செவ்வாய், டிசம்பர் 24, 2013

சிலந்திவலையில் சிக்கிய புழு.

கணவன்   
கணவன்   மௌனக் கண்ணீர்  வடிப்பவன்

திருமணத்திற்கு முன்  சுதந்திரப் பறவை.
பின்னர் 
மத்தளம் போல் வேதனை இடிகள்.
தாயார் ,தம்பி ,தங்கை  ஆதி உறவு 

மனைவி  புதிய உறவு.

இந்த புதிய உறவை  மகிழ்விக்க 
ஆதி உறவுகள்  சற்றே உதாசீனப் படுத்தும் உணர்வுகள்.
தாய் வீடு  செய்யும் தவறுகள் 
அவமானங்கள்  அநீதிகள் 
உதவாத தன்மைகள்,
கேளிக்கைகள் கிண்டல்கல்கள் அனைத்தையும் 
சகிக்க வேண்டும் கணவன் .
அப்பொழுதான் அன்பின் தழுவல்.
இல்லையேல் மழுப்பல்.
சகுனியின்  செயல்கள் மகாபாரதம்.
கூனி யால் ராமாயணம்.
எல்லாம் தாய்வீட்டு உறவு.
இப்படிப்பட்டவர்களை  சஹித்து
வாழ்ந்தால் இல்லறம் நல்லறம். 
பு திய உறவு /புத்தம் புது வரவு

ஆதி உறவுக்கு ஆனந்தம் குறைவு.
மாமியார் வீட்டார் தவறுகள் 
மனைவியால் அரங்கம் ஏறும்.
மனைவியின் தாய்வீட்டுத் தவறுகள் 
மறைக்கப்படும்.
மறக்கப்படும்.
மனைவியின் முகத்தில்  சிரிப்பு 
அன்பு   காண 
கணவனால் மறக்கப்பட வேண்டியவர்கள் 
கணவன் சம்பந்தப்பட்டவர்கள்.
இந்நிலை அதிகம்.
பாவம் கணவன்.
பாசம் மறக்கும் மோஹ சிலந்திவலையில் 
சிக்கிய புழு.
பாசம் உறவு  இவ்வலையில் மடிந்துவிடும் 
விளைவு முதியோர் இல்லம்.

கருத்துகள் இல்லை: