வெள்ளி, ஏப்ரல் 25, 2014

சிந்திப்பீர் !?

இன்றைய தினத்தந்தியில்  வடமொழி சொற்கள் தமிழில் உள்ளன . இளைஞர்களே சிந்திப்பர் செயல்படுவீர்.வாக்கு கேக்க ஹிந்தி சுவரொட்டி. என்னே சுயநலம்.பொதுமக்கள் ஹிந்தி கற்கக் கூடது.பிரதமராகும் ஜெயலலிதா இரட்டைக்குழல் ஹிந்தி பேசலாம்.என்னே சுயநலம்.


இன்றைய சொற்கள் தினத்தந்தியில் :--௨௫.௪.௧௪.
தமிழ் ---ஹிந்தி சமம்
தினம் ==தின்din=ஹிந்தி.=நாள்
சதம் =சத் சத் =௱ நூறு
தாக்கல் -தக்கில் -உர்து ,ஹிந்தி.=
அனுமதி ---அனுமதி

உற்சாகம் -உத்சாஹ் -
ஆபரணம் ==ஆபரண்=ஆபூஷன்
நகரம் --நகர்.

புத்தகம் ==புஸ்தகம்

அக்ஷய் ==அக்ஷய் ==குறையாமல் இருப்பது.
இலாபம் --லாப் laabh
அதிகம் --அதிக்--adhik
இதுவரை முதல்பக்கம்.
இரண்டாம் பக்கம்
எந்திரம் ==யந்த்ர=yantra
ராட்சத --ராக்ஷஸ் =
அதிகாரி =அதிகாரி adhikaari
மத்திய =மத்ய
நவீன --நவீன்
அசம்பாவிதம் ==அசம்பவ்
மதி --மதி
தயார் -தயார்
ஜெயலலிதா --ஜயலலிதா -வெற்றிக்கொடி
சசிகலா -ஷஷி கலா --நிலாப்பிறை
சுதந்திரம் -ஸ்வதந்திர
நிர்ணயம் --நிர்ணய
பரிவர்தனை  =பரிவர்த்தன்
மனு --மனு
சுயநிதி =suyanidhiசுயநிதி
பூர்த்தி --பூர்தி

அதிகாரபூர்வமாக ==அதிகார் பூர்வக்.
ஆதி --ஆதி
தாசில்தார் ==தஹ்சில்தார்
சவால் --சவால்;    தேசம் =தேஷ்
நிச்சயம் =நிஷ்சய்
ஜனநாயகம் -ஜனநாயக்
பாடசாலை =பாடசாலா
பிரார்த்தனை ==பிரார்த்தனா
அகால மரணம் ==அகால் மரண

இன்னும் பல சொற்கள் ஹிந்தியிலும் தமிழிலும் சமமாக இருப்பதால் தான் தேசத்தந்தை ஹிந்தியை பொதுமொழி ஆகினார்.






thesaththanthai  मोहनदास  மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (இன்றைய காந்திகள் இல்லை (பெரோஸ் ) நாடு முழுவதும்

சுற்றி  இந்தி பொதுமொழி என்றும் அதை தமிழ்நாட்டை மையமாக வைத்து பிரசாரம் செய்ய நிறுவனத்தை நிறுவினார்.

ஹிந்தி எதிர்ப்பாளர்கள் பாரத நாடு என்ற பரந்த பார்வை இன்றி

ஆங்கிலத்தை  வளர்த்து தமிழை ஒலிக்க விடாமல் செய்து விட்டனர் .

வியாழன், ஏப்ரல் 24, 2014

உறவுகளும் இன்றைய பிரிவுகளும்.

கோபிநாத்  நீயா ?நானா ? தொடர் உறவா ?நட்பா?

அனைத்திலும் வெளிப்படையாக தவறுகளைச் சுட்டிக்காட்டினால்  அல்லது ஜால்ரா போடவில்லை என்றால் நட்பும் உறவும் உடையும்.

கர்ணன் பாண்டவர்களின் தவறு தெரிந்தும் பீஷ்மர் துரோணர் போன்றோரும்   செஞ்சோற்றுக் கடனுக்காக  கௌரவர்களின் தவறுகளை மறுத்து விலகிச்செல்லாமல் திருத்தாமல் இருந்தனர். கண்ணன் சகுனி இருவருக்குமே பழி வாங்கும் எண்ணம்.ஆணாதிக்கம் அதிகமான காலம்.

இன்று சமத்துவம் .அன்றும் நிம்மதியில்லை. இன்றும் நிம்மதி இல்லை.

காரணம் மற்றவர்களிடம் தாழ்ந்து போனாலும் உறவினர்களிடம்  தாழ்வைக் காட்டக்கூடாது  என்று அவர்களைக் களங்கப்படுத் த முயற்சிப்பதே.

உறவுகளில் ஏன் ? ஒரு மன அழுத்தம்?
பணமா?  பாசமா ?  பொறாமையா? ஒருதலை பட்சமா ?
அனைத்தும் சேர்ந்தா?

பணம் கொடுத்தால் திருப்பித்தரும் எண்ணமில்லை. உறவினர்கள் இல்லாதவர்களிடம் வாங்கினால் கொடுத்து விடுவது.

இரண்டு மூன்று குழந்தைகள் இருந்தால் இருவரைக்கொண்டாடுவது . ஒருவரைத்தூற்றுவது.

நண்பர்கள் மற்ற உறவினர்கள் நோய்வாய்ப்பட்டால் பார்த்து வந்து நல்ல பெயர் வாங்குவது.
ஒருவர் வுயிர் போகும் அறுவைசிகிச்சை நடந்தாலும் எட்டிப் பார்ப்பது இல்லை.
ஒருவருக்கு இலக்சக்கணக்கில் உதவுவது ஒருவரிடிடம் கரைப்பது அதுவும் ரகசியமாக. அதை அறிந்த மற்ற உறவினர் கிண்டலடிப்பது.
எல்லாம் மறந்து உறவு பெரிதென்றாலும் மனக்கஷ்டம் வரும்படி பேசுவது. மற்ற உறவினர்களிடம் குரஈ சொல்லி பேசவிடாமல் செய்வது .

கொடுத்தால் வசந்தகாலம் .ஏன் ?என்று கொடுத்ததைக் கேட்டாலோ அல்லது ஏன் தருவது எனக்குத்த்ரியக்கூடாதா என்றால் வெறுப்பு.

சரி நாம் செல்லவேண்டாம் மனம் கசக்கிறது என்று தனியாக வுயிர் சொந்தத்தை போ என்று சொன்னால் போகாமல் தானும் நொந்து கொண்டவனையும் நோகச்செய்வது.
அவன் அன்பாகப் பேசினாலும் அவளின் வெறுப்பு என்று குடும்பங்களில் நிம்மதியில்லா வாழ்க்கை.முதலில் இந்த மெகா தொடர்களில்  வெறுப்பு இருந்தாலும் பல குடும்பங்களில்  நிம்மதியற்ற நிலைக்கு உற்றார் உறவினர்களின் ஒரு மனத் தூய்மை இல்லா உறவே.

புதன், ஏப்ரல் 23, 2014

நான்மணிக்கடிகை -ஹிந்தி -ஆங்கிலம்

நான் மணிக்கடிகை :-
வளப்பாத்தியுள் வளரும் வண்மை--கிளைக் குழாம்
இன்சொற் குழியு ளினி தெழுவும் --வன்சொல்
கரவெழுவுங் கண்ணில் குழியு--ளிரவேழுவும்
இன்மைக் குழியுள் விரைந்து.
दौलत के खेत में दान के अनाज उगेंगे.
मधुर शब्द की समृद्ध भूमि में नाते -रिश्ते के पौधे उगेंगे.
निर्दयता की सूखी भूमि में छल -कपट के पौधे उगेंगे.
दरिद्रता की सूखी भूमि में भीख माँगने के पौधे उगेंगे.
IN the field of wealth plant of charity will grow.
in the green field of sweet words the plant of relationship will grow.
in the dry field of mercilessness the plant of cheating will grow.
in the dry field of poverty the plant of begging will grow.

पतिनेंन कील कनक्कू -பதினெண்கீழ்க்கணக்கு

पतिनेन  कील कनककू 
अठारह संक्षिप्त ग्रन्थ 

नालड़ी -चार चरण के पद्य 
नान मनिक्कडिकै---चार रत्न जैसे अर्थवाले पद्य 
इनियवै  नार्पतु --सुख चालीसा 

इन्ना नार्पतु --दुःख चालीसा

कार नार्पतु -- 

ஞாயிறு, ஜனவரி 12, 2014


THE SPRITUAL PEOPLE ARE STRICT IN OLD THINGS. THEY NEVER LIKE NEW FLOOD. WHY?


AATMMATHAN MEANS SOUL-CHURNING THAT IS CONTEMPLTION. IN THE BEGINING HOW A CHARM CREATED?


REALLY GOD? REALLY A DEVOTTE?BUT WE DON'T KNOW.BUT EVERY RELIGION ACCEPTS THE MESSAGE GIVEN BY GOD IS COLLECTED AND COMPOSED BY THE MESSENGER OF GOD.MOHAAMAD GOT MESSAGE IN HEERA MOUNTAIN CAVE. THE HIDU'S ARE TEELLING GOD DIRECTLY APPEARS AND WRITING AND INSPIRING THE POETS. KALI WROTE FIRST WORD IN KALIDAS'STONGUE. BUT AAL RELIGIOUS HOLY BOOKS ARE HAVING SOME DIVINE POWER. WHEN WE READ IT GIVE PEACE TO OUR MIND. WHY WE ARE NOT FOLLOWING STRICTLY TO CHANT. OR READING SLOKAS,VEDAS,BIBLE,KURAN DEEPLY.BECAUSE WE WANT TO GET GAIN OR FRUIT IMMEDIATELY. TATKAAL. IS IT POSSIBLE. TAKING THIS AS A ADVAANTAGE THERE ARE GROUPS WHO ARE SELFISH CHEATIN THE COMMON MAN ,DIVIDING THE PEOPLE ,THEY ARE CREATING ENEMITY IN THESE HOLY BOOKS. BUT ALL RELIGION'S PURPOSE IS TO ESTABLISH PEACE IN THE WORLD;SPREAD LOVE AMONG MEN AND WOMEN. FOR THIS GREAT PURPOSE AATMAMANTHAN I.E.,SELF-CHURNING I.E., CONTEMPLATION IS COPULSARY FOR EACH AND EVERY HUMANBEINGS.EVERY ONE IS PROPHET.PROHIT.OR RELIGIOUS HEAD.


FOR THIS MAXIMUN HALF AN HOUR IS ENOUGH. SELF ASSESMENT YOU CAN DO WITH IN 5 MINUTES.

செவ்வாய், டிசம்பர் 31, 2013

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


அவனி முழுதும் ஆங்கிலப் புத்தாண்டு
ஆனந்தமாக ,பூஜை பஜனையுடன்
வரவேற்கும் நாம் , வளம் பெறுகிறோம்
பொருளாதார ரீதியில்.
ஆங்கிலமின்றி அவனியில் வாழ ,
வழியில்லை வேறு.
நட் என்றும்,போல்ட் என்றும்
பிட் என்றும் பிகர் என்றும்
டிரெஸ் என்றும் ரோடு என்றும்
நடு சென்டர் என்றும் ஷாப் கடை என்றும்
டைம் என்று பேசியே தனிதமிழ் இயக்கம்
வளர்ந்த நாட்டில் வொய் திஸ் கொலைவெறி
ரசிக்க ஆரம்பித்துவிட்டோம்.
இப்படியே வளம் பெற்றாலும்
அரைகுறை ஆடை,ஆட்டம் ,போதை
நடு ரோட்டில் ஆட்டம்,முத்தம் ஆலிங்கனம்
என்ற அநாகரீகம் ,பண்பற்ற ,ஒழுக்கமற்ற செயல்
தவிர்த்தால் விலங்கிலிருந்து வேறுபடுவோம்.
ஆங்கிலம் அறிவைத்தந்து ஆற்றலைத்தந்து ஆஸ்தியைத்தந்து
அவனை சுருக்கி இனவெறி ,மதவெறி,அனைவருக்கும் கல்வி என்று
உணர்த்தினாலும் பெற்றோரை மதியாமை,அமைதியற்ற குடும்பவாழ்க்கை ,ஒருவர் மற்றவரை மதியாமை
விவாகரத்து,தற்கொலை என்ற படித்து பட்டம் பெற்றாலும்
பண்பற்ற செயல்கள் அங்கெங்கு தலை தூக்குவதால்
தாய்மொழி அறிவுரை நட்சத்திரம் மினுமினுக்குதே என்ற பாடலுடன்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
மாதா பிதா குரு தெய்வம் ,ஆறாம் செய விரும்பு என்பதையும்
நினைவில் வைத்து இந்த ௨௦௧௪ புத்தாண்டை
ஆனந்தத் துடன் கொண்டாடுவோம்.
ஸ்பீட் தேவை அதில் ஆக்ஸிடென்ட் தடுக்க
தாய் நாட்டு புத்தாண்டுக்கு தாய் மொழிக்கு அதிகம்
இம்பார்டன்ஸ் கொடுப்பதும் தேவை.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

செவ்வாய், டிசம்பர் 24, 2013

செவிச்செல்வம் உனது புகழ் .

இறைவா !
 இரைக்காக    வா,?
இன்ப வாழ்க்கைக்காக     வா.?
இன்னல் தீர்க்க  வா.?
இறைவனைக்காண வா.
ஈடில்லா வீடுபேறு பெற வா.
எண்ணங்கள் நிறைவேற வா.
ஏற்றம் அளிக்க வா?
 உருவமின்றி உணரவைத்தாலும்
ஏகனாக வந்தாலும்
அத்வைத்துவமானாலும்
ஐந்துகரத்தினை உடையோனாக
ஆறுமுகமாக வந்தாலும்
ஆனந்தமே! இறைவா. வா.வா.
உலகில் நடப்பவை உன்னருள் என்றாலும்
உண்மைகள் உலையில் கொதிக்கும் போது
ஊமையாய் தவிக்கும் போது
ஏனோ! எனக்குள் ஒரு ஐயம்.
உனது படைப்புகள்
உலகில் தவறுகள் செய்கின்றன.
ஒன்றை அளித்து ,ஒன்றை அழித்து
ஒன்றை அலியாக்கி
சம நிலையாக்கும் நீ.
அநீதிகளை ஆர்பரிக்க வைக்கிறாய்.
நீதிகளை அடக்கி வைக்கிறாய்.
ஆழ்கடல் அமைதி என்றாலும்
அலைகடலை கரையில் வைத்து
அமைதிக்கு செல்லும் வழியில்
ஆர்பரிக்கிராய்.
ஆழ் மன தியானம்,
மேல்மன  அலைகள்,
உன்னடி
சரணாகதிக்குத்
தடைகள்.
தடைகள் மீறி  மனதை அடக்கினாலும்
மணம் நாசி வழியில் தடை .
மூக்கைப்பிடித்து முன் சென்றாலும்
பார்வை த் தடை.
கண் னை மூடி மூக்கடைத்து
முன்னே சென்றால்
காதால் தடை.
இவைகளை அடக்கும்  முன்பு
காதல் தடை.
பாசத்தடை.
எல்லாம் தடை மாயம்.
எப்படி உன் சரணம் அடைவது.

சும்மா இரு  என்று அருணகிரிக்கு அருள்.
அவராடிய  ஆட்டங்களுக்கு அறிவுரை  சும்மா இரு.
சும்மா ...அதிலே சுகமா?
உன்னை அறியா சுகமா?
அறிவதிலே சுகமா.
கண் மூடி  செவிமடுத்தல் உன்னருள்.
செவிச்செல்வம் உனது புகழ் .

உன்னடி





சிலந்திவலையில் சிக்கிய புழு.

கணவன்   
கணவன்   மௌனக் கண்ணீர்  வடிப்பவன்

திருமணத்திற்கு முன்  சுதந்திரப் பறவை.
பின்னர் 
மத்தளம் போல் வேதனை இடிகள்.
தாயார் ,தம்பி ,தங்கை  ஆதி உறவு 

மனைவி  புதிய உறவு.

இந்த புதிய உறவை  மகிழ்விக்க 
ஆதி உறவுகள்  சற்றே உதாசீனப் படுத்தும் உணர்வுகள்.
தாய் வீடு  செய்யும் தவறுகள் 
அவமானங்கள்  அநீதிகள் 
உதவாத தன்மைகள்,
கேளிக்கைகள் கிண்டல்கல்கள் அனைத்தையும் 
சகிக்க வேண்டும் கணவன் .
அப்பொழுதான் அன்பின் தழுவல்.
இல்லையேல் மழுப்பல்.
சகுனியின்  செயல்கள் மகாபாரதம்.
கூனி யால் ராமாயணம்.
எல்லாம் தாய்வீட்டு உறவு.
இப்படிப்பட்டவர்களை  சஹித்து
வாழ்ந்தால் இல்லறம் நல்லறம். 
பு திய உறவு /புத்தம் புது வரவு

ஆதி உறவுக்கு ஆனந்தம் குறைவு.
மாமியார் வீட்டார் தவறுகள் 
மனைவியால் அரங்கம் ஏறும்.
மனைவியின் தாய்வீட்டுத் தவறுகள் 
மறைக்கப்படும்.
மறக்கப்படும்.
மனைவியின் முகத்தில்  சிரிப்பு 
அன்பு   காண 
கணவனால் மறக்கப்பட வேண்டியவர்கள் 
கணவன் சம்பந்தப்பட்டவர்கள்.
இந்நிலை அதிகம்.
பாவம் கணவன்.
பாசம் மறக்கும் மோஹ சிலந்திவலையில் 
சிக்கிய புழு.
பாசம் உறவு  இவ்வலையில் மடிந்துவிடும் 
விளைவு முதியோர் இல்லம்.

சனி, டிசம்பர் 07, 2013

மறக்கப்பட்டது

அறச் செயல்
 அறம்  செய விரும்பு.
ஆறுவது சினம்.
இன்றைய மழலைகள்
திரைப்பட பாடல்கள்  பாடுகின்றனர்.
அவர்கள் சினம் ஆறாமல் வளர்கின்றனர்.
சிறுவயதிலிருந்தே ஆண் /பெண் நண்பர்கள்
அவன் பிரண்ட் /நான் லவ் பண்ணலை
மூன்றுவயதுக்  குழந்தையின் மழலைப்பேச்சு.
அதை ரசிக்கும் பெற்றோர்கள்/உறவினர்கள்.
விளைவு மணநாளன்று  மணமகள் ஓட்டம்.
அனைத்து ஏற்பாடுகள், மண மேடை அலங்காரம்,
திருமண மண்டப முன் துகை,
மேளதாள ஏற்பாடு,
சமையல் ஒப்பந்தக்காரர்,
என பெற்றோர் செய்யும் சிலவுகளை
மௌனமாக  பார்த்துவிட்டு ஓடும் மகன்,மகள்.
இந்த சமுதாய அவலம் .
இதற்கு அதரவு,எதிர்ப்பு,
அடிப்படை கொலை,தற்கொலை ,கைபேசி ஆபாசப்படங்கள் ,
மிரட்டல்கள்.
பலன்  அமைதி இல்லா வாழ்க்கை.
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்
நோ பீஸ் ஆப் மைண்ட்.
இதில் மற்றொரு அவலம் அனைவரும் பட்டதாரிகள்.
மாடியிலிருந்து குதித்து தற்கொலைகள்.
சேர்ந்து வாழலாம் திருமணமின்றி,
பெற்ற குழந்தைகளை அரசு பிராமரிக்கட்டும்----_
!!!உச்ச நீதிமன்றம்.!!!
சின்னத்திரையிலோ ஒருவர் இரு காதலிகள்.
வஞ்சம்.ஏமாற்றம் துரோஹம்.
காதல் கட்டாயப்படுத்த அமிலவீச்சு,தூக்கமாத்திரை.
மணிக்கட்டு அறுத்துக்கொள்ளுதல்
இப்பொழுது  தற்கொலை செய்வதை

பலர் ரசிக்கும் படி
வலைக்காட்சி  . அறிவியல் கல்வியின் மறுமலர்ச்சி.
கல்வி முதுகலைப்பட்டம். பொறியியல் .
காதல் பொறி;கள்ளக்காதல் ,அதற்காக அடியாள் வைத்துக் கொலை.
கல்வி என்பது இப்பொழுது பணத்தை
 ஆதாரமாகவைத்துத்
திணிக்கப்படுகிறது. ஆணவம் அதிகமாகிறது.
பாசம் இல்லை; அன்பு இல்லை;பண்பு இல்லை;நேசம் இல்லை;
இயந்திர வாழ்க்கை. நிம்மதிக்கு போதை;
அதற்கு அரசு மதுபானக்கடைகள்.
அதன் வருமானத்தில் தான்
அரசு நல திட்டங்கள்.
தீயவழி வருமானம்.
அதனால் போடும் சாலைகள்
போட்ட வேகத்தில் பல்லாங்குழி.
தீயவழி வருமானம்.
அதில் கல்விக் கூடங்கள்.
அதுவும் மாணவர்கள் வராத பள்ளிகள்.
பல ஆசிரியர்கள்;சில மாணவர்கள்.
வரும் வருமானம் எப்படியோ அப்படியே வீண் சிலவுகள்.
நீதி கிடையாது,எல்.கே.ஜி.கே சிபாரிசு;கைஊட்டல் ;நன்கொடை;
பணத்திற்கு மதிப்பு;
இதில் அறம் செய விரும்பு இல்லை.
மீனைப்பிடி;விட்டுவிடு.
ஒன்னு,இரண்டு,மூணு,நாலு அஞ்சு.மீனைப்பிடி;
ஆர்,எழு,எட்டு ,ஒன்பது ,பத்து  மீனை விட்டுவிடு.
என் பேரனின் ஆங்கிலப்பாடல் பொருள்.
அருளற்ற ஆங்கிலக்கல்வி.
பூனையே!பூனையே!எங்கே போறே;
லண்டனுக்குப்போறேன் ராணியைப்பாக்க. மழலைப்பாடல்.
மாதா,பிதா ,குரு தெய்வம்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்  ஒலிக்கவில்லை;ஒளிரவில்லை;
ஆலயம் தொழுவது சாலவும் நன்று --இந்த அறவுரை அகற்றப்பட்டது.
ஒழுக்கம் இல்லா வளர்ச்சி;

 தற்கொலை;
 காவல் துறை அறிவிப்பு:
நடமாட்டமில்லா  மாடிகள் பூட்டப்படவேண்டும்.
மடிக்கணினிகள்  அனுப்பும் முகநூல்
 ஆபாசங்கள்.

மறக்கப்பட்டது:-
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து.




செவ்வாய், நவம்பர் 05, 2013

குணம் என்ற பொருள் படைத்தோரே வாழ்வர்

பணம்!பணம்!பணம்!
பாரில் வாழ  பணம் .
புண்ணியம் செய்ய பணம்.
பாவங்கள் செய்ய பணம்.
பாவங்கள் தீர்க்கப் பணம் -மன ஆசைகள்
பூர்த்தி செய்ய பணம்..
பூஉலக வாழ்க்கைக்கு
பெருமை சேர்த்திட பணம்.
பேருண்மை மறைத்திட பணம்.
பேராண்மை பெற்றிட பணம்.
பதவிக்குப் பணம் .
பட்டத்திற்குப் பணம்.
பட்டத்திற்கும் பணம்.
பரதேசிக்கும் பணம்.
பரதேசம் போகவும் பணம்.
பிணி அகற்ற பணம்.
பிணிவர பணம்.--
பொருளுள்ள வாழ்க்கைக்குப் பணம்.
பொருளற்று மது,மாது,என்று வாழவும் பணம்.
பொறுக்கும் பணம்,
போருக்கும்  பணம்.
இறுதிச் சடங்கிற்கும் பணம்.-ஆனால்
உயிர்காக்க முடியாத பணம்.
முதுமையைத்  தடுக்க முடியாத பணம்.
நரைமுடியைத்  தடுக்காத பணம்.
பௌர்ணமி போன்று வரும் பணம் -தேய்பிறையாக
வாழ்க்கையில் அமாவாசை போன்று
வரும் இன்னல்கள்,விபத்துக்கள்,அகால மரணங்கள்
வராமல் தடுக்க முடியா பணம்.
மமதை தரும் பணம்;
பேராசை தரும் பணம்.
நல்லதை மெதுவாக ,
தீயதை விரைவாக செய்யும் பணம்.
பணம் உள்ளோர் பாரினில் விரைந்து மறக்கப்படுவார்.
உயர் குணம் உள்ளோர் பாரினில் என்றும் வாழ்வார்.
உத்தமனாக இரு இது என்றும் வாழும் சொல்.
பக்தர்கள் வாழ்கின்றனர்;
சித்தர்கள் வாழ்கின்றனர்--பணப்
பித்தர்கள் வாழா நிலை.
ஆதி சங்கரர் வாழ்கிறார்;
ரமணர் வாழ்கிறார்;
அல்லா வாழ்கிறார்;
இயேசு வாழ்கிறார்;-பாரில்
நல்வழிகாட்டுவோர்  என்றும் எந்நாளும்
வாழ்கின்றார்கள்;
சொத்து சுகம் வேண்டாம்
பூஜைப்ப்பொருள் போதும் என்ற
தியாகராஜர் வாழ்கிறார்;--பணப் பித்தர்கள்
எங்கே வாழ்கின்றார்?
பெண் பித்தர்கள் எங்கே வாழ்கின்றார்.?
இறந்தும் வாழ்வார்கள் பணப் பித்தர்கள் அல்ல;
குணம்  என்ற பொருள் படைத்தோரே வாழ்வர்