திங்கள், ஆகஸ்ட் 10, 2026

எல்லோரும் கொண்டாடுவோம்

    எல்லோரும் கொண்டாடுவோம்.

  சாதி மத இன வேறுபாடு இன்றி 

அனைவரும் கொண்டாடுவது 

 இரண்டு பண்டிகைகள்.

 ஒன்று ஆகஸ்ட் 15 . 

  நமது நாட்டின் செல்வவளம் கொள்ளை அடிக்கவே வந்தனர்.

பாரசீகப் படை எடுப்பு மங்கோலியர்கள் முகலாயர்கள் அலெக்சாண்டர் என் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவின் மீது படையெடுத்தன.

 நமது நாட்டில் வீர மன்னர்கள் வீரர்களுக்கு குறைவில்லை.

 தேசதுரோகிகள் ஆம்பி போன்றவர்கள் வெளிநாட்டு சக்திகள் வர காரணமாக இருந்தனர். 

 முகம்மது கஜினி முகமது கோரி 

 இடைவிடாது படையெடுத்து ஆலயங்களைத் தரைமட்டமாக்கிய

 கொள்ளை எடுத்துச் சொன்னார்.

 பின்னர் முகலாயர்கள் ஆட்சி.

  ஹிந்து முஸ்லிம் போராட்டம்.

 மாலிகாபூர் படை எடுப்பில் தென் இந்திய ஆலயங்கள் தகர்க்கப் பட்டன. பல ஆலயங்கள் மசூதிகளாக மாறின.

 அப்போது கபீர் ஞான மார்க்கம் மலிக் முகம்மது காட்சியின் அன்பு மார்க்கம் துளசிதாசர் ராம பக்தி மார்க்கம் சூர்தாசரின்  கிருஷ்ண பக்தி மார்க்கம் தோன்றின.

 மக்கள் கவிஞர் கள் இறைவனை சரணடைந்தனர்.

 கபீரின் ஞான மார்க்கம் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு காரணமாக இருந்தது.

  ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையாக இருந்தனர். ஆனால் அவர்கள் அமைதி காலத்தில் நாட்டுப் பற்று இன்றி சூதாட்டம் கேளிக்கை 

குடி கூத்து என வாழ்ந்தனர்.

 இச்சூழ்நிலையில்  ஆங்கிலேயர்கள் வணிகம் செய்ய அனுமதி பெற்று  பாரத நாட்டை ஆளத்தொடங்கினர்.

  ஆங்கிலம் கற்றால் வேலை என்ற நிலையை உருவாக்கினர்.

 கிறிஸ்தவ மிஷனரிகள்  சர்ச்கள் பள்ளிக்கூடங்கள் என மக்களை திசைதிருப்பி கிறிஸ்தவ மத பிரசாரத்திற்கு பைபிளை இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து எழுதினர்.

 நாட்டின் செல்வம் கொள்ளை அடிக்கப்பட்டன.

 ஆன்மீக பூமி பாரதத்தில் ஹிந்து முஸ்லிம்  நகைக்கு காரணமாயினர்.

  நாட்டில் ஆங்கில  மொழி பிரதான மாறிற்று.

 இந்தியர்களை அடிமையாக்கய ஆட்சயை எதிர்த்து விடுதலைப் போராட்டம் இரு வகைகளில் நடந்த ன. ஒன்று தீவீரவாதம் . மற்றொன்று அஹிம்சை சத்தியாக்கிரகம்.

 இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

 தடியடி நடத்தினர்.. ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கி சூடு நடத்தி இரக்கமின்றி இந்தியர்களைக் கொன்று குவித்தனர்.

 பலரை அந்தமான் சிறையில் அடைத்தனர்.

 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையில் அஹிம்சை சத்தியாக்கிரகப்போராட்டம். சுபாஸ்சந்திரபோஸ்

 திலகர் லாலாலஜபதிராய் பாலகங்காதர திலகர் தமிழகத்தில் ராஜகோபாலாச்சாரி காமராஜர் கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார் பாரதியார் சுப்பிரமணிய சிவா போன்றோர் தீவிரமாக போராடினர் கொடிகாத்தகுமரன்  வேலுநாச்சியார் தில்லையாடி வல்லியம்மை போன்றோரின் தியாகம் வாஞ்சிநாதன் பகத்சிங் சந்திரசேகர ஆசாத் போன்றோரின் தீவிரவாதம் இறுதியில் ஆங்கிலேயரை நாட்டை விட்டு செல்ல காரணமாகின.

 ஆனால் நாடு இரண்டாக பிரிக்கப்பட்டது.

 முகலாயர்கள் உனக்காக பாகிஸ்தான் தனி நாடானது.

  ஹிந்து முஸ்லிம் கலவரத்தில் பலர் உயிர் நீத்தனர்.

 ஆகஸ்ட் 15 நாட்டின் சுதந்திரநாள் பல தியாகிகள் உயிர்த்தியாகம் கடும் சித்திரவதை . நம் சுதந்திர நாளை வந்தேமாதரம் தாய் நாட்டிற்கு வணக்கம் என்று கூறி மகிழ்ச்சியாக கொண்டாடி வலிமைமிக்க பாரமாக மாற்ற ஒன்று படுவோம்.

 சாதி மதங்களை மறந்து நாட்டின் வளர்ச்சியில் ஈடுபடுவோம்.

 வாழ்க பாரதம் வாழிய பாரத மணித்திரு நாடு.

ஜய் ஹிந்த்.






கருத்துகள் இல்லை: