வெள்ளி, அக்டோபர் 11, 2013

அதனால் தான் இல்லறம் நல்லறம். இது எனக்கு இறைவனளித்த பெரும் வரம்.

தூக்கம் வரவில்லை
,துக்கத்திநாலா?
துன்பத்திநாலா?
வறுமையினாலா?
எதுவுமே இல்லை .?
இளமையா?பிரிவா?
எதுவுமே இல்லை.
அகவை கூடியதால்
அழைப்புமணி பயமா?
அதுவும் இல்லை.
எதுவுமே இல்லை
ஆனால் ,தூக்கந்தான்
வரவில்லை.
பழைய நினைவுகள்,\.
இருபத்தேழு ஆண்டுகள்
அன்னை-தந்தை கண்காணிப்பில்,
முப்பத்தாறு ஆண்டுகள் மனைவியின் அரவணைப்பில்
இன்றும் அவள் பாதுகாப்பில்.
அகவை எனக்கு இருபத்தைந்து.
அவளுக்கோ இருபது.
மாமன் மகள் தான் ,
அம்மாவிற்கு அண்ணன் மகள்தான்.
வந்தவளின் மனதில் வளர்த்த ஆசைகள்
 என்ன என்னவோ;!!??
எண்ணாமலேயே என்னவளை
என்னடிமை ஆக்கி வைத்தேன்.
இன்றுவரை எதுவும் அவள் கேட்டதில்லை.
கேட்காமல் எல்லாம் கிடைத்துவிட்டதென்பாள்.
அன்பிற்குப்பரிசாய் முத்துக்கள் ,வைரங்கள்,தங்கங்கள்
அனைத்தும் சேர்ந்த விலைமதிக்கமுடியா
வாரிசுகள் மூன்று.
தாயைப்போல பிள்ளைகள்,அதிர்ந்து பேசா அன்புகள்.
நான் என் குழந்தைகள் இப்படித்தான் ஆகவேண்டும் என்ற
திட்டங்கள் தீட்டவில்லை;
வளர்ந்தனர்.வளர்த்தாள் அவள்.
என் சக்திக்கு என்பதைவிட திட்டமில்லா உழைப்பு.
இறை நம்பிக்கை.
மும்முறை இறந்து உயிர்பெற்று வாழ்கிறேன்.
எம்முறையும் என்னிடம் அவள் கலங்கியதும் இல்லை;
மும்முறையும் அவள் பட்ட வேதனைகள்  எதுவும்
பேசியதும் இல்லை;எந்திர கதியில் இயக்கம்;
அதிலே பிறந்த ஊக்கம்;
வளம்பெற வாழ்கிறேன்.


அகவை கூடினாலும் அவளது அரவணைப்பும்
அன்பும் இன்றும் கூடிக் கொண்டிருப்பதால்;
இல்லறம் இல்லத்தரசியின் இனிய இசைவில்.
அதனால் தான் இல்லறம் நல்லறம்.
இது எனக்கு இறைவனளித்த பெரும் வரம்.




புதன், அக்டோபர் 09, 2013

தரம் தாழ்ந்து விட்டது.

ஆதார் அட்டை ,அலைந்தது தான் மிச்சம்.
வலைகளில் தேடினேன்.
அங்கு இங்கு என்று விசாரித்தேன்.
காந்தி ரோடு அரசுப் பள்ளியில் அளிப்பதாகக்
கூறினார்கள்.புனித அந்தோனியார் பள்ளியில்.(வேளச்சேரி)
இரத்த அழுத்தம் அதிகமானாலும்
வாழ்க்கையின் ஆதாரம் ஆடிப்போனாலும்
என்ன ஆனாலும் சரி இன்று ஆதார் அட்டைக்கு
அஸ்திவாரம் போடவேண்டும் என்றே சென்றேன்.
ஆனால்  இங்கு அளிப்பது நிறுத்தப்பட்டதாக
பள்ளித்  தலைமை ஆசிரியை கூறினார்.
பலர் விசாரித்து என்ன செய்வது என்றனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு "ஆதார் அட்டைத் தேவையில்லை
உறுதி செய்யப்பட்டது என்ற செய்தி.
ஆதாரம் தேடி அலையவேண்டியதில்லை .
வெளிநாட்டினருக்கு சுலபமாகக் கிடைக்கிறதாம்.
குடும்ப அட்டை,தேர்தல் ஆள் அறிவட்டை
இதெல்லாம் அவமதிக்க ஆதார் அட்டை;
அதற்கு பல கோடி செலவாம்
அதனால் போலி அட்டைகள் கண்டுபிடிப்பாம்'
ரேசன் கார்டு,எலக்சன் ஐ.டி. கார்டு
இதைவிட ஒரு கார்டு தேவையா/புரியவில்லை.
இது மாநில ,மத்திய தெர்தல்வாரிய
அவமதிப்பன்றோ!அது வழங்குவதில் ஒழுங்கில்லை.
ஒருமுறை சென்ட்ரல் வங்கி; ஒருமுறை சில விலாசம் '
ஏன் ?இந்த மாற்றங்கள்;அஞ்சல் அலுவலகம்
இன்று எங்கு என்ற நிச்சயமில்லை;

உள் நாட்டினருக்கு தாஸ்மார்க்.


தங்கம் வாங்கக்கூடாது
அதிலும் குறிப்பாக ஏழைகள் .
சிதம்பரம் பேச்சு.
தரம் தாழ்ந்து விட்டது.

திங்கள், அக்டோபர் 07, 2013

மொழிகளின் கலப்பும் விந்தையும்.

கடவுள் ,இறைவன்,பகவான்,குதா ,GOD இறைவனுக்கு பல  மொழிகளில் பல சொற்கள்.
அல்லா,ஏசு,சங்கரர்,ராமானுஜர்,ராகவேந்திரா,சத்யசாய்,சீரடி சாய் போன்ற தெய்வீக அருள் பெற்ற வழிகாட்டிகள்./மார்கதரிசிகள்./பைகம்பர்.
இதில் வழக்கு மொழியில் சொன்னால் அந்த வழிகாட்டிகள் என்ற சொல்  மார்கதர்சி/பைகம்பர் என்பதற்குள்ள  காம்பீர்யம் சற்றே குறைந்து இருப்பதாக
உணரப்படுகிறது.

இவ்வாறே நன்றி ஐயா/thank you, சார்,எனது வருத்தம் /மன்னிப்பு என்ற சொற்களைவிட ஸாரி/பர்டன் /excuse என்ற சொற்களில் விரைவாக பயன் படுத்துவதும் சற்றே மரியாதை தருவதும் ஆங்கிலச் சொற்கள்.

பெயர் வைக்கும்போது பெயரைக்கொண்டே ஒரு மரியாதை.தமிழ் பெயர்களைவிட வடமொழி பெயர்களுக்கு உண்டு.இது ஒரு தெய்வீகமான  ஒரு மன நிறைவு.இதில் பெயரில் என்ன?என்ற கேள்வியில் அது நிச்சயம் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்துவது போல் ஒரு தோற்றமா?அல்லது  இறைவனின்  திருவிளையாடலா?அந்த சமஸ்கிருதப் பெயரை தவிர்க்காத நிலை.பல இயக்கங்கள் முயற்சித்தும் தமிழ் பெயர்களை வைப்பது அவ்வளவு முன்னேற்றமில்லை.

தூய தமிழ் பேசுபவர்கள் ஒரு அதிசயப்பிறவி.ஒரு நடத்துனர் தூய தமிழ் நடையில் பேசுவதை வியந்து செய்திகள்.சொற்பொழிவுகள்.

பிரார்த்தனை/வழிபாடு/பூஜை /அர்ச்சனை/போற்றி /என்பதை மாற்ற முடியாத நிலை.

இன்று திராவிடக்கழகம்  அகில இந்திய அரசியலில் ஈடுபடும் பொது ஹிந்தியை ஒதுக்கமுடியவில்லை.அதைப்பற்றி பேசும் பொது இந்தியை எதிர்க்கவில்லை ,அதன் ஆதிக்கத்தை எதிர்க்கிறோம் என்று கூறும் நிலை.

இந்த மொழியின் ஆதிக்கம்/கலப்பு / தனி மொழி இயக்கத்தை வீழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றன..அதில் வெற்றிகாணும் முயற்சியில்
தமிழகம் தான் முன்னோடியாக இருக்கிறது.ஆனால்  இது உலக அளவில் எப்படி தொடர்புக்குப் பயன் படும் என்பதும் விந்தைதான்.

பேச்சுவழக்கில் மணி எத்தனை?சாலை,மிதிவண்டி,பேருந்து,,திருகாணி,சலவையகம்,முடி திருத்தும் நிலையம்,தையலகம்,பு கைவண்டி, போன்றவை பெரும்பாலானவர்களால் பயன்படுத்தும் நிலை வரும் வரை  தனித்தமிழ் இயக்கம் எப்படி?
வேகம்/சந்தேகம்,விவேகம் புத்தி ,மூர்க்கன் ,நகரம்,கிராமம்,பாகப்  ,பரிவர்த்தனை  பத்திரம்,சூனியம்,போன்ற ஆயிரக்கணக்கான சொற்கள்
படித்தவர்களும் பாமரர்களும்  பயன்படுத்தாமல் /உபயோகிக்காமல் வழக்கு மாறுமா?
ஆலயம்   தேவாலயம்.கோவில்  கோயில் மசூதி.சர்ச் ,மந்திர்,விஹார் மடம் ,சத்திரம்.
இந்த மொழி விந்தைகள் ஆச்சரியம்/வியப்பு.

செவ்வாய், செப்டம்பர் 24, 2013

இந்நினைவு அகற்றாதீர்.

பட்டதாரிகளும் பாட்டாளிகளும்  பணக்காரர்களும் 
அறிவியல் விந்தை ப்படைப்புகளும் அதிகரிக்கும்
 நாட்களில் 
ஆச்சரியப்படும் விஷயம் பண்புகளும் ,பண்பாடும் 
மனக்கட்டுப்படுகளும் பிறருக்கு உதவும் மாண்பும்
 சிலரிடமே காண்பது.
நல்ல விஷயங்களைவிட
 கடி சிரிப்புகள்,நக்கலான விஷயங்கள் 
ரசிப்பதும் ஒரிரு வாக்கியங்களில்
 அனைத்தும் புரிந்து செயல் படுத்தவேண்டும் என்பதே.
நம் தமிழ் இலக்கியங்களில் திருக்குறள்  அவ்வாறே வழிகாட்டியது.
ஆத்திச்சூடியும் அவ்வாறே.
எத்தனை நீதிநூல்கள் .பழமொழிகள்.நல்வழிகள்.
இவைகளை அதிக அளவில்
 மனப்பாடப்பகுதி இன்றி
 பொருள் விளங்க நடத்தினாலே போதும்.
நாட்டில் அமைதி நிலவும்.

ஆலும் வேலும்  பல்லுக்கு உறுதி.
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி .
யாது ஊரே யாவரும் கேளீர்.
உயர்ந்தோர் யார்?தாழ்ந்தோர் யார் ?
என்பதை அவ்வையார்  போல் யார்
மிக எளிதாக விளக்க முடியும்.
ஜாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் 
நீதிவழுவா நெறிமுறையில் இட்டார் பெரியோர் 
இடாதார் இழி குலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி.

இப்படி நீதி நெறிகள் கூறியும்
 இன்றும் மதத்தின் மாநாடு .
அதில் அரசியல் தலைவர்கள் தலைவிகள்
 பங்கேற்பதற்கான 
பெரும் விளம்பரங்கள் .

வாக்குகள் பெறவேண்டும் என்றால்
 மனிதர்கள் மதம் என்ற பெயரால் 
வேறுபட்டு இருக்கவேண்டும்!!! .
 என்னே உயரிய சிந்தனை.!!!
அதிலும் சிறுபான்மை
 என்று ஒரு வாக்கு   வங்கி 
இனக்கலவரம் .
இன்றைய படித்த இளைஞர்கள் 
 சற்றே சிந்திக்கவேண்டும்.
அறிவை வளர்ப்பது அறிவியல் ;
நல்ல பண்பை  வளர்ப்பது 
 பண்டைய தற்கால நல் இலக்கியங்கள்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா  என்றார் பாரதி.
தயவு செய்து  உங்கள் மதத்தை
 இறைவனை போற்றுங்கள்.
இது நல்வழிகாட்டும்.
சுயநல மதவாதிகள் சொல் கேட்டு 
இனக்கலவரங்களில் ஈடுபட்டு 
அப்பாவி இளைஞர்களை பலி ஆக்காதீர்கள்.
நாட்டின் நலம் கருதுங்கள்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்.
நம் வரலாற்றில் நாட்டு பக்தியைவிட ஆணவம் .சுயநலம் அதிகம்.
அது நம் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடை.
அரசனின் காதல் மோகத்திற்காக உயிர் இழந்த 
வீரர்கள் தான் வீரகாப்பியம்.
இந்நிலையில் தான் அன்னியர்கள் ஆட்சி.
நாட்டிற்காக போராடுவோம்.
சுயநல அரசியலுக்கு முடிவுகட்டுங்கள்.
வாழ்க பாரதம்.
நீர் அதன் புதல்வர்.
இந்நினைவு அகற்றாதீர்.(மகாகவி  பாரதி.)



ஞாயிறு, செப்டம்பர் 22, 2013

இறை உணர்வு.ஏழுமலையான் அருள்.

ஹிந்து மேல் நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்ததும் எனக்கு அறிமுகமானவர்களில் முக்கியமானவர்கள் தமிழாசிரியர் கே.ஆர்.ஜி.எஸ்..என்னுடன் வெஸ்லி மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஹிந்தி ஆசிரியர் ஓ.ஆர்.ராஜகோபால் அவர்களின் உறவினர்.
ஒ.ஆர்.ஆர். என்னைப்பற்றிக் கூறியதாகவும் நான் நேர் காணல் வந்த போது விடுப்பில் இருந்ததாகவும்  தலைமை ஆசிரியர் பொறுப்பு ஆர்.எஸ் அவர்களிடம் கூறியதாகவும் சொன்னார்.அவரின் அறிவுரைகள்,உதவிகள் மறக்க முடியாது. ஆசிரியர்கள் அனைவரும்  எனக்கு உதவினார்கள்.அவர்கள் எனக்கு தைரியம் அளித்தனர்.ஹிந்து பள்ளி ஆசிரியர்கள் சங்கம் நாடகங்கள் நடத்தி பள்ளி வளர்ச்சிக்கு நிதி சேர்த்தது. ஆசிரியர்களும் யாத்திரை செல்வர்.
அதில் ஆண்டுதோறும் திருப்பதி செல்வதை என்னால் மறக்கமுடியாது.
திருப்பதியில் நான் தெய்வ சக்தியை உணர்ந்தேன்.திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. தேர்வு எழுத சென்றபோது தான் எனக்கு எழுமலையான் தரிசனம் முதல்முதலாக.பல்கலைக்கழக தேர்வு நுழைவுச் சீட்டு என்னை நேரடி தரிசனத்திற்கு ராஜகோபுரத்தில் இருந்து செல்ல வழிவகுத்தது.இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதும்போது தான் அந்த அதிசய நிகழ்வு.பெரும் கூட்டம்.நாங்கள் சென்ற ஆண்டு சென்றவர்கள் தேர்வு நுழைவுச் சீட்டு காண்பித்து தரிசன அனுமதி கேட்டோம். அப்பொழுது ஒருவர் நுழைவுச் சீட்டு இருந்தால் நேரடி தரிசனம் என்றார்.உடனே அந்த சட்டம் எங்கே?என்று தகராறு ஏற்பட்டு உள்ளே செல்ல விடவில்லை.அப்பொழுது ஒருவர் என்னை அழைத்து என்னிடம் வி.ஐ.பி. பாஸ் உள்ளது. வாருங்கள் என்று நேரடியாக அழைத்துச்சென்று தரிசன் முடிந்தபின் என் பெயர் வெங்கடாசலபதி. இங்கு அனைவருக்கும் உணவு தானியம் வழங்கும் ஒப்பந்தக்காரன் .அனைவரையும் காக்கும் பொறுப்பு .என்று சொன்னவர் மறைந்து விட்டார். எனக்கு தேர்வு முடிவுகள் வந்த மாதமே உடனடியாக ஹிந்து மேல்நிலைப்பள்ளியில் முதுகலைப்பட்டதாரி  ஹிந்தி ஆசிரியர் நியமனம். ௧௯௮௦இல் இருந்து ௨௦௦௫ வரை ஆசிரியர் சங்க திருப்பதி சுற்றுலாவில் கலந்து ஏழுமலையான் தரிசனம்.அதுவும் ஓரிரு ஆண்டுகள் தவிர நடந்து சென்றே தரிசனம்.
என் மாமா எதிர் பாராதவிதமாக சாலையில் மரண ம் அடைந்து  சென்னை ராயப்பேட்டை மருத்துவ மனையில் பிணவறையில் இருப்பதாக செய்தி. அவர் தான் என் தகப்பனார் முதல் ஆண்டு திவசத்திற்காக பழனிக்கு அனுப்பிவைத்தார். அவரின் இந்த மாற செய்தி பழனிக்கு வந்ததும் என் மனைவிக்கு அதிர்ச்சி.ஒரு கை,ஒருகால் செயல் இழந்த நிலை.அப்பொழுதுதான் டாக்டர் வேல்முருகேந்திரன் அவர்களைச் சந்திக்க பள்ளி செயலர் ஸ்ரீனிவாச கோபாலன் அறிவுரை வழங்கினார்.அந்த நிலையில் ஒரு உத்வேகம் மனைவி குழந்தைகளுடன் நடந்தே எழுமலையான் தரிசனத்திற்குச் சென்றேன். குழந்தைகள் ,மற்ற பாதயாத்திரிகர்கள் அனைவருக்கும் என் மேல் கோபம்.அந்த தரிசனம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் எனது ௨வது மகனுக்கு  கால் வலி.அனைவரும் சேர்ந்து மீண்டும் நடந்து வருகிறோம் என்று பிரார்த்தனை செய்ததும் கால்வலி போயே போச்சு.அடுத்த ஆண்டு நான் சொல்லாமலேயே அனைவரும் மகிழ்ச்சியாக நடந்து சென்றோம்.அது தான் தெய்வ சங்கல்பம்.ஒரு புத்துணர்வை உணர்ந்தோம்......தொடரும்   
இஞ்சி காரக்குணம், நல்ல வாசனையும் கொண்டது. உடல் நலன் காக்கும் சிறந்த மருந்தான இஞ்சியை துவையலாக செய்து உண்ணலாம்.
தேவையானவை :
மா இஞ்சி - 50 கிராம், சாதாரண இஞ்சி - 50 கிராம், புளி - பாதி எலுமிச்சை அளவு, அச்சு வெல்லம் - 1, உப்பு - தேவையான அளவு, பச்சை மிளகாய்-5, கடுகு, எண்ணெய் - தாளிக்க

செய்முறை: இஞ்சியைத் தோல்  எடுத்து பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும் பச்சை மிளகாயையும் பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும். இப்போது வாணலியில் எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், இஞ்சியை நன்கு வதக்கவும் இஞ்சியின் பச்சை வாசனை போய், நல்ல  மனம்  வரும்  அப்போது  இறக்கி  விடவும். பின்னர் இதனுடன், புளி, உப்பு, வெல்லம் சேர்த்து மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர்  விட்டு  மைய  அரைக்கவும்

பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அரைத்த துவையலில் கொட்டவும்  இதை  தினமும் இரண்டு டீஸ்பூன் அளவு உணவில் சேர்த்து சாப்பிட்டால் உடல்  ஆரோக்கியம்  பெருகும். நோய்கள் அண்டாது. இனிப்பு  சுவை பிடிக்காதவர்கள் வெல்லத்தை  தவிர்த்து விடலாம், புளி கொஞ்சம் கூட சேர்க்கலாம்.

வெள்ளி, செப்டம்பர் 20, 2013

எனது வாழ்நாளில் மறக்க முடியாத இருநாட்கள் ௧௯.௧௦.௭௭. ௧௯,௧௦,௧௯௮௧,

எனது வாழ்நாளில்  மறக்க முடியாத இருநாட்கள் ௧௯.௧௦.௭௭. ௧௯,௧௦,௧௯௮௧,
இந்த நாட்களுக்கு இறைவன் அருள் இருந்ததே.
இந்த நாளில் நன்றி  தெரிவிப்பது அவசியம்.

முதலில் பழனி பட்டத்து விநாயகர்,
பழனி முருகன் இருவரையும் வணங்குகிறேன்.
நான் பழநியிலே இருக்கவேண்டும் என்ற முயற்சி எடுத்தும்  முருகப்பெருமான் சென்னைக்கு அனுப்பிவைத்தார்.
 இங்கு வேங்கடவனின் கருணை  அந்த பிரம்மானந்தம் என்னை பிரமிக்க வைத்தது.
முதலில் ஹிந்தி பிரசார சபையில் மேலாளராக பணிபுரிந்த சத்தியாக்ராஹாச்சரியார்  மூலம் வெஸ்லி பள்ளியில் பணி
காலியாக உள்ளது என்ற தகவல் சொன்னதற்கு நன்றி.
பிரசார சபையில் வேலை நிறுத்தம். அங்கு பாதுகாப்பிற்குச் சென்ற என் மாமா திரு சங்கரநாராயணன்  மூலம் தகவல்
அங்கு சென்றால்  விடுமுறை காலியிடம்.இப்பொழுது காலி இல்லை என்றனர்.அங்கு பணி புரிந்த ஈ.பாலசுப்ரமணியம் எனது விலாசத்தை வாங்கி வைத்துக்கொண்டு எங்காவது வேலை காலி இருந்தால் தகவல் அனுப்புகிறேன் என்றார்.நான் பழனி சென்றதும் அவரிடமிருந்து கடிதம். நான் வேலை ராஜினாமா செய்கிறேன்.இப்பொழுது பள்ளிப் பணியிடம் காலியாக உள்ளது  என்று கடிதம்.என் அம்மாவிற்கு கோபம்.நான் பழனியை விட்டு செல்லக்கூடாது என்று.திடீர் என்று போடா என்றதும் சென்னை வந்தேன்.
செய்தித்தாள் விளம்பரம் கண்டு விண்ணப்பித்தேன்.என்னை நேர்காணல் கண்டவர்  நியு காலேஜ் ஹிந்தி பேராசிரியர் இராமச்சந்திரன்.
இதற்கும் மேலாக நான் பிரசாரக் ஹிந்தி ஆசிரியர் பயிற்சிக்கு தூண்டுதலாக இருந்த திர்ச்சி ஹிந்தி பிரசார சபை முன்னாள் செயலளர்கள் காலம் சென்ற ஈ .தங்கப்பன் ,எம் .சுப்ரமணியம்,எனக்கு முதல்வராக இருந்த கே.என். ராமச்சந்திர ஷா, துணைப் பேராசிரியை மீனாக்ஷிஜி ,என்னைப் படிக்கவைத்த மாமா கே.வி.நாகராஜன் என் தாய் தந்தையர் என்ற பெரும் பட்டியல்.
வெஸ்லி பள்ளியில் பணி  சேர்ந்த போது  என்னை வெங்கடேஸ்வர பல்கலைக் கழகத்தில் எம்.ஏ .ஹிந்தி படிக்க தூண்டுதலாகவும் விண்ணப்பம்,,பாட திட்டம் போன்றவற்றை கொடுத்து ஊக்குவித்த வெஸ்லி பள்ளி  பட்டதாரி ஆசிரியரும் பின்னர் தலைமை ஆசிரியராக ஓய்வுபெற்ற  செல்வதாஸ் அவர்களையும் மறக்க முடியாது செல்வதாஸ் அன்று என் கை ரேகை பார்த்து நான்கு ஆண்டுகள் தான் வெஸ்லி பள்ளி. அதற்குப்பின் வேறு பள்ளி.பணிவுயர்வு  கிடைக்கும் என்றார் .அவ்வாறே சரியாக நான்கு ஆண்டுகள் அங்கு பணி  புரிந்தேன், இந்த ஜோதிடமும் என்னை பிரமிக்கச் செய்தது .அவ்வாறே நான்கு ஆண்டுகள் பணி ..இப்படி எனது வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உதவியோர் பட்டியல் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
 செய்நன்றி கொன்ற மகற்கு என்ற வள்ளுவர்.
 காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தில் மாnaப்  பெரிது என்றார்.

19.10.77 வெஸ்லி பள்ளியில் பணியில் சேர்ந்த தேதி
.பள்ளியில் அடிக்கடி மாணவர்கள் போராட்டம்.பல நாட்கள் 5 பாடவேளை.எனக்கு படிக்க மிகவும் கை கொடுத்தது .
 இருந்தாலும் பள்ளியின் சூழல் பணி நிறைவைத் தரவில்லை.
.என் பள்ளியில் என்னுடன் பணியாற்றிய ஹிந்தி ஆசிரியர் ஒ.ஆர். ராஜகோபாலன் அவர்கள் ஆன்மீக சிந்தனை யாளர்.சமஸ்கிருத பண்டிதர்.ஆசார சீலர். அவர் நட்பு எனக்கு உதவியது.
.18.10,81 எம்.ஏ  தேர்வில் வெற்றி பெற்று ஹிந்து மேல் நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியாராக சேர்ந்த நாள்
.இதற்கு எனக்கு விண்ணப்பம் தட்டச்சு செய்து தந்த வெஸ்லி பள்ளி எழுத்தர் மனுவேல் அவர்களை மறக்க முடியாது. பள்ளி செயலர் ரபீந்தர தாஸ் ,பர்சார்  லையனல் அவர்கள் தலைமை ஆசிரியர் எஸ்.எப்.கிரிஸ்டியன்  ,அங்கு எனக்க உதவிய ஆசிரியர்கள் ஜான் வெஸ்லி ,ஆபிரகாம் சாம்ராஜ் ,ஓவிய ஆசிரியர் நாராயணன் தமிழ் ஆசிரியர் குலோத்துங்கன் ,விவசாய ஆசிரியர் பன்னீர் செல்வம் யாரையும் மறக்க முடியாது.

ஹிந்து மேல் நிலைப்பள்ளியில் பணிசெர்ந்த போது  எனக்கு நேர்காணல் செய்த செயலர்,ச.வெங்கட்ராமன் ,ஹிந்து கல்வி அறக்கட்டளைத் தலைவர் திரு ஆர். பார்த்தசாரதி ஐ.பி.எஸ்.,வி.டி ரெங்கசாமி, அவர்கள்,ஹிந்து சீனியர் பள்ளி முதல்வர் பாலசுப்ரமணியன் என யாரையும் மறக்க முடியாது. மேலும் எம்.ஏ .ராஜகோபாலன்,அற க்கட்டளைத்தலைவர் சத்கைங்கர்ய்ய சிரோன்மணி திரு என்.சி.ராகவாச்சாரியார், எம்.ஒ.பி.பார்த்தசாரதி ஐயங்கார்,தலைமை ஆசிரியர் பொறுப்பு ஆர் .ஸ்ரீனிவாசன் அவர்கள் ,தலைமை ஆசிரியர் திரு டி.ராமானுஜம் ..அனைவருமே ஞானத்திலும்,தர்மசிந்தனையிலும் ,ஹிந்து மேல் நிலைப்பள்ளியின் வளர்ச்சியே தங்கள் மூச்சாக கருதுபவர்கள். கே.எஸ். ராமானுஜம் .
அனைவரும் மிக உயர் நிலையில் இருந்தாலும் ஹிந்து மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் ,ஊழியர் என்றால் உடன் உதவி செய்பவர்கள்
தவறுகளை மன்னிக்கும் உயரிய பண்பு. மனிதநேயம்,உயர் சிந்தனை.உயர் குடிப்பிறந்தோர் .மேன்மக்கள்
.அவர்களை தரிசனம் செய்வதே பாக்கியம்
.எம்.ஏ .ஸ்ரீ னி வாசகோபாலன் .என்ற செயலர் தான் என்னை அழைத்துப் பேசினார். அவர் அழைத்ததும் பயந்துவிட்டேன்.அவர் வீட்டிற்குச் சென்றதும் முதலில் உட்காரவைத்தார்.நான் விண்ணப்பித்த பி.எப்.கடன் விண்ணப்பத்தில் மனைவிக்கு உடல் நிலை சரி இல்லை  என்று குறிப்பிட்டதைக் கூறி என்ன விவரம் என்று கேட்டு ஆறுதலாகப் பேசி பள்ளி ஆட்சிக்குழுத் தலைவர் நரம்பியல் நிபுணர்,மனிதசேவைத்திலகம்  மருத்துவர்  வேல்முருகன் அவர்களை சந்திக்கும்படி கூறினார்.அவர் மருத்துவப்பணியை மகேசனுக்கு செய்யும் பணியாக இரவும் பகலும் செய்பவர் என்பதை அப்பொழுது அறிந்து வியந்தேன்.முதலில் அவரை சந்தித்தது இரவு 11.30 மணி.எனக்குப்பின்னால் காத்திருந்தோர் அதிகம். எப்பொழுது தூங்குவார்; விழிப்பார்  என்ற வியப்பு. அவரை சந்தித்ததும் ஒருகண்டிப்பு,பயம் அவர் உதவும் மாண்பு மிகவும் கவர்ந்தது.அயராப்பணி என்பர்.அதிலும் பலவித நோயாளிகளைப் பார்த்து தக்க மருந்தளித்து இலவச மாகவும் பார்த்து உண்மையில் அவர் ஒரு நடமாடும் தன்வந்தரி.அவர் என் மனைவிக்கு தக்க மருத்துவ ஆலோசனைகளும் உதவியும் செய்தார்.இந்த இருவரும் எனக்கு முதல் நெருக்கமான பள்ளி ஆட்சிக்குழு  தலைவர்;செயலர்.நெஞ்சம் மறக்கமுடியுமா/?

பிறகு இந்து அறக்கட்டளைத் தலைவராக இருந்த சத்கைங்கர்ய்ய சிரோன்மணி அவர்களின் சந்திப்பு மெய்சிலிர்க்கவைத்தது. அவ்வாறே கீழ்பாக்கம் கார்டனில் சந்தித்த எம்.ஏ .ராஜகோபாலன்,மூத்த வழக்கறிஞர் .திரு கே.எஸ்.ராமானுஜம் உயர்ந்த பண்பு. வாழ்க்கையில் எப்படி இருக்கவேண்டும்?என் இவர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் சிந்தனை அவர்களை தெய்வம் மனித வடிவில் என்றே உணரவைத்தது. ...தொடரும்.



vinayagar photo: Vinayagar Vinayagar.jpg
vinayagar photo:  Vinayagar.gif

Vinayagar

விநாயகர்





Photo - गणपति का यह कैसा रूप
விநாயகரின் அவமதிப்பு.
டெல்லி: டெல்லியில் விநாயகர் சிலைகளை யமுனை ஆற்றில் கரைக்கையில் 7 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். விநாயகர் சதுர்த்தியையொட்டி வடக்கு டெல்லியில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய விநாயகர் சிலை நேற்று வாசிராபாத்தில் உள்ள யமுனை ஆற்றில் கரைக்கப்பட்டது. சிலையை 20 முதல் 30 வயது வரை உள்ள 12 பேர் தூக்கிச் சென்று ஆற்றுக்குள் இறங்கினர். ஆற்றில் ஆழம் இல்லாததால் அவர்களில் உட்பகுதிக்கு சென்றனர். அப்போது நீரின் வேகத்தால் அவர்கள் நிலை தடுமாறினர். இதையடுத்து ஆற்று நீர் அவர்களை அடித்துச் சென்றது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் நீரில் மூழ்கிய 12 பேரில் 7 பேரைத் தான் உயிரோடு காப்பாற்ற முடிந்தது. 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீதமுள்ள 3 பேரின் உடல்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. இதே போன்று காஷ்மீர் கேட் உள்ள குதேஷியா காட் பகுதியில் விநாயகர் சிலையை யமுனை ஆற்றில் கரைக்கும்போது 3 பேர் நீரில் மூழ்கினர். அதில் ஒருவர் காப்பாற்றப்பட்டார், மீதமுள்ள 2 பேர் பலியாகினர். அவர்களின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.
விநாச காலே விபரீத புத்தி. கோடிக்கணக்கில் பணம். தமிழகம் -௧,கர்நாடக ௪ 
இந்த செய்தி. பதட்டம் !பயம்!விரயம்.
Read more at: http://tamil.oneindia.in/news/india/7-dead-during-ganesha-idol-immersion-in-yamuna-183696.html

வியாழன், செப்டம்பர் 19, 2013

இது தெய்வ பக்தியா?அல்லதுஅவமதிப்பா? சிந்திப்பீர் இந்துக்களே ?