புதன், நவம்பர் 16, 2011

meygyana maargam

மெய்யறிவு பெற ஆண்டவன் அருளட்டும்.

மனிதர்கள் தனை படைத்தவன் ஒருவன் மிக சக்தி வாய்ந்தவன் எங்கோ இருந்து ஆட்டிபடைக்கிறான் என்பதை உறுதியாக எண்ணி தான் ஆற்றும் ஒவ்வொரு செயலும் அவனால் தான் என்பதில் முழு நம்பிக்கை கொள்ளவேண்டும்.
அது எப்படி?மனிதனுக்குள் தெய்வம் இருக்கிறார் .நானே கடவுள் என்ற ஒரு கொள்கை கோட்பாடு உள்ளதே.இறைவனுக்கு வுயிர் ஊட்டுவதே மனிதன் தானே.
வைரக்க்ரீடமும்   வைர அங்கியும் சாத்தி மகிழ்பவன் மனிதன் தானே .
.மனிதனுக்குள் இருக்கும் ஆற்றல் தானே, இந்நில உலகில் மனிதனுக்கு அனைத்து அறிவியல் ரீதியான வசதிகளும் வாய்ப்புகளும். மனிதன் கண்டுபிடித்தது தானே.உண்மைதான்.ஆனால் அனைத்து வசதிகளையும் உலகில் பிறந்த அனைவர்களும் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறார்கள என்பதே கேள்வி,
நான் ஒரு இதய அறிவியல் நிபுணரை சந்தித்தேன்.அவரது மனைவியும் புகழ் பெற்ற மருத்துவர்.அவருக்கு வருமானம் என்பது இயற்கையிலேயே வருகிறது.
அவர் பணத்தட்டுப்பாடு என புலம்பினார்.அவர் தன் சமுதாய அந்தஸ்த்திற்காக
பெரிய வீடும் நவீன வசதிகளும் நோய் அறியும் கருவிகள் என கோடிக்கணக்கில் முதலீடு   செய்துள்ளார்.அனைத்தும் தவணை முறைக்கடன். மனைவி,மகன், தனக்கு என மூன்று விலை உயர்ந்த சிற்றுந்து வாங்கியுள்ளார்.மகனை பள்ளிக்கு அழைத்து செல்ல வர என  ஒரு வோட்டுனரையும் நியமித்துள்ளார்.கணவன் மனைவி இருவரும் தான் பெற்ற திறமையின் காரணமாக மிகப்பெரிய சமுதாயத் தொண்டு ஆற்றுகின்றனர்.
வீட்டில் குளிர் சாதனங்கள், நவீன தொலைக்காட்சி பேட்டிகள்,வளர்ப்பு நாய்கள் என குறை இல்லை.அனைத்தும் இருந்தும் நேரத்திற்கு மன நிறைவுடன் அமர்ந்து பேசவோ உணவு உண்ணவோ முடியவில்லை.ஏழைகளுக்கு இலவச சிகிச்சை என்பதை கொள்கையாக ஆரம்பித்த மருத்துவ தொழில் அதை மறந்தே விட்டது.ஒவ்வொரு மாதமும் லக்ஷக்கணக்கில் குறிப்பிட்ட நாளுக்குள் தவணை செலுத்த வேண்டும். மருத்துவ மனை ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க வேண்டும். மின் கட்டணம் செலுத்தவேண்டும்.எங்கே நிம்மதி. இதில் ஒன்று குறைந்தாலும் நெருக்கடிதான்.சேவை  மனப்பான்மை தேவையால் தேய்ந்து மறந்து போனது.

இந்நிலையில் தான் அறிவியல் யுகம்  தள்ளப்படுகிறது.இவ்வுலக வாழ்வியல் இன்பத்திற்காக துன்பத்தை இன்பமாக கருதும் உலகியல் மன இயலாக மாறிவருகிறது,
இந்த உலகியல் நவீன சுகங்களை வசதிகளை அறியாதவர்கள் பல்லாயிரம்
 கோடி.அனுபவிக்காதவர்கள் பல்லாயிரம் கோடி.

இந்த அமைப்பு முறைக்கு ஒரு புலப்படாத சக்தி உள்ளது என்பதை சிந்திக்காமல் இருக்க முடியுமா? அதுதான் இறை சக்தி.இந்த உண்மையை
மூட நம்பிக்கையாகவும் குருட்டு நம்பிக்கையாகவும் ஏற்படுத்தி மக்களை சுரண்டும் கூட்டம் தயாராகி அங்கங்கே ஆலயங்கள் ஏற்படுத்தி வருகிறது.
இதற்காகத்தான் கபீர் பக்தியில்  ஞான மார்கத்தை ஏற்படுத்தினார்.

இந்த ஆலயங்களின் முதலீடுகள் இலவச கல்வி சாலைகளாகவும் மருத்துவ மனைகளாகவும் மாறி தங்க  மயமாக இல்லாமல் சேவை இல்லங்களாக மாற இறவன் தான் ஞானம் தரவேண்டும்.ஆலையம் தோறும் பள்ளி சாலைகள் அமைப்போம் என்றார் மஹாகவி முன்டாசுக்கவிஞர்.

கருத்துகள் இல்லை: