என் அம்மாவின் நினைவு அலைகள் --பகுதி 6
என் அம்மாவிற்கு இரண்டு அண்ணன்கள். பெரியவர் தன் அம்மா தன் தம்பிக்கு அதிக சலுகைகள் தருவதையும் , தன் உழைப்பிற்கேற்ற அன்பும் மரியாதையும் கொடுக்கவில்லை என ஊரைவிட்டு சென்றுவிட்டார். என் தாத்தாவின் வருமானத்தில் குடும்பம் நன்றாகவே நடந்துள்ளது. என் அம்மாவிற்கு ஒரு தம்பி. ஒரு தங்கை.தம்பி வேலைக்கு வந்ததுமே ,குடும்பப்பொறுப்பு
முழுவதையும் அவரே ஏற்றுக்கொண்டார். தன் தங்கைக்கு திருமணம் செய்வது,என் அம்மாவின் பிரச்சனைகளைத் தீர்ப்பது,அம்மாவிற்காக சிலவு செய்வது ,உதவுவது எல்லாமே அவர் தான்.
அப்பொழுதுதான் என் தங்கை பிறந்தாள் .எனக்குப்பின் பிறந்த குழந்தைகள் இறந்ததால் ,என் தங்கைக்கு வேம்பு என்று பெயர்வைத்தனர்.அப்பொழுது மாமா மதுரையில் பனி ஆற்றினார். ஒருநாள் தங்கை அழுததால் அவளை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றார் அம்மா. அப்பொழுது அங்கு சுப்ரமனியபுரத்தில் பாலா குருகுலம் என்ற மழலையர் பள்ளி நடந்து கொண்டிருந்தது.
அவர்கள் மூலம் விவரம் அறிந்து பழனியில் ஒரு பள்ளி துவங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. 1968இல் பழனியில் shree பாலமுருகன் மழலையர் பள்ளி துவக்கப்பட்டது.
பழனி ஆர் .எம்.கே. சித்த வைத்தியசாலை சிவ சுப்ரமணியம் ஓம்,தலைமையில் பள்ளி துவக்கப்பட்டது. ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆசிரியை நியமிக்கப்பட்டார்.ரூபாய் நுழைவுக் கட்டணம் இரண்டு. மாதக்கட்டணம் ரூபாய் 5/- மூன்றாண்டுகள் வரை வருமானம் கிடையாது. அந்த வறுமையான நிலையிலும் அம்மாவின் கடின உழைப்பு பள்ளி வளர காரணமாக இருந்தது. ஊர்ப் பெரியவர்களின் ஆதரவும் இருந்தது.
தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக