விடுதலை
நாம்
பெற்று 66 ஆண்டுகள் ஆகிவிட்டன.
நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இதில் ஐயமா ? இல்லை.
கல்வியில் முன்னேற்றம்.
அரசுப்பள்ளி ,நகரட்சிப்பள்ளிகள் இல்லை என்றால்
பலர் படித்திருக்கவே முடியாது.
ஆனால் இன்று நிலை அப்படியே மாறிவிட்டது.
10967 வரை ஆங்கிலப்பள்ளிகள் என்பது பணக்காரர்கள் மட்டும் ஊட்டி ,
கொடைக்கானல் மற்றும் பெரிய நகரங்களில் தான்.
இந்நிலை மாறி சிறிய சிற்றூர் களிலும் ஆங்கிலப்பள்ளிகள்
ஆரம்பிக்கப்பட்டன.
இதன் அசுர வளர்ச்சிக்கு அரசு காரணமா ?
கல்வித்துறை காரணமா ?
ஆசிரியர்களா ? பெற்றோர்களா ?
இவர்களையும் மீறிய ஒரு தேவை.
கல்லூரிபடிப்பு.
அது ஆங்கிலவழியில் தான்.
வேலைவாய்ப்பு ஆங்கிலம் தெரிந்தால் தான்.
படிப்பதன் முதல் பயனே சம்பாதிக்க.
இன்று தொழில் நுட்பக் கல்வி,
கணினிக் கல்வி இல்லை என்றால்
வேலைவாய்ப்பு அரசு அளிக்க முடியுமா ?
எத்தனை ஏழை ,நடுத்தரமக்களை
இந்த ஆங்கில வழி வேலை வாய்ப்பைத்
தந்திருக்கிறது என்பது உண்மை.
தொழில் வளம் வளர்ந்தாலும்
ஐ.டி .துறை அளவிற்கு வேலைவாய்ப்பு அளிக்கும்
,ஊதியம் வழங்கும் துறை வேறு கிடையாது.
வீடுகட்டும் தொழிலாளி ,ஆட்டோ ஓட்டுனர் ,
சலவைத்தொழிலாளி,துப்புரவுத் தொழிலாளி
என அனைவருக்கும் ஆங்கில அறிவு தேவைப்படுகிறது.
சில ஆங்கில வார்த்தைகள் அனைத்துத் தொழிலுக்கும் தேவை.
இந்த தனியார் ஆங்கிலப் பள்ளிகள் வளர்ச்சி கண்டு
புலம்பும் கூட்டம் ஒன்றை மறந்து விடுகிறது.
பொதுமக்கள் பேராதரவின்றி இப்பள்ளிகள் நடக்காது.
ஏன் அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகள்
.நகராட்சிப் பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு வந்தன.
இப்பள்ளிகளின் ஆசிரியர்கள் குறைவதால்
அரசுக்கு கல்விக்காக ஆகும் சிலவு குறையும்.
பெற்றோர்களுக்கு ஏன் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கே
தங்கள் பிள்ளைகளைப் படிக்க தனியார் பள்ளிகளுக்கே அனுப்பப் பிடிக்கும்.
இந்நிலையில் கல்வி தனியார் பள்ளிக்கும் ,பொதுமக்களின் விருப்பத்திற்கும்
விட்டுவிட்டால்
சமுதாயத்திற்கு நன்மையே.
கல்வி அதிகாரிகள் தகுந்த ஆய்வு செய்தால் ஆசிரியர் சங்கம் .
ஆசிரியர்கள் எப்படி என்பதை பொதுமக்கள்,
அதிகாரிகள் அறிவர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக