வெள்ளி, மார்ச் 09, 2012

மேலைநாட்டு கலாச்சாரத்தை கேலி செய்யும் தமிழகமே திரும்பி பார்

மேலைநாட்டு கலாச்சாரத்தை கேலி செய்யும் தமிழகமே திரும்பி பார்e

 இங்கு   கோயில்  திருவிழா  ரௌடிகளின்  சாம்ராஜ்யம்.

எந்திரன்  திரைப்  படத்தில்  பார்த்திருப்பீர்கள் .   

கோயில் ஒரு  புனித இடம்.  
when i visited a church in u.s. as a foreigner and Hindu.they give me warm welcome and give me v.i.p chair to watch the prayer and allow me to take photos each and every part of the search.but when a foreginer want to visit hindu temples ,vendors are cheating them.they want to enjoy to see our temple idols and their beauity and skill.the temple authorities are not allowing because they are not hidus.

i humbly requiste to think deeply the reality.i like this article because i am a real patriot  like you.

புதன், மார்ச் 07, 2012

penkaldinam.

பெண்கள்  தினம்.
ஹிந்தி கவிஞர்  சுமத்திரா நந்தன்  பந்த்  தன் கவிதையில் பெண்களைப்பற்றி 

உலகில் சுவர்க்கம் என்று ஒன்று இருக்கிறதென்றால் ,
பெண்ணின்  இதயத்தில் தான்.
நரகம் என்று உலகில் இருந்தால் அதுவும் பெண்ணின் இதயம் தான் 
  என்கிறார்.
ஆவதும் பெண்ணாலே,அழிவதும் பெண்ணாலே என்று ஒரு பாடல்.

பெண்ணின் மகத்துவத்தை ஹிந்து மதத்தில் உணர்ந்து தான் 
முப்பெரும்   பிரம்மா,விஷ்ணு,மகேஸ்வரன் ஆகிய வர்களை முறையே 

படைத்தல்,காத்தல், அளித்தல் என்ற  தத்துவத்தை அளித்து, உலகில் மனிதன் வாழ அத்தியாவசிய  மான கல்வி,தனம்,வீரம் மூன்றிற்கும்  கலைமகள்,அலைமகள்,மலைமகள் என்ற முப்பெரும் தேவிகளை வழிபடுகிறான்.கிராம தெய்வங்களாக ,மதுரைவீரன் ,முனீஸ்வரன்,
கருப்பணசாமி, என்ற ஆண் தெய்வங்களை வெட்ட வெளியில் காவல் தெய்வங்களாக  வைத்து அம்மன் கோயில்கள் பிரபலமான சக்திவாய்ந்த 
தேவிகளாக வணங்கப்படுகின்றன.
காளியம்மன் கோயில்,மாரியம்மன் கோயில்,நாகாத்தம்மன் கோயில்,பச்சையம்மன் கோயில்,முண்டகக்கண்ணியம்மன் கோயில்,
ரேணுகாதேவி,திருவீதிம்மன்,துரௌபதி அம்மன்,சப்த  கன்னிகள்,அங்கால பரமேஸ்வரி கோயில்,மீனாக்ஷி அம்மன் ,காமாட்சி அம்மன்,அலமேலுமங்கை,
என அம்மன்கள் தான் எத்தனை.

இவ்வளவு முக்கியத்துவம் இருந்தாலும் சமுதாயத்தில் பெண்களுக்கு சற்று 

அடிமையான இடம் தான். அடுப்போதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற வினாதான்.இன்று  பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசினாலும் அவர்கள் 
பலஹீனம் தாய்மை.பெண்களை அபலை என்பர்.பலம் என்ற சொல்லுக்கு எதிர்ப்பதம்.
ஆனால் பெண்மை ,மேன்மை என்று ஒன்று இல்லை என்றால், தாஜ்மஹால் 
என்ற உலக அதிசய மஹால் கட்டப்பட்டு பாரதத்துக்கு பெருமை கிடைத்து இருக்குமா.

இருப்பினும் ஒரு வருத்தம் படித்த பெண்கள் பொறுமை இல்லாமல் விவாகரத்துக்குத் தயாராகின்றனர்.ஆண்கள் செய்யும் அட்டகாசம்.குடிவெறி,
மனைவிகளை முரட்டுத்தனமாக அடித்தல்,கொத்தடிமை போல் திருமணத்திற்குப்பின் நடத்துதல்,இதெல்லாம் பொறுத்தது போதும் என்று 
பெண்ணினம் பொங்கி எழுந்தால்  அமைதி இல்லாமல் ஆண்கள் தனிமையில் 
அலையும் நிலை ஏற்படும்.
ஆனால் இன்று பல நகரங்களில்  மனைவிகளால்  துன்பப்படும் கணவன் மார்கள் அதிகம். ஆண்களுக்கு  வேலைவாய்ப்பும் குறைவு.ஆண்களைவிட அதிகம் படிப்பவர்கள் பெண்களே.
இன்றைய திரைப்பட கதை நாயகர்கள் அனைவருமே பொறுக்கிகள்.போக்கிரிகள்.சட்டத்தை காக்கும் குற்றவாளிகள்.
ஆகையால்  எதிர்காலம்  இல்லறம் நல்லறமாக இருக்குமா ?என்ற ஐயமே 
நீதிமன்ற வழக்குகள் எண்ணிக்கை அதிகமாவது கண்டு ஏற்படுகிறது..




ர.

செவ்வாய், மார்ச் 06, 2012

kalvi-indiscipline in education.


கல்வி - ஒழுக்கமின்மை


  ஆசிரியர்கள் பற்றி ப்ளாக்கில்  பாலா என்பவரின்  சிந்தனைகளும் அதில்

நல்ல ஆசிரியர்களை மையப்படுத்தி எழுதப்பட்டது  என்ற  குறிப்பும்

 காணப்பட்டது.


அதில் பெரிய திரை சின்னத்திரை ஆசிரியராக

 நடிக்கும் நடிக-நடிகைகள் பற்றியும் குறிப்பிடுகின்றார்.

கல்வித்துறை என்பது ஒரு நாட்டின் மிகப் பொறுப்பு  வாய்ந்த முக்கியமான

துறை.நான் படித்த பள்ளியில்  குடிகார ஆசிரியர் என்றே ஒருவர்.

அவர் மேல் நடவடிக்கை  எடுக்கப்படவில்லை.காரணம் அவரின் குடும்பம்

என்னவாகும் என்பதே ஆசிரியர் சங்கத்தின் வாதம்.அதிலும் அவ்வாசிரியர்

செல்வாக்கு உள்ளவராக இருந்தால் போதும்.

இதில் ஜாதி-மதம் என்ற  போர்வையில் செய்யும்

அட்டகாசங்கள்.இந்தப்பள்ளியில் இந்த ஜாதிக்கு உயர்வு.இந்த மதத்திற்கு

உயர்வு.ஆகையால் நான் அதற்க்குத்தகுதியில்லாததால் என் மீது நடவடிக்கை

என்று கூறியே பள்ளி நேரத்தில் வகுப்புக்குச் செல்லாமை.

தன்  சொந்த மேல் வருமானத்திற்கு  திட்டம் தீட்டல்,மாணவர்களை டியூஷன்

எடுக்க  கட்டாயப்படுத்துதல்,மாலை நேர வேலைக்கு பள்ளிநேரத்தில்

ஒய்வு.பூர்வ ஜன்ம பலன்.ஒய்வு ஊதியம்.சம்பள நாளன்று ஓய்வூதியம்

வாங்கியாச்சா /?என்ற  குசலம் விசாரிப்பு.

ஆசிரியர்களை    மதிக்கும்  மாணவன் ஆசிரியர்கள்

 அனைவரையும் மதிக்கிறான்

.ஆனால்  குறைகளைக்கண்டால், ஆசிரியர்களின்  பல  ஹீனனங்களை

 தெரிந்து  விட்டால்   போதும் ஆசிரியர்கள் அவ்வளவு தான்

  அடைக்கலம்.

உறவு,செல்வாக்கு ,சங்கம் ,ஜாதி, மதம்,பணம் நடமாட்டம் இருக்கும் வரை

ஒரு ஆசிரியரை   மற்றொரு  ஆசிரியர்   தன்  வகுப்பில்   மட்டம்

தட்டுதல் ,பொறாமை வெறுப்பு
                                                                     இருக்கும் வரை,

நேர்மையான கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்காதவரை


காவல் துறையும் ,கல்வித்துறையும் மட்டமாகத்தான் சித்தரிக்கப்படும்.


 l

திங்கள், மார்ச் 05, 2012

man and his sufferings. WHY?wrong thoughts

அவனியில் மரணம் என்று ஒன்று இல்லையெனில்,அசுரசக்தி ஆட்டிப் படைத்துக்  கொண்டு இருக்கும். அசுர  சக்தியை  உருவாக்கிய  ஆண்டவனே
அச்சம் அடையும் அளவுக்கு  அது வளர்ந்து  விட்டது. மனிதன் நல்லவனாக, நேர்மை உள்ளவனாக ,சத்தியவானாக இருக்கத்தான் நினைக்கிறான்.ஆனால்
இந்த   உலக மாயைகள் ,உலக வாழ்க்கை முறை அவனை இறக்கமற்றவனாக்குகிறது .

தனக்காக   சிபாரிசு,லஞ்சம் அளித்தால்-பெறல் ,பெற்றால் கொடுத்தல், பணம் பெற தவறிழைத்தல், தவறு செய்து லஞ்சம் அளித்தல் இது ஆண்டவன் ஆடல்.
அசுரசக்திகளின்  ஆதிக்கம் அதிகமாகும் போது அது அடியோடு  அளிக்கப்படுகிறது
மீண்டும் மீண்டும்  சமுதாய அக்கறைகொண்டவர்கள்  இறை அன்பர்கள் கூறுவதெல்லாம்  ஒன்றே.உன் கர்ம வினை உன்னை விடாது. நீ செய்யும் பாபங்கள்  தொடர்ந்து உனது வாரிசுகளை பாதிக்கும். உன் பாவங்களால் நீ சேர்க்கும்
பொன் பொருள் ஆஸ்திகள் நேர்வழியில்  பயன்படாது . மதுவிற்கும்  மருத்துவத்திற்கும் ,கேளிக்கைகளுக்கும்  என  கரைந்து   வறுமையில்  வாடுவார்கள் . தீராத நோய்களால் அல்லல் படுவர்.பழிச்சொல்லுக்கு ஆளாகி அவமானச்சின்னமாவர்.இந்த உலகிலேயே நரக வாழ்க்கை வாழும்  எத்தனையோ  செலவச்சீமான்களை நாம் கலி உகத்தில்  இந்நிலை உலகில்  பார்க்கிறோம்.
தர்மங்கள் அனைத்துமே கூறும் சத்திய வழி,நியாய வழி..அவைகளை   அறிந்தும்  புரிந்தும்
மனிதன் தவறுவதால்   அவன் துன்பங்களை ஆண்டவன் அளித்ததாகவும் சுகங்களை தன முயற்சியால் அடைவதாகவும்  தப்பான  எண்ணங்கள் .


ஞாயிறு, மார்ச் 04, 2012

பகுத்தறிவும் பகவானும்.

பகுத்தறிவும் பகவானும்.
அறிவுள்ளவன் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து 

பெருக்கி வகுத்து கழித்து நல்லவற்றை பெருக்கி 

அல்லவற்றை கழித்து ,அல்லவற்றிலும் வகுத்து 

கழித்து மீதியை விட்டு விடுகிறான்.

இந்த பகுத்தறியும் அறிவால் கண்டறிந்த மூல   

தத்துவம்   தான் நுண்ணறிவால் காணும் 

ஆண்டவன்


சூக்ஷ்ம திருஷ்டி .இது எத்தனை பேருக்கு வரும்.???

அந்த நோக்கில் கண்டு உணர்ந்து தெய்வீக    

கருத்துக்கள்  , வேதங்களாகவும்   ,குரானாகவும் 

,பைபிளாகவும் .மனித  நேயம்   வளரவும்  ,மனித 

ஒற்றுமைக்காகவும்  ,வையகம்  வாழவும் ,வாய்மை 

வெல்லவும்  ஆன்மீக வழிகாட்டியாக அமைக்க 

ஆண்டவன் அருள் பெற்றவரன்றி வேறு  யாரால் 

முடியும்

அறிவியல் விந்தைகள் பற்றிய குறிப்புகளும் அந்த 

ஆன்மீக தெய்வீக நூல்களில் காணப்படுவதும் 

விந்தை தானே.

.ஆனால் சில பகுத்தறிவு வாதிகள் சுயநல முள்ள 

ஆன்மீக வாதிகளின் போலி வேஷத்தை கலைத்து 

சிந்தனைகள் தூண்டுகின்றனர்.

அறிவு வளம் பெற்ற இந்த உலகில் தீயவை 

சீக்கிரமாக வெளிப்பட்டு விடுகின்றன.







வெள்ளி, மார்ச் 02, 2012

kabeer eeradi dheiveeka uravu

நல்ல மனிதர்கள் ,உயர்ந்த மனிதர்கள் இந்த உலகில் உள்ள தீயவைகளை அகற்றி நல்ல குணங்களை மட்டும் ஏற்பர்.வித விதமான  மலரின் மணம் அறியும் வண்டு அதன் மதுவை உறிஞ்சுவதைப்போல் ,உயர்ந்த மனிதன் ஒவ்வொரு மனதிலும் இருக்கும் பகவானை அறிந்து கொள்ளுவான்.
औगुन को तो ना गहै,गुनही को लै बीन. घट घट  महंके   मधुप ज्यों ,परमातम लै चीन.


६.
அன்னப் பறவை  பாலும் தண்ணீரும் கலந்து வைத்தால்  பாலை மட்டும்  அருந்தும். நீரை விட்டு விடும்.அவ்வாறே இறைவனை இதயத்தில்  வைத்துள்ள  
இறையன்பன்  அந்த ஆன்மீக தத்துவத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு ,மற்ற
உலகியல் தீயவைகளை விட்டு விடுவான்
हंसा पय को काढी ले ,छीर नीर निर्वार.ऐसे गहै जो सार को,सो जन उतरे पार.
७.
छीर रूप सतनाम है, नीर रूप व्यवहार. हंस रूप कोई साध है,तत का छाननहार.

இறைவனின்   நாமம்  பால் போன்று தத்துவம் நிறைந்தது.உலகியல் விவகாரங்கள்  தண்ணீர் போன்று சார மற்றது.இவ்வாறே அன்னம் போன்று
சாது -மகான்கள் சாரம்- சாரமற்ற தன்மை அறிந்து  இறைவனையே சரணடைகின்றனர்.
8 .
समदृष्टि  सतगुरु  किया,दीया अविचल ज्ञान.जहँ देखौ तहँ एक ही ,दूजा नाहीं आन.

எனக்கு குருவானவர்  அசையாத திட மான அறிவை தயக்கமில்லா அறிவை 
கொடுத்துள்ளார். சம நோக்கைக் கொடுத்துள்ளார்.ஆகையால் நான் எங்கு
நோக்கினும் அந்த ஒரே தத்துவமான இறைவனை பார்க்கிறேன்.வேறு ஏதும்
எனக்கு எண்ணங்கள் (உலகவியல்)ஏற்படவில்லை.
௯.
சமநோக்கு என்பது அமைதி ,எல்லா மதங்களையும் சமமாக பாவிப்பது.
எல்லா பிராணிகளின் ஆன்மாக்களையும் ஒன்றாகக் கருதுவது.சமமாக நோக்குவது.
समदृष्टि  तब जानिये,सीतल समता होय.सब जीवन की आत्मा ,लखै एक सी सोय.


 







r

divine experience--kabeer in tamil-eeswaraanu bhooti

                                                                                        १.



கபீர்  தாசர்  ஆத்மா ஞானம் பற்றி கூறும் போது  அது விளக்கமளிக்க முடியாத


ஒரு தெய்வீக உணர்வு என்கிறார்.
ஒரு வாய் பேச முடியாத ஊமை வெல்லம் சாப்பிட்ட இனிமையை உணர்வது போல் தான் நாம் உணர முடியுமே தவிர அதை கூறி விளக்க முடியாது.
आतम अनुभव ज्ञान की,जो कोई  पूछे बात. सो गूंगा गुड खाइकै,कहै कौन मुख स्वाद.

२.
ஊமையின்  சங்கேத மொழியை ஒரு ஊமையால் தான்  புரிந்து கொள்ள முடியும்.அவ்வாறே ஆன்ம ஞானத்தின் முழு ஆனந்த உணர்வை ஒரு ஆன்ம
ஞானியால் தான் உணரமுடியும்.
ज्यों गूंगे के सैन को ,गूंगा ही पहचान.
त्यों ज्ञानी के सुक्ख को ज्ञानी होय सो जान.

३.

कागद लिखे सो कागदी,की ब्योहारी  जीव.
आतम दृष्टी कहां लिखै,जित देखी तित पीव.

நாம் அறிவு என்று காகிதத்தில் எழுதும்  அறிவு  ulakil nadai  murai  அறிவு.
aanaal ullunarvin paarvaiyaal கிடைத்த ஞானம் தெய்வீகமானது .அந்த  ஞானம் கிடைத்த  பின்  அங்கிங்கெனாதபடி  எல்லா  இடங்களிலும்  இறைவனே  தென்  படுகிறான் .
4.
ஆத்மாவின்   உள் நோக்கால்  கிடைக்கும்    ஆன்ம   உணர்வு ஈஸ்வரானுபூதி  .அது பார்த்து  உணரும்  அறிவு.ஆத்மா உணர்வு ஏற்பட்ட   பின் ஜீவாத்மா   பரமாத்மா  ஈரரக்   கலந்து   ஒன்றறக் கலந்து விடுகிறது..அந்த உயர்ந்த  நிலையில்,       உலகப்  பற்று  ஏற்படுத்தும்  பஞ்ச 
 தத்துவங்களும் வறண்டுவிடும்
लिखी-लिखी  की है नहीं, देखा-देखी बात ;दुल्हदुल्हीं मिलगये,फीकी पड़ी बरात.
५.
भरो होय सो रीती,रीतो होय भराय; रीतो भरो न पाईये,अनुभव सोए कहाय;
அறிவு  நிறைந்தவன் ஆன்ம ஞானம் பெற்ற பின் முழுமையான ஞானம் பெற்றும் வெறுமையை உணர்கிறான்.அறியாமையால் நிறைந்தவன் ஆன்ம ஞானம் பெற்று முழுமையான ஞானம் பெற்ற அனுபவம் பெறுகிறான்.உண்மையான உணர்வு பரிபூர்ண  ஞான நிலை.அந்நிலையில்
வெறுமையும் முழுமையும்  சமமாகிறது.
ஆணவத்தில் மூழ்கும் அறிவாளி வெறுமை அடைகிறான் பணிவின் காரணமாக  வெறுமை உணர்பவன் முழுமை பெற்ற ஞானி ஆகிறான்.
.

வியாழன், மார்ச் 01, 2012

vivekaanandar

வேதாந்தக் கருத்துக்கள் 
மனிதன் தத்துவ பூர்வமான உயர்ந்த கொள்கை கொண்டு வாழ வழி காட்டுவது தான் வேதாந்தம்.
அதை அப்படியே பின்பற்றி உயரிய வாழ்க்கை வாழ 
முடியாத போது அதை தன் இஷ்டப்படி வசதியாக்கிக்கொள்ள முயல்கிறான்e.
விவேகானந்தர் கூறுகிறார்- 
நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய்.


 நீயே இறைவனானவன்.உன்னில் இறைவன் நிறைந்துள்ளான்.
அழிவில்லாத ஆத்மா தான் நீ.
நம்மால் முடியும்.முடியாதென்பது ஒன்றும் இல்லை.எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும்.
thirumoolar 
உடம்பினை முன்னம்  இழுக்கென்றிருந்தேன்.
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்.
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று 
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு  ஆலயம்.
வள்ளர் பிரானார்க்கு வாய்கோடி வாசல்,
தெள்ளத் தெளிந்தாருக்கு ஜீவன் சிவலிங்கம் 
கள்ளப் புலனைந்தும் காளா  மணிவிளக்கு.
உடம்பார் அழியின்  உயிரால் அழிவர்.
திடம்பட மெய்ஞானஞ் சேரவு மாட்டார்.
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே 
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

புதன், பிப்ரவரி 29, 2012

kadavul kutram.

கடவுளின் குற்றம்.

நம் நாட்டில் பலர் பல விதமாக இருக்கிறார்கள்.அறிவாளிகள் அதிகம் இருந்தால்
பல எண்ணங்கள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.அந்த எண்ணங்களின் பிரதிபலிப்பே பல சம்பிரதாயங்கள்.அறிவுள்ளவன் தன் சிந்தனைகளை நல்லதாக நினைத்து நிறைவேற்றத்தடையாக இருந்தால் சிறிது மாற்றம் செய்து
புதிய சம்பிரதாயத்தை உருவாக்குகிறான்.அவன் அறிவாற்றலால் ஒரு கூட்டத்தை  கூட்டுவதில் வெற்றிபெறுகிறான். ஒரு புதிய சம்பிரதாயமாக மாறுகிறது.ஹரியும் சிவனும் ஒன்று என்றொரு கூட்டம்.வீர சைவம்  என்ற கூட்டம்.லிங்காயத்து சைவம்.வைஷ்ணவ  சம்பிரதாயம் அதில் வட கலை தென் கலை.சமண மதம் அதிலும் திகம்பரர் ,svethaambarar  என்ற பிரிவு
உலகளவில் பரவியுள்ள கிருஸ்தவ மதத்திலும் கதோலிக்,புரோடோஷ்டன்ட் .செவன்த்-டே -என்ற பிரிவுகள்.முகலாயர் மதத்தில்
ஷியா ,சன்னி என்ற பிரிவுகள்.
அரசியல் தலைவர்கள் ஒருவரே என்றாலும் அவர்கள் பெயரைச்சொல்லி பல தலைவர்கள் .
மேற்கண்ட சிலரின் அறிவாற்றலால் அப்பாவி மக்கள் அவர்களிடம் பெரும் சில நன்மைகளால் ஒருவொருக்கொருவர் சண்டை இடுகின்றனர்.அந்தந்த
பிரிவுத்தளைவர்கள் தொண்டர்களிடம் பெற்ற பணத்தால் சுகபோக வாழ்வு வாழ்கின்றனர்.
தொண்டர்கள் அடிபட்டும், உயிர்த்தியாகம் செய்தும் தலைவர்களை சுயநல ஜடமாக்கு கின்றனர்.இறைவன் அனைவருக்கும் ஒரே எண்ணங்கள் மனிதநேயம்  ஏன் தரவில்லை.



ulakam

அறிவு வளர வளர நாட்டில் ஆன்மீகமும் வளர்கிறது.கருப்புப்பணமும் வளர்கிறது.கற்பழிப்பும் பெருகுகிறது.ஊழல் பெருகுகிறது.கொலை,தற்கொலை,
விவாகரத்து,கள்ளக் காதல்,பொய்கணக்கு,கையூட்டு,நீதிமன்றத்தில் பொய்
சாட்சிகள்,நீதி மன்றத்தீர்ப்பை மதியாமை,தேர்தல் முறைகேடுகள்,தேர்வு முறை கேடுகள்,திறமையுடன் குற்றங்களை மறைத்தல்,வேலியே பயிரை மேய்த்தல்,
தேவாலயங்கள் ஊழல் ,இறைவன் பெயரைக்கூறி ஏமாற்றங்கள்.

இவை இன்றைய கலியுகத்தில் என்று நினைத்தால்,இவைa புராணங்கள்,மத நூல்களிலும் காணப்படுகின்றன.
அதனால் தான் இவ்வுலகில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்  .நல்லவர்கள்,நீதிமான்கள் நமக்கு உதவ வேண்டும்.

என் அனுபவத்தில் மேலுள்ள   குறைபாடுகள்   ஊடகங்களால்  பெரிது  படுத்தப்படுகின்றன. .
எத்தனையோ  பெரியவர்கள்  l,மகான்கள் ,பரோபகாரிகள்   நாட்டில் உள்ளனர்.  .நேர்மை  யான  இறை  அன்பர்கள்  
உள்ளனர்.அனால்  அவர்களை அதிகம்  யாரும்  கண்டு  கொள்வது இல்லை. . .அவர்களுக்கு  ஊழல்வாதிகளுக்கு  கொடுக்கும்  மரியாதை  
தரப்படுவதில்லை.மகாகவி பாரதி போல் வறுமையில் செம்மையாக வாழ்கின்றனர்.அத்தகையோர்களால் தான் உலகம் வாழ்கிறது.