வியாழன், மே 10, 2012

maruntheeswarar arulattum.

வேளச்சேரி ஆஞ்சநேயர் கோயில் ஒன்று மாநகராட்சி இடம் ஆக்கிரமிக்கப்பட்டு 
கட்டப்பட்டுள்ளது.சர்ச் ஒன்று.அதற்கு எதிரில் அம்மன் கோயில்.
இறைவன் பெயரால் ஆக்கிரமிப்புகள்.
இதைதான் பெரியார் மூட நம்பிக்கை  என்கி றார்.

ஒரு இடத்தை ஆக்கிரமிக்க எளிய வழி .அந்தசாலை அகலப்படுத்த முடியாது.
அவ்வாறே திருவான்மியூர் வால்மீகி கோயில்.அது மிகப்பழைய கோயில்.
ஆனால் ஈ.சி.ஆர்.,ரோடு.அகலபபடு த்த முடியவில்லை.
ஆன்மீகவாதிகள் நினைத்தால் அருகிலுள்ள மருந்தீஸ்வரர் கோயில் காலி இடத்தில் 
சிறப்பு யாகம்,ஹோமம் மந் திரம் என்று  இடம் மாற்றி புதிய கோயில் வால்மீகி 
முனிவருக்கு கட்டி  கும்பாபிசேகம் செய்து  போக்கு வரத்திற்கு வசதி 
செய்யலாம்.

அங்கு -இங்கு -எனாதபடி இருக்கும் ஆண்டவன்,தூணிலும் துரும்பிலும் இருக்கும் ஆண்டவன்,
இந்த மாற்றத்தால் மகிழ்வார்.கருணை பொழிவார்..பல்லயிரம் வாகனங்கள் 
செல்வோர் வாழ்த்துவர்.

புதன், மே 09, 2012

tamil ---special தமிழ் --சிறப்பு ---கிருபாநந்தவாரியார்



தமிழ் --சிறப்பு ---கிருபாநந்தவாரியார் .

ஆயிரம் பொய்  சொல்லி ஒரு கல்யாணம்  என்பது தவறு.போய் சொல்லி திருமணம் செய்தால் நிம்மதி எப்படி?
ஆயிரம் முறை போய்  சொல்லி  திருமணம்  என்பது தான் சரி.

மணமகன்/மணமகள் பற்றி விசாரிப்பது.

ஜாதகம் பார்ப்பது,
பெண் மாப்பிள்ளை பார்க்கப்போவது 

பத்திரிகை அடிப்பது /கொடுப்பது 

இவ்வாறு   ஆயிரம் முறை போய்  என்பதுதான் சரி.  பொய்  என்பது தவறு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


சொற்கள்  பயன் பாடு.

உரைப்பது====ஒரு பொருளைப்பற்றி விரிவாகச் சொல்வது.
பகர்தல்==எதையும் ஒளிவு மறைவு இன்றி கூறுவது.
இயம்புவது===உரத்த குரலில் சொல்வது.
முழங்குவது==ஒரு செய்தியை உரக்க அறிவிப்பது.
சொல்வது--உள்ளதை உள்ளபடி சொல்வது 
புகல்வது==ஒருவனுக்கு தெரியாத விஷயத்தை அவனுக்கு தெரியப்படுத்துவது.
கூறுவது==ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் விளங்கும்படி தெளிவாகச்சொல்வது.
பேசுவது====இதயத்திற்கும் மூளைக்கும் தொடர்பில்லாமல் வார்த்தைகளைக் 
கொட்டுவது 
##################################################################################

திங்கள், மே 07, 2012

சமுதாயப்பதர்கள்.

யார் காட்டு மிராண்டிகள்??


குழந்தைகள் குழந்தைகள்  என்று குழந்தை  இல்லோர் ஏங்க ,

குழந்தைகளைப்  பெற்றோர்  ,அவர்களை நோய்-நொடி இன்றி

வளர்த்து ஒரு பட்டதாரி ஆகி /அவன் அவள் மகிழ்விப்பாள் என்ற தருணத்தில்,

படிப்பு  எ திர்காலம், பெற்றோரின் எதிர்பார்ப்புகள் ,

சமுதாய நெறிகள்,மரியாதை,

கௌரவம்  பற்றி எதையும் தன்  மதி கொண்டு  சிந்திக்காமல்,

மிருகப்புணர்ச்சி பொதுஇடத்தில் நடப்போதுபோல் ,கடற்கரை,பூங்கா

,கோயில் தெப்பக்குளம் என்று காதல் லீலை செய்வதுதான் அந்த வயது வீரம்

.அவ்வாறு செய்யாதவர்கள் நோயாளிகள்  என்று இழிவு படுத்தும் கலாசாரம்,

அதை போற்றும் சினத்திரை,பெருந்திரை கதாசிரியர்கள்,பாடல் ஆசிரியர்கள்,

காட்டு மிராண்டிகள்.


இறைவன், ஒழுக்கம்,வழிபாடு,புலன் அடக்கம்.,பிரம்மச்சரியம் ,பேசும்

ஆன்மிக இறைவன்  பாவச்செயல் கூடாது என்ற ஆஸ்திகம்

 ஒரு பெரியாரால் காட்டு மிராண்டித்தனம்

என்றால் ,



தன் 

சுய லாபத்திற்காக,ஆபாசப்படங்கள்,பாடல்கள்,பெ ற்றோர்களை

 அவமானப்படுத்தும் விஜய்,விவேக,வடிவேல் போன்றோறோரின்

வாயிலாக வெளிப்படுத்தும் வசனங்கள் ஆகியவற்றின் படைப்பாளிகள்

மிருக வெறி பிடித்தவர்கள்.மனிதத் தன்மை அற்றவர்கள்.அடி முட்டாள்கள்.

ஆபாசப்பாடல்கள் பாடி  பெண்களை கிண்டல் செய்பவர்கள் காட்டு

மிராண்டிகள்.

சமுதாயப்பதர்கள்.


bhargav.

bhargav venkat  is sharath's brother.he loves his brother too much.he helps his parents.he gets up early inthe  morning and brush his teeth.he takes bath and does prayer in the morning .he is a obedient boy.his parents ,techers.grant parents loved him .

he speaks politely .sweetly.he never shows angry.

he is an ideal boy. 

women dress

பெண்கள்  உ டை 
தொலைக் காட்சி விஜய் நீயா ?நானா? பெண்கள் அணியும் உடை ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்கிறதா/?அதனால்தான் பெண்கள் ஆண்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார்களா ?
பெண்களுக்கு   ஆடைகள் அவர்கள் விருப்பப்படி அணிய  சுதந்திரம் உண்டா?
ஆண்கள் ஏன் மிருகத்தனமாக நடக்கிறார்கள் ?
நல்ல விவாதம்.
ஆண்கள் கேலி செய்வதை பெண்கள் ரசிக்கிறார்களா ?
அந்தவயதில் ஆண்கள் அப்படித்தான்  என்பதை அனிவரும் ஆண்கள் ஒத்துக்கொண்டனர்.
ஆண்களின் நடத்தையால் பெண்கள் மனம் படும் பாடு ,வேதனைகள்
 உணரப்படவேண்டும் / என்ற ஒரு என்னத்தூடல் பற்றியும் கூறப்பட்டது.
மனிதன் மனிதத்தன்மையுடன் கட்டுப்பாடாக இருக்கவேண்டும்
 என்று கண்டிக்க முடியாத சூழலில் பெண்கள் தற்காப்புக் கலை
 பயிலவேண்டும் என்றும் பேராசிரியை கூறினார்
அச்சம்,நாணம்,வெட்கம் உள்ள பெண்கள் தான் கேலிக்கு ஆளாகிறார்கள் என்றும்

வாதிக்கப்பட்டது.
அதில் ஒருவர் பெண்களை இழிவுபடுத்தும் திரைப்பட பாடல்கள் பாடும்
 இளையன் கைது செவதைவிட இப்படிப்பட்ட அசிங்கமான பாடல் இயற்றிய
வருக்கும்,திரைப்படத்தில்  ,வேளியிட்டோருக்கும்  தண்டனை வேண்டும் என்றார்.நாட்டுக்கட்டை பாடல்.
மனிதனுக்கும் ஒரு பெண் நாய்  குணம் பண்பாடு,மனக்கட்டுப்பாடு இல்லாதவர்கள் இளையர்கள்
 பின்னால் செல்லும் பல ஆண் நாய்களுக்கும்
என்ன வேறுபாடு?

ஞாயிறு, மே 06, 2012

money --no-happy-divorce ---why?



பொருளாதாரம்--இருந்தும் விவாகரத்து  ஏன் ?


இன்று காலை பக்கத்துவீட்டு இளம் தம்பதிகள் சண்டை இட்டனர்

.நம்பினால் நம்புங்கள்  நம் முன்னோர் இளம் வயதில் திருமண வாழ்க்கை
  வயதில் திருமணம் .

செய்வித்து இருபத்து மூன்றுவயதில் அசந்துபோய் ஒருவருக்கொருவர் 
மிகவும் நேசித்து சுகம் துன்பங்களில் இணைபிரியாமல் வாழ்ந்தனர்.

இன்று அவர்கள் அலுத்து அசந்துபோய் மனம் நிறை ந்த வாழ்க்கை வாழும் 

வயதில்  இன்றைய  தலைமுறையினர் புதுமண தம்பதிகள் ஆகின்றனர்.

இன்றைய அறிவியல் பொழுது போக்கு சாதனங்கள் உடலளவில் 

கட்டுப்பாட்டை  இழக்கச் செய்கின்றன. பிரம்மச்சரியம்,,புலன் அடக்கம்,

அனாவசிய சக்தி வெளிப்பாடு இவைகளுக்கு முக்கியமளித்தது போய் 
இந்தவயதில் கட்டுப்பாட என்ற வினா எழுப்பி கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழ்ந்து 

அசந்தவயத்தில் ஆர்வமுடன் தொடங்கும் இல்வாழ்க்கை 
நீதிமன்றத்தில்  முடிவடைகிறது.

இன்றைய தலைமுறையினர்களுக்கு
 நல்ல பொருளாதார வசதிகள். 
தனிக்குடும்பம்.நல்ல  குளிர் சாதனவசதிகளுடன் அனைத்தும்.
ஆனால்  மனமொத்த தம்பதிகளைவிட மன  வேறுபடுள்ள 
 தம்பதிகள் அதிகம்.
காரணம் அறிவு முதிர்ச்சி யைவிட உடல் தளர்ச்சி ,
இது திருமூலர் மற்றும் பல சித்த வைத்திய மருத்துவர்கள் 
பல ஆயிரம் வருட முன்னர் வழிகாட்டிய  அறிய கருத்தை 
பின்பற்றாமை.
 இன்றிய அடக்கம் தேனீர்
 குடிக்கும் விருப்பம்போல் என்று  மார்கபந்து கூறிச்சென்றார் 
தொலைக்காட்சியில்.
 விளைவு 
திருமணமான ஆணும் பெண்ணும் திருமணமான ஆண்-பெண் 
 நேசிப்பது,கொலைசெய்வது,கள்ளக்காதலுக்கு தடையாக  இருக்கும் 
குழந்தைகளைக்  கொல்வது
  ஆங்கிலக்கல்வியின் பரிசு.
பணம் .

ஆனால்  மகிழ்ச்சி  நமது நாட்டின் நல்லோர்களின் சித்தர்களின் 
திருமூலர்  அறிவுரைகளை பின் பற்றுவதில்.
கண்டதே கோலம் கொண்டதே காட்சி நல்லதல்ல.
இளம் வயதில் இன்றியக்கட்டுப்பாடில்லாததே 
மன-திருமண முறிவுக்கு காரணம்.





kalviyil thadai en?

kalvi  -education.


indhiya  thirunaadu  விடுதலை அடைந்து அறுபத்தாறு ஆண்டுகள் ஆனாலும் கல்வி 

என்பது பழைய முறையில் தான் உள்ளது.விடுதலை பெற்றதால்
 படிப்போர் எண்ணிக்கை அதிகரித்தது.ஆனால் படித்த பாடங்களுக்கும் கிடைத்த 
வேலைக்கும் தொடர்பு இல்லை.தாவரவியல்,விலங்கியல் பட்டதாரிகளுக்கும் 
வேதியியல்,இயற்பியல் பட்டதாரிகளுக்கும் அந்தஸ்தான வெளிவேலை 
வங்கியில் தான்.அரசாங்க எழுத்துவேலை.
இப்பொழுது பொறியியல் பட்டதாரிகள் அனைவருக்கும் ,பட்டதாரிகள்
 அனைவருக்கும்  கணினித்தொழில்.
படிப்பிற்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை.
மருத்துவ படிப்பிற்கு ஆர்வமில்லை.

ஆசிரியர் வேலைக்கு ஆசிரியர்களை தகுதி வாய்ந்த ஆசிரியர்களை 
நியமனம் செய்ய கல்வி நிறுவன நிர்வாகிகள் படும்பாடு அதிகம்.
அவர்கள் ஆசிரியர்களை படுத்தும் பாடல் நிலையான ஆசிரியர்கள் 
தனியார் பள்ளியில் கிடையாது.ஊதியம் அதிகம் தரவேண்டும்
 என அவர்களும் நிரந்தர ஆசிரியர்களை வைத்துக்கொள விரும்பவில்லை.

அரசியலிலும் திரைப்பட நாயகர்களும் பொருளும் புகழும் 
தான்  பல மாணவர்களை கல்விக்கூடங்களை விருப்ப இடமாக மாற்றவில்லை.
இவை கல்வித்தரம் உயர்வதில் தடையாக உள்ளன.



வியாழன், மே 03, 2012

education

அன்பு  அறம் அகலா சமுதாயம்.ஆனந்தமுள்ள  ஆற்றல்  மிக்க சமுதாயம்.
படித்து  பணம் சம்பாதிப்போரால் முடியுமா?
கற்றோர்  கற்ற கல்வி குறைந்த சிலவானால்
கடமை சேவை அன்பு அறமாகும்.
கல்லூரியில் சேரவே லக்ஷங்கள் கறுப்புப் பணமானால்,
கள்ளக் கணக்கு,அநீதிக்கான வழக்கு ஆடல்.
குறுக்குவழியில் பணம் தேடல் என,
சமுதாயம் ஒரு சாபக்கேடாகும்.
கற்றோரால் தான் வருமான வரி  குறைப்பு.
சட்டத்தை ஏமாற்ற வழி  காட்டுதல்.
லக்ஷங்கள் சிலவு செய்து மருத்துவரானால்
சேவை லட்சியங்கள் பறந்தே போகும்.
பரந்த மனப்பான்மை குறுகிப்போகும்/
கட்டணங்கள்  கல்விக்கே அதிகமானால்
கடன் சுமைகள் அதிகமாகும்.
பெற்றோர் கடன்,தன கடன்
என்ற நிலை தன்னிலை  மறக்கச்செய்யும்.
ஐந்தாண்டில் செலவு செய்யும் பணம்
தேடும் அரசியல் வாதிக்கும்.
கல்விக்கு  முதலீடு செய்த கல்வி  பயின்றவனுக்கும்
முதலீடு செய்து கல்வி நிறுவனங்கள் ,கடைகள்
நடத்துவோருக்கும்  வேறுபாடு வெளிச்சமாகும் .
ஏழைகள் வாழ அருகதை இல்லை என்ற நிலை
உண்மையாகும்.


  

school fee and public

நானூறு  பள்ளிகள் தொடர்ந்த வழக்கில்  15% கட்டணம் அதிகம்  வசூலிக்க நீதிமன்றம் அனுமனுமதித்து உள்ளது.
அரசியல் வாதிகள் மிகவும்  சாமார்த்திய சாலிகள்.
மேட்ரிக்  பள்ளிகளுக்கு காட்ட அனா விதி அமைத்து விட்டு
அரசியல் தலைவர்களின் பள்ளிகளை மத்திய அரசுப்  பள்ளிகளாக  அங்கீகாரம்
பெற்று நடத்தும் இரட்டைவேடம். மக்களை கல்வி விஷயத்திலும் ஏமாற்றும்
c.b.s.e. பள்ளிகள்.சமசீர் கல்வி என்பது சீர் படுத்த வேண்டுமானால்  கல்வி என்பது ஒரே வாரியமாக மாற்றவேண்டும்.

இப்பொழுது இந்தியாவில்  இருக்கும் கல்வி வாரியங்கள்.

C.B.S.E., I.C.S.E., STATE BOARD., MATRIC., ANGLO INDIAN. ORIENTAL SCHOOL.,INTERNATIONAL SCHOOL.

THANIYAAR PALLIKAL; தனியார் பள்ளிகள் :
சிறு பான்மை ;பெரும்பான்மை;
இதில் ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு,பதவி முன்னேற்றம்,விடுப்பு எடுப்பதில் 
சலுகை அனைத்திலும் பாரபட்சம்.
சிறுபான்மை பள்ளிகளில் அந்த மதம் சார்ந்தவர்கள் தான் அரசு உதவி பெரும்
பள்ளிகளில் கூட தலைமை ஆசிரியராக முடியும்.

சிறுபான்மை  சலுகைகள் பெரும்பான்மை பள்ளிகளுக்கு கிடையாது.

கிட்டத்தட்ட மாநகரங்களிலும்  சிற்றூர்களிலும் அரசு அரசு உதவிபெறும் பள்ளிகள் எண்ணிக்கை குறைந்து
 கொண்டே  ஆசிரியர்கள் -மாணவர்கள்  மூடும் நிலை .

ஒரே  கட்டடத்தில் c.b.s.e., matric.,arasu udavi perum pallikal.
மற்றொரு கேலிக்கூத்து.
20%சதவிகிதம் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு.
ஒரு எழுதும் பொருள் ரூபாய் 2/--முதல் 500 வரை.
கால் சூக்கள்  50 ரூ.முதல் 2000/ வரை
குறிப்பேடுகள்  தரத்திர்கேற்றவாறு.
ஒரே வகுப்பறையில்  ஒரே பெஞ்சியில்  சீருடை துணி முதல் குறிப்பேடு 
வரை ஏற்ற தாழ்வு. தந்தை தாய் படும் வேவேதனை  வர்ணிக்க முடியுமா./
கல்வி விளையாட்டு கண்ணீர் வடிக்கவே,
அரசின் போலி நாடகம் மக்கள்  கஷ்டம்  எப்போது  தீரும்.
பொருளாதார ஏற்றத்  தாழ்வு  உள்ள நாட்டில்  சமச்சீர் கல்வி ,கட்டணம் ,
என்ற நாடகம் சரியல்ல.
கல்வி  என்பது ஒரு நாட்டின் ஜீவநாடி.
அதில் பணம் நாடி ஓடுவதால் அது ஒரு புற்று நோயாகும்.
பணம் இல்லையேல் படிப்பில்லை என்பது  அரசுக்கல்வி அதிகாரிகளின் மனச்சாட்சிக்கு 
விட்டுவிடுகிறேன்.


educational system.

 தான் பெற்ற அறிவை ,கற்ற கல்வியை மற்றவர்கள் அறியும் வண்ணம்
 எடுத்துக் கூறுவதுஒரு கலை
எல்லோராலும் அதை மற்றவர்கள் புரியும் வண்ணம்
 விளக்குவது என்ற தனித் திறமையால்  ஆசிரியர்கள் மாணவர்களின் மதிப்பைப் பெறுகிறார்கள்
.என் அனுபவத்தில்  அத்தகைய  ஆசிரியர்கள்  எண்ணிக்கையில் 
குறைவு தான்.
மிக அறிவுத்திறன் கொண்ட ஆசிரியர்கள் தனது சொல்வன்மை
 திறன் குறைவதால் ஆசிரியர்கள் இறைவன் வரத்தால் பிறவியிலேயே அந்த 
திறன் வரவேண்டும்.

ஆசிரியர் பயிற்சி பெறாத எத்தனையோ பேர் நல்ல
 ஆசிரியர்களாகப் பாராட்டபடுகின்றனர்.
கால மாறு பாட்டிற்கேற்ப ஆசிரியர்கள்  தன் கற்பித்தல்  முறையை 
மாற்றிக்கொள்ள வேண்டும்.
நமது கல்வி .முறை மனப்பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
பாடப்புத்தகத்தில் உள்ள சொற்கள் மாறினால் மதிப்பெண் குறைகிறது.
இந் நிலை மாறி சொந்த வாக்கிய சொல் அமைப்பு எழுதும் மாணவர்கள் திறமை
 போற்றப்பட  வேண்டும்.
மாணவர்கள் ஆர்வம்,திறமை,அறிந்து கல்வி தரப்பட வேண்டும்.
எனது நண்பன் ஒருவன் ஒரு பாடத்தில் பள்ளியல்  முதல் மாணவன்.ஆனால் அவன் தேர்ச்சி பெறாததால் அவன் பாராட்டப்படவில்லை.
அவனுக்கு அந்த பாடத்தின் மதிப்பெண் படி பரிசு தரவேண்டும்.
இத்தகைய கல்விமுறை  தனித் திறனுக்கு மதிப்பளிப்பதில்லை.