வெள்ளி, செப்டம்பர் 20, 2013

எனது வாழ்நாளில் மறக்க முடியாத இருநாட்கள் ௧௯.௧௦.௭௭. ௧௯,௧௦,௧௯௮௧,

எனது வாழ்நாளில்  மறக்க முடியாத இருநாட்கள் ௧௯.௧௦.௭௭. ௧௯,௧௦,௧௯௮௧,
இந்த நாட்களுக்கு இறைவன் அருள் இருந்ததே.
இந்த நாளில் நன்றி  தெரிவிப்பது அவசியம்.

முதலில் பழனி பட்டத்து விநாயகர்,
பழனி முருகன் இருவரையும் வணங்குகிறேன்.
நான் பழநியிலே இருக்கவேண்டும் என்ற முயற்சி எடுத்தும்  முருகப்பெருமான் சென்னைக்கு அனுப்பிவைத்தார்.
 இங்கு வேங்கடவனின் கருணை  அந்த பிரம்மானந்தம் என்னை பிரமிக்க வைத்தது.
முதலில் ஹிந்தி பிரசார சபையில் மேலாளராக பணிபுரிந்த சத்தியாக்ராஹாச்சரியார்  மூலம் வெஸ்லி பள்ளியில் பணி
காலியாக உள்ளது என்ற தகவல் சொன்னதற்கு நன்றி.
பிரசார சபையில் வேலை நிறுத்தம். அங்கு பாதுகாப்பிற்குச் சென்ற என் மாமா திரு சங்கரநாராயணன்  மூலம் தகவல்
அங்கு சென்றால்  விடுமுறை காலியிடம்.இப்பொழுது காலி இல்லை என்றனர்.அங்கு பணி புரிந்த ஈ.பாலசுப்ரமணியம் எனது விலாசத்தை வாங்கி வைத்துக்கொண்டு எங்காவது வேலை காலி இருந்தால் தகவல் அனுப்புகிறேன் என்றார்.நான் பழனி சென்றதும் அவரிடமிருந்து கடிதம். நான் வேலை ராஜினாமா செய்கிறேன்.இப்பொழுது பள்ளிப் பணியிடம் காலியாக உள்ளது  என்று கடிதம்.என் அம்மாவிற்கு கோபம்.நான் பழனியை விட்டு செல்லக்கூடாது என்று.திடீர் என்று போடா என்றதும் சென்னை வந்தேன்.
செய்தித்தாள் விளம்பரம் கண்டு விண்ணப்பித்தேன்.என்னை நேர்காணல் கண்டவர்  நியு காலேஜ் ஹிந்தி பேராசிரியர் இராமச்சந்திரன்.
இதற்கும் மேலாக நான் பிரசாரக் ஹிந்தி ஆசிரியர் பயிற்சிக்கு தூண்டுதலாக இருந்த திர்ச்சி ஹிந்தி பிரசார சபை முன்னாள் செயலளர்கள் காலம் சென்ற ஈ .தங்கப்பன் ,எம் .சுப்ரமணியம்,எனக்கு முதல்வராக இருந்த கே.என். ராமச்சந்திர ஷா, துணைப் பேராசிரியை மீனாக்ஷிஜி ,என்னைப் படிக்கவைத்த மாமா கே.வி.நாகராஜன் என் தாய் தந்தையர் என்ற பெரும் பட்டியல்.
வெஸ்லி பள்ளியில் பணி  சேர்ந்த போது  என்னை வெங்கடேஸ்வர பல்கலைக் கழகத்தில் எம்.ஏ .ஹிந்தி படிக்க தூண்டுதலாகவும் விண்ணப்பம்,,பாட திட்டம் போன்றவற்றை கொடுத்து ஊக்குவித்த வெஸ்லி பள்ளி  பட்டதாரி ஆசிரியரும் பின்னர் தலைமை ஆசிரியராக ஓய்வுபெற்ற  செல்வதாஸ் அவர்களையும் மறக்க முடியாது செல்வதாஸ் அன்று என் கை ரேகை பார்த்து நான்கு ஆண்டுகள் தான் வெஸ்லி பள்ளி. அதற்குப்பின் வேறு பள்ளி.பணிவுயர்வு  கிடைக்கும் என்றார் .அவ்வாறே சரியாக நான்கு ஆண்டுகள் அங்கு பணி  புரிந்தேன், இந்த ஜோதிடமும் என்னை பிரமிக்கச் செய்தது .அவ்வாறே நான்கு ஆண்டுகள் பணி ..இப்படி எனது வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உதவியோர் பட்டியல் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
 செய்நன்றி கொன்ற மகற்கு என்ற வள்ளுவர்.
 காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தில் மாnaப்  பெரிது என்றார்.

19.10.77 வெஸ்லி பள்ளியில் பணியில் சேர்ந்த தேதி
.பள்ளியில் அடிக்கடி மாணவர்கள் போராட்டம்.பல நாட்கள் 5 பாடவேளை.எனக்கு படிக்க மிகவும் கை கொடுத்தது .
 இருந்தாலும் பள்ளியின் சூழல் பணி நிறைவைத் தரவில்லை.
.என் பள்ளியில் என்னுடன் பணியாற்றிய ஹிந்தி ஆசிரியர் ஒ.ஆர். ராஜகோபாலன் அவர்கள் ஆன்மீக சிந்தனை யாளர்.சமஸ்கிருத பண்டிதர்.ஆசார சீலர். அவர் நட்பு எனக்கு உதவியது.
.18.10,81 எம்.ஏ  தேர்வில் வெற்றி பெற்று ஹிந்து மேல் நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியாராக சேர்ந்த நாள்
.இதற்கு எனக்கு விண்ணப்பம் தட்டச்சு செய்து தந்த வெஸ்லி பள்ளி எழுத்தர் மனுவேல் அவர்களை மறக்க முடியாது. பள்ளி செயலர் ரபீந்தர தாஸ் ,பர்சார்  லையனல் அவர்கள் தலைமை ஆசிரியர் எஸ்.எப்.கிரிஸ்டியன்  ,அங்கு எனக்க உதவிய ஆசிரியர்கள் ஜான் வெஸ்லி ,ஆபிரகாம் சாம்ராஜ் ,ஓவிய ஆசிரியர் நாராயணன் தமிழ் ஆசிரியர் குலோத்துங்கன் ,விவசாய ஆசிரியர் பன்னீர் செல்வம் யாரையும் மறக்க முடியாது.

ஹிந்து மேல் நிலைப்பள்ளியில் பணிசெர்ந்த போது  எனக்கு நேர்காணல் செய்த செயலர்,ச.வெங்கட்ராமன் ,ஹிந்து கல்வி அறக்கட்டளைத் தலைவர் திரு ஆர். பார்த்தசாரதி ஐ.பி.எஸ்.,வி.டி ரெங்கசாமி, அவர்கள்,ஹிந்து சீனியர் பள்ளி முதல்வர் பாலசுப்ரமணியன் என யாரையும் மறக்க முடியாது. மேலும் எம்.ஏ .ராஜகோபாலன்,அற க்கட்டளைத்தலைவர் சத்கைங்கர்ய்ய சிரோன்மணி திரு என்.சி.ராகவாச்சாரியார், எம்.ஒ.பி.பார்த்தசாரதி ஐயங்கார்,தலைமை ஆசிரியர் பொறுப்பு ஆர் .ஸ்ரீனிவாசன் அவர்கள் ,தலைமை ஆசிரியர் திரு டி.ராமானுஜம் ..அனைவருமே ஞானத்திலும்,தர்மசிந்தனையிலும் ,ஹிந்து மேல் நிலைப்பள்ளியின் வளர்ச்சியே தங்கள் மூச்சாக கருதுபவர்கள். கே.எஸ். ராமானுஜம் .
அனைவரும் மிக உயர் நிலையில் இருந்தாலும் ஹிந்து மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் ,ஊழியர் என்றால் உடன் உதவி செய்பவர்கள்
தவறுகளை மன்னிக்கும் உயரிய பண்பு. மனிதநேயம்,உயர் சிந்தனை.உயர் குடிப்பிறந்தோர் .மேன்மக்கள்
.அவர்களை தரிசனம் செய்வதே பாக்கியம்
.எம்.ஏ .ஸ்ரீ னி வாசகோபாலன் .என்ற செயலர் தான் என்னை அழைத்துப் பேசினார். அவர் அழைத்ததும் பயந்துவிட்டேன்.அவர் வீட்டிற்குச் சென்றதும் முதலில் உட்காரவைத்தார்.நான் விண்ணப்பித்த பி.எப்.கடன் விண்ணப்பத்தில் மனைவிக்கு உடல் நிலை சரி இல்லை  என்று குறிப்பிட்டதைக் கூறி என்ன விவரம் என்று கேட்டு ஆறுதலாகப் பேசி பள்ளி ஆட்சிக்குழுத் தலைவர் நரம்பியல் நிபுணர்,மனிதசேவைத்திலகம்  மருத்துவர்  வேல்முருகன் அவர்களை சந்திக்கும்படி கூறினார்.அவர் மருத்துவப்பணியை மகேசனுக்கு செய்யும் பணியாக இரவும் பகலும் செய்பவர் என்பதை அப்பொழுது அறிந்து வியந்தேன்.முதலில் அவரை சந்தித்தது இரவு 11.30 மணி.எனக்குப்பின்னால் காத்திருந்தோர் அதிகம். எப்பொழுது தூங்குவார்; விழிப்பார்  என்ற வியப்பு. அவரை சந்தித்ததும் ஒருகண்டிப்பு,பயம் அவர் உதவும் மாண்பு மிகவும் கவர்ந்தது.அயராப்பணி என்பர்.அதிலும் பலவித நோயாளிகளைப் பார்த்து தக்க மருந்தளித்து இலவச மாகவும் பார்த்து உண்மையில் அவர் ஒரு நடமாடும் தன்வந்தரி.அவர் என் மனைவிக்கு தக்க மருத்துவ ஆலோசனைகளும் உதவியும் செய்தார்.இந்த இருவரும் எனக்கு முதல் நெருக்கமான பள்ளி ஆட்சிக்குழு  தலைவர்;செயலர்.நெஞ்சம் மறக்கமுடியுமா/?

பிறகு இந்து அறக்கட்டளைத் தலைவராக இருந்த சத்கைங்கர்ய்ய சிரோன்மணி அவர்களின் சந்திப்பு மெய்சிலிர்க்கவைத்தது. அவ்வாறே கீழ்பாக்கம் கார்டனில் சந்தித்த எம்.ஏ .ராஜகோபாலன்,மூத்த வழக்கறிஞர் .திரு கே.எஸ்.ராமானுஜம் உயர்ந்த பண்பு. வாழ்க்கையில் எப்படி இருக்கவேண்டும்?என் இவர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் சிந்தனை அவர்களை தெய்வம் மனித வடிவில் என்றே உணரவைத்தது. ...தொடரும்.


கருத்துகள் இல்லை: