சனி, நவம்பர் 19, 2011

sweet-flag

வசம்பு
எனக்கு சிறு வயதிலிருந்தே நாட்டு மருந்தில் ஆர்வம்.அதை அறியும் ஆவல் இருந்தும் வாய்ப்புகள் குறைவு. என் பாட்டி,தாத்தா ,அம்மா அனைவரும் வசம்பு ,
வசம்பு என்று குழந்தைகளுக்கு ஒரு சிறு கட்டை போன்று வைத்து ஒருகல்லில் அரைத்து பாலில் கலந்து தருவார்கள்.
 அப்பொழுது  நான் கேட்டால் விளக்கமாக கூறமாட்டார்கள்.6 -7  வயதில் இருந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம்,62   வயதில்  எதிர்பாராமல் ஒரு பழைய புத்தகத்தில் இருந்து கிடைத்தது.
அது இக்காலத்தில் பயன் படலாம் .ஆனால்  இன்றைய தலை முறையினருக்கு  பாட்டி வைத்தியம்/வீட்டுவைத்தியம் செய்ய நேரமில்லை.ஆனால் கணினி     யுகத்தில்  சிலர் ஆர்வத்துடன் அறிய விரும்புவதை நேரில் கண்டேன்.
அதன் விளைவே  "வசம்பு".
வசம்பு தான்  ஆங்கிலத்தில் "sweet -flag".

இதற்கு  , உக்கிரம் ,வாச ,வசம் , கடுவான் , பச் ,பிள்ளை மருந்து ,சொல்லா மருந்து என்று பெயர் உண்டு. சொல்லா மருந்தாக எதிர்கால சந்ததியினருக்கு சொல்லாமல் கடும் மந்தணமாக
நம் முன்னோர்கள் இருந்த்தது தான் நமது சித்தம் 
தெளிவு பெறாததற்குக் காரணம்.
 இந்த வசம்பு இந்திய,பர்மா,வட அமெரிக்கா,ஐரோப்பா,போன்ற நாடுகளில் விளைகிறது.
இதன் மருத்துவ குணம்:-வசம்பினால்,எல்லா வகை நச்சுகள்,புண்கள்,இரத்த பித்தம்,வாய்நாற்றம், இருமல்,ஈரல் சம்பந்த நோய்கள்,நாடாப்புழு,வயிற்றுப்பூச்சி போன்றவைகளுக்கு  சிறந்த அரிய மருத்துவ குணம் கொண்டது  வசம்பு.இதற்கு " அகோருஸ் கலமுஸ்" என்ற மருத்துவப்பெரும் உண்டு.(தாவரப்பெயர்)(acorus calamus)
வசம்பை போடி செய்து  தேன் கலந்து சாப்பிட்டால் அஜீரணம்,வயிற்றுப்பொருமல்,வாயுத்தொல்லை,சொறி, சிரங்கு,காய்ச்சல்,முறைக்காய்ச்சல்,ஆகிய நோய்கள் குணமாகும்.வயிற்றில்உள்ளா பல  வித   புழு -பூச்சிகள் தொல்லை வசம்பால் தீரும்.




,

 



kelvichchorkal prshna vaachak interrogative

interrogative words

what= என்ன======enna======क्या=kyaa
when=எப்பொழுது =eppoluthu =कब =kab
who=யார்========= yaar  =कौन-kaun
why=ஏன்=========en  =क्यों =kyon
how=எப்படி =======एप्पदी=कैसा =kaisaa
howmuch=எவ்வளவு= evvalavu=कितना =kitnaa


1.what is this?=ithu enna/? இது என்ன/?=yah kyaa hai/?यह क्या  है?

3..when will  he come  ?  அவன் எப்பொழுது வருவான்/?=avan eppoluthu varuvaan/?
वह कब आयेगा?=vah kab aayegaa/?

4.who are you?=நீ யார்/?=nee yaar/?तुम कौन हो/=tum kaun ho?

5.why did you speak lie/?=நீ ஏன் போய் பேசினாய்?=nee yen poy pesinaay/?=thum kyon jhooth bole?=तुम क्यों झूठ बोले/?

6 .how are you/?=நீ எப்படி இருக்கிறாய்?=nee eppadi irukkiraay.तुम कैसे हो?=thum kaise ho?
7.what is the price of  this clock.?=intha gadikaaraththin vilai enna?
இந்த கடிகாரத்தின் விலை என்ன?
or எவ்வளவு=evvalavu
इस घडी का दाम कितना है?is ghadi kaa daam kitnaa hai?

.

week days and sentenses tamil hindi english

sunday=gyaairu=ravivaar or itwaar.ஞாயிறு =रविवार या इतवार.

monday=thingal= somwaar=திங்கள்=सोमवार
tuesday=sevvaay=செவ்வாய்=मंगलवार=mangalwaar
wednesday=புதன்=pudhan=बुधवार=budhwaar
thursday=வியாழன்  viyaalan =guruvaar or ruhaspatiwaar=गुरूवार या बृहस्पतिवार.
friday=வெள்ளி=velli=शुक्रवार=shukrawaar
saturday=சனி =shani=शनिवार=saniwaar.

   1.saturday is a holiday for school.=சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை=sanikkilamai pallikku vidumurai.(kilamay=DAY)
शनिवार स्कूल छुट्ठी है.=SHANIWAAR SCHOOL CHHUTTI HAI.
2.peter goes to church on sunday.=பீட்டர் ஞாயிற்றுக்கிழமை
சர்ச்சுக்குப்  போவான்.=peter gyaayitrukkilamai charchukkup povaan.=peeter itvaar church jaayegaa.=पीटर इतवार चुर्च जाएगा.

3..muhammad goes to mosque on friday.=முஹம்மது வெள்ளிக்கிழமை மசூதிக்குப் போகிறான்.
muhammad vellikkilamai masoodhikkuppokiraan.

  4.Tuesday sita goes to Durgaa temple.=seetai sevvaayanru durgai kovilukkup pokiraal.=சீதை செவ்வாயன்று கோவிலுக்குப் போகிறாள்.=सीता मंगलवार दुर्गा मंदिर जाती है.=sita mangalwaar durga mandir jaati hai.

5.on wednesday raam,raheem and sam met in the park=புதன் கிழமை ராம், ரஹீம்,சாம் பூங்காவில் சந்திக்கின்றனர்.pudan kilamai raam,raheem,saam poongaavil sandikkiren.
 राम रहीम और साम बाग़ में बुधवार  मिलते हैं raam, raheem aur saam budhwaar ko baag mein milte hain.
6.monday is day of moon.=திங்கள்கிழமை சந்திரனின் நாள்.thingalkilamai chandiranin naal.सोमवार चन्द्र  का दिन है.=somvaar chandra kaa din hai.
7 .thurshday is a holi  day to begin education.=வியாழன் கல்வி தொடங்க புனித நாள். 







வெள்ளி, நவம்பர் 18, 2011

theivakataaksham

இறைவனின் கருணை

இறைவனின் அருள் இயற்கையாகக் கிட்டும்.அனைவர்க்குமா  கிட்டும்?இறைவனை ஒதுங்கிச்சென்றாலும் ,அவன் உடனிருந்து காப்பான்.பல ஆண்டு தவம் செய்து இறைவனைகண்டோரும் உண்டு. ஆலயம் கண்டால் அலறி ஓடும் நாஸ்திகர்களும் உண்டு.பிறந்தோம் .நம்மை படைத்தவன் நம்மை எப்படி வைப்பானோ அப்படி வைக்கட்டும் என்று அவன் மேல் பாரத்தைப்போட்டு விட்டு
மிக மன நிறைவோடு வாழ்பவர்களும் உண்டு.அவன் சகல வசதிகளைக்கொடுத்தாலும்,மன  நிறைவின்றி   வாழ்பவர்களும் உண்டு.
            எனது வாழ்வில் நான் இறைவனை பல முறை உணர்ந்து மெய் மறந்து உள்ளேன். நான் ஆலயம் தொழுவது சாலவும்  நன்று என்ற அவ்வை சொன்ன படி ஆலயம் சென்று வந்தேன்.என் தாயார் ஹிந்தி ஆசிரியை.எனக்கு ஹிந்தி தாய் மூலம் இயற்கையாக வந்தது. நான் எவ்வித முயற்சியும் இன்றி ஹிந்தி ஆசிரியர்  பயிற்சி பெற்று  ஹிந்தி ஆசிரியர் ஆனேன்.நான் முயன்று படித்தாலும்
ஹிந்தி ஆசிரியர் ஆனது  அதுவும்  தமிழ்நாட்டில் ஆண்டவன் அருள்தான்.

பழனியிலே வேலை தேடிவந்த  எனக்கு முருகப்பெருமாள் சென்னைக்கு அனுப்பிவிட்டார்.சென்னை வெஸ்லி பள்ளியில் வேலை கிடைத்தது.அப்பள்ளி ஆசிரிய நண்பர் ஈ.செல்வதாஸ் பணியில் சேர்ந்த மறுநாளே என் கைரேகை பார்த்து நான்கு ஆடுகள் தான் இப்பள்ளியில் பணிபுரீவீர்கள் .பின்னேர் உயர் பதவியில் வேறு பள்ளி செல்வீர்கள் என்றார்.
பின்னர் அவராகவே ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில்  முதுகலை பட்டத்திற்கான விண்ணப்ப படிவம் வாங்கிவந்தார்.அவர் மூலம் எனக்கு திருமலையான் தரிஷனம் கிட்டியது ஒரு தெய்வீக அநுபூதி  தான்.
நான் மலைக்கோயில்  கோபுரவாசலில்  இருந்து  நேரே
 சென்று வேங்கடவனை தரிசித்தது.
இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிவிட்டு தர்ஷனம் செய்ய சென்றபோது எங்களை
கோபுரவாசலில் இருந்து உள்ளே அனுப்பவில்லை.கூட்டம் அதிகம்.அப்பொழுது ஒருவர் ஆஜானுபாகுவாக இருந்தார் என்னை நேரடியாக
அழைத்துச் சென்று   திரு வேங்கடவனை  தரிசனம் செய்ய வைத்தார்.அவரிடம் பெயர் வினவியபோது தான் என்னை அழைத்துச் சென்றவர் யார் என்ற மெய்யுணர்வு
ஏற்பட்டது.அவர் என் பெயர் வெங்கடாசலம் என்றும் அனைவருக்கும் unavu அளிப்பவர் என்றார். பின்னர் அவரைக் காணவில்லை.இது ஒரு அற்புதம்.
மற்றொரு அற்புதம் முதுகலைப்பட்ட தேர்வு முடிவுகள் அந்த ஆண்டி சீக்கிரம்
வெளியிட்டதும் நான் முதுகலைப்பட்டதாரி   ஆசிரியராக ஹிந்து melnilaippalliyil
நியமன் ஆனதும் ஒவ்வொரு ஆண்டும் மன நிறைவான எழுமலையான் தர்சனமும் தான்.
மற்றொன்று நான் வெஸ்லி பள்ளியில் பணயில் சேர்ந்த தேதி 18 -10-77.
ஹிந்து பள்ளியில் சேர்ந்தது ௧௮-௧௦-௧௯௮௧.(18-10-1981).
selvadhaas   கைரேகை ஜோதிடம் உண்மையென நிரூபணம் ஆகியது.ஆனால் அவர் இலவச ஆலோசகரே.
மேலும் நான் தலைமை ஆசரியர் ஆனதும் இறையருளே.என்னை விட அனுபவமிக்க சன்ஸ்கிருத ஆசிரியர் ச. ராஜகோபால் ,தன்னிச்சை ஒய்வு பெற்றது.
டி.எஸ்.ஸ்ரீராமன் தலைமை ஆசிரியர் தன்னிச்சி ஒய்வு பெற்றது.இதுதான்பிறவிப்பயன்..
ஜனனி  ஜன்ம சௌக்யானாம்,பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜன்ம பத்ரிகா
என்பதும் இறைவன் அருள் என்பதும் தெய்வீக சத்யம் .இதுவே தெய்வ கடாக்ஷம்.





.

iraivan seyal

இறைவன் அருள்   காக்கப்படும் பக்தனுக்கு, எப்படி கிடைக்கும் எவர்கள் மூலம் கிடைக்கும் , எந்த மாதிரி கிடைக்கும், என்பதை அறிய முடியாது.அவ்வாறே அவன் யாருக்காவது தண்டனை கொடுப்பதும் யார் மூலம் எந்த  காரணம்  என்றும் புரியாது.ஒருவேடன்  என்றோ எய்த அம்பு மரக்கிளையில்சிக்கியிருந்தது.அந்த வழியில்  சென்ற அந்தணதம்பதிகள்
மரத்தடியில்  ஒய்வு எடுக்க படுத்தபோது பெரும் காற்று வீச என்றோ மரக்கிளையில் சிக்கியிருந்த அம்பு அந்தணர்   மனைவி மீது பாய்ந்தது.
இன்றும் இவ்வாறன பல நிகழ்ச்சிகள் பார்க்கிறோம்.தேநீர் கடைக்குள் பேருந்து புகுந்து பத்துப் பேர் தேநீர் அருந்திக்கொண்டிருந்தவர் மரணம்.மரணத்தைப்பற்றி எண்ணாத அவர்கள் மரணம் அடைந்தனர். சவக்கிடங்கில் இருந்தவர் உயிருடன் எழுந்தார்..இந்த லீலைகள் அறிவியல் மனிதனுக்குப் புரியாது,கவனக்குறைவோ ,எதிர் பாரா நிகழ்வோ காரணம் vithippayan அல்லது இறைவன்  செயல்.

use of can ,sak, mudiyum

use of can/sak/mudiyum. english/hindi/tamil

I can give 10 lakh rupees.=main das lakh rupye de sakta hoon.=ennaal  oru laksham roopaay kodukka mudiyum.
                     मैं दस लाख रूपये दे सकता हूँ.=என்னால்  பத்து லக்ஷம் ரூபாய் கொடுக்க முடியும். నేను   పది లక్షలు ఇవ్వగలను

2.you can walk now.=tum ab chal sakte ho.=unnaal ippoluthu nadakka mudiyum..
                                  तुम अब चल सकते हो.=உன்னால் இப்பொழுது நடக்கமுடியும்.నువ్వు ఇప్పుడు నడవగలవు

3 .He can run fast.=vah tez doud  sakta hai. avanaal vekamaaka oda mudium.

                                वह तेज़  दौड़ सकता है.=அவனால் வேகமாக ஓட முடியும் అతడు  ఇప్పుడు శీఘ్రముగా పరగేత్త గలడు

4.He (respect form )=avar=ve
   He can do this work=Avaraal intha velai seyya mudiyum.=Ve yah Kaam kar sakte hain.

அவரால்  இந்த வேலை செய்ய முடியும்.=वे यह काम करसकते हैं.

5.we can help you. engalaal unakku udhava mudiyum. ham aap kee  madad kar sakte hai.

 எங்களால் உனக்கு உதவ முடியும்.=हम आप की मदद कर सकते हैं.

inraiya aanmeekam

இன்றைய ஆன்மிகம்
இன்றைய  ஆன்மிகம் வளர்ந்த நிலையில் காணப்பட்டாலும்  பக்தர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் காணப்பட்டாலும் அது ஒரு போலியாகவே
உணரப்படுகிறது.ஆன்மீகத்திற்கு ஆதாரம் அன்பு,பற்றற்ற தன்மை, எளிமை,ஆடம்பரம் இன்மை போன்றவை .எளிய குடிலில்தான்  எளிய ஆடையில் தான் ஆன்மீகத்தொடக்கம் இருந்தது.  இன்றைய ஆஸ்ரமங்களுக்குள் பணம்  படைத்தவர்களே அருளாசி பெற ,அந்தரங்க பூசை என்று தனிக்கட்டணம் பெற்று அனுமதிக்கப்படுகின்றனர்.ஆன்மிகம் மட்டுமே இன்றி மழலைப்பள்ளி முதல் மருத்துவக்கல்லூரி  வரை என்று பணம் pபொன் விளையும் ஆதார ஸ்தலம் ஆக்கப்பட்டுள்ளன.
  புத்தர்,  சங்கரர், மகாவீர,ராமானுஜர், சுவாமி  ரமணர்,ராமகிருஷ்ண  பரமஹன்சர்,போன்றோர் அச்சமின்றி வாழ்ந்தனர்.இன்றைய சூழலில் துப்பாக்கியும் ,மிக்க வலிமை மிக்கவர்கள் காவலில் ,பெரும் மதில் சுவருடன்
கறுப்புப் பணம் மிக்க கிடங்குகளாக காட்சி அளிக்கின்றன ஆஸ்ரமங்கள்.
.பல ரகஸ்யங்கள் மறைக்கப்படும் இடமாக விளங்குகின்றன.
இறைவன் முழு அருள் பெற உண்மை நேர்மை,ஒரு மன தியானம் ஒன்றே போதும்.ஆழமான த்யானம்  தான்  முஹம்மது   நபியையும் ஏசுநாதரையும் இறைத்தூதர்களாக்கியது.
பாரதத்தில் சங்கரர்,இராமானுஜர்,மத்வாச்சாரியார் புத்தர் மகாவீரர் ஷீரடி சாய் பாபா, ராகவேந்திரர் போன்றோர் மகான்களாக   தெய்வமாக   போற்றப்படுகின்றனர்.  ,
  பக்த   துருவன் இறைவனைக்கண்டான்.பக்த பிரகலாதன்     தன்  வலிமை அதிகாரமிக்க  கடவுள் வரம் பெற்ற  தந்தையை எதிர்த்து பக்தியின் மகிமையை உணர வைத்தான்.
பகுதறிவுப்பிரசார பாரதத்தில் சாமியார்களிடம் ஏமாறுவோர் ஏராளம்.அதற்காக பல கவிகள்  பக்தியின் ஆழமான தன்மையை விளக்கியுள்ளனர்.
கீதை உபதேசித்த நாட்டில் ,    ஏகபோக அதிபதிகளாக சாமியார்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து இருப்பதும் ஏமாற்றுபவர்களாக இருப்பதும்
மக்களின் ஆழமான பக்தி இல்லாமை, ஆடம்பர பகட்டான போலி பக்தியை  காட்டுகிறது.
மக்கள் மனதில் இறைநாமமே போதும் துன்பங்களிலிருந்து விடுபட.
பரிகாரம் செய்தால் பாவமன்னிப்பு என்றால் நீதி சாகடிக்கப்படும்.

தாங்கள் விரும்பும் இறை நாமத்தை
உச்சரியுங்கள்.பலன் கிடைக்கும்.
பரிகாரங்கள் பின்னால் சென்று பலியாகாதீர்கள்.
அல்லாவின் பக்தர்கள் அல்லா!அல்லா!என்று தொழுங்கள் எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
ஏசுவின் நாமம் ஜெபியுங்கள் இன்பங்களைப்பெருங்கள்.

இந்துக்கள் ராமா,முருகா,சிவா,துர்கா,
விநாயகா,கிருஷ்ணா, என்று இஷ்ட குல கிராம தேவதை களை நாம ஜபம்
செய்யுங்கள்.இறைவழி பாட்டில்
ஞானத்தைப் பயன்படுத்துங்கள்.
அன்பு, நேர்மையைப்பயன் படுத்துங்கள்;
 குறுக்கு வழியில் குறுகிய மனதுடன்,
குற்ற உணர்வுடன் பொன் பணத்தால்,
இறைவனருள் இந்த ஜன்மத்திலும் எந்த ஜன்மத்திலும் கிட்டாது .உண்மையான நாம ஜெபமே
 பரிகாரம்.

advise for +2

+௨ (2) மாணவர்களுக்கு   அறிவுரைகள்
அன்பும் ஆற்றலும் உள்ள மாணவச் செல்வங்களே,
பாரதப் பெருநாட்டை பார் புகழைச் செய்ய,
தோன்றிய நாட்டின் எதிர்கால,சந்திர சூர்யர்களே,விண்மீன்களே,
அன்பும் பண்பும் அறிவும் ஆற்றளுமுள்ள,ஆளுமைத்திறன் உள்ளோரே,
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள்,
உங்கள் எதிர்கால உயர்விற்கான அடிக்கற்கள்!
உயர்ந்த கோபுரம் போன்ற
உங்கள் வாழ்க்கைக்கு -அதுவே
கைகொடுக்கும்  கைகாட்டி.
உங்களை ஏற்றம் பெறச்
 செய்யும் ஏணிப்படிகள்.
தேர்விற்காக  ஐயம் நீங்கிடப் படியுங்கள்.
ஒரு முகமான மனதுடன் ஓய்வின்றி படியுங்கள்.
படிப்பு பாரினில் உங்களுக்கு,
நல்லதோர் பிடிப்பை ஏற்படுத்தும்.
பிற்கால வாழ்க்கையைப் பிரகாஷமாக்கும்.
பீடு நடை போடச்செய்யும்.
பெரும் செல்வங்களை, அருட் செல்வங்களை
அரிய மன விருப்பங்களை
 ஈடேற்றி வைக்கும்.
பேறுகள் பதினாறையும் ஈன்ற வைக்கும்.
போற்றுவர் சுற்றத்தார்,
பெருமை படும் கல்வியகம்.
இன்னும் மூன்று திங்கள்களே,
இனிய ஈடற்ற    உயர்கல்வி  உங்களை
  கூவி   அழைக்க,
உங்கள் "பிற ,வீண்  சிந்தனைகள்,
அரட்டைகள்,தொலைகாட்சி
தொல்லைகள்,"  அகற்றி,
உள்ளத்தில் ஊக்கமும்
ஆர்வமும் கொண்டு,மனதை
ஒருமுகப்படுத்தி,
தேர்வை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு,
கருமமே கண்ணாயிரமாக
கருத்தாழத்துடன்  படியுங்கள்
கடவுளின் அருட்பார்வை
ஆசிகளாக அமையட்டும்.
அகவை மிக்க என் வாழ்த்துக்கள்,



 ,


வியாழன், நவம்பர் 17, 2011

soolnilaikketra manitha gunam

சூழ்நிலை : மனித குணமும் மாற்றமும்.


மனிதன் ஆறறிவு பெற்றிருந்தாலும் அவனின் சூழ்நிலை நட்பு மிருகமாகவோ தெய்வமாகவோ மாற்றுகிறது. மனிதனைத் தனிமைப்படுத்தினால் அவனால் பேச முடியுமா? என்ற ஆய்வில் பேரரசர் அக்பர்   .தனியாக     தனி மனிதனை சிறையில் அடைத்து வைத்தார்.அவன் பேசமுடியாத நிலையில் தள்ளப்பட்டான்.ஆனால் ரொட்டி என்ற சொல்லை மட்டும்  அவன் பேசினான். காரணம் உணவு கொண்டு சென்றவன் அந்த ஒரே சொல்லைப் பயன் படுத்தி உள்ளான்.மனிதன் பேச்சா ஆற்றல்  பெற   பேசும் சூழல் அவசியம் என நிரூபணம் ஆகியது.
        மனிதன் தன் முயற்சியால் பூனையையும் கிளியையும் பேசவும் பாடவும் வைத்துள்ளான்.மண்டன மிஸ்ரர் ஆஷ்ரமத்துக்கிளிகள் வேதங்கள் வோதின .
திருடன் வளர்த்த கிளி வசை பாடியது.சத்சங்கம் இல்லை என்றால் மனித எண்ணங்கள் விகாரமடையும்.அவன் ஆறாம் அறிவு நல்ல சூழலில் நல்லவனாகவும் தீய சூழலில் தீயவனாகவும் மாற்றுகிறது.அவனது அறிவாற்றல் சில நேரங்களில் அவனுக்கு நிகர் அவனே என்ற ஆணவத்தை ஏற்படுத்து கிறது. பல வெற்றிக்கனியை குவிக்கும் அவனுக்குஅவன் மமதையை அடக்க அவனுக்கு மேலான சக்தி  அவனை அழித்துவிடுகிறது.அவனது அறிவு  பயனற்றதாக நிரூபிக்க அவனால் வெல்ல முடியாத இயற்கை ,அவனது ஆற்றலை செயலற்றதாக்குகிறது.
 தமிழகத்தில் நிலங்களை நான்காக பிரித்து அந்நிலை அமைப்பின் காரணமாக அந்நில மக்களின் பண்புகளையும் வகுத்துள்ளனர்.
   குறிஞ்சி நில மக்கள்   தேன் எடுத்து ,கிழங்கு தோண்டி வாழ்ந்தனர். முல்லை நில மக்கள் பசுக்கூட்டங்களை மேய்த்து வாழ்ந்தனர்.மருத நில மக்கள் நாகரிகம் பெற்று  விவசாயம்  செய்து வாழ்ந்தனர். நெய்தல் நில மக்கள் கடலில் படகு செலுத்தி மீன் பிடித்து உப்பு காய்ச்சி வாழ்ந்தனர்.நிலமற்ற பாலை நில மக்கள் ,கொலை ,கொள்ளை போன்ற செயல்களைச்  செய்து வாழ்ந்தனர்.அவர்  அவர்  சார்ந்த நிலங்களுக்கேற்ற  குணநலன்களோடு வாழ்ந்தனர்.



(tamil)education for human excellence

மனிதன் சிறப்பிற்கு கல்வி.

 "மனிதன்" என்ற சொல்  மற்ற விலங்குகளுக்கு ஒப்பானது."மனிதன்"என்ற சொல் ஆதிவாசி மனிதனையும் குறிக்கும்.கல்வி அறிவற்ற மனிதனையும் குறிக்கும்.கல்வியில் சிறந்தவர்களையும் ,மகான்களையும் ,ஆன்மிகவாதிகளையும்,அவதார புருஷர்களையும்,குறிக்கும்.மண்-மனிதன்,Human  =மனிதனுக்குரிய என்ற சிந்தனையால் தான் "மனிதனை மனிதனாக்கும் கல்வி, என்ற கருத்து உருவானது.அதைப்பற்றி சிந்தனைகள் ,கருத்தரங்கங்கள் ,ஆய்வுக்கட்டுரைகள் ,
எழத்தொடங்கி ஏற்றமடைந்த மனநிறைவின்றி அலைகள் ஓய்வில்லாமல்
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன.

மனிதனை மாமனிதனாக ஆக்கவும் ,மெருகூட்டவும்,மேதை ஆக்கவும்,மையலில் காக்கவும்,மொய்ம்புடையவனாக்கவும்,(வலிமை)

மோக்ஷமடையவும்,மௌனமாக இருக்கவும் கல்வி உதவுகிறது.


இத்தகைய கல்வியை எப்படி வழங்குவது?மனிதனை எவ்வாறு மனிதனாக்குவது?மனிதத் தன்மையை,எவ்வாறு முற்றிலுமாக உணரச்செய்வது/?அவனை வீட்டிற்கும் ,நாட்டிற்கும்,சமுதாயத்திற்கும்,மனித இனத்திற்கும் ,பூவுலகிற்கும்,நன்மை தரத் தக்கவனாக,பயனுள்ளவனாக,உருவாக்குவது?என்ற வினாக்கள் இந்த அறிவியல் காலத்திலும் ,கவிஞர்களாலும் ,சித்தர் களாலும்,அனுபவ பூர்வமாகக்
 அறிவுறுத்தப்பட்டு  முடிவின்றி சென்றுகொண்டே இருக்கின்றன.

காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்தால் பல புதிர்களுக்கு விடைகள் புலப்படும்.சமுதாய அமைப்பின் படி ,தட்ப வெப்ப நிலையின் படி ,நாட்டின் இயற்கை  வளங்களுக்கு ஏற்றவாறு முன்னேற்றம் ,பின்னேற்றம் ,அமைதியான எண்ணங்கள் ,அஹிம்சை,உண்மை,ஆன்மிகம் ஆகியன மிளிர்கின்றன.
  "கல்வி" என்பது மனிதனை மனிதனாக்குகிறது.அவன் காட்டிலேயே மற்ற விலங்குகளுடன் வாழ்ந்தால் அவனுக்கும் விலங்குக்கும் வேறுபாடு இருக்காது. அவனுக்கு  மொழி தெரியாது.அவன் தன் மன உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது.இறையாண்மை பற்றிய சிந்தனைகள் வராது.உணவுப்பண்டங்களை பக்குவப்படுத்தி வேகவைத்து உண்ணத் தெரியாது.அவனை நெறிப்படுத்த ,குணசீலனாக்க  நீதிநெறியுடன்  கூடிய உயர்
கல்வி அவசியமாகிறது.