ஞாயிறு, பிப்ரவரி 01, 2015

அதுதான் எனக்கு புரியாத புதிராகும்.

இறைவன்   இருக்கிறான் இந்நில உலகில் ,

இறைவனின் பெயரால் ஏமாற்றுவோர் ,

ஏராளமானோர்  கோடிகள் சம்பாதிக்கும் கேடிகள் பலர்.

வெளி வேசத்திற்கு  மயங்கும் இறையன்பர்கள்,

அப்பாவி பக்தர்களை ஏமாற்றும் அப்  பாவிகள்

அறிந்தும்  இதுவும் இறைவனின் திருவிளையாடல் என்றே  -தங்களை

அர்ப்பணித்து காணிக்கை செலுத்தி ,பரிகார பூஜை ,

ஆயிரமாயிரம் லக்ஷம் லக்ஷம் சிலவு செய்தால் தீருமாம் பாவம்.

லக்ஷத்திற்கும் பட்டுப்புடவை பட்டுவேட்டிக்கும் எரிக்கும் வேள்விக்கும்

பாவிகளின்  பாவம் போகும் என்றால் ,பகவானின் அருளை

பாரினில் ஏற்றால் ,நியாயம் எங்கே ,

அதுதான் எனக்கு புரியாத புதிராகும்.

தங்கக்கிரீடம் , வைரக்கிரீடம்  கோடிகள் ஊழலில்

தங்கமென அவர்கள் வாழ்க்கை ஜொலிக்கும் எனில்

அங்கமென வாழ்க்கையில் பக்தி தேவையா?

அது எனக்கு புரியாத புதிராகும்.






கருத்துகள் இல்லை: