கணபதி ஹோமம் வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற யாகங்கள் வேண்டும்.
ஹோமங்கள் வேண்டும்.
உண்மைகளை உதைக்க உதைக்க ,
ஆலயங்களில் கூட்டம் .
முன்னேற்றச் சிந்தனைகள் 
முன்னேறச் செய்யும்.
பாரதம் பார் புகழ  
இன வேற்றுமை ஒழிய வேண்டும்.
ஆனால்,
அரசியல்வாதிகள் 
தங்கள் சுய நலத்திற்கே 
ஜாதி வெறி, சமயவெறி தூண்டும் போக்கு.
இதே சத்திய வாக்கு.

வியாழன், நவம்பர் 15, 2012

என் அம்மாவின் நினைவு அலைகள் --பகுதி 6


என் அம்மாவின் நினைவு அலைகள் --பகுதி 6
என்  அம்மாவிற்கு  இரண்டு அண்ணன்கள். பெரியவர்  தன்  அம்மா  தன்  தம்பிக்கு  அதிக சலுகைகள் தருவதையும் ,  தன்  உழைப்பிற்கேற்ற  அன்பும் மரியாதையும் கொடுக்கவில்லை  என ஊரைவிட்டு சென்றுவிட்டார். என் தாத்தாவின் வருமானத்தில் குடும்பம் நன்றாகவே நடந்துள்ளது.  என் அம்மாவிற்கு ஒரு தம்பி. ஒரு தங்கை.தம்பி வேலைக்கு வந்ததுமே ,குடும்பப்பொறுப்பு 
முழுவதையும் அவரே ஏற்றுக்கொண்டார். தன்  தங்கைக்கு  திருமணம் செய்வது,என் அம்மாவின் பிரச்சனைகளைத் தீர்ப்பது,அம்மாவிற்காக சிலவு செய்வது ,உதவுவது எல்லாமே அவர் தான்.
அப்பொழுதுதான் என் தங்கை பிறந்தாள் .எனக்குப்பின் பிறந்த குழந்தைகள் இறந்ததால் ,என் தங்கைக்கு  வேம்பு என்று பெயர்வைத்தனர்.அப்பொழுது மாமா மதுரையில் பனி ஆற்றினார். ஒருநாள் தங்கை அழுததால் அவளை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றார் அம்மா. அப்பொழுது அங்கு சுப்ரமனியபுரத்தில்  பாலா குருகுலம் என்ற மழலையர் பள்ளி நடந்து கொண்டிருந்தது.
அவர்கள் மூலம் விவரம் அறிந்து பழனியில் ஒரு பள்ளி துவங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. 1968இல் பழனியில் shree பாலமுருகன் மழலையர் பள்ளி துவக்கப்பட்டது.
பழனி ஆர் .எம்.கே. சித்த வைத்தியசாலை சிவ  சுப்ரமணியம் ஓம்,தலைமையில்  பள்ளி துவக்கப்பட்டது. ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆசிரியை நியமிக்கப்பட்டார்.ரூபாய் நுழைவுக் கட்டணம் இரண்டு. மாதக்கட்டணம் ரூபாய் 5/- மூன்றாண்டுகள் வரை வருமானம் கிடையாது. அந்த வறுமையான நிலையிலும் அம்மாவின் கடின உழைப்பு  பள்ளி  வளர காரணமாக இருந்தது. ஊர்ப் பெரியவர்களின் ஆதரவும் இருந்தது.  
தொடரும்.

அம்மாவின் நினைவலைகள்--பகுதி--5.


அம்மாவைத் தனிக்குடித்தனம் அல்லது வீட்டிற்கு செல்லவிடாமல் செய்த தாத்தா ,ஒரு தெய்வீக மனிதர்.அவர் தான் மரணம் அடையும் நாளை அறிந்து வைத்திருந்தார்.மரணத்திற்கு இரண்டு நாள் முன்பு அம்மாவை அழைத்து தாத்தா ,கோமதி,! சென்றதைக் கருதாதே, நான் நாளை மறுநாள்  இறந்துவிடுவேன்.எனக்கு சாப்பிட பழங்கள் வாங்கிவா.பள்ளிக்கு லீவு போடு. நான் இறந்த பின் இந்த வீடு துண்டுதுண்டாகி விடும். பல கஷ்டங்கள் வந்தாலும் நீ வீட்டை விற்கமுடியாது. நான் உனக்கு  பக்க பலமாக இருப்பேன்.தெய்வம் துணை இருக்கும்.இந்த ஆசிர்வாதம் செய்ததும்,அவர் சொன்ன படி அவர் இறந்துவிட்டார். அந்த ஆசிகளின் பலன் அந்த வீடு  பல துண்டுகளானாலும்   அம்மா வீட்டைக் காப்பாற்றிவிட்டார்.

           இது தான் ஒரு தெய்வீக சம்பவம்.
1965-67இரண்டு  ஆண்டுகள் அம்மா படுத்த  படுக்கையானார்.அப்பொழுது தலைவர் கே.சின்னப்பன்,அவர்கள் பரிந்துரைப்படி,அம்மா வேலைபார்த்த சொக்கலிங்கக் கவுண்டர்  நினைவு  உயர் நிலைப்பள்ளி,கொரிக்கடவு ,எனக்கு ஹிந்தி ஆசிரியர் பணி கிடைத்தது.ஆனால்,இருமொழிக்கொள்கை ப காரணமாக,பயிற்சி பெறாத ஹிந்தி ஆசிரியர்கள்  பணி இழக்க நேர்ந்தது. அந்நிலையில், எனக்கு அம்மா மிகவும் தைரியமாக இருந்தார். அப்பாவும் கடுமையாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றினார்.அம்மாவின் உடல் நிலை. தேர்ச்சி அடைந்தது.  அச்சமயம்,தக்ஷின் பாரத ஹிந்தி பிரசார் சபா  புதிய ஹிந்தி வகுப்புகள் ஆரம்பிக்கும் திட்டம் கொண்டுவந்தது. அம்மாவும்  ஹிந்தி வகுப்புகள்  ஆரம்பிக்க ஊக்குவித்தார்.
தொடரும்.

புதன், நவம்பர் 14, 2012

என் அம்மாவின் நினைவு அலைகள்.பகுதி--4

1956 இல்  அம்மாவிற்கு சிங்கம்புணரி   உயர் நிலைப் பள்ளியில் ஹிந்தி ஆசிரியர் பணி  கிடைத்தது.
பின்னர்  கொம்புக்காரநேந்தல் உயர்நிலைப்பள்ளியில் .அதெல்லாம் மிகவும் கஷ்டமான சூழல்.  இதற்கிடையில் கர்ப்பம் வேறு.இன்றைய காலம் போல் வசதியில்லை.ஆண்டுக்கு ஒரு குழந்தை.அதை சரிவர கவனிக்க முடியாத சூழல். இரக்கமற்ற உதவாத உறவினர்கள்.ஓராண்டு ஆசிரியர் பயிற்சி அனுப்பக் கூட விரும்பாத தெரியாதவர்கள்.பின்னர் பழனிக்கே திரும்பி வந்து அருகில் உள்ள நெய்க்காரப்பட்டி,ஆயக்குடி,கோரிக்கடவு  பள்ளிகளில் பணியாற்றினார்.எனக்குப்பின் பிறந்த ஆறு பெண் குழந்தைகள் அகாலமரணம்.மனவேதனை,புகுந்த வீட்டுக்கொடுமை.அம்மாவிற்கு ஆதரவு என் மாமா நாகராஜன்,பாட்டி,தாத்தா,மற்றொரு மாமா சுப்பிரமணியன்,அப்பா. ஆனால் அம்மா படுத்த படுக்கையாக நோயிருக்கும்போது அப்பா  தான் முழு கவனிப்பு. என் மாமா,பாட்டி அடிக்கடிவந்து பார்த்துவிட்டு செல்வார்கள்.

ஆஹா!  என் அப்பாவின் அப்பா தாத்தா பற்றி கூற மறந்துவிட்டேனே! அவர் ஒரு தெய்வீக மனிதர். அவர்  எனக்குத்  தெரிந்து தனியாகவே வீட்டின் ஒரு ஓரத்தில் சமைத்து சாப்பிடுவார்.அந்த பெரிய வீட்டில் மூன்று தனிக்குடித்தனங்கள் .பெரியப்பா,சின்ன பெரியப்பா,என் அப்பா. ஆனால்,எங்கள் தாத்தா பார் வீட்டிலும் சாப்பிட்டது கிடையாது.அவரிடம் தான் நான்,பெரியப்பா குழந்தைகள் வாங்கி சாப்பிடுவார். எங்கள் வீட்டுப் பூட்டை உடைத்து தாரளமாக  பலசரக்கு சாமான்கள் திருடுபோகும்.அம்மா பணி முடிந்து திரும்பியதும் வீடு போர்க்களமாகி விடும்.ஆனால் தனியாக வேறு வீட்டிற்குப் போக விடமாட்டார்.ஒரு முறை  வீட்டை காலி செய்யும் பொழுது போககக்கூடாது என்று
வண்டி சக்கரத்தில் படுத்துக் கொண்டார்.

தொடரும்.

என் அம்மாவின் நினைவு அலைகள்--பகுதி-3

அப்பா பற்றி அம்மா புகழ்ந்து பேசுவார். அவர் அப்பா பற்றி,

அவர் கடினமாக உழைக்கிறார். 
அவர் வருமானம் தானம் ,தர்மம்,அண்ணா குடும்பத்திற்கு செல்கிறது என்பார். 
இது சம்பந்தமாக சிலசமயம் சண்டை வாக்குவாதம் நடக்கும்.
இருந்தாலும் அப்பா என்றால் அம்மாவிற்கு உயிர்.

என் அப்பா  தன்  மரணத்தை புரிந்துகொண்டு  சொன்னார்,
டேய் ,அனந்து  போன வாரம் 
,நான்  வேலை  செய்யும்  இடத்தில் விடிய,விடிய இனிப்புகள் செய்தேன்.
அதனால் தான் கண் கெட்டுவிட்டது .
வேலை செய்து பணம் கேட்டேன்.
அவர்கள் உன் அண்ணன் வாங்கிச்சென்று விட்டார் என்றனர் .
என் மனது மிகவும் கெட்டுவிட்டது  என்றார்.
தன் தங்கையையும் வெறுப்பாக பேசினார்.
மனிதர்கள் தங்கள் தம்பி இடமும் இவ்வளவு இரக்கமற்று நடந்துகொள்வார்கள் 
என்பதை என் அப்பா தன் எழுபத்தைந்தாவது வயதில் புரிந்து கொண்டார்.
அவர் எல்லோருக்கும் உதவி உள்ளார்.
 தன்  குடும்பத்தை விட  அதிகமாக என்பது 
அப்பாவின் மரணத்திற்குப்பின் துக்கம் விசாரிக்க வந்தவர்கள் கூறினார்கள் .
அதுதான் செத்தால் தெரியும் என்று சொன்னார்களோ என்னவோ,அவர் இறந்த பின் அவர் இழப்பு மிகவும் பேரிழப்பாக இருந்தது.அம்மா மிகவும் உடைந்து போனார். ஆனால் எதோ ஒரு சக்தி அவருக்கு ஒரு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தந்தது .

என் அம்மாவின் நினைவலைகள் ---பகுதி 2.


என் அம்மாவின் நினைவலைகள் ---பகுதி 2.

திருமணம்  அவசரமாக முடிந்துவிட்டதே,
என்ன,அம்மா நினைத்தீர்கள் - என்றேன்,
எல்லாம் விதிப்படியே என்றார்.
சமாதானம் வேறு,
ஜாதகம்,பொருத்தம் பார்த்த கல்யாணங்களும் ,
தலை எழுத்து சரி இல்லை என்றால்,
நிம்மதி இல்லையே  என்று.
அம்மா,கர்நாடக சங்கீதம்  பயின்றுள்ளார்.
ஹார்மோனியம் வாசிப்பார்.
புகுந்த வீட்டில் இதற்கெல்லாம்  தடை.
பெரிய குடும்பம்.
அம்மாவிற்கு பின்னர்தான் விவரம்   தெரிந்துள்ளது.
வசதிகள் அதிகம். பாட்டி வழி  சொத்து.
எவ்வித உழைப்பும் இன்றி அழித்து  வந்துள்ளனர்.
சீட்டு விளையாட்டு. விளையாட வருபவர்களுக்கும் சேர்த்து  போண்டா,பஜ்ஜி ,காபி ,
வருமானம் இல்லை.ஆஸ்திகள் கரைந்து கொண்டேவந்தது.
உறவினர்கள் கூட்டமும்.
இறுதியில் மிஞ்சியது வீடு மட்டும்.
அம்மாவிற்கு தாய் வீட்டு சீதனத்தில் மிச்சம் இருந்தது,
சங்கீத ஞானமும் ,சம்ஸ்கிருத  அறிவும்.
அம்மாவின் நிலை அறிந்த  பழனி கிளை லக்ஷ்மி விலாஸ் வங்கி மேலாளர் வக்கீல் 
ராமச்சந்திர ஐயர்  மனைவி  ஆலோசனை பேரில்,
தெரிந்த சமஸ்கிருத எழுத்தறிவைக்  கொண்டு,
ஹிந்தி வகுப்புகள் நடத்த ஆரம்பித்துள்ளார்.
மாதம் நாலணா,எட்டணா  கட்டணம்  தான்.
குடுபத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பு,
பலவித அபவாதங்களுக்கு இடையில் ஹிந்தி  தேர்வுகளும்  எழுதிஉள்ளார்.
நான் அம்மாவிற்கு இரண்டாவது பிள்ளை.
எனக்கு மூன்று வயது. அப்பொழுது,
என் தாத்தா,பாட்டி,பெரியப்பா நாத்தனார் அப்பா அனைவரின் எதிர்ப்புமிக்க 
சம்மதத்துடன்  பள்ளியில் சென்று படித்துள்ளார். 
மடி ஆசாரம்  வேறு, அவ்வகையில் ஓர்ப்படி,நாத்தனார் கொடுமை.
புத்தகம் பைண்டிங் செய்த துணி ஆசாரத்திற்கு பங்கம் என்று,
பழனி பெண்கள் பள்ளி ஆசிரியை கார்த்திகாயினி அம்மாவிற்கு முழு ஆதரவு.
ஒருநாள் நான் அம்மாவுடன் பள்ளிக்குச்சென்றதும் ,
அக்கால சூழலின் எக்காள -ஏளனத்தால்  பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி.
இதையெல்லாம் அம்மா சிரித்துக்கொண்டே சொல்வார்.
ஒருநாள் அப்பா கை எழுத்துப்போடவே தெரியாது என அறிந்து 
கை எழுத்துப்போட சொல்லிக்கொடுத்துள்ளார்.
அவர் எது செய்தாலும் வீட்டு வேலைகள்  செய்து முடித்த பின்னர் தான்.
அம்மா இரவு 12க்கு மேல் தான் அப்பாவை சந்திக்க முடியுமாம் .
காலை ஐந்து மணிக்கே எழுந்திருக்கவேண்டும்.
இந்தக்காலத்தில் நடக்குமா? வழக்கு நடக்கும்.
அவர்களுக்கு அம்மாவை படிக்க அனுமதித்ததே பெரிய  மிகப்பெரிய ஹிமாலய சலுகை.
எல்லோரும் சொல்வார்களாம் ,எங்கள் அனுமதியே ,உனக்கு வெகுமதி.
இல்லையென்றால் உன்னால் படித்திருக்க முடியாது.
இந்த ஒரு சங்கட நிலையிலும் அவர் சிரித்தே சமாளித்து ,
தன்  சோகக்கதையை, நகைச்சுவையாகவே கூறுவார்.
அப்பா ரொம்ம நல்லவர்தான். அவரை அப்படி வளர்த்துவிட்டனர்.
சேதுராமனை,ஆரம்பத்தில் சோதுராமன் என்று எழுதுவாராம்.
எங்கள் வீட்டில் அனைவரும் சாப்பாடு பிரியர்கள் என்பார் சிரித்துக்கொண்டே.
அம்மாவின் நினைவு அலைகள் தொடரும்.

என் அம்மாவின் நினைவலைகள்--பகுதி-1.


என் அம்மாவின் நினைவலைகள்--பகுதி-1.

என் அம்மா 
உழைப்பு,
ஊதியம்  இல்லா உழைப்பு.
13 வயதில் திருமணம்.
அம்மா சொல்வது ஒரு நகைச்சுவையாக இருந்தாலும்,
அவர் ஆழ்மனம் எப்படிப்பட்டது;
அவருக்கு எப்படி பொறுமை;
அவரது திறமை எப்படி புகுந்தவீட்டில்,
தூசி துருபிடித்தது என்பதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார்.
அவரது திருமணம் நிச்சயிக்கப்படவில்லை.
பெற்றோர்கள் கலந்து பேசவில்லை. 
அது காதல் திருமணமும் அல்ல.
ஆச்சரியமாக உள்ளதா?
அதுதான் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணமோ?
என் கொள்ளுப்பாட்டி பழனி சென்றுள்ளார்.
அங்கு சொந்தக்காரர்வீட்டிற்கு சென்றுள்ளார்.
என் அத்தைக்கு திருமணம்.
என் பாட்டி பேத்தியைப்பற்றி கூற,
என் தாத்தா என் பெண் கல்யாணத்துடன் திருமணம் செய்யலாம்.
பெண்ணை அழைத்துவாருங்கள் என்றாராம்.
பெண் பார்க்கும் சம்பிரதாயம் இல்லை.
பெற்றோர்களும் சந்திக்கவில்லை.
நேரடியாக திருமணமண்டபம்.
பழனியிலிருந்து என் கொள்ளுப்பாட்டி காமுப்பாட்டி என்றால்
 வத்தலக்குண்டில் எல்லோருக்கும் தெரியும். நடந்தே சென்றுள்ளார்.
அவசரக்கல்யாணம்.

திருமண அழைப்பிதல் அடிக்கவில்லை. 
உற்றார்-உறவினர்களுக்கு தகவல்மட்டும்.
அப்பொழுது தொலை பேசி,கைபேசி,கணினினி, எதுவும் கிடையாதே,
போக்குவரத்து  சாதனங்களும் இல்லை. 

 நேரடியாக அனைவரும்  திருமணமண்டபம் சென்றுள்ளனர்.
அங்கு இரு    மணமேடை . இரண்டிலும் மாப்பிள்ளைகள்.
அவசர அவசரமாக அலங்கரித்து,
மண  மேடைக்கு பெண்ணை அனுப்பினால்.
என் அம்மா, எதுவும் புரியாமல்,
நாத்தனார் மாப்பிள்ளை அருகில் உட்கார,
என் மாமா பார்த்த பெண் வேறு,அமர்ந்த பெண் வேறு,என,
கோபமாக எழுந்திருக்க,
அதற்குள் சமாதானம் செய்து ,
எங்கம்மாவை,தரதர என இழுத்து ,,என் அப்பா அருகில் 
உட்காரவைத்துள்ளனர். இதற்குள் என் தாய் மாமாவிற்கு ஒரு தவிப்பு.
கோத்திரம் கூட கேட்கவில்லையே என.
அதை எங்கம்மா தமாசாகக் கூறுவார்--
கோத்திரம் ஒன்றே இருந்தால், "ஓடிவா"- என்று மாமா கூறினாராம்.
அம்மா கௌண்டிண்யம்.
நாங்க கௌசிகம்.
மாமா ,"கௌ" என்றதும் எழுந்தாராம்.
அம்மா  தயாராக .
ஓட்டப்பந்தய வீராங்கனைபோல் தயாரானாராம்.
"ண்டிண்யம்  "என்றதும்,மாமா அமர,அம்மாவும் அமர்ந்தாராம்.
அம்மா கருப்பு.அப்பா சிவப்பு.
இதுவேறு பிரச்சனை.
அப்படி இப்படி திருமணம் முடிந்தது
 பின்னர் தான் வயது வித்தியாசம்,ஜாதகம் 
எல்லாம் பார்த்துள்ளனர். கிட்டத்தட்ட 15-16 வயது வித்தியாசம்.
ஏக நக்ஷத்திரம்.
திருமணம் ஒருவியப்பாக முடிந்தது,
அம்மா தன வேதனைகளை மறந்தோ,மறைத்தோ,
தமாஷாக தன் திருமணம் நடந்ததைக் கூறுவார்.
அவர் மன தைரியம், அந்த 12-13 வயது. அவர் பட்ட பாடு.
தொடரும்.