வெள்ளி, நவம்பர் 30, 2012

பிரேம மார்க்க பக்தி./காரணம் அவைகளுக்கு ஜாதி தெரியாது.


 பாப்பா  பாட்டு பாடிய  பாரதியாலும் ,

ஜாதி  இரண்டொழிய வேறில்லை  என்ற

ஔவையாராலும்  ஜாதி ஒழியவில்லை.

ஜாதிக்கட்சிகள், ஜாதீய உணர்வுகள் ,

மத  உணர்வுகள்,மத வெறிகள்,

மதம் ஜாதி என்ற பெயரால்

படுகொலைகள்   இன்னும் ஓயவில்லை.

 இராமாயண காலத்தில் ஜாதிவெறி

இருந்ததால்  தான்  ராமன் -குகன்  நட்பு

போற்றப்படுகிறது .

அறிவு,பண்பு , அடக்கம் உள்ள விதுரன்

சற்றே  ஒதுக்கிவைக்கப்பட்டான்.

கர்ணன்  வளர்ப்புப் பெற்றோர்களின் ஜாதிகாரணமாக
ஏளனத்திற்கு  ஆளானான் .
 அனைத்து மொழி  இலக்கியங்களில்,
  காதலுக்கு  முக்கியத்துவ,ம் .

அன்னம், மேகம்,காற்று புறா,

என அனைத்தும் காதலுக்கு தூது.

 காரணம்  அவைகளுக்கு  ஜாதி தெரியாது.

 ஞானம் பெற்ற  மனிதன் தன்   சுய  நலத்திற்காக
மனிதனை  மதம்,மொழி என்ற பெயரால்
வேறு    படுத்தினான்.
 ஆனால் இவைகளையும் கடந்து

காதல் வெற்றிநடை போடுகிறது .
அதனால்  காதல் படங்கள் வெற்றிபெறுகின்றன.

கபீர்

लाली   मेरे लाल की  जित  देखो , तित लाल;
लाली देखन  मैं गयी गयी  मैं भी  हो गयी लाल।

என்கிறார்.

காதலனைத்  தேடிச்சென்றேன் ;
எங்கு    எ தை ப்    பார்த்தாலும்

அவனையே  பார்த்தேன்.

அவனைப்பார்த்த  போது  நானும் அவனாக மாறிவிட்டேன்.

இதைத்தான்  காதலின் முற்றிய நிலை,

இது சங்கரரின் அத்வைத பக்தி.

பக்தி காதலுடன் இணைத்து விளக்குவதுதான்

பிரேம மார்க்க பக்தி.

அங்கு மீராவையும் பார்க்கலாம்.
ஆண்டாளையும் பார்க்கலாம்.
ஆண்டவன் முன் பிரேமையும் பக்தியும்
ஒன்றாவதால்  ஜாதி -மதம் பார்க்கப் படுவதில்லை.
காதலுக்கும் கண்ணில்லை ;பக்திக்கும் கண்ணிலை
அங்கு பேரானந்தத்திற்கும் ,முக்திக்கும் வழி  உண்டு .
அதுதான் பக்திப் பரவசம்.



















அன்னம் ,மேகம் .காற்று






துரியோதனன் 

வியாழன், நவம்பர் 29, 2012

உருவ அருவ இறை சக்தி உணர்வீர்கள்.சனாதன தர்மம் "ஹிந்து '



சனாதன  தர்மம்  "ஹிந்து ' என்ற வெளிநாட்டார்   இட்ட  பெயரால் வளர்கிறது .

இந்த ஹிந்து என்ற பெயர் சிந்து நதியின் மாற்றமே என்று அறியாமலேயே

சனாதன தரம்   வாதிகள் தங்களை  ஒரு ஹிந்து என்று சொல்லிக்கொள்வதில்

எத்தனை  பெருமை கொள்கிறார்கள். இது தான்  இந்துக்களின் பெருந்தன்மை.

இந்து   என்றால் திருடன் என்று மாநில  முதல்வர் கூறினாலும் பெரும் போராட்டங்கள்  நடக்கவில்லை.

பகுத்தறிவுவாதிகள்  தன எதிர்ப்பை இறைவனின் படங்களை செருப்பால்  அடித்து  ஊர்வலமாக  சென்றதையும்,கடவுள் இல்லை இல்லவே இல்லை
என்று சிலைகள் வைத்தாலும், இன்று ஆலயங்கள் வளர்கின்றன.அந்த ஊர்வலத்தை  ரசித்தவர்கள்  ஹோமங்கள் ,பூஜைகள் ,ஆலய தரிசனங்கள்,பரிகாரங்கள் செய்வதையும்   நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

உலகில் மிகவும் கேவலப்படுத்தப்பட்ட,பரிகசிக்கப்பட்ட,தைரியமாக  யாருக்கும்  அஞ்சாமல் எள்ளி நகையாடும்  மதம் ஹிந்து மதம்.

ஆனால்  பக்தர்களாலும்,ஆட்சியாளர்களாலும் ,மஹரிஷிகளாலும்  வளர்கின்ற மதம் ஹிந்து மதம்.

சற்று  ஒரு இரண்டு நிமிடங்கள்  ஓம் கணேசாய நமஹ/ஓம் முருகா /ஓம் நமசிவாய,/ஹரே ராம் /ஹரே கிருஷ்ண/சாய் ராம்  என்று   தங்களுக்கு பிடித்த
நாமத்தை ஜபம் செய்யுங்கள்.பத்துநாட்களில் நீங்கள் ஒரு ஆத்ம திருப்தி ,சந்தோசம்,மன ஷாந்தி அடைவீர்கள்.நீங்கள் எந்த ஆஷ்ராமங்களுக்கும் ,ஆலயங்களுக்கும்,பிராயச்சித்தம் என்ற பெயரில்
ஏமாற்றும் போலிகளையும் தேடிச்செல்லவேண்டாம் .

ஒரு இறை   சக்தி ,ஈஸ்வரானுபூதி உணர்வீர்கள்.இதைதான் ஹீரா குகையில்
முஹம்மது நபிகள் செய்தார்.சனாதன தர்மம் ஏகாந்த ஜப-தபத்தால் வளர்ந்தது.
ஹிந்து மதம் ஒவ்வொருவரின் ஆத்மானுபாவத்தால்  உன்னத நிலை அடைகிறது.

அதனால் தான்   இங்கு கடவுள் பெயர்கள் அதாவது இறை நாமங்கள்.உருவங்கள்  அதிகம்.

நமக்கு இன்னல் நேரும்போது ஒருவர் உதவினால் நாம் என்ன சொல்கிறோம் .

கடவுள் மாதிரி  உதவி செய்தார் என்கிறோம் .சிலர் அந்த உதவி செய்தவரின் பெயரை   கடவுளின் நாமமாக சபிக்கிறார்கள்.உதவி செய்தவர் பெயர் கணேசனாக இருக்கலாம் ,முருகனாக இருக்கலாம் துர்காவாக இருக்கலாம்.
அப்பொழுது அத்தனை உபாசகர்கள்,அத்தனை  நாமங்களில் கடவுள்கள்.
தேவி உபாசகர்,முருகதாஸ்,கண்ணதாஸ்,தாசானுதாசர்கள்  ஹனுமத் தாசர் ராமதாசர் .சிவ பக்தர்கள்.

 நாட்டுக்கு  நன்மை செய்தவரின் பெயரால் அண்ணா  நாமம் வாழ்க என்கிறோம்.
அவ்வாறே வீட்டுக்கும் நாட்டிற்கும் தனிப்பட்ட மனிதர்களுக்கும்
மனநிறைவு,மகிழ்ச்சி ,முன்னேற்றம் தர  இறைநாம ஜபம்  கலியுகத்தில்
அவசியம் ,

பணம்   சம்பாதிக்க  நேரம் அதிகம் சிலவாகும்  யுகம்  கலி யுகம்.
மணிக்கணக்கில்  உட்கார்ந்து ஜப்=தபமோ ,சந்தியா வந்தனமோ சொல்ல முடியாது

அதற்குத்தான் கலியுகத்தில் நாம  ஜபம் முக்கியம் ,பிரதானம்

அரசியல் வாதிகள் தன தலைவரின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கின்றனர்.
கட்சி மாறும் சூழ்நிலையில் புதிய கட்சித் தலைவருக்கு
நாம ஜபம் செய்கின்றனர்
முதல்வரின் காலில் விழுகின்றனர்

அது லௌகீகம் .இவ்வுலக இன்பம் பின்னர் ஊழல் விசாரணை.மன அமைதி இல்லை.
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் முன் ஜாமீன் வழக்கறிஞர் பாதுகாப்பு.
நீதிமன்ற அலைக்கழிப்பு.

ஆனால் இறை நாம ஜெபத்தால்  இறுதிவரை மன அமைதி.நாம ஜபம் செய்யுங்கள்.மன சாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள்.நேர்மையாக சத்தியத்தைக்  கடைபிடியுங்கள் .தான -தர்மங்கள் செய்யுங்கள்.
45 நாட்கள் ஒரு ஐந்து நிமிடங்கள் நாம ஜபம் போதும் .அஹம் பிரம்மாஸ்மி 
என்ற ஷங்கரரின்   அத்வைத்துவம்.வைஷ்ணவர்களின் துவைத்துவம்,
உருவ அருவ  இறை சக்தி  உணர்வீர்கள்.





நாம






 

புதன், நவம்பர் 28, 2012

பணம் குணத்தைக் கெடுக்கும்

அவசியமானவைகளும்  வணிக  நோக்கமும் 


       மனிதர்   நிம்மதியாக வாழ  நல்லொழுக்கம் அவசியம்.
மனிதர்கள் ஆத்ம  திருப்தியுடன் வாழ ஆன்மிகம் அவசியம்.

மனிதர்கள் நிமிர்ந்து வாழ கல்வி அவசியம்.

மனிதர்கள் ஆரோக்யமாக வாழ மருத்துவம் அவசியம்.

மனிதர்கள் பயமின்றிவாழ காவல் துறை அவசியம்.

குடும்பங்கள் குதுகூலமாக வாழ குடும்ப அமைதி அவசியம்.

இன்றைய  சூழலில்  மேற்கண்ட நான்குமே வணிக நோக்கமாக மாறிவிட்டன.

நல்லொழுக்கங்களை எதிர்கால சந்ததிகள்,
கல்விநிலையங்கள்,சமுதாயம்,பொழுதுபோக்கும் நாடகம்,திரைப்படம் ,
தொலைக்காட்சிகள் மூலம் பெறுகிறான்,

இவைகள் அனைத்தும் தன்னம்பிக்கை தருவதாகவும் ,ஏற்றதாழ்வுகள் போக்குவதாகவும் சமத்துவம் ,சகோதரத்துவம் உண்டாக்குவதாகவும்  அமையவேண்டும் .
அமைதிக்காக  திரைப்படங்கள் சென்றால்,முதல் காட்சியே கொலை,கொள்ளை ,கற்பழிப்பு,கள்ளக்கடத்தல், காவல்துறை அனைத்துமே

நேர்மையைவிட  பணமே பிரதானம்  என்ற போக்கு.

ஆலயங்கள் செல்ல முடியாமல் சிறு நடைபாதைகடைகள் ஆக்கிரமிப்பு

உள்ளே சென்றால் உள்ளம் அமைதி அடைவதற்குப் பதிலாக எத்தனை எத்தனை ஏற்ற தாழ்வுகள்.ஜாதிய,பொருளாதாரம்,வடமொழி ,தமிழ் மொழி வழிபாடு .திருநீறு வழங்குவதில் காட்டும் பாகுபாடு


கல்வி  வாணிகம் படு ஜோர்.அரசாங்கம் தன்  பள்ளிகளை வளர்க்கிறேன் என்று சொல்கிறது .ஆனால் மூடப்பட்ட  பள்ளிகள் அதிகம்.  அதற்கான காரணங்கள் மன சாட்சியுடன் வெளியே சொல்லமுடியாது.பள்ளி நேரங்களில்
பள்ளி வகுப்பறைகளில்   மாணவர்கள் மட்டுமே இருப்பார்கள்.
தனியார் பள்ளிகளில் ஆசிர்யர்களும் சேர்ந்து இருப்பார்கள்.

மருத்துவம் அனைவரும் அறிந்ததே

தியாகம்,சேவை மனப்பான்மை  எங்கும் இல்லை .நாடு என்னவாகும்

  இளம்பிஞ்சுகள்  காதலைப்பற்றி பேசுகின்றன.கல்லூரி எதற்கு?எட்டுவயது

சிறுமியின் பதில் காதலிக்க.

பணம்  குணத்தைக் கெடுக்கும்


பெற்றோர்கள் நிம்மதி இழப்பார்கள்.

கலப்புத்திருமணங்களும்  பெற்றோர்களின்  பர்தவிப்பும்


      ஜாதிகள்   பார்க்கக்கூடாது ,தாராள மனம் வேண்டும் .

குழந்தைகள்  பெற்றால் வளர்ப்பது பெற்றோர் கடன்.

தங்கள்  தேவைகள்,  ஆசைகள்  அனைத்தையும் விட்டு

வளர்க்கும்  பெற் றோர்களுக்கு ,

இன்றைய  குழந்தைகள்  ஆங்கிலம் படித்தபின்

முதலில் பேசுவது வரைவது எல்லாமே இதயபடம்,  ஒரு அம்பு ,

ஐ லவ் யு   தான்.


கலப்பு   மணத்தை   ஆதரிக்கும் அரசாங்கம்,முற்போக்கு வாதிகள் ,

பகுத்தறிவு வாதிகள் அனைவரும் மேடைப்பேச்சு பேசும் வாய்ச்சொல் வீரர்களாகத்தான்  உள்ளனர். அனைவரும் ஜாதிவாரி மக்கள் துகைக் கணக்கை  ஆதரிக்கின்றனர்.

 கலப்புத்திருமணம்  செய்த பின்  பிறந்த குழந்தையின் ஜாதி  இப்பொழுது

பெரிய  பிரச்சனை .அதிலும் அம்மா  ஜாதியா,அப்பா ஜாதியா.

காதல் திருமணம்  ஜோடி  பிரிந்தால் அந்தக்குழந்தை அப்பாவின் பாட்டியால்
வளர்ப்பதில்  எவ்வளவு சிக்கல் .

எனக்குத்தெரிந்த ஒரு பெண் காதலனைப் பிரிந்து    அப்பா    வீட்டிற்கு  குழந்தையுடன்  வந்து  பட்ட பாடு தற்கொலையில் முடிந்தது.

இன்று  குழந்தைப் பருவத்தில்    இருந்தே  காதல் என்பதும்,அப்பாவை மதிக்கக் கூடாது  என்பதும்,யாரும் தேவை இல்லை  எப்படியும் பிழைக்கலாம்  ஒரு
தவறான  மனோபாவம் என்ற   தொற்று நோய் வளர்ந்து   பலரை  நிம்மதி இழக்கச்  செய்கிறது.  பலரை கொலை  காரர்களாக்குகிறது. பலர் வாழ  வேண்டிய  வயதில் பரலோகம் அனுப்புகிறது.

இன்று  குட்டி -  சுட்டி விளம்பரம் விளம்பரம்.ஒரு 7-8 வயது  சிறுமியிடம் ஒரு வினா ---காலேஜ்    சென்று  என்ன செய்வாங்க?
 விடை --காதலிப்பார்கள் .
விடை கேட்டு  சிரிப்பு.

 குஷ்பு  பேசியதற்கு  நீதி மன்றம் மன்றம்..போராட்டம் .

  நம் தமிழர் பண்பாடு இப்பொழுது மௌனம்.

பெற்றோர்கள் ஒரு எந்திரம் .குழந்தை  பெற்று வளர்ப்பது.

இந்நிலை   உருவாக்கும்  பெரிய திரை ,சின்னத்திரை  அவர்கள் தனிப்பட்ட

வாழ்க்கை  நிம்மதி இல்லாமல் தான் இருக்கிறது .

 அவர்களும் நீதிமன்றம் செல்கிறார்கள்.

எதிர்கால இளைஞர்கள், நிம்மதி இன்றி இருக்கும் சமுதாய  சூழல் உருவாகும்.

பெற்றோர்கள் நிம்மதி இழப்பார்கள்.




 

ஆசிரியராக விரும்பாததற்கும் யார் காரணம்?

பெற்றோர்கள்  தங்கள் குழந்தை களுக்கு  அன்பு என்ற பெயரில் அதிகம்  சலுகை அளிப்பதால் ,
இன்றைய காலங்களில்  அவர்கள்  அதே அன்பை  வெளியிலும் எதிர்பார்க்கின்றனர்.என் மாணவன் 
ஒருவன்  என்னிடம் என் பெற்றோர்கள் என்னிடம் கண்டிப்பாக நடந்து கொள்வதோ,அடிப்பதோ,
திட்டுவதோ கிடையாது .எந்தவித அறிவுரையும் கூறமாட்டார்கள்.நீ தானாகவே தெரிந்து கொள் என்பார்கள் 
அதையே   நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் என்பான்.அவனுக்கு எல்லாவிதத்திலும் பெற்றோர்கள் சலுகை.
படிக்கவில்லை என்றால்  நாங்களே கவலைப்படுவதில்லை.நீங்கள்  ஏன்  அவனை கஷ்டப்படுத்துகிறீர்கள்.
அவன்  உட்கார்ந்தே பல தலை முறைக்கும் சாப்பிடலாம்.என்பர்.ஆசிரியர்களும் நமக்கு ஏன் சார் வம்பு என்று 
விட்டுவிடுவார்கள். இதில் பாதிக்கப்படுவது சில ஏழை மாணவர்கள் .அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளின் 
தேர்ச்சிவிகிதம் .  மேலும்  இதே பெற்றோர்கள்  தனியார் பள்ளிகளில் நேரடியாக ஆசிரியர்களை  சந்திக்கவோ / தரக் 
குறைவாக  பேசவோ முடியாது.ஆனால் ,அங்கு ஆசிரியர்கள் பயந்தே இருக்கவேண்டும்.விடுப்பு எடுக்க முடியாது.
ஆசிரியர்கள்,மருத்துவர்கள் காவல்துறையினர் மூவரும்  தன்னல  மில்லா  உழைப்பு தியாகம் செய்யவேண்டும்.அதற்கேற்ற 
மதிப்பும் ,மரியாதையும் ,பொருளாதார வசதியும் தரப்படுகின்றதா என்றால் அது  கிடையாது .50,000 ஊதியம் பெறும் 
பள்ளி ஆசிரியர்களால் தேர்ச்சி விகிதம் காட்டமுடியா நிலை.நிரந்தரமற்ற குறைந்த ஊதியம் பெரும் ஆசிரியர்கள் தேர்ச்சிவிகிதம் காட்டுகிறார்கள்.சில  கல்லூரிகளில்
துறைத்தலைவர்கள் (H.O.D) மாதம் 10,000/-ஊதியம்.
கல்வித்துறை  ஆசிரியர்கள் தரம் குறைவதற்கும், தரம் மிக்கவர்கள் ஆசிரியராக விரும்பாததற்கும்  யார் காரணம்?

செவ்வாய், நவம்பர் 27, 2012


 இன்று   திருநாள் .   ஒளி  பெருகட்டும் .


முக்கண்ணன்   மைந்தன் ,முருகன் 

கந்தன் , கடம்பன் , கார்த்திகேயன் ,


கருணை  மழை   பொழிய ,

அவன்    பாதம்  பணிவோம்.


 வாழ்வில் ஒளிபெற  வாழ்த்துக்கள் .


 

    

ஞாயிறு, நவம்பர் 25, 2012

வாழ்க ஜனநாயகம்.



அமெரிக்காவில் ஆறுமாதம்,
ஆனந்தமாய்,
கழித்த  பின் இன்று 
இந்தியப் பயணம்.
தாய் நாட்டுப் பற்று,
தாயகம் காணும் 
மகிழ்ச்சி.
செய்தி படித்தேன்.
சென்னையைத் தவிர,
மற்ற நகரங்களில் 
18  மணிநேரம் மின் வெட்டு.
பாவம் என் வயதான அம்மா.
மக்கள் நலம் காக்கும் 
இந்திய நாட்டில்,
 அரசுகள் மாறுவதால்,
திட்டங்களில் மாற்றம்.
ஒருவர் புகைவண்டி மேலே செல்லவேண்டும் என்றால்,
ஒருவர் பூமிக்குள் செல்லவேண்டும் என்பார்.
அவர் பதவி போய் இவர் பதவி வந்தால்,
திட்டங்கள் தூள்-தூள்.
நட்டங்கள் மக்கள் வரிப்பணம்.
அவர்களுக்கென்ன அயல் நாட்டு சேமிப்பு.
வாழ்க ஜனநாயகம்.
ஆறுமுகக்  கடவுள்,
ஆனை முகன் தம்பி,
அறுபடை வீட்டு நாயகன்,
அவன் பதம்  பணிவோம் யாம்.
அவனியில் நம் இச்சைகள் 
அவனருளால் 
விருப்பங்களாகி,
செயலுருப்பெற்று,
உள்ள நிறையுடன்,
ஊக்கம்  பெற்று,
உள்ளம் மகிழ்ந்து ,
நோய்நொடி இன்றி,
நீண்ட காலம்,
இனிதே வாழலாம்.

ஹிந்து மதம் எதையும் தாங்கும்.

ஹிந்து புராணங்களின் சர்ச்சைகள் வந்த வண்ணமாக உள்ளன.
மோகினி அவதாரம் பற்றிய சர்ச்சை.
இறைவன் பற்றிய வரலாற்றை ,
விவாதம் செய்வது பாவம் என்றோருவாதம்.
ஆனால் ஹிந்து மதம் எதையும் தாங்கும்.

அது ஒரு பூமி.
அதில் சவத்தையும்  புதைக்கலாம்.
சாக்கடையையும் ஓடவிடலாம்.
புனித கங்கையும் ஓடவிடலாம்.
குழியும் தோண்டலாம்.
சுரங்கங்கள் தோண்டலாம்.
தங்கமும் வெட்டி எடுக்கலாம்.
நிலக்கரி எடுக்கலாம்.
வைரமும் எடுக்கலாம்.
எலும்புக் கூடுகளும் கிடைக்கலாம்.
புதையலும் எடுக்கலாம் .
புண்ணியர்களையும் புதைக்கலாம்.
பாவிகளையும் புதைக்கலாம்.
அறிவு,பதவி,அறிவியல் மேதைகள்,
நாஸ்திகர்கள்,ஆஸ்திகர்கள் 
அனைவரும் சங்கமிக்கும் இடம் பூமி.
ஆகையால் இந்துமதம் கர்ம பூமி,
கர்மத்துக்கேற்ற வாழ்க்கையை கொடுக்கும் பூமி.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
திணை விதைத்தவன் திணை அறுப்பான்.
ஆகையால் இது வினைக்கேற்ற பலன் தரும் 
சனாதன தர்மம் என்ற சகிக்கும் பூமி.
அருவுருவமும் ஆனாய் போற்றி 
அகிலத்திற்கே ஒரு ஆதர்ஷ பூமி.

சனி, நவம்பர் 24, 2012

எண்ணிய எண்ணங்கள் யாவும்,எளிதில் நிறைவேறுமே.

முருகனுக்கு மூத்தோன்,
காட்சிக்கு  எளியோன்.
கணங்களின் நாயகன்,
கணபதி என்றும் என்னைக் காக்க.

வேழமுகத்தோன் ,
வேலனின் மூத்தோன்,
வேண்டும் வரம் அருளும்,
கணபதியைத் தொழுவோம் .

கஜவதனன், பஞ்சக்கரமுடையோன்,
பக்தர்களைக் காப்போன்,
பட்டிவீரன் பட்டி வாசன்,
கற்பக விநாயகன்,அவன்பாதம் பணிவோம்.

மோதகப் பிரியனவன்,
சித்தி விநாயகன்,
பவானி  புத்திரன்,
பவ துக்க ஹரன்,
சிவ புத்திரனவன்  முன்
தோப்புக்கரணமிட்டால்,
தோல்வி பயம் நீங்கி,
தொல்லுலகில்
தொல்லைகள் அகன்று,

சாந்தியுடன்,சக்தியுடன்,
சகல இச்சைகளும்  நிறைவேறும்,
ஞானம் பெற்று,
கிரியா ஊகம் பெற்று,
நானிலத்தில் நலமுடன்
வாழ லாமே.

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன்.
ஆலயங்கள் சாத்தினாலும்,
அரசமரத்தடியில்  அமர்ந்து,
அருகம்புல் அர்ச்சனை ஏற்று,
அல்லல் அகற்றும் ஆறுமுகன்
அண்ணன் அவன்.,பாதம் தொழுதால்,
பாவங்கள் விலகும் ஐயா.

சர்வ சித்தி விநாயகன்,
சங்கடஹர விநாயகன்,
விக்னங்களை  நீக்கும்,
விக்ன வினாயகனவன்.
அவன் பாதம்  வணங்க ,
அல்லல் போகுமே;
ஆனந்தம் பொங்குமே.
இன்னல்  நீங்குமே .
மனதில் இன்பம் பொங்குமே.
எண்ணிய எண்ணங்கள் யாவும்,
எளிதில் நிறைவேறுமே.









,