செவ்வாய், நவம்பர் 15, 2011

IRAIVAN IRUPPIDAM -KABEER

    1. जो तिल माहीं तेल है; ज्यों चकमक में आगि.  तेरा सांई तुझ में जागी सके तो जागी

எள்ளில் எண்ணெய் இருப்பது போல்,சிக்கிமுக்கிக் கல்லில் நெருப்பு இருப்பது போல்,
உன்  இறைவன் உனக்குள்ளேயே .எழுப்ப முடிந்தால் எழுப்பிக்கொள்.( கபீர் )

2.नाम रतन धन पाइकै, गांठी बाँध न खोल. नाहीँ पन नहीं पारखू ,नहि गाहक नहि MOL.

இறை நாமம் என்ற விலை மதிப்பை கூற முடியாத  ரத்தினம் உனக்கு கிட்டியுள்ளது.
அந்த ஒப்பற்ற ரத்தினத்தை நன்கு முடிந்து பாதுகாப்பாக வைத்துக்கொள்.
அதற்கு என்று கடைத்தெரு கிடையாது.அதற்கு என்று யாரும் மதிப்பீட்டாளர் கிடையாது,அதன் விலை மதிப்பீட்டாளர் ஒருவரும் கிடையாது.அதைவாங்குவதற்கும் ஒருவரும் இல்லை.
இறைவன் பெயர் விலை மதிப்பற்ற  ரத்தினம்.

3. எனக்கு எவ்வித கவலையும் இல்லை.எனக்கு எதைப்பற்றிய கவலையும் இல்லை. காரணம் ,என்னைப்படைத்த இறைவன் ,என்னைப்பற்றி எண்ணுவார்.
कबीरा  क्या मैं चिंताहूँ   ,मम  चिन्ते क्या होय ; मेरी चिंता हरी करैं ,चिंता  मोहिं न कोय.

கருத்துகள் இல்லை: