செவ்வாய், நவம்பர் 15, 2011

unmai pesum vaay parkkamudiyaathu.

கலியுகத்திலும் சரி,த்வாபர யுகத்திலும் சரி,மன்னராட்சிலும் சசி, மக்களாட்சியிலும் சரி, உண்மை பேச பயந்தவர்கள் தான் அதிகம்.இந்நிலை உலக
வாழ்க்கை அப்படித்தான்.அதற்கு ஒரு கதை.ஹிந்தி தேர்வு புத்தகத்தில் படித்தது.
தலைப்பு :-கண்கள் பேசமுடியாது.
ஒரு சத்யசீலர்  ஆஸ்ரமம் அமைத்து ஆன்மீகத்தில் ஆழ்ந்து பற்றற்ற முறையில்
வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஒரு கசாப்புக்கடைக்காரன் ஒரு மாட்டை வெட்ட துரத்தி வந்தான்.அது ஆஸ்ரமத்தில் நுழைந்து ஓடிவிட்டது.
கசாப்புக்கடைக்காரன் அந்த சாதுவிடம் ஒரு மாடு இப்பக்கம் வந்ததா?என்று வினவினான்.
சாதுவுக்கு பொய் சொல்வது அறத்திற்குப் புறம்பானது.உண்மை கூறினால் மாட்டின் வதை யாவதற்கு  அவரே காரணமாக  வேண்டி இருக்கும்.ஆகையால்
அவர் மௌனமாக இருந்தார். கசாப்புக்காரன் மிரட்ட ஆரம்பித்தான்.உண்மை பேசும் சாது என்று புகழ்    பெற்ற நீங்கள் மௌனம் சாதிப்பது சரியில்லை.
சது பணிவாகக் கூறினார்.; மாட்டைப் பார்த்த   கண்கள் பேச முடியாது.பேசும் வாய் பார்க்கவில்லை. இப்படித்தான் பெரியோர்களால்   வறியோர்கள் காக்கப்படுகின்றனர். 

கருத்துகள் இல்லை: