இஞ்சி காரக்குணம், நல்ல வாசனையும் கொண்டது. உடல் நலன் காக்கும் சிறந்த மருந்தான இஞ்சியை துவையலாக செய்து உண்ணலாம்.
தேவையானவை :
மா இஞ்சி - 50 கிராம், சாதாரண இஞ்சி - 50 கிராம், புளி - பாதி எலுமிச்சை அளவு, அச்சு வெல்லம் - 1, உப்பு - தேவையான அளவு, பச்சை மிளகாய்-5, கடுகு, எண்ணெய் - தாளிக்க
செய்முறை: இஞ்சியைத் தோல் எடுத்து பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும் பச்சை மிளகாயையும் பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும். இப்போது வாணலியில் எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், இஞ்சியை நன்கு வதக்கவும் இஞ்சியின் பச்சை வாசனை போய், நல்ல மனம் வரும் அப்போது இறக்கி விடவும். பின்னர் இதனுடன், புளி, உப்பு, வெல்லம் சேர்த்து மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்
பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அரைத்த துவையலில் கொட்டவும் இதை தினமும் இரண்டு டீஸ்பூன் அளவு உணவில் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெருகும். நோய்கள் அண்டாது. இனிப்பு சுவை பிடிக்காதவர்கள் வெல்லத்தை தவிர்த்து விடலாம், புளி கொஞ்சம் கூட சேர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக