செவ்வாய், ஜூலை 28, 2015

abdul kalaaji --shraddhaanjali

भारत के खासकर आधुनिक भारत के  महान मार्गदर्शक
सादा जीवन उच्च विचार के जीवंत उदाहरण
आदर्श राष्ट्रपति  छात्रों के प्रेरणात्मक स्रोत

आज अशाश्वत जग छोड़ स्वर्ग के अतिथि बन गए ;
आत्मा उनकी शांत तभी होगी ,
हमारी श्रद्धांजलियाँ  तभी सार्थक होगी
जब हम उनके युवक और छात्रों की प्रेरणाओं को
हम कार्यान्वित करेंगे ; उनके विचार "अग्नि पंख "
अग्नी शिखा बन सदा मार्ग दिखाता रहेगा ,
उस ओर  जाना अपनाना हमारा देशोन्नति लक्ष्य होना है

छात्र जागो ;युवक जागो 'देश का संचालन, प्रगति,सपना साकार ,
आपके हाथ में --वही अब्दुल कलाम की आत्मा को शान्ति प्रद रहेगा।
*****************************************************************************************************************************

இந்தியாவின் இன்றைய நவீன பாரதத்தின்  உயர்ந்த வழிகாட்டி
எளிய வாழ்க்கை உயர்ந்த எண்ணம் என்பதற்கு  எடுத்துக்காட்டாக
வாழ்ந்த  முன்நாள்  குடியரசுத் தலைவர் மாணவர்களின் தூண்டும் ஊற்று
இன்று நிலையற்ற உலகை விட்டு சுவர்க்கத்தின் விருந்தாளி ஆகிவிட்டார்.
அவரின் ஆத்மா சாந்தி யும்  நமது சிரத்தாஞ்சலி பொருளுள்ளதாக
வேண்டுமானால் அவர்கள் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும்
தூண்டுதலாக  சொன்னதை செயல் படுத்த வேண்டும் .
அவருடைய "அக்னி சிறகுகள் " தீச்சுடராக எப்பொழுதும் வழி  காட்டிக்கொண்டே இருக்கும் . அவ்வழி செல்வதும் ஏற்றுக்கொள்வதும் 
நாட்டின் முன்னேற்ற குறிக்கோளாக இருக்கவேண்டும்.

மாணவர்களே!இளைஞர்களே! விழித்துக் கொள்ளுங்கள் .
நாட்டை நடத்துவது ,முன்னேற்றுவது ,கனவு நினைவாக்குவது உங்கள் கரங்களில் .
அதுதான் அவரது ஆத்மாவை அமைதிப் படுத்தும்.

வெள்ளி, மார்ச் 06, 2015

இந்திய ஜனநாயகம்

கட்டாய கையூட்டு ; கையாலாகாத அலுவலர் தற்கொலை; அமைச்சர் பதவி மட்டும் நீக்கம்.
கற்பழித்த குற்றவாளி பேட்டி காண நாற்பதாயிரம்.
நீதிபதி தீர்ப்பின் அப்பீலில் நிரபரதியாகி நாட்டின் பிரதமராக மண்சோறு ,ஹோமம் யாகம் அர்ச்சனை .
இது புதிதல்ல ?ராவணனும் தவம் ;பச்மாசுரனும் தவம் ;ஆயிரம் கண்ணுடைய இந்திரன் அஹல்யைக் கெடுத்தவனுக்கு தேவேந்திர பதவி.மூன்றுமனைவி--புத்திர சோகத்தால் தசரதன் மரணம். அது அக்காலம் .முதுமையிலும் விடாப்பிடி தலைவர் இக்காலம் . முன்னே போன வாய்க்கால் தான் எப்போதும் . வாழ்க இந்தியா .

செவ்வாய், மார்ச் 03, 2015

உபநயனம் அலௌகீம். லௌகீகம் சேர்ப்பதால் தாமதம்

உபநயனம்  என்பது ஷாஸ்த்ர  ரீதியான ஒரு தொழில் செய்வோருக்கான புனித சடங்கு.முற்றிலும் அலௌகீகம் சம்பந்தப்பட்டது. ஆனால் அதில் அலௌகீகத்தை புகுத்தி ஒரு நாடக மேடை ஆக்க  காலம் தாழ்த்தப்படுகிறது.

ஒருசிறிய ஆடம்பரமற்ற  சடங்கு உரிய வயதில் செய்யவேண்டியது ,சிலர் திருமணத்திற்கு முதல் நாள் பரிகாரச் சடங்கு போல் செய்து பூணல் அணிந்து கொள்கின்றனர்.

ஏன் இந்த தாமதம் ?அந்த குழந்தைக்கு தெய்வீக அருள் பெற மந்திரங்கள் சொல்ல ஆடம்பரமற்ற முறையில் செய்யலாமே?
       இதற்கு பெரிய மண்டபம்,உற்றார் உறவினருக்கு ஆடைகள் ,சீர் பக்ஷணங்கள் ,என்று வெளி ஆடம்பரத்தாலேயே  இந்த புனித சடங்கு தாமதமாகி வெறும் சடங்காகி  அந்த நியம அனுஷ்டானங்களைக்  கடைப்பிடிக்காமல்  "எங்கே பிராமணன் "என்ற நிலைக்குசெல்கிறது. 

 கலைச் சிற்றுண்டி ,மதிய சாப்பாடு ,சத்திரவாடகை ,கிட்டத்தட்ட ஒன்றரை லக்ஷம் இன்றைய விலைவாசியில் . இதில் ஜவுளி வன்ற வகையில் பெண்கள் அவா ஆத்துலே ,அதுதாண்டா நம்ம கிச்சான் அவ அம்மாவுக்கு ஐயாயிரம் பட்டுப்புடவை.எனக்கு உன் தங்கைகளுக்கு அதற்கு குறைவா எடுத்தா நல்லாயிருக்காது. வந்தவாளுக்கு பக்ஷணம் ---மகன் தலை சுற்ற பட்டியல் நீள முடிவில் உபநயனம் கடன் வாங்கிசெய்து  அதையே திட்டு ஏண்டா ,
சந்தியா வந்தனம் செய்தா? அப்பொழுது பையனுக்கு எதிராத்து சந்தியா நினைப்பு.
  உண்மையில் நம் சம்பிரதாயங்கள் தடைபட நாம் நாமாக செய்யும்  லௌகீக ஆடம்பரமும் ,வீணாக செலவு இழுத்துவிடும் சுற்றமும் இரத்த உறவும். படோ டோப 

ப்ஹயந்கரஹ  .நாம் நமக்கு நல்ல அனுஷ்டானங்கள் வேண்டுமென்றால்  இந்தாடம்பர லௌகீகம் குறைத்து  நாமும் மகிழ்ச்சியாக கடன் இன்றி வாழ ஊர்ப் பெருமைக்கு இந்த உபநயனம் செய்யக்கூடாது.இதை குறிப்பாக தாய்மார்கள் உணரவேண்டும்.அலௌகீகமாக சாஸ்த்ரீய முறைப்படி செய்தால் போதும். ஆத்ம திருப்தியுடன் ஆனந்தமாக சுபஷ்ய சீக்கிரம் என்று செய்து உபனயனசன்ஸ்கார மகத்துவத்தை உணர்த்தலாம்.வேத விற்பன்னர்களும்  இதற்கு அதிக கட்டணம் வேறு.நாமே லக்ஸ்மி தேவிக்கு முக்கியத்துவம் அளித்து சம்பிரதாயங்கள் அழிய காரணமாக மாறிவருகிறோம்.

ஞாயிறு, பிப்ரவரி 01, 2015

அதுதான் எனக்கு புரியாத புதிராகும்.

இறைவன்   இருக்கிறான் இந்நில உலகில் ,

இறைவனின் பெயரால் ஏமாற்றுவோர் ,

ஏராளமானோர்  கோடிகள் சம்பாதிக்கும் கேடிகள் பலர்.

வெளி வேசத்திற்கு  மயங்கும் இறையன்பர்கள்,

அப்பாவி பக்தர்களை ஏமாற்றும் அப்  பாவிகள்

அறிந்தும்  இதுவும் இறைவனின் திருவிளையாடல் என்றே  -தங்களை

அர்ப்பணித்து காணிக்கை செலுத்தி ,பரிகார பூஜை ,

ஆயிரமாயிரம் லக்ஷம் லக்ஷம் சிலவு செய்தால் தீருமாம் பாவம்.

லக்ஷத்திற்கும் பட்டுப்புடவை பட்டுவேட்டிக்கும் எரிக்கும் வேள்விக்கும்

பாவிகளின்  பாவம் போகும் என்றால் ,பகவானின் அருளை

பாரினில் ஏற்றால் ,நியாயம் எங்கே ,

அதுதான் எனக்கு புரியாத புதிராகும்.

தங்கக்கிரீடம் , வைரக்கிரீடம்  கோடிகள் ஊழலில்

தங்கமென அவர்கள் வாழ்க்கை ஜொலிக்கும் எனில்

அங்கமென வாழ்க்கையில் பக்தி தேவையா?

அது எனக்கு புரியாத புதிராகும்.






திங்கள், ஜனவரி 26, 2015

தற்கொலை - இரக்கமற்ற விடுதலை .

HINDI LEARN  - HINDI SEEKHO -HINDI KATRUKKOL .
हिंदी -तमिल सीखो


I SCHOOL GO TODAY -=  YOU SAY WRONG CONSTRUCTON.
நான் பள்ளிக்கூடம் போனேன் இன்று -இது தமிழ் தெரிந்தோருக்கு  சரியான மொழி பெயர்ப்பு . நீங்கள் தவறு என்கிறீர் கல்.

BUT IN MOTHERTONGUE  அனால் தாய் மொழியில்

 NAAN PALLIKKOODAM POKIREN  CORRECT. நான்  இன்று பள்ளிக்கூடம்போகிறேன்

MAIN SCHOOL JAATAA HOON- मैं स्कूल जाता हूँ . CORRECT.

B UT THE LEADERS DURING INDEPENDENCE DAY LEARNED ENGLISH AND THEY GAVE IMPORTANCE TO ENGLISH AFTER FREEDOM.

ஆனால் சுதந்திரப் போராட்ட தலைவர்கள் ஆங்கிலம் கற்றனர் மேலும்  சுதந்திரத்திற்குப் பிறகு ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

लेकिन आज़ादी के दिनों में  नेताओं  ने अंग्रेज़ी सीखी. और आज़ादी के बाद भी  अंग्रेज़ी को प्रधानता डी.

I YESTERDAY HIM MEET - NAN NETRU VAVANAI SANTHITHTHEN.நான் நேற்று அவனை சந்தித்தேன்.


MAIN KAL USSE MILA. =मैं कल उससे मिला.

ஆங்கிலம் கடினம் தமிழ் மட்டும் அறிந்த பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு .

I  KNOW FOR NEW GENERATION  PUPIS
 WHOSE PARENTS ARE ILLITERATE ,THEY FEEL ENGLISH VERY DIFFICULT.
புதிய தலை முறை மாணவர்களுக்கு ,பெற்றோர் படிக்காமல் இருப்பதால்  ஆங்கிலம் மிகவும் கடினமென்றே உணர்கிறார்கள் .

मैं जानता हूँ नयी पीढी के  छात्र  जिनके पिता अशिक्षित हैं  वे अंग्रेज़ी को बहुत कठिन महसूस  करते हैं.
BEFORE TWO DAY TAMILMEDIUM STUDENT WHO was IN ENGLISHMEDIUM ,UNABLE TO UNDERSTAND  ENGLISH RESULT HE DIED HIM SELF .

இரண்டு நாளைக்கு முன் தமிழ் வழி படித்த மாணவன் ஆங்கிலவழி  புரியாததால்  தற்கொலை செய்துகொண்டான்.
दो दिनों के पहले  तमिल माध्यम का लड़का ,जो अंग्रेज़ी माध्यम में  था ,वह समझ नहीं  सका,  नतीजा उसने आत्म हत्या कर ली.

WHAT A SAD CONDITION OF INDEPENDENT INDIA.
हाय! आजाद भारत की दुखी दशा.
ஐயோ ! விடுதலை பெற்ற பாரதத்தின் துன்ப நிலை.
ஆங்கிலவழி   தமிழ் தாய் மொழி வழி மாணவன் வளர்ந்து கல்லூரிப்ப படிப்பு ஆங்கில வழியால் பெற்றோரைத் துன்பக்கடலில் விட்டு மடிந்து போனான். ஹிந்தி எதிர்ப்பு மொழி தியாகிகளுக்கு  விழா எடுக்கும் தலைவர்கள் இதைப்பற்றி சிந்திக்கவில்லை.

THINK! REALLY WE GOT INDEPENDENCE.
சிந்தியுங்கள்! நாம் உண்மையிலேயே விடுதலை பெற்றோமா /
सोच! क्या हमें  सचमुच आजाद मिली है.?

வெள்ளி, ஜனவரி 09, 2015

ருத்ராட்ச மாலையில் தாலி

ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்த குஷ்பு…: புது வழக்கு போட்ட இந்து மக்கள் கட்சி
எனது கருத்து:-
இது மாஞ்சள் கயிற்றில் இருந்து தங்கச்சரடு மாறியதுபோல் தான். இதற்காக வழக்கு. பாதரக்ஷை அணிந்து கிரிவலம் சென்றால் எதிர்ப்பு. கட்டை செருப்பு அக்காலம். அது இப்பொழுது தோல். மின்விளக்கு ஏன் ?காலம் மாறுகிறது. கிரிவலப்பாதையில் சிறுநீர் நாற்றம். கோயில் மதில் சுவர் முழுவதும் நாற்றம், இதற்கு எல்லாம் இந்து மதம் ஈடுபடவேண்டும். ருட்ரக்ஷத்தில் தாலி சேர்த்து மாலை போடக்கூடாது ,முப்பதாயிரம் சிலவில் முப்பதடி விநாயகர் கடலில் போடுவோம் என்பதெல்லாம் இந்து மதத்தின் ஒற்றுமைக்கு தடைக்கற்கள்.

செவ்வாய், டிசம்பர் 30, 2014

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆங்கிலப் புத்தாண்டு அவனியிலே  என்றால்
ஆஹா ஓஹோ என்று கொண்டாடும் நாம்
பாரதத்திற்கு என்று ஒரு புத்தாண்டு  இன்றி
நாமும் நம் பங்கிற்கு ஆலயத்தில் முக்கியத்துவம்
ஆடல் பாடல் குடி கூத்து கும்மாளம் என்றே
ஆனந்தமாக அர்த்தராத்திரியில் வானவேடிக்கை
ஐந்து நட்சத்திர ஓட்டலிலே இணை நடனங்கள்
எண்ணங்களில் ஒரு வெளிநாட்டு ஏற்றம் ,
ஒற்றுமை உணர்வு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தமிழ் வருடப்பிறப்போ 'தை 'என்று சிலர் .
சித்திரை என்று பலர்  ஒற்றுமைக்குப் பஞ்சம்.
தஞ்சமென வந்த ஆங்கிலேயருக்கு நாம் தஞ்சம்.
தமிழர்  கருத்துவேறுபாடு  அனைத்திலும் கண்டேன்.
திரவிடத்தமிலன்,ஆந்திரத் தமிழன் ,கொங்குத் தமிழன்
அந்தணனை வெறுக்கும் தமிழன் ,போற்றும் தமிழன்
தேசீயத்தமிழன்,தமிழ் நாடு கோரும் தமிழன் ,
ஈழத்தமிழன்   நாங்கள் அனைவரும் ஒரே தமிழன்
என்ற அறைகூவல் என்றும் இருந்ததில்லை .
கடவுளிலும் ஆரியக்கடவுள் தமிழ்கடவுள் என்றே
பிரிவு படுத்தும் தமிழன், ஹிந்தி ஒழிக்க
ஆங்கிலம் வளர்த்து தமிழ் அழிக்கும் தமிழன்
இதெல்லாம் மறந்து தமிழர் என்ற எண்ணம் வளரும்
காலம் என்று கனியுமோ?அன்றே வெற்றிஅகிலத்தில்.
ஆங்கிலப்புத்தாண்டு அனைவரும் கூறும் வாழ்த்துக்கள்
ஒற்றுமைக்கோர் எட்டுத்துக்காட்டு . இன் நாளில்
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு
ஒற்றுமைக்கு வாழ்த்துக்கள்.

சனி, டிசம்பர் 27, 2014

வருக!வருக!நலம் பல தருக!

                                                                                   
நாட்டில்  பிரச்சனைகள்  பல இருக்க ,

நாமதில்  நாட்டம் செலுத்தாமல் ,

மதங்கள் ,மதவேறுபாடுகள்  என்று 

மனதை இறைவனில் ஒருமைப் படுத்தாமல்,

இறைவனில் உயர்ந்தவன் யார் என்றே 

இரைச்சலைப்போட்டு  அடித்து உதைத்து 

இதுதான் மத ஒற்றுமை என்றே ,

இறைவனை அழகுற அமைத்து ,

அலைகடலில் ஏற்யும் கூட்டம்.

அதில் இட்ட முதலீடு பல ஆயிரம் கோடி ,

அது நாட்டு நலத்திட்டத்தில் போட்டாலே 

இறைவனருள் இங்கே கிட்டும்.

நாட்டின் முதுகெலும்பாம்  விவசாயம்,

நாளும் நலிந்துவரும் கொடுமை பாரீர்.!

நமக்கு அன்னமிடும் விவசாயி ,

நாண்டுக்கிட்டு சாகும் கொடுமை இங்கே.

தொழில் வளம் என்றே நாட்டுவளம் அழிக்கும்

பிழை புரிவோர் பல தலைவர்கள்.

பேழை வந்தாலே அனைத்தும் மறக்கும் 

வெளிநாட்டு முதலீட்டுக்கு வழிவகுக்கும் திட்டங்கள்.

பலசரக்குக் கடைக்கே பல்லிளித்து 

வால் பிடித்து  வால்மார்ட்டே  மக்களுக்கு 

நலமளிக்கும் என்று நயவஞ்சக நாயகர் கூட்டம்.

நம் மக்கள் நம் முதலீடு நம் தொழில் வளம்  என்று 

நாடா நாட்டுவளம் ,வந்த அன்னியர் கொடுத்த 

வாசனைக்கும் ,மது பானங்களுக்கும் ,அரைகுறை  

ஆடைகளுக்கும்  அவசரமாக அங்கீகாரமளிக்கும்

தன்னலம் கருதும் தானைத்தலைவர்கள்,

இதெல்லாம் சிந்திக்க விடாமல் ,

மக்களைத் திசை திருப்பும்  மதத் தலைவர்கள் 

மதக் கலவரங்கள் ,கற்பழிப்புகள் ,

வழக்கு என்று ஒன்று போட்டு திசை திருப்பி 

ஜாமீனில் விடுவித்து ஜாம் -ஜாம் என்றே 

அரசியல் தலைவர்களை வாழ்த்தும் கூட்டம்.

அரங்கத்தில் திட்டினாலும் ,ஊழல் அரங்கத்தில் 

அந்தரங்க நட்பே கண்டோம்.

சிந்திப்பீர் மக்களே!
கடவுள்களில் உயர்வென்றும் தாழ்வென்றும் 
உண்டோ! கேளீர்!
பூவினில் மாற்றபில்லை .
நீர் நிலையினில் மாற்றமில்லை ,
நிலம் ஒன்றே ,நலம் ஒன்றே ,
ஒளிதரும் பரிதியும் நிலவும் ஒன்றே.

அனைத்தையும் படைப்பவன் ஆண்டவன் ஒருவனே என்றே 

ஏற்கும் வையகம் மதம் என்ற ஒன்றால் 

கொலைகளைச் செய்யும்பாதகம்.

இறைவன்  எங்கே ?என்ற நாத்திகனுக்கு கொண்டாட்டம்.


ஆத்திகம் என்றாலே அபாயம் தான் நாட்டுக்கும் அவனிக்கும்.

அல்லா ஒன்று ஓர் இயக்கம் ,ஏசு என்று ஓர் இயக்கம் 

சிவன் என்று ஓர் இயக்கம் ,விஷ்ணு என்று ஓர் இயக்கம்.

மனித ஒற்றுமை ,நேயம் ,  கழிவிரக்கம், என்றில்லா 

இறைவன் இயக்கம் இருந்தாலென்ன !ஒழிந்தால் என்ன!

இறைவனே!இதுதான் உன் லீலை என்றால் -நீ 

தேவை இல்லை வையகத்தில்.
உன்னிடம் ஓர் வேண்டுகோள் !

வேற்றுமை தர்ம மத வேறுபாடற்ற வையகம் தேவை.

உன் பெயரில் வெறியாட்டம் ஆடும் கொலை-கொள்ளையர்களை 

அளிக்கவே உன் ஒருமுக  படைப்பு வேண்டும்.
வருக!வருக!நலம் பல தருக!










வெள்ளி, டிசம்பர் 12, 2014

GOD !
IN  THE NAME OF GOD ,
WE ARE THINKING ,

EVERY THING IS ON RIGHT WAY ,

BUT IN  NEWS ,REALITY ,

A TRUE  VICTORY IS FOR THEM ,

WHO ARE  IN CONSPIRACY.

AT THE END OF THE GAME  ALONE 

WE FEEL GOD IS GREAT.

TO WIN THE WORLD IN  ANY FIELD
SOME PUSH UP AND PULL UP 

LIFTING UP ,SOME BACKGROUND ,

INSPIRATIONS WE NEEDED.

HOW AMAN GETS IT ,

IN WHICH SITUATION GIVES US
TO RISE  WE DON'T KNOW .

FALLING APPLE IS NATURE.

HOW A SCIETIFIC THOUGHT ARISED 

IN THE MIND OF NEWTON ,
HOW HIS LIFE BECAME ,
A NEW TURN ,
THAT IS  A UNKNOWN  POWER.

SO WE  ARE DIRECTED BY AN
UNKNOWN POWER ,
THAT IS CALLED ALMIGHTY.
WHEN YOU RECOGNISED IT
YOU WILL GET IT.
YOU CAN ACHIEVE SOME THING GREAT
AT LEAST IN YOUR SMALL CIRCLE.
THAT IS DIVINE POWER .
WE CAN FEEL IT ,
WHEN WE READ OUR OWN AND KITH AND KIN
LIFE STYLES. 

வியாழன், டிசம்பர் 11, 2014

ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चे। ॐ ग्लौ हुं क्लीं जूं सः, ज्वालय ज्वालय ज्वल ज्वल प्रज्वल प्रज्वल, ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चे ज्वल हं सं लं क्षं फट् स्वाहा।।