வேலனின் மூத்தோன்,
வேழமுகத்தோன் ,
சிவகுமாரன்,
சித்திகள் தருவோன்,
பார்வதி குமரன்,
பார் புகழ் பகவான்,
பக்தர்களுக்கு அருள்வோன்,
பார்க்கும் இடமெல்லாம்,
நோக்கர்களுக்கு எளியோனாய்,
கம்மாக்கரையிலும்,
ஆற்றங்கரையிலும் ,
அரசமரத்தடியிலும் ,
வெட்டவெளியிலும் ,
எழுந்தமர்ந்து ,
வேண்டிய வரமளிக்கும்
வேலனுக்கு மூத்தோனை ,
வேழமுகத்தோன்
எளிய இறைவன்
கண நாயகன்,
பஞ்சகரன் ,
பாதம் பணிவோம்.
|
S.Anandakrishnan, M.A, M.Ed.,
Retired Head Master of Hindu Higher Secondary School, Chennai, India
செவ்வாய், செப்டம்பர் 18, 2012
paadam panivom.பஞ்சகரன் , பாதம் பணிவோம்
திங்கள், செப்டம்பர் 17, 2012
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கணேசாய நமஹ.
சனாதன தர்மத்தில் உருவ வழிபாட்டுக்கு என
ஒரு மகத்தான இடம்.
புத்தர் சிலை சிதைத்ததற்கே சிந்தை கலங்கினோம்.
ஆனால்,
அடுத்தவாரம் ஆயிரக்கணக்கான
பூஜிக்கப்பட்ட
ப்ராணப் பிரதிஷ்டை செய்யப்பட
ஆயிரக்கணக்கான
அழகான கவர்ச்சி
சிலைகள்.
ஆராதனை செய்யப்பட்ட அழகு
இறை உருவங்கள்.
ஆராதனைக்குப்பிறகு
வரம் தர ஆயத்தமான
ஆர்வமுடன் இருக்கும்
வினை தீர்க்கும் விநாயக சிலைகள்.
அடுத்தவாராம் கடல் அலைகளால்
அலங்கோல மாகும்
அநாகரீகக் காட்சிகள்.
ஆகையால் தான்
ஆள்பவர்கள் மனதில்
சுயநலம்.
ஊழல் .
லஞ்சம்.
ஆசிரியர்கள்.
காவலர்கள்
அதிகாரிகள்,
அலைபேசி.
தொலைபேசி
அனைத்திலும்
அழியும் உலகத்திலும்
அகலா மாயை.
காம வாசனைகள்.
கற்பழிப்புகள்.
கொலைகள்.
கொள்ளைகள்.
கொலைவெறிப் பாடல்கள்.
வரம்கொடுக்காமல் வரும் விக்னங்கள்.(தடைகள்)
உருவ வழிபாட்டுக்கு நேரும் அவமானங்கள்.
விநாயக பக்தர்களே!
சற்றே சிந்தியுங்கள்.
அவரின் அழகு உயிர்பெற்ற (பிராணப் பிரதிஷ்டை)
உருவங்களை
சிதைக்காதீர்கள்.
அவரை இவ்வாறு அலங்கோலப்படுத்துவது,
அவரிடம் அருள் பெறவா ?
சாபம் பெறவா ?
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கணேசாய நமஹ.
சனி, செப்டம்பர் 15, 2012
சிந்தனை தா!1 இறைவா! இறைவன் அருள் யாருக்கு?
இறைவன் அருள் யாருக்கு?
ஆஷ்ரமம் என்ற குடிலில் கானகத்தில்
வாழ்ந்த முனிகள்.
பஞ்சத்தில் அடிபட்டவர்கள் போல் ,
முற்றிலும் அறிந்தும் மௌனியாய்
இருக்கும் சித்தர்கள்.
உலக நமைக்காக நவ பாஷாணம் சிலை
அமைத்த போகர்.
வேதங்கள் ,உபநிஷத்கள் ,
பைபிள் ,குரான் ஆகிய
நன்னெறி காட்டிய இறை நூல் எழுதும்,
இறை தூதர்கள் .
மாயை,சைத்தான், சாத்தான்
என்றும்
உலகவாழ்க்கை போராட்டம் என்றும்
வாழும் வரை மற்றவர்களுக்காக வாழ வேண்டும்
வாழு ,வாழவிடு என்ற ஜைனதத்துவம்.
ஆசையை மற அன்பு காட்டு
என்ற புத்த தத்துவம்.
எவ்வளவு சேர்த்தாலும் எட்டடி நிலமோ
அல்லது
ஒருபிடி சாம்பலோ மிச்சம்
என பட்டினத்தார் ,ப்ருத்ருஹரி ,
சித்தர் வாக்கு.
அருணகிரிநாதர் வாழ்க்கை ,
கோவலன் கதை,
அனைத்தும்
இருந்தாலும்
பக்தி என்ற பெயரில்
பலகோடி செல்வம் புதைத்து வைத்து ,
தானும் அனுபவிக்காமல்,
நாட்டிற்கும் பயன்படாமல்
கோடிக்கணக்கில்
சேர்த்துவைக்கும்
முதலாளிகள்.
அரசியல்வாதிகள்.
அதை இருக்கும்போதே பலருக்கும்
பயன் படுத்தலாம்.
விநாயகர் ஊர்வலம் என்ற அண்மைக்கால வழிபாடு.
அந்தக் கோடிக் கணக்கு விரயம்
ஒவ்வொரு தெருவையும்
சுவர்கமாக்க தூய்மை படுத்த,
கழிவுநீர் தடம் அமைக்க ,
ஏழைகளின் மருத்துவ சிலவு
என பயன் படுத்தலாம்.
இறைவா!!
மக்களுக்கு நல்வழி காட்டு.
உன் பெயரால் உன்னை அழகுபடுத்தி,
அலைகடலில் அழிக்கும்
அறியாமை பக்தியைப்போக்கு.
புதிய பக்தி முறை,
நீ படைத்த
நொடிகள்,
குருடர்கள்,
அனாதைகள்,
நோயாளிகள்,
பசிப் பிணி உள்ளவர்கள்.
கழிவு நீர் ஓடும்
மேடுபள்ள புது நகர்கள்
அனைத்தும்
பயன் பெற
கருணைகாட்டு.
நீ விரும்பும் பக்தி
வால்மீகி,
துளசி,
துருவன்,
வள்ளுவர்
அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர்
நபி ,
ஏசு,
ஜைனர்
புத்தர்
என்றால்
இந்த மாயை பக்தி
உன் அழகு சிலை
சிதைக்கும் பக்தி
அரசியலும் சுயநலமும் கலந்த பக்தி.
இதை மாற்றும்
சிந்தனை தா!1
இறைவா!
விநாயகா!
ஏன் இந்த கடவுள் அவமானம்?இன்றைய செய்தி.
இன்றைய செய்தி.
வெளிநாட்டில் வாழும் இந்திய மாணவர்கள்
கட்-அவுட் வைக்கும் சிலவிற்கு
ஒரு கிராமத்தைத் தத்து எடுக்கலாம்
என்று கூறி உள்ளனர்.
இந்த செய்திக்கு பிரான்சு நாட்டு
இந்தியர் தன் கருத்தாக
போனமா பார்த்தமா என்று வாருங்கள்.
இல்லை என்றால் பத்திரமாக திரும்ப முடியாது
என்று தன் அனுபவ உண்மையாக கூறி உள்ளார்.
இது ஒரு ஜனநாயக நாட்டில் எவ்வளவு பெரிய அபாயம்.
நான் எழுதுகிறேன்
6500 பிள்ளையார் சிலைகள் .(சென்னையில் மட்டும்)
குறைந்தது ஒன்று ஆயிரம் என்றால்
6500 X 1000=6500000.
ஆறு லக்ஷத்து ஐம்பதாயிரம்.
அலைகட்லிலோ ஆற்றிலோ எரிய
காவல்துறை பாதுகாப்பு ,போக்குவரத்து பராமரிப்பு
என கோடிக்கணக்கில் பணம்
விநாயகரை சிதைக்க.
இந்த தொகையை நாட்டு நலம்,
சாலை சீரமைப்பு போன்றவற்றிற்கு
பயன்படுத்தினால்
விநாயகர் அருள் கிட்டும்.
இது சென்னையில் மட்டும்.
பகுத்தறிவுத் தந்தை
கடவுள் இல்லை என்கிறார்.
கடவுள் இருக்கிறார்
என்பவர்கள் மனத்தில்
ஏன்
இந்த கடவுள் அவமானம்.
இன்றைய நாகரிகமும் அறிவியல் வளர்ச்சியும
இன்றைய நாகரிகமும் அறிவியல் வளர்ச்சியும்.
பாரத நாட்டில் அறிவியலும் ஆன்மீகமும்
இணைந்தே கற்பிக்கப் பட்டன.
ஆண்பெண் ஈர்ப்பிற்கு மனக்கட்டுப்பாடு
தேவை எனவும் அதைக்கட்டுப்படுத்த
பூஜை விரதங்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டன.
சித்த வைத்தியத்திலும்
"ஒன்ரைவிடேல் ,இரண்டை அடைக்கேல் "
என்று கூறப்பட்டது.
ஆனால் இன்றைய அறிவியல் வளர்ச்சியில்
பல முன்னேற்றங்கள் இருந்தாலும்
மனிதன் குறிப்பாக
இளைஞர்கள் இளைஞிகள்
காதல் ,காதல் என்று
கைபேசியுடன் அழைகின்றனர் .
இதனால் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்களே.
கட்டுப்பாடு இல்லாமல் சுற்றுவதுடன்
காதல் கைகூடாவிடில்
கொலை தற்கொலைவரை சென்றுவிடுகின்றனர்.
அதைவிட கொடுமையான செய்தி
ஹிந்தி நாளிதழில்
படித்து எதிர்கால பாரதம் எப்படி இருக்கும்?
என்ற வேதனை பெற்றோர்களுக்கு வரும்.
பதிமூன்று முதல் 20 வயது வரை உள்ளவர்கள்
75% no problem ,no commitment, என்று
காண்டமும் கருத்தடை மாத்திரையுடன்
அலைவதாக சேதி.
சென்னை பிராட்வே கொலை தற்கொலைக்கு காரணம்
காண்டம்.
காதலனின் பாக்கெட்டில் காண்டம் கண்ட காதலி
காதலை மருத்துள்ளாள் .
காண்டமே அவள் உயிருக்கு எமகண்டமாகி உள்ளது.
அறிவியல் வளர்ச்சி பகுத்தறிவு அவசியம் தான்.
ஆனால் மனரீதியான நோய் தீர
ஆன்மிகம் அவசியம்.
ஆனால் அது.
திரைப்படங்கள் கொலைவெறி ;
பாடல்களுக்கும் சென்சார் தேவை.
காதலிக்க மறுக்கும் பெண்ணை அவன் நண்பர்கள்
அடிடா அவளை;உதைடா அவளை ;வெட்டுடா அவளை;
விளைவு
பிராட்வே கொலை.
வெள்ளி, செப்டம்பர் 14, 2012
ஏமாறும் வணிக ஸ்தலங்கள்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று .
அறம் வளர்ப்பது ஆலயம்.
ஆலயம் சென்றால் ஆத்ம சுகம்.
ஆன்மிகம் வளர்ப்பது ஆலயம்.
ஆலயத்தின் நோக்கமே
ஏழை களுக்கு உதவுதல்.
அன்னதானம் ,
பால் அபிஷேகம் ,
பஞ்சாமிர்தம் ,
தினைமாவு ,
தேன் ,
சிதர் தேங்காய்,
தன தானம் ,
என
அனைத்துமே
ஆறாம் வளர ,
ஆலயம் .
புடவை,
வளையல் ,
சுமங்கலி பூஜை ,
நவராத்திரி சுண்டல்
என
மற்றவர்களுக்கு
கொடுக்கும் எண்ணம்
வளர
வளர்ந்தது ஆலயம்.
இன்று
ஆலயம் ஏழைகளுக்கு அல்ல .
பணம் படைத்தோருக்கு.
இன்றுமட்டுமல்ல
அரசர்கள் காலத்திலும்.
அனந்த பத்மநாபர்
ஆனாலும்
திருப்பதி ஆனாலும்
பழனி ஆனாலும்
அங்கு பக்தர்கள்
பெருகினாலும்
பக்தியைக் காட்டி ,
பட்டை நாமமோ
பட்டை விபூதியோ
போட்டு ஏமாற்றும்
கூட்டம் ,
ஏமாறும் கூட்டம் அதிகம்.
ஆலாயங்களா ?
அங்காடித் தெருக்களா?
கிரிவலப்பாதையா?
கடைவீதிகளா?
ஆலயம் என்பது
இன்று
வணிகவளாகங்கள்.
பக்தர்கள்
ஏமாறும்
வணிக ஸ்தலங்கள்.
புதன், செப்டம்பர் 12, 2012
சைத்தானின் சாம்ராஜ்யம்
இலக்கியம் என்பது சமுதாயத்தின் கண்ணாடி.
இன்றைய இலக்கியம்
பெரும்பான்மையான
மக்களைக் கவர்வது
பெரிய திரை, சின்னத்திரை.
செய்தித்தாள்.
அனைத்திலும்
காதல்.கொலை.கற்பழிப்பு.
லஞ்சம்.
காவல்துறையின்
ரானுவத்துரையின்,
பொதுமக்கள் தொடர்பு சாதனங்கள்
மருத்துவ மனைகள் ,
வீட்டுமனைகள்,
மின்துறை ,
போக்குவரத்துதுத்
துறை
அனைத்திலும் வெட்டவெளிச்சமான
கையூட்டுகள்.
பத்திரத்துறை ,சார் பதிவாளர் அலுவலகம்
அனைத்திலும் ஊழல்.
பெரும்மலை தூளாகும் வரை
அரசு கவனிக்காதநிலை.
ஏழை பொதுமக்கள் குறை -குற்றச்சாட்டு
உள்ளூர் அதிகாரிகள் போக்கு ,
உள்ளம் வெந்து சாகிறது.
சாவதுதான் நீதி என்றால் ,
சைத்தானின் சாம்ராஜ்யம்
தான்
ஜன நாயகம்.
மக்கள் படும் திண்டாட்டம்.
மக்கள் படும் திண்டாட்டம்.
கோட்டூர்புரம் கோட்டை
யாகும் என செலவு கோடி .
கோட்டையான ஓமந்தூரார்
பழைய கோட்டைக்கே
மாற்ற கோடி.
அண்ணா வளைவு
தாங்கிப் பிடிக்க
நாளுக்கு நான்கு லக்ஷம்.
கொட்டுர்புரம்
நூலகம் செயல்படாதிருக்க
வழக்குச்செளவு.
அரசு சாதனை விளக்கமளிக்க
பல கோடி.
வரிகட்டும் மக்களுக்கோ
தண்ணீர் இல்லை .
மடிப்பாக்கம்,
ராம்நகர்,குபேர் நகர்
மக்கள்
சாலைவசதியின்றி
படும் அவலம்.
பள்ளிக்கரணை
ராஜேஷ் நகர் ,
வேளச்சேரி என
ஆயிரக்கணக்கில்
மக்கள் படும் துயரம்
அதற்கு திட்டமிட்டு
துயர் நீக்கும் பணியில் வேகமில்லை.
தனிப்பட்ட விருப்பு வெறுப்பால்
பலகோடி வீண் விரயம்.
கூடங்குளம்
கூட்டு சதியா/?
நாட்டுக்கு சனியா?
அஸ்திவாரம் போடும்போது
போராடாமல்
வரிப்பணங்கள் கோடி கோடியாக
விரயமான பின் காட்டும்
வீரப்போராட்டம்
வீண் போராட்டமா/?
அடிப்படைவசதி செய்யாமல்
வரிப்பணத்தை விரயம் செய்யும் அரசு.
எண்ணி ப்பார்க்கதுடிக்குது மனசு.
தண்ணீர் இல்லை.
மின்சாரமில்லை.
கோட்டை கட்டவும்
வளைவு மாற்றவும்
கோடிக்கணக்கில்
மக்கள் பணம்.
நெஞ்சம் பொறுக்கவில்லை,
இந்த நிலைகெட்ட
அரசியல் ஊழலால்.
செவ்வாய், செப்டம்பர் 11, 2012
சனாதன தர்மம்.
சனாதன தர்மம்.
சனாதன தர்மம்
சத்தியம்
தர்மம்
பிரமச்சரியம்
தவம்
நாம ஜபம்
முதலியவற்றுக்கு
முக்கியத்துவம்
அளித்தது.
இறைவனருள்
பெற்ற
வால்மீகி
ஞானம்
பெற்றது
ராமநாம
ஜபத்தால் .
பக்த
துருவன்
அருள்பெற்றது
கானகம்
சென்று தபம்
செய்ததால்.
நாராயண
மந்திரம்
பக்த ப்ரகலாதனுக்கு
உற்றதுணையாக
இருந்தது.
துளசிதாசர்
நாம ஜெபத்தின்
மகத்துவம்
பற்றி
ராம் ராம் என்றால்
ஒளி மயமாகும்
வாழ்க்கை
என்றார்.
அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை
என்றே
வள்ளலார்
பக்திக்கு
வழிகாட்டினார்.
பஞ்சாக்ஷர மந்திரம்
சாய் ராம்
மந்திரம்
ஷடாக்சரம்
என்றே
எளிய
பக்தி மார்க்கம் .
தூய மனம்
தூய செயல்
தூய எண்ணம்
அன்னதானம்
நாம ஜபம்
இதுவே
முக்திக்கு
வழி .
பாபங்கள் செய்து
யாகங்கள்
செய்வதால்
பிராயச்சித்தம்
ஆகாது.
சனி, செப்டம்பர் 08, 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

