வெள்ளி, நவம்பர் 18, 2011

theivakataaksham

இறைவனின் கருணை

இறைவனின் அருள் இயற்கையாகக் கிட்டும்.அனைவர்க்குமா  கிட்டும்?இறைவனை ஒதுங்கிச்சென்றாலும் ,அவன் உடனிருந்து காப்பான்.பல ஆண்டு தவம் செய்து இறைவனைகண்டோரும் உண்டு. ஆலயம் கண்டால் அலறி ஓடும் நாஸ்திகர்களும் உண்டு.பிறந்தோம் .நம்மை படைத்தவன் நம்மை எப்படி வைப்பானோ அப்படி வைக்கட்டும் என்று அவன் மேல் பாரத்தைப்போட்டு விட்டு
மிக மன நிறைவோடு வாழ்பவர்களும் உண்டு.அவன் சகல வசதிகளைக்கொடுத்தாலும்,மன  நிறைவின்றி   வாழ்பவர்களும் உண்டு.
            எனது வாழ்வில் நான் இறைவனை பல முறை உணர்ந்து மெய் மறந்து உள்ளேன். நான் ஆலயம் தொழுவது சாலவும்  நன்று என்ற அவ்வை சொன்ன படி ஆலயம் சென்று வந்தேன்.என் தாயார் ஹிந்தி ஆசிரியை.எனக்கு ஹிந்தி தாய் மூலம் இயற்கையாக வந்தது. நான் எவ்வித முயற்சியும் இன்றி ஹிந்தி ஆசிரியர்  பயிற்சி பெற்று  ஹிந்தி ஆசிரியர் ஆனேன்.நான் முயன்று படித்தாலும்
ஹிந்தி ஆசிரியர் ஆனது  அதுவும்  தமிழ்நாட்டில் ஆண்டவன் அருள்தான்.

பழனியிலே வேலை தேடிவந்த  எனக்கு முருகப்பெருமாள் சென்னைக்கு அனுப்பிவிட்டார்.சென்னை வெஸ்லி பள்ளியில் வேலை கிடைத்தது.அப்பள்ளி ஆசிரிய நண்பர் ஈ.செல்வதாஸ் பணியில் சேர்ந்த மறுநாளே என் கைரேகை பார்த்து நான்கு ஆடுகள் தான் இப்பள்ளியில் பணிபுரீவீர்கள் .பின்னேர் உயர் பதவியில் வேறு பள்ளி செல்வீர்கள் என்றார்.
பின்னர் அவராகவே ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில்  முதுகலை பட்டத்திற்கான விண்ணப்ப படிவம் வாங்கிவந்தார்.அவர் மூலம் எனக்கு திருமலையான் தரிஷனம் கிட்டியது ஒரு தெய்வீக அநுபூதி  தான்.
நான் மலைக்கோயில்  கோபுரவாசலில்  இருந்து  நேரே
 சென்று வேங்கடவனை தரிசித்தது.
இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிவிட்டு தர்ஷனம் செய்ய சென்றபோது எங்களை
கோபுரவாசலில் இருந்து உள்ளே அனுப்பவில்லை.கூட்டம் அதிகம்.அப்பொழுது ஒருவர் ஆஜானுபாகுவாக இருந்தார் என்னை நேரடியாக
அழைத்துச் சென்று   திரு வேங்கடவனை  தரிசனம் செய்ய வைத்தார்.அவரிடம் பெயர் வினவியபோது தான் என்னை அழைத்துச் சென்றவர் யார் என்ற மெய்யுணர்வு
ஏற்பட்டது.அவர் என் பெயர் வெங்கடாசலம் என்றும் அனைவருக்கும் unavu அளிப்பவர் என்றார். பின்னர் அவரைக் காணவில்லை.இது ஒரு அற்புதம்.
மற்றொரு அற்புதம் முதுகலைப்பட்ட தேர்வு முடிவுகள் அந்த ஆண்டி சீக்கிரம்
வெளியிட்டதும் நான் முதுகலைப்பட்டதாரி   ஆசிரியராக ஹிந்து melnilaippalliyil
நியமன் ஆனதும் ஒவ்வொரு ஆண்டும் மன நிறைவான எழுமலையான் தர்சனமும் தான்.
மற்றொன்று நான் வெஸ்லி பள்ளியில் பணயில் சேர்ந்த தேதி 18 -10-77.
ஹிந்து பள்ளியில் சேர்ந்தது ௧௮-௧௦-௧௯௮௧.(18-10-1981).
selvadhaas   கைரேகை ஜோதிடம் உண்மையென நிரூபணம் ஆகியது.ஆனால் அவர் இலவச ஆலோசகரே.
மேலும் நான் தலைமை ஆசரியர் ஆனதும் இறையருளே.என்னை விட அனுபவமிக்க சன்ஸ்கிருத ஆசிரியர் ச. ராஜகோபால் ,தன்னிச்சை ஒய்வு பெற்றது.
டி.எஸ்.ஸ்ரீராமன் தலைமை ஆசிரியர் தன்னிச்சி ஒய்வு பெற்றது.இதுதான்பிறவிப்பயன்..
ஜனனி  ஜன்ம சௌக்யானாம்,பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜன்ம பத்ரிகா
என்பதும் இறைவன் அருள் என்பதும் தெய்வீக சத்யம் .இதுவே தெய்வ கடாக்ஷம்.





.

கருத்துகள் இல்லை: