சூழ்நிலை : மனித குணமும் மாற்றமும்.
மனிதன் ஆறறிவு பெற்றிருந்தாலும் அவனின் சூழ்நிலை நட்பு மிருகமாகவோ தெய்வமாகவோ மாற்றுகிறது. மனிதனைத் தனிமைப்படுத்தினால் அவனால் பேச முடியுமா? என்ற ஆய்வில் பேரரசர் அக்பர் .தனியாக தனி மனிதனை சிறையில் அடைத்து வைத்தார்.அவன் பேசமுடியாத நிலையில் தள்ளப்பட்டான்.ஆனால் ரொட்டி என்ற சொல்லை மட்டும் அவன் பேசினான். காரணம் உணவு கொண்டு சென்றவன் அந்த ஒரே சொல்லைப் பயன் படுத்தி உள்ளான்.மனிதன் பேச்சா ஆற்றல் பெற பேசும் சூழல் அவசியம் என நிரூபணம் ஆகியது.
மனிதன் தன் முயற்சியால் பூனையையும் கிளியையும் பேசவும் பாடவும் வைத்துள்ளான்.மண்டன மிஸ்ரர் ஆஷ்ரமத்துக்கிளிகள் வேதங்கள் வோதின .
திருடன் வளர்த்த கிளி வசை பாடியது.சத்சங்கம் இல்லை என்றால் மனித எண்ணங்கள் விகாரமடையும்.அவன் ஆறாம் அறிவு நல்ல சூழலில் நல்லவனாகவும் தீய சூழலில் தீயவனாகவும் மாற்றுகிறது.அவனது அறிவாற்றல் சில நேரங்களில் அவனுக்கு நிகர் அவனே என்ற ஆணவத்தை ஏற்படுத்து கிறது. பல வெற்றிக்கனியை குவிக்கும் அவனுக்குஅவன் மமதையை அடக்க அவனுக்கு மேலான சக்தி அவனை அழித்துவிடுகிறது.அவனது அறிவு பயனற்றதாக நிரூபிக்க அவனால் வெல்ல முடியாத இயற்கை ,அவனது ஆற்றலை செயலற்றதாக்குகிறது.
தமிழகத்தில் நிலங்களை நான்காக பிரித்து அந்நிலை அமைப்பின் காரணமாக அந்நில மக்களின் பண்புகளையும் வகுத்துள்ளனர்.
குறிஞ்சி நில மக்கள் தேன் எடுத்து ,கிழங்கு தோண்டி வாழ்ந்தனர். முல்லை நில மக்கள் பசுக்கூட்டங்களை மேய்த்து வாழ்ந்தனர்.மருத நில மக்கள் நாகரிகம் பெற்று விவசாயம் செய்து வாழ்ந்தனர். நெய்தல் நில மக்கள் கடலில் படகு செலுத்தி மீன் பிடித்து உப்பு காய்ச்சி வாழ்ந்தனர்.நிலமற்ற பாலை நில மக்கள் ,கொலை ,கொள்ளை போன்ற செயல்களைச் செய்து வாழ்ந்தனர்.அவர் அவர் சார்ந்த நிலங்களுக்கேற்ற குணநலன்களோடு வாழ்ந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக