பெற்றோர்கள் தங்கள் குழந்தை களுக்கு அன்பு என்ற பெயரில் அதிகம் சலுகை அளிப்பதால் ,
இன்றைய காலங்களில் அவர்கள் அதே அன்பை வெளியிலும் எதிர்பார்க்கின்றனர்.என் மாணவன்
ஒருவன் என்னிடம் என் பெற்றோர்கள் என்னிடம் கண்டிப்பாக நடந்து கொள்வதோ,அடிப்பதோ,
திட்டுவதோ கிடையாது .எந்தவித அறிவுரையும் கூறமாட்டார்கள்.நீ தானாகவே தெரிந்து கொள் என்பார்கள்
அதையே நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் என்பான்.அவனுக்கு எல்லாவிதத்திலும் பெற்றோர்கள் சலுகை.
படிக்கவில்லை என்றால் நாங்களே கவலைப்படுவதில்லை.நீங்கள் ஏன் அவனை கஷ்டப்படுத்துகிறீர்கள்.
அவன் உட்கார்ந்தே பல தலை முறைக்கும் சாப்பிடலாம்.என்பர்.ஆசிரியர்களும் நமக்கு ஏன் சார் வம்பு என்று
விட்டுவிடுவார்கள். இதில் பாதிக்கப்படுவது சில ஏழை மாணவர்கள் .அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின்
தேர்ச்சிவிகிதம் . மேலும் இதே பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் நேரடியாக ஆசிரியர்களை சந்திக்கவோ / தரக்
குறைவாக பேசவோ முடியாது.ஆனால் ,அங்கு ஆசிரியர்கள் பயந்தே இருக்கவேண்டும்.விடுப்பு எடுக்க முடியாது.
ஆசிரியர்கள்,மருத்துவர்கள் காவல்துறையினர் மூவரும் தன்னல மில்லா உழைப்பு தியாகம் செய்யவேண்டும்.அதற்கேற்ற
மதிப்பும் ,மரியாதையும் ,பொருளாதார வசதியும் தரப்படுகின்றதா என்றால் அது கிடையாது .50,000 ஊதியம் பெறும்
பள்ளி ஆசிரியர்களால் தேர்ச்சி விகிதம் காட்டமுடியா நிலை.நிரந்தரமற்ற குறைந்த ஊதியம் பெரும் ஆசிரியர்கள் தேர்ச்சிவிகிதம் காட்டுகிறார்கள்.சில கல்லூரிகளில்
துறைத்தலைவர்கள் (H.O.D) மாதம் 10,000/-ஊதியம்.
கல்வித்துறை ஆசிரியர்கள் தரம் குறைவதற்கும், தரம் மிக்கவர்கள் ஆசிரியராக விரும்பாததற்கும் யார் காரணம்?
1 கருத்து:
பள்ளிக் கூடம் என்றாலே தண்டனை தரும் இடமாக (இரு, உன் ஆசிரியரிடம் சொல்லி உன்னை நன்றாக கவனிக்கச் சொல்லுகிறேன் (!)) என்ற பயமுறுத்தும் பெற்றோர்கள் தான்!
வேறு யார்?
கருத்துரையிடுக