இன்று ஆகஸ்ட் 15.
விடுதலை நாள்.
67 ஆண்டுகள் நாம் சுதந்திர இந்தியாவில் உள்ளோம்.
நாடு முன்னேறி உள்ளது.
வளர்ந்த நாடுகள் நம் நாட்டின் இளைஞர்கள் படையின் ஆற்றல் கண்டு போற்றுகின்றனர்.அச்சமும் பொறாமையும் படுகின்றனர்.
வளர்ச்சி விரைவில் உலகின் முதல் நாடாகும் நிலை.
வளர்ந்த நாடுகள் நம் நாட்டின் இளைஞர்கள் படையின் ஆற்றல் கண்டு போற்றுகின்றனர்.அச்சமும் பொறாமையும் படுகின்றனர்.
வளர்ச்சி விரைவில் உலகின் முதல் நாடாகும் நிலை.
இந்த விடுதலை கிடைக்க
உயிர்த் தியாகம் செய்த உத்தமர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
சுதந்திரப் போராட்டத்தில்
ஹிம்சாவாதிகள் தூக்கிலிடப்பட்டனர்.
அஹிம்சாவாதிகள் தடி அடி பட்டனர்.
சிறையில் பல இன்னல்கள் அனுபவித்தனர்.
செக்கிழுத்தார்கள்.
பல நோய்களுக்கு ஆனார்கள்.
மனைவி,மக்கள் ,சொந்தஊர்,
தன்னலம் துறந்து சிலர் பதுங்கி வாழ்ந்தனர்.
இப்படிப்பட்ட தேசப்பற்றாளர்களைக்
காட்டிக் கொடுத்த துரோகிகள்
அப்பொழுதும் வாழ்ந்தனர்.
இப்பொழுதும் வாழ்கின்றனர்.
தியாகிகள் இன்றும் போற்றப் படுகிறார்கள்.
போகிகள் ,துரோகிகள் தூற்றப் படுகிறார்கள்.
இன்றும் நாட்டில் போற்றப்படும் தலைவர்கள் உள்ளனர்.
தூற்றப்படும் தலைவர்களும் உள்ளனர்.
ஊழல் வளர்க்கும் அமைச்சர்கள்,
சட்டசபை ,பாராளுமன்ற உறுப்பினர்கள்,
கள்ளச் சந்தை ,போதைப் பொருள் கடத்தும் கும்பல்கள்,
பணத்திற்கு அடிமையாகும் அதிகாரிகள்,
நியாயம் ,நேர்மையாக உள்ள அதிகாரிகள் இடமாற்றம் ,
கூலிப்படைவைத்துக் கொலைகள்,
மாற்றான் மாணவி,மாற்றாள் கணவன் மேல் மோகத்தால் கொலைகள்,
கற்பழிப்புகள்,அதைச் செய்வோருக்கு
கடும் தண்டனை இல்லாமை என
பார்புகழும் பாரதம் பார் இகழ் பாரதமாக மாறிவருகிறது.
இந்த விடுதலை நாளில்
தேசபக்தி உள்ளோரும்.
இளைஞர்களும்
விழித்துக்கொள்ளவேண்டும்.
ஜாதிச் சண்டைகள்,மதச் சண்டைகள்
இனச் சண்டைகள்,
மாநிலத்தை துண்டாக்கும் போராட்டங்கள்
அனைத்துமே தனிப்பட்ட ஆதாயத்திற்காக என்பதை
உணரவேண்டும்.
சிலர் தங்கள் பதவியைக்காகவும்,
சிலர் தங்கள் செய்த குற்றங்களிலிருந்து தப்பிக்கவும்,
சிலர் தங்கள் சுயநலத்திற்காகவும்
சிலர் தங்கள் மற்றும் தங்கள்
வாரிசுகளின் சுகத்திற்காகவும்
பல தேச ஒற்றுமை,நலத்திற்கு
விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
15.8.13 விடுதலை நாளில்
நாம் நாட்டின் நலனே பெரிதென
விழித்துக் கொள்ள வேண்டும்.
நாட்டைக்காக குற்றவாளிகள்
தண்டனை பெற
காமராஜர்,கக்கன்ஜி ,குல்ஜாரிலால் நந்தா ,லால் பகதூர் சாஸ்திரி போன்ற
நேர்மையான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்து
ஆட்சிகட்டிலில் அமரவைக்கவேண்டும்.
இதுவே நம்நாட்டுக்கு விடுதலை வாங்கித்தந்த உத்தமத் தலைவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.
வாழ்க பாரதம் !வாழ்க மணித்திரு நாடு.!
நீர் அதன் புதல்வர் !
இந்நினைவகற்றாதீர்.
நாடு நேர்மையாளர்களால்
ஆளப்பட
சிந்தியுங்கள் !செயல் படுத்துங்கள்.!
ஜய் ஹிந்த் !
விடுதலைக்குப்பின் நடந்த
சைனா,பாக்.போரில்
உயிரை இழந்து வீரமரணம் அடைந்த
நம் நாட்டு ராணுவ வீரர்களுக்கு
வீரவணக்கம்.சிரந்தாஞ்சலி.
ஜய் ஜவான் !ஜய் கிசான்.
வாழ்க வீரர்கள் ! வாழ்க விவசாயிகள் !
லாலா லஜபதிராய் ,பால கங்காதர திலகர்,
செக்கிழுத்த செம்மல் வ.வு,சிதம்பரனார் ,
வீர பகத் சிங் ,கொடிகாத்த குமரன் ,
வாஞ்சிநாதன் ,சந்திரசேகர ஆசாத்,
போன்ற தன்னலம் கருதா வீர ஆத்மாக்கள்
நாட்டைக்காக ஒரு எழுச்சியைத் தரட்டும்.
விடுதலைக்குப்பின் நடந்த
சைனா,பாக்.போரில்
உயிரை இழந்து வீரமரணம் அடைந்த
நம் நாட்டு ராணுவ வீரர்களுக்கு
வீரவணக்கம்.சிரந்தாஞ்சலி.
ஜய் ஜவான் !ஜய் கிசான்.
வாழ்க வீரர்கள் ! வாழ்க விவசாயிகள் !
லாலா லஜபதிராய் ,பால கங்காதர திலகர்,
செக்கிழுத்த செம்மல் வ.வு,சிதம்பரனார் ,
வீர பகத் சிங் ,கொடிகாத்த குமரன் ,
வாஞ்சிநாதன் ,சந்திரசேகர ஆசாத்,
போன்ற தன்னலம் கருதா வீர ஆத்மாக்கள்
நாட்டைக்காக ஒரு எழுச்சியைத் தரட்டும்.
ஜய் ஹிந்த்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக