புதன், செப்டம்பர் 04, 2013

அறிவுக்கண் திறக்க உதவும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

இன்று ஆசிரியர்கள் தினம்.

குரு  என்றால் பெரிய என்று பொருள். இறைவனுக்கு இணையானவர்.

குரு அருள் இருந்தால் தான்  இறைஅருள் கிட்டும்.

குருவே துணை என்று வாழ்ந்தவர்கள் அதிகம்.

குரு என்பவர் ஆசிரியராக மாறியது ஆங்கிலேயர்கள் வந்தபிறகு.

கற்பிப்பவர் ஆசிரியர். குற்றம் குறைகளைப்போக்கி  மாணவர்களை வாழ்விற்கு ,சமுதாயத்திற்கு ,நாட்டிற்கு  பயன் உள்ளவர்களாக உருவாக்குபவர் ஆசிரியர்.

இன்று ஆசிரியர் எப்படி உள்ளார்?

மாணவர்களிடம்  பேட்டி  எடுத்தால் ......

நல்லாசிரியர்களும் உள்ளனர்  என்ற பதில் வரும்.இந்த பதிலில் நல்ல என்பதற்கு எதிர்ச்சொல் ஆசிரியர்களும் உள்ளனர்.

ஆசிரியர்கள் எப்பொழுதுமே ஒழுக்கம் குறையாமல் இருக்கவேண்டும்.

மாணவர்களை ஒழுக்கம் நிறைந்தவர்களாக ஆக்குதல் வேண்டும்.

சமுதாயமும் நாடும் முன்னேற முக்கியமானவர்கள் ஆசிரியர்கள்.

முன்னாள் ஜனாதிபதி  தத்துவமேதை dr .ராதாக்ருஷ்ணன்  அவர்கள் பிறந்தநாள்.

இந்த நன்னாளில் அனைத்து ஆசிரியைகளுக்கும் வாழ்த்துக்கள்.

ஹிந்தி கவிஞர் கபீர் படிக்காதவர்.அவர் குரு ராமானந்தரை  மானசீக குருவாக ஏற்றவர்.

அவர் எழுதிய ஈரடி :
குருவும் இறைவனும் முன்னால் தோன்ற,யாரை வணங்குவது என்ற வினாவிற்கு விடை,
நான் குருவை வணங்குவேன் ,அவர்தானே இறைவனைக்  காண வழிகாட்டியவர் .

அறிவுக்கண் திறக்க உதவும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.


செவ்வாய், செப்டம்பர் 03, 2013

அவமானப்படுவது எந்த வேதங்களில் உள்ளது?ஏன் உனக்கு இந்த நிலை.?

இந்துக்கள்  ஒற்றுமை ,ஒரே குரல்  என்றெல்லாம் முயற்சி எடுக்கும் இந்தக் காலத்தில்  ஸ்ரீ கணேஷ் உற்சவத்தில்  ஒற்றுமை இன்மை ,பதற்றம் காணப்படுவதாக செய்திகள் வெளியாவது வேதனையாக உள்ளது.

எல்லா இந்துக்களுக்கும் விநாயகர் முழுமுதற் கடவுள். எந்த ஒரு தேவதை பூஜைக்கும் பிள்ளையார் பூஜை தான் ஆரம்பம்.பிள்ளையார் சுழி என்பது போடாமல் எந்த ஒரு விஷேசத்திற்கும் பொருள் வாங்கும் பட்டியல் தயாரிப்பது இல்லை.

ஒரு சிறு மஞ்சள் பிள்ளையார் வைத்து வழிபாட்டு செய்துதான் ஹோமம் ,திருமணம் போன்றவை நடத்தப்படும்.


இப்பொழுது  விநாயகர் சதுர்த்தி விழாவில்  முழுமுதற்கடவுள்  விநாயகர் 

சிலை பிரதிர்ஷ்டையில் இந்துக்களிடம் ஒற்றுமைக்குப் பதிலாக பதற்றம் காணப்படுகிறது என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.

ஹிந்து முன்னணி,விஷ்வ ஹிந்து பரிஷத்,ஹனுமான் சேனா,ஹிந்து மக்கள் கட்சி மற்றும் பல ஹிந்து அமைப்புகள் பொள்ளாச்சி நகரில் மட்டும் ௬௪௦ சிலைகள் .ஒரே பதற்றம் .

தெய்வ வழிபாடு என்பது மன சாந்திக்கும் .மக்களின் ஒற்றுமைக்கும் ,நல்லிணக்கத்திற்கும் .

அந்த வழிபாடு, ஒரு அமைதியற்ற பீதியையும் ,பதற்றத்தையும் உருவாக்குமானால்   மிகவும் சிந்திக்கவேண்டிய கவலைப்பட வேண்டிய நிலை.

சிந்தியுங்கள்  இந்து சகோதரர்களே!
பொருள் விரயம்.கால விரயம்.
பதற்றமான சூழல்.காவல்துறையினர் மற்ற குற்றங்களைத்தடுக்கவோ,ஆய்வு செய்யவோ முடியாத நிலை.

அழகு  சிலைகள் அவமானப்படுத்தி எரியும் காட்சி.

ஒவ்வொரு சிலை இருக்கும் தெருவிலும்  ஒரு பயமான பாதுகாப்பு.

எப்பொழுது என்ன நடக்குமோ என்ற அச்சம்.


இந்த கோடிக்கணக்கான பணம் பாழடைந்த பழம் ஆலயங்களை புனருந்தாரணம் செய்யவோ.மற்ற பயனுள்ள பணிகளுக்கோ பயன்படுத்தலாம்.

ஞானபூர்வமாக சிந்திக்கவும்.

ஓம் கணேசாய நமஹ;
 விநாயகா!வினைகளைத் தீர்ப்பவனே!

மக்கள் உன் அழகு உருவங்களை அலட்சியமாக எரிந்து  நீ சின்னா பின்னமாக கடல் அலைகளால் கால்,கை ,முண்டமாக அவமானப்படுவது எந்த வேதங்களில் உள்ளது?ஏன் உனக்கு
 இந்த நிலை.?
அரசியல் ,ஆன்மிகம்  இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள்.

ஒன்று நாட்டின் தேவைகளைப் பூர்த்திசெவது.மற்றொன்று அன்பு,பண்பு ஒழுக்கம்,பண்பாடு,கலை ,உண்மை ,நேர்மை ,ஈகை,பரோபகாரம்  போன்ற மனிதத்தன்மை வளைப்பது.

    அரசியல் நம் நாட்டில் சுதந்திரத்திற்குப்பின்,௧௯ஆம் நூற்றாண்டிற்குபின் 

 என்ற நிலையில்  சுதந்திரப்போராட்ட கால தியாகம்,தேசபக்தி ,சுயநலமின்மை 

போன்றவை  மாறிவிட்ட மனநிலையை இன்று காண்கிறோம்.காரணம்,

நாடு அடிமைப்பட்டிருந்தகாலத்தில் இருந்த துன்பங்களை மறந்துவிட்டோம்.

       நன்றாக  சிந்தித்தால் அறிவு வளர்ச்சி என்பது  பொருளாதாரம் மட்டுமே 

என்ற நிலைக்கு வந்துள்ளோம்.காரணம்  அரசியல் கல்வியை வியாபாரமாக்க 

வழிவகுத்துவிட்டது.ஆன்மீகமும் வணிகமயமாகிவிட்டது.


அரசியல் வணிகமயமாகிவிட்டது. ஒரு கட்சி வளரவேண்டுமென்றால் உண்மையான தேசப்பற்று,தொண்டு மனப்பான்மை ,சுயநலம் இல்லாதவர்களால் வளரவேண்டும்.இன்று சிறு=சிறு கருத்துவேறுபாடுகளால்

கட்சிகள் உடைகின்றன. ஊழலைக்காட்டி கட்சியை உடைத்து வெளிவருபவர்கள்  ஒரு ஊழல் கட்சியுடனே கூட்டணி சேருகின்றன. தி.மு.க.
அ.தி.மு.க,கம்யுனிஸ்ட்.,பா ம.க  ,ம.தி,மு,க ;தே.தி.மு.க ,பார்வர்ட் பிளாக் ,சரத் கட்சி,திருமா.கட்சி,அனைத்தும் முதல் இருகட்சிகளானா திரு.மு.க. அல்லது செல்வி ஜெயலிதா இன்றி இயங்கமுடியாது என்ற நிலையிலேயே 

கட்சிகள் நடத்துகின்றனர்.

தேசீயக் கட்சிகள் தமிழகத்தைப் பொறுத்தவரை தன காலில் நிற்க முயற்சிக்கவே இல்லை.காரணம் திராவிட இயக்கம் வளர்ந்ததது  இளைஞர்களால். 
அந்த இளைஞர்களை தமிழக காங்க்ரஸ்  ஒரு சக்தியாகப் பயன் படுத்தவில்லை.

பெருந்தலைவர் காமராஜரை இளம் வயதுள்ள ஸ்ரீநிவாசன் தோற்கடித்தார்.
குடந்தை ராமலிங்கம் தேசியக்கட்சி. அனால் இந்த இளைஞர்கள் எங்கே என்ற நிலை விரைவில்.

இளைஞர்களை பின்னர் அரசியலுக்கு முக்கியத்துவம் தரவில்லை.

இது அரசியல் விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படாமல் இருக்க இந்திராகாந்தி 

அவர்களும் தமிழகத்தில் தேசியக்கட்சி காங்கிரஸ் ஆட்சியில் அமர முயலவில்லை. தமிழக காங்கிரசில் இன்றும் ஒற்றுமை ஏற்படவில்லை.
ப.சிதம்பரம் தனியாக நின்றால் நிச்சயம் வெல்லமுடியாது, அனால் அவர் மத்தியில் தொடர்ந்து அமைச்சர்.

தொடரும் ......

ஞாயிறு, செப்டம்பர் 01, 2013

மாற்றம் தேவை.

நமது சட்டங்கள் நமக்கு பாதுகாப்பு அளிக்கிறதா?

நம் நாட்டில் எத்தனை பேர் நீதிமன்ற அனுபவம்

இனிமை என்று கூறி உள்ளனர்?

உள்ளூர் பஞ்சாயத்தின் நிம்மதி கூட நீதிமன்ற தீர்ப்பில் உள்ளதா?

ஒரு வழக்கு 10-15 ஆண்டுகள் நீடிப்பதேன்?

பொய் வழக்குகள் போடப்படுகின்றன  என்பதால் தான் நீதிமன்ற அரசியல்வாதிகள் குற்றம் சாட்டப்பட்டாலும் தேர்தலில் நிற்கலாம் என்ற வாதம் எவ்வளவு சரி?

வழக்கு நடக்கும் போதே தேர்தலில் நின்று வெற்றிபெற்றால் ,பின்னர் வழக்கு திசை மாற வாய்ப்புள்ளதா? இல்லையா?


கற்பழிப்பு ,திருட்டுவழக்குகள்   17 வயதில் செய்தால் குற்றத்தின் தன்மை கருதி  கடும் தண்டனை அளிக்கப்படவேண்டுமா?வேண்டாமா?

கல்வி பாதிக்கப்படும் ,வாழ்க்கைப்பாதிக்கப்படும்  என்று இளம் சிறார்கள்

சிறு தண்டனை கொடுத்து சீர் திருத்தலாம் என்றால் அப்பனுக்கே பாடம் கற்றுத்தந்த சுப்பன் கதை எப்படி?

சிறு குழந்தைகளைத் திருடி பிச்சைக்காரர்களாக்கும்  கூட்டம்,இந்த மாதிரியான கொலை,திருட்டு ,கற்பழிப்பு ,கடத்தல் போன்றவற்றிக்காக சிறார்களை  பயன்படுத்த மாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.இது நடக்கிறது.

பல சிறார்கள் குற்றம் புரிவது அண்மைக்காலத்தில் செய்திகளாக வருகின்றன,

ஆகையால் குற்றத்தன்மைக்கேற்ப சிறார்களுக்கும் கடும் தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்தை மாற்றவேண்டும்.


மனுநீதிச் சோழன் ஆண்ட நாடு. மாட்டின் மரணத்திற்கே அரசகுமாரனுக்கு மரண தண்டனை.

இன்று மகாபாவிக்கு மூன்றாண்டு தண்டனை இது சிறார்குற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும்.


இது மிகவும் வேதனைக்குரியது.

இன்றைய அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்ப்படும்பாடு;

ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஆசிரியையை கொலை  செய்துள்ளான்.



சிந்தியுங்கள்!சட்டம் குற்றங்களை    இளம் குற்றவாளிகளை  தடுக்கிறதா?

வளர்க்கிறதா?

மாற்றம் தேவை.

வெள்ளி, ஆகஸ்ட் 30, 2013

இந்நிலை மாற மக்கள் சிந்திக்கவேண்டும்.

மனிதர்கள்  எப்பொழுதும்   உடனடி பலனைத்தான்  எதிர்பார்க்கிறார்கள்.

உடனடி பலன்  உதவி கிடைத்தபின்  திருப்தி அடைவதில்லை.

உடனடியாக அடுத்த பலனுக்காக ஈடுபடுகிறார்கள்.

பலன் மேல் பலன்  ,ஆஸ்திக்குமேல் ஆஸ்தி ,பதவிக்கு மேல் பதவி.

மனநிறைவு என்பது ஏற்படுவதில்லை.

   பாரத நாடு  அனைத்துவளங்களும்  

பெற்ற நாடு. இங்கு படை எடுத்து வந்த அந்நிய நாட்டினர் அதிகம்.

நாட்டின் ஞானத்தை அறிந்து ஞானம் பெற வந்தவர்கள் அதிகம்.

கோரி முஹம்மது  கொள்ளை அடித்தது அதிகம்.

ஆங்கிலேயர்கள் ஆட்சி ,வாணிகம் 

பின்னர் சுதந்திரம்.

இப்பொழுதும் வெளிநாட்டினர் ஆதிக்கம் அதிகம்.

நம்மொழி மறந்து ஆங்கிலமே மேலோங்கிவரும் நிலை.

இந்த நிலையிலும் நம்நாட்டுவளம் குறையவில்லை.

நாடு கடன் பட்டாலும் நம்நாட்டுக் கறுப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளில்.

பல கோடிக்கணக்கான ரூபாய்கள் 
கிலோ கணக்கான தங்கம்,வெள்ளி ,வைரம்  ஆலயங்களில் ,ஆஷ்ராமங்களில்.

நாட்டில் மனிதவளம் , இளைஞர்கள் ,
திறன் அதிகம்.

நாட்டின் முன்னேற்றம் ,

இருப்பினும்  இன்றைய செய்திகள் 

பிரதமரை திருடன் என்கிறது.

பிரதமரோ நாட்டின்  தாழ்  நிலைக்கு 
உள்நாட்டு காரணங்களும் உள்ளன என்கிறார்.

அதைக் களையும் பொறுப்புள்ள பிரதமர்  கைப்பாவையாக மௌனியாக செயல் படுவது  நாட்டின் துரதிர்ஷ்டம்.

ஊழல் அமைச்சர்களை/அரசியல் வாதிகளை  பாதுகாப்பதும் 

துரதிர்ஷ்டம்.

நேர்மையான அதிகாரிகளின் மன நோகச் செய்வதும்  நாட்டு முன்னேற்றத்திற்குத் தடை.

இந்நிலை மாற  மக்கள்  சிந்திக்கவேண்டும்.






வியாழன், ஆகஸ்ட் 29, 2013

சவப்பெட்டி அறிவிப்பு :

ஒரு நாள் அலுவலகம் சென்ற ஊழியர்களுக்கு ஆச்சரியமும் ,துக்கமும் 

அளிக்கக் கூடிய அறிவிப்பு அறிவிப்புப் பலகையில்  காணப்பட்டது.

அறிவிப்பு :

இந்த அலுவலகத்தில் பணியாற்றிய  உங்கள்
 முன்னேற்றத்திற்குத் தடையாய் இருந்த ஊழியர் இறந்துவிட்டார்.
 அவரது  சடலம் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அனைவரும் வருத்தத்துடனும்  அதே சமயம்
 தன் முன்னேற்றத்திற்குத்  தடையாய்
 இருந்தவனையும் இறுதியாக பார்க்க ஆவலாய் இருந்தனர். ஆனால் 

அஞ்சலி செலுத்த ஒவ்வொருவராய் அனுமதிக்கப்பட்டனர்.
உள்ளே சென்று வெளியில் வரும்போது மிக வருத்தத்துடன் வந்தனர்.
ஒருவர் மட்டும் மிக மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
 அவர் எப்பொழுதும்  தன்னுடைய  அலுவலக நிர்வாகம் ,அதன் நடவடிக்கைகள் ,ஊதியம்  போன்றவற்றைக் குறை கூறிக்கொண்டே இருப்பார்.
 அவர் அலுவலகத்தில் பணிமூப்பு அடைந்தவர். 
அவருக்கு இறந்தவரால் நன்மை கிடைக்கும் ,
பதவி உயர்வு  கிடைக்கும் என்று மகிழ்ச்சிவேறு.
அவர் சவப்பட்டி அறைக்குச் சென்றதும் மேலும் கோபம் அதிகரித்தது.
சவப்பெட்டியில் ஒரு கண்ணடிதான் இருந்தது.
 அதில் அவருடைய முகம் தான் தெரிந்தது. 
அவர் கோபத்தால் சத்தம்  போட நினைத்த  நேரத்தில்
 அங்கு ஒரு அறிவுப்புப் பலகை :

இந்த உலகத்தில் உங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாய் இருப்பது 
நீங்கள் தான்.வளர்ச்சிக்கும் நீங்கள் தான் தடை.
உலகத்தில் பெரும் புரட்சி உங்களால் தான்  ஏற்படுத்த முடியும்.
நீங்கள் தனி மனிதர்.
உங்கள் வளர்ச்சி உங்கள் முதலாளி  மாறுவதாலோ ,உங்கள் நண்பர்கள் மாறுவதாலோ,அலுவலகம் மாறுவதாலோ ஏற்படாது.
நீங்கள் மாறவேண்டும் ,உங்களுக்கு உங்கள் மேல் இருக்கும் வரைமுறை நம்பிக்கை  எல்லை மாறவேண்டும்.
உங்கள்  வளர்ச்சிக்குத் தடை நீங்கள் தான் என்பதை உணரவேண்டும்.

எல்லாவற்றையும் விட சிறந்த உறவு உங்களுக்கு நீங்கள் தான்.
உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். புரிந்து கொள்ளுங்கள்.
துன்பங்களையும் ,கடின தன்மையையும் விட்டுவிடுங்கள்.
தங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வெற்றியாளர் ஆகுங்கள்.
நீங்கள் செய்ய விரும்பும் வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டு வெற்றி அடையுங்கள்.
உங்கள் குறிக்கோள் வெற்றி அடையும்.

உலகம்  ஒரு கண்ணாடி போன்றது;அது மனிதனுக்கு தன சக்தி உள்ள எண்ணங்களின்  பிரதி பிம்பங்களை வெளிப்படுத்துகிறது.
 தாங்கள் தங்கள் சக்தியால் ,தங்கள் எண்ணங்களால் உலகை மாற்றமுடியும்.
இந்த உலகில் வாழ்ந்தும் நீங்கள் ஒரு சடலமாகத்தான் நடமாடுகிறீர்கள்
என்பதைத்தான்  இந்த கண்ணாடி காட்டுகிறது.

இப்பொழுதே  உங்கள் பழைய எண்ணங்களை  புதைத்து விடுங்கள்.

புதிய  மனிதனாக மாறுங்கள்.
இதுதான் சவப்பெட்டியில் இருக்கும் கண்ணாடி காட்டுகிறது.
நீங்கள் உங்களை புதியதாக படித்துக்கொள்ளுங்கள்.





மூலம் :-
{அச்சீ கபர்.  ஹிந்தி வெப் சைட் }





















புதன், ஆகஸ்ட் 28, 2013

சற்றே சிந்தியுங்கள் . நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்.?


தேர்தல் வரும்போது மட்டும் ராமர் கோயில் கட்டும் பிரச்சனையை


முன் வைத்துப்  போராடுவது  ஏன் ?

ராமர் போராட்டம் இந்துக்களை ஒன்று படுத்துமா?

வாக்கு வங்கியாக மாறுமா?

சாதுக்கள் ,தலைவர்கள்   என கைது செய்யப்பட்டு

போராட்டம் தீவிரமடைந்துள்ளதா?

இந்த நேரத்தில் ஆசாராம்  ஆசாரம்  இழந்து

இந்து மதத்திற்கு களங்கம் ஏன் ?

2014 தேர்தலில் ராமர் கைகொடுப்பாரா?

நாடு முன்னேறிவருகிறது.

ஊழல் பெருகிவருகிறது.

ஊழல் அரசியல் வாதிகள் நீதிமன்ற தீர்ப்பை மாற்ற தீர்மானம்

நிறைவேற்றி உள்ளனர்.

இரவுபகல்  பாராமல்  மிக அழகாக  நேர்த்தியாக   வடிவமைக்கப்பட்ட
விநாயகப்பெருமான்  பூஜைகள் செய்து பிராணப்பிரதிஷ்டை செய்து
கடல் அலைகளில் தூக்கி எறியப்பட்டு
பக்தி காட்டும் இந்துக்கள் ஒன்றுபடுவார்களா ?
கணேசப் பெருமாளின் அருள் கிட்டுமா?
ஊழலைப்பெருக்கி ,கடமை மறந்து
கடவுள் பெயரால் மக்களை வேறுபடுத்தி
வெந்த வேக்காட்டில் குளிர் காயும்
நாற்காலி  பக்தர்கள்.
மக்களே சிந்திப்பீர்!ஆக்கப் பணியில் ஈடுபட்டு
கடமையைச் செய்தால் கடவுள் அருள் கிட்டும்.

அதை விடுத்து ஆண்டவன் பெயரால் அச்சுறுத்தி ,
ஆளுபவர்கள் ,ஆண்டவர்கள் ஆஸ்திபெருகுகிறது.
கற்பழிப்பு பெருகுகிறது.
கள்ளக்காதல் கொலைவெறி பெருகுகிறது.
விவாகரத்துக்கள் அதிகமாகின்றன .
கல்வி,ஆலயம்,நீதி, மருத்துவம்  நாட்டின்
இன்றியமையாத துறைகள்  ஏழைக்கு எட்டாக் கனியாகி
உயர உயரமான கிளையில் காய்க்கத் தொடங்கி வளர்ந்து வருகின்றன.

இதற்கு ஓர் வகை செய்வோம்.

கீதை  உயர்நூல் என்று அதை கற்று காசாக்காமல்
கடமையைச் செய்.

சற்றே சிந்தியுங்கள் . நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்.?
21ஆம்  நூற்றாண்டா? 15 ஆம் நூற்றாண்டிற்கா?


சனி, ஆகஸ்ட் 24, 2013

ஆயிரம் கோயிலில் அடித்துச் சொல்வேன்.

தூக்கம் வரவில்லை.
 எதையாவது எழுதலாமே என்றால்  எதை எழுதுவது.
அரசியல் ?
ஆன்மிகம்?திரைப்படம்?
இலக்கியம்.
அறிவியல்
வரலாறு
புதினம்
சிரிப்பு
கவிதை

புத்திவேண்டுமே   எழுத?
படிக்கவேண்டுமே ?
எழுத்தில் கவர்ச்சிவேண்டுமே ?
கரு புதுமை படிக்கவேண்டுமே?

அரசியல் சாக்கடை என்றால்

ஆன்மிகம்?உடனே செய்திபடித்த நினைவு.

ஆசாராம்  ஸ்வாமிகள்

ஆபாசமான எண்ணம்.

சமுதாயம் என்றால் விபத்து,கொலை கொள்ளை கற்பழிப்பு

மதம் மனிதர்களை வேறுபடுத்துகின்றன.தீவீரவாதி குற்றவாளி.

அதிலும் மதம் இந்து தீவீரவாதி;முஸ்லிம் தீவீரவாதி

அதிலும் முஸ்லிம் தீவீரவாதிகள் வழக்கு விரைவில் தீர்க்கவேண்டும்.

மத்திய அரசு ஆர்வம்.
உடனே மற்ற தீவீரவாதிகள்  ஏன்  அக்கறை இல்லை.
தேர்தலுக்காகவா?
மீண்டும் ராமர் கோவில் கட்டப்படும் .
அழகான இறைவன் யானைமுகத்தோனை
அழகு படவே செய்து ,கலைஞனின்  உழைப்பினையும் 
ஆண்டவனின் அழகையும் அலட்சியம் 
பளுதூக்கி  மூலம் எரியும் பரிதாபம் 
கழுத்தைப் பிடித்து கணேஷா ஒழிந்து  போ 
ராவண எரிப்புக்கும் .கஜமுகாசூரன்  கழுத்தருப்புக்கும்
கஜமுகனை கடலில் எறிவதற்கும் 
 என்ன வேறுபாடு என்பதை ஆன்மீகவாதிகள் 
விளக்கம் அளிப்பார்களா?
திலகருக்குமுன் இப்பழக்கம் உண்டா?
எந்த வேதம்  முழுமுதற்கடவுளை அழகுபடச் செய்து கடலில் வீசச் சொன்ன ஆதாரம் உள்ளது?
அர்த்தமற்ற மூட பக்தி  ஏன்?
இந்துக்கள் எழுச்சி என்று காட்ட 
இறைவனை அலைபாய வைத்து துண்டுகலாக்குவதா?
துங்கக் கரி முகத்து தூமணியை 
தூக்கிஎரியும்  துயரக் காட்சி  உணரா 

ஹிந்து ,
நானும் ஹிந்து தான் எனக்கும் பற்றுண்டு .

ஆனால் இச்செயல் எனக்கு ஹிந்துமதப்பற்று என்று கூற ஒப்பாது.
ஆயிரம் கோயிலில் அடித்துச் சொல்வேன்.






திங்கள், ஆகஸ்ட் 19, 2013

மரிக்கும் மனிதத் திமிர். -2

மரிக்கும் மனிதத் திமிர்.


மனிதன் என்றுமே  மற்றவர்கள் முன் தன்னை கெட்டவனாக அறிமுகப்படுத்த விரும்ப மாட்டான்.
அவன் செயலில் மற்றவர்களுக்கு நன்மை இருப்பதானால் 
மார் தட்டிக் கொள்வான்.நான் செய்த செயல் நன் மை அளிக்கிறது என்று.

ஆனால்  ,ஒரு ஆட்சியாளன் செய்யும் ஒவ்வொரு செயலும் கவனிக்கப்படுகின்றன.
அவன் தனிப்பட்ட வாழ்க்கையை ஒதுக்கமுடியாது.
அந்தக்காலத்து மன்னர்கள் அந்தப்புரத்தில் ஆசைநாயகிகள் கூட்டமே இருந்தது என்றெல்லாம் படிக்கிறோம். அதை விமர்சனம் செய்யக் கூட பயந்த ராஜ விசுவாசம் மக்களிடம் இருந்தது.
மக்களுடைய நம்பிக்கை பெற்ற மன்னனுக்காக ,தன்  நாட்டிற்காக உயிர் விட தயாராக இருந்தனர்.
அதே சமயம் கொடுங்கோல் மன்னன் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியாமல் இருந்தான்.

கரிகாலன் கட்டிவைத்த கல்லணையை இன்றும் புகழ்கிறோம்.மன்னர்கள் கட்டிய ஆலயங்கள்,குளங்கள்,நட்ட மரங்கள் என்று பெருமையாகக் கூறுகிறோம்.
அவ்வாறு அவர்களில் சிலர் செய்த  அநியாயங்களை பழித்துப் பேசுகிறோம்.

இன்று மக்களாட்சி நடைபெறுகிறது.இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் 
தனிப்பட்ட  வாழ்க்கை,பொதுவாழ்க்கை அனைத்தும் கவனிக்கப்படுகிறது.
அவர்கள் செய்த குற்றங்களிலிருந்து தப்ப தங்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தலாம்.
ஆனால் ,அவர்கள் மனமே போதும்.அவர்களுக்கு ஒரு தயக்கத்தையும் 
தோல்வி பயத்தையும் ஏற்படுத்தும். இவர்கள் தேர்தலில் தோற்றால் மதிப்பு கிட்டாது.
அவர்கள் வீட்டில் துன்பகாரியங்கள் நடந்தால் செய்த பாவங்களுக்கு ஆண்டவன் சரியான தண்டனை கொடுத்துள்ளான் என்றே கூறுவார்;நினைப்பார்.

எத்தனை நாள் தான் மக்கள் தங்கள் தலைவர்களின் கொள்கைகள் செயல்களை கண்மூடித்தனமாக நம்புவார்கள். அவர்கள் நம்பிக்கை இழந்தால் படுதோல்விதான்.
தோற்ற ஒருவர் 13 ஆண்டுகள் காத்திருந்து,வந்தவர் சரியில்லாததால் மீண்டும் தோல்வி.
தோற்றவர் மீண்டும் வெற்றி. காரணம் இருவருக்கு சரியான தலைவர்கள் நிலையாக இவர்களை எதிர்க்கவில்லை.
வைகோ அவர்களும் சரி,விஜயகாந்தும் சரி,காங்கிரஸ் காரர்களும் சரி,
ராமதாஸ் அவர்களும் சரி,இரு கம்யூனிஸ்ட்களும் சரி 
இவர்களை இகழ்வதும் பிறகு கூட்டணிவைப்பதும் சரியாகச் செய்கின்றனர்.

கூட்டணி என்பது எதிரிகளின் பலத்தைக் குறைத்து அவர்களை அடையாளம் இல்லாமல் ஆக்குவது.

அதை தமிழகத்தின் இரு பெரும் தூண்களும் சரியாகச் செய்கின்றன.
உறுதியில்லா மற்ற தலைவர்களை விட உறுதியுள்ள தலைவர்களாக நம்முன் இருப்பது 
திரு. மு.கருணாநிதியவர்களும் ,திரு ஜெயலலிதா அவர்களும் தான்.
ஆகையால் தமிழகம் இருவரையும் மாறி -மாறி அமரவைக்கும்.
மற்ற தலைவர்களும் மாறி-மாறி இருவரையும் தூற்றியும் போற்றியும் தங்களுக்கான பாதுகாப்பைப் பெற வேண்டியதுதான்.

ம்பாவம் மத்திய தரமக்களும் ஏழைகளும்.
குண்டும் குழியுமான சாலைகள்,குடிநீர் வசதியற்ற பகுதிகள் அப்படியே பழகிவிட்டனர்.

வாழ்க ஜனநாயகம்!வாழ்க தலைவர்கள்! 
போயஸ்கார்டன்,கோபாலபுரம் ,பெசன்ட் நகர்,ஆளுநர் மாளிகை முன் உள்ள சாலைகள் போல் இல்லை என்றாலும் சுமாரான சாலைகளை மடிப்பாக்க பிரம்மசக்தி ஆலாயம்,சதாசிவநகர் ,குபேர்நகர்  வாசிகள் எதிர்பார்க்கிறோம்.அதற்கு அந்த பிரம்மாவின் சக்தி தான் ஒரு எழுச்சியைத் தரவேண்டும்.

நரேந்திர மோதி.

  மோதி  அவர்களுக்கு  ஒரே ஒரு காராணமே போதும் பிரதமர் பதவிக்கு. குஜராத் மாநிலம் கடன் இல்லா மாநிலம்;
இதை எந்தமாநில அரசும் மறுக்கவில்லை.

எந்த மாநில அரசும் தங்கள் மாநிலம் கடன் இல்லா  மாநிலம் என்று சொல்லவில்லை.

ஊழலை எதிர்த்துக் குரல் கொடுக்கும் உத்தமர்  நரேந்திர மோதி. மற்றவர்கள் பயந்தே குரல் ஓட்டுக்காக கொடுக்கின்றனர்.

நாடென்பது நாட வளத்தன. அவ்வாறு ஒரு மாநிலம் வளம் பெற்றதென்றால், அவர் பாரதப் பிரதமர் ஆனால்  நாடே கடன் இன்றி இருக்கும்.

கடன் பட்டு கலங்கி நிற்க வேண்டாம்.

சிந்தியுங்கள். வாக்களியுங்கள்.