அம்மா பல துன்பங்களை எதிர்த்துப் போராடி ஒரு அமைதிநிலை எட்ட இறைவன் விடுவதே இல்லை.எங்கள் பெரிய வீடு மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டது.என் தாத்தா முன் பகுதி எங்களுக்கு என்று கூறி இருந்தார்.எங்களுக்கோ,என் பெரியப்பாவிற்கோ வீடு பாகப்பிரிவினை செய்யும் எண்ணம் இல்லை. எங்கள் அத்தை நெம்மேனியில் இருக்கும் பூர்வீக வீட்டைத் தன பெயரில் மாற்ற இந்த பழனி வீடு மூன்று பாகமாகப் பிரிக்கப்பட்டது. என் தாத்தாவின் ஆஸ்தி அந்த ஒரு வீடுதான்.இன்னும் அதிகமாக சொத்து இருந்திருந்தால் என்ன ஆகுமோ தெரியாது.அண்ணன் தம்பிகளுக்குள் பெரிய யுத்தம்.கடைசியில் திருவுளச்சீட்டு போட்டு சமாதானமாக வீடு பிரிக்கப்பட்டுவிட்டது.பெரிய கூடம்.நடுவில் ஒரு சுவர் எழுப்பப்பட்டது.பெரியப்பா வெங்கடேஸ்வரருக்கு எவ்வித கெட்ட பழக்கம்
இல்லை என்றாலும் சாமியார் ஜோதிடம் நம்பிக்கை அதிகம். பல ஆண்டுகள் அவர் குடும்பத்துடன் எங்கோ சென்றுவிட்டார். தாத்தாவின் மரணத்திற்குக் கூட அவர் வரவில்லை.அவருக்கு ஒரு ஜோதிடர்.எங்கள் பெரியப்பா மகாதேவா அய்யர் அரசியல் வாதி.ம.போ.சிவஞானம் ஆரம்பித்த தமிழரசுக்கழகத்தில் அடிப்படை உறுப்பினர். தமிழரசுக் கழக வேட்பாளராக நின்று நகரமன்ற உறுப்பினர் ஆனவர். சம்பாதிக்கத் தெரியாதவர்.அவருக்கு பச்சை என்ற நண்பர். அவர் ஒரு தலால்.அவர் எப்படியோ அவரை மடக்கி வீடு விற்பதற்கு சம்மதம் வாங்கிவிட்டார்.பெரியப்பா வெங்கடேஸ்வரருக்கு ஜோதிடர் வந்து வீட்டை விற்கவில்லை என்றால் பெரும் கஷ்டம் வரும் என்று கூறி வீடு விற்கத் தயாரானார். இருவருமே கெட்டிக்காரர்கள்.என் அப்பா சேது என்றாலே சாது.அனால், அவர் வீடு விற்கும் விஷயத்தில் மட்டும் தன அண்ணன்கள் சொல்வதை கேட்கவில்லை.வீட்டு வரைபடம் "ட " வடிவம்.இதில் எங்கள் பாகம் நடுவில்.மூன்றடி நடை பாதை.அதை வாங்கிய கணேசன் செட்டியாருக்கும் எங்களுக்கும் சண்டை வந்து கொண்டே இருக்கும்.இந்த சண்டையில் எங்களுக்கு உள்ளூர் பெரியவர்கள் ஆதரவு அதிகம். எங்களுக்காக எங்கள் எதிர்வீட்டில் இருக்கும் துரை,கந்தசாமி போன்றோர் அடிதடியில் இறங்கி காவல் நிலையம் செல்வோம். இது அம்மாவிற்கு நிம்மதியில்லை.அப்பாவிற்கும்.அந்தவீட்டில்தான் மழலையர்,பள்ளி ஹிந்தி வகுப்புகள்.
அவரின் பலவித எதிர்ப்புகள் நடுவில் இரண்டுமே நன்றாக நடந்தது.நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜ சண்முகம்,தங்கராஜ்,நகர்மன்றத்தலைவர் கோவிந்தராஜ்,தலைவர் காணியாளர் கே.சின்னப்பன்,p.s.கே.லக்ஷ்மிபதிராஜ் ,லக்ஷ்மணன் செட்டியார்.எம்.கே.எம். அப்துல் காதர்,. போன்ற அனைவரும் எங்களுக்கு பேராதரவு வழங்கினர். செட்டியாரிடம் வீடு கை மாறியது, அவர்முதலில் வீட்டிற்குப் பின்னல் வீடு கட்டினர்.அதை ஒரு பாலசமுத்திரம் அய்யங்கார் வாங்கினார்.அனைவருக்குமே நாங்கள் வீட்டை விற்றுவிடுவோம் என்ற எண்ணமே.நாங்கள் விற்கவில்லை என்றதும் அவர் ஒரு தாசில் தா ருக்கு விற்றார். சில நாட்கள் மிக நட்பாயிருந்தவர் வீடு விற்கமாட்டோம் என்பதை அறிந்ததும் முதலில் தன செல்வாக்கைப்பயன்படுத்தி பள்ளி நடத்த விடாமல் ஒரு நீதிமன்ற இடைக்கல் உத்திரவு போல் தன மேலதிகாரியிடம் வாங்கினார். பள்ளி கோடை விடுமுறைக்குப்பின் திறக்க ஐந்து நாட்களே. அம்மாவிடம் பணம் இல்லை. எப்படியோ சமாளித்து ச,வெங்கடாசலம் வழக்கறிஞர் மூலம் இடைக்காலத்தடையை வுயர் நீதிமன்றம் மூலம் நீக்கி பள்ளி ஆரம்பித்தார். இந்த மனோ திடம் பொருளாதார வசதியின்றி எப்படி?இது ஒரு தெய்வ பலம்.அனைவரின் ஆதரவு. எதிரிகள் பணபலம் மிக்கவர்கள்.என் தாத்த ஆசீர்வாதம் உள்ளூர் பெரியவர்கள் எங்கள் குடும்பத்தின் மீது காட்டிய அக்கறை.எல்லாம் இறைவன் அருள்.
அங்கு எங்கள் காவல் தெய்வம் கருப்பணசாமி இருந்து காப்பதாக எங்களுக்கு பல அனுபவம்.அதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர்,எதிர் வீட்டு சுயமடத்தில் இருந்த பெரியவர்கள் நேரில்
கண்டதாகவும் கூறுவார். எதோ ஒரு ஆற்றல் மனிதர்களை ஆட்டி வைக்கிறது என்பது உண்மை.
தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக