தான் பெற்ற அறிவை ,கற்ற கல்வியை மற்றவர்கள் அறியும் வண்ணம்
எடுத்துக் கூறுவதுஒரு கலை
எல்லோராலும் அதை மற்றவர்கள் புரியும் வண்ணம்
விளக்குவது என்ற தனித் திறமையால் ஆசிரியர்கள் மாணவர்களின் மதிப்பைப் பெறுகிறார்கள்
.என் அனுபவத்தில் அத்தகைய ஆசிரியர்கள் எண்ணிக்கையில்
குறைவு தான்.
மிக அறிவுத்திறன் கொண்ட ஆசிரியர்கள் தனது சொல்வன்மை
திறன் குறைவதால் ஆசிரியர்கள் இறைவன் வரத்தால் பிறவியிலேயே அந்த
திறன் வரவேண்டும்.
ஆசிரியர் பயிற்சி பெறாத எத்தனையோ பேர் நல்ல
ஆசிரியர்களாகப் பாராட்டபடுகின்றனர்.
கால மாறு பாட்டிற்கேற்ப ஆசிரியர்கள் தன் கற்பித்தல் முறையை
மாற்றிக்கொள்ள வேண்டும்.
நமது கல்வி .முறை மனப்பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
பாடப்புத்தகத்தில் உள்ள சொற்கள் மாறினால் மதிப்பெண் குறைகிறது.
இந் நிலை மாறி சொந்த வாக்கிய சொல் அமைப்பு எழுதும் மாணவர்கள் திறமை
போற்றப்பட வேண்டும்.
மாணவர்கள் ஆர்வம்,திறமை,அறிந்து கல்வி தரப்பட வேண்டும்.
எனது நண்பன் ஒருவன் ஒரு பாடத்தில் பள்ளியல் முதல் மாணவன்.ஆனால் அவன் தேர்ச்சி பெறாததால் அவன் பாராட்டப்படவில்லை.
அவனுக்கு அந்த பாடத்தின் மதிப்பெண் படி பரிசு தரவேண்டும்.
இத்தகைய கல்விமுறை தனித் திறனுக்கு மதிப்பளிப்பதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக