செவ்வாய், ஜூலை 23, 2013

புதுமை எல்லாம் பழமையுள் அடக்கம்.

அகவை கூடுவதால்  புதிய காலம்

அறியாதவர்  என்றே  தோன்றும்.

பழையன கழிதல்,புதியன புகுதல்

உலக நீதி  என்பர். அதில் தவறு.

பழையன கழியவில்லை.

புதுமைக்கு  ஆணிவேராகிறது.

இலைகள் உதிர்கின்றன.

புது இலைகள் தளிர்கின்றன.

புதிதா இது?
இதற்கு பழமையின் ஆணிவேர்

பலமாக இருக்கிறது.

புதுமை என்பது புதியவர்களுக்கு.

பழமை இன்றி புதுமை எங்கே?

ஜாதிகள் ஏற்றத்தாழ்வு,நிறவெறி

புதுமை யா?இல்லை.

அதற்கு ஒழிக்கும் எண்ணங்கள் இன்றா?
ஒலிக்கின்றன.

ஔவையார் காலத்தில் இருந்தே அல்லவா?

கபீர்  ஜாதி யைப் பற்றி கூறி உள்ளார்.

ராமாயண ,மகாபாரதத்தில்  வருகின்றன.

அதிலும்  ஜாதி ஒற்றுமை பேசப்படுகிறது.

இன்றைய தொலைக்காட்சி,கணினி குறிப்புகள் ,

ஜோதிடம் ,வானவியல் அனைத்தும்

பழமையில் இருந்தவை என்றே

பலர் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி உள்ளனர்.

அஹிம்சை,சத்தியம்,அன்பு,இரக்கம்,

ஹிம்சை,அசத்தியம் ,வெறுப்பு ,கொடுமை

புதிய எண்ணங்களா?பழமையே.

இன்றைய திரைப்படங்களின் கருக்கள்

பழமையில் மெருகூட்டப்பட்ட புதுமை.

கர்ணனை ஆற்றில் விட்ட கதை,
கபீரை குளக்கரையில் விட்ட கதை,
இன்று  குப்பைத்தொட்டி,ரயில்பெட்டி .

தொட்டில் குழந்தை என்ற பெயரில்.

சீரடி சாய் பாபா அண்மையில் வாழ்ந்தவர்.

அவர் தெய்வப்பிறவி;வாழும் தெய்வீக புருஷர்;

மத ஒற்றுமைக்கு ஆன்மிகம் வளர்த்தவர்.

அவர் பெற்றோர்,எப்படி ,எங்கு என்பதே  புதிர்.

காதலிக்காக  போரிடுவது,அன்னமிடு தூது

இன்று கைபேசி ,தொலைபேசி,கணினி.

அகவை கூடுவதால் எனக்கு எதுவும்

புதிதாகத் தோன்றவில்லை.

ஆனால்  ஒன்றே  புதிது  படித்தவர்கள்

சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி

குற்றவாளிகளை ,ஊழலை வளர்ப்பது.

அதுவும் மகாபாரதத்திலும் ,ராமாயணத்திலும்

வரும் காட்சிகளே.

அகவை கூடினாலும் புதுமை தெரியவில்லை;
முதுமையால் புரியவில்லை.

புதுமை எல்லாம் பழமையுள்  அடக்கம்.


திங்கள், ஜூலை 22, 2013

உண்மை,நேர்மை,என்ற ஒன்றே இருந்தால் , வையகம் எப்படி இயங்கும்

2014  பொதுத் தேர்தல் ஒரு தர்ம யுத்தமாம்.

ஆட்சி பீடம் என்றாலே தர்ம யுத்தம் தான்.

என்றுதான் இந்த யுத்தம் பொருளற்று நடந்தது.

நான் தொண்டன். நாட்டுக்குப் பாடுபடுவேன்.

நேர்மையானவன் ;உண்மையானவன். 

கையில் காசு இல்லை;கடவுள் பக்தி உண்டு;

உண்மைத்தொண்டன்  நான்  வாக்களிக்கின்றேன்.

ஊழலற்ற ஆட்சி ;கையூட்டு இல்லா ஆட்சி,

வாக்களிக்கிறேன்; வாக்களியுங்கள்;

வாக்கு  கிடைக்குமா?இல்லாளை இல்லாளும் வேண்டாள்.

வாக்கு கிடைக்காது. ஏழை சொல் அம்பலம் ஏறாது;


நானே செய்த  தவறு,நண்பர்களுக்காக  செய்த  தவறு,

உற்றார் உறவினருக்காக செய்த தவறு;

தெரிந்த அறிந்த புரிந்த தவறு;தெரியாத அறியாத  தவறு;

செய்த தவறை மற்றவர்கள் எடுத்து இயம்பினாலும் 

ஏற்க இயலா   தவறு; கண் செய்த தவறு,

எண்ணங்களால்  தவறு; சிந்தனைத்தவறு,

பேராசைப்படும் தவறு,கோபத்தால் வந்த தவறு,

ஆணவத்தால் செய்த தவறு,பெரியோர்களை நிந்தித்த தவறு,

ஆசிரியர் சொல் கேட்காத் தவறு,கோயிலுக்கு சென்று 

கோபுர தரிசனம் கண்டு இதுதான் கோடிப்புண்ணியமா

என்று பரிகசித்த தவறு,பரிகசித்தோருடன் சேர்ந்து 

ரசித்த தவறு,இளமைத்தவறு, உளவியல் தவறு,

தவறுகள் தான் எத்தனை ?எத்தனை?

தவறு செய்யா மனிதர்கள் தரணியில் உண்டா ?என்ன?

இறைவனவதாரம் எடுத்த ராமனிடமும் தவறு;

கிருஷ்ணனிடமும் தவறு;சிவனிடமும் தவறு;

தவறான மனிதர்களைப்படைத்த பிரம்மனிடமும் தவறு;

அனைவருக்கும் அறிவைத் தராத கலைமகள்.

அனைவருக்கும் செல்வம் தரா அலைமகள்,

அனைவருக்கும் வீரம் தரா மலைமகள் 

என அவரவர்கள் தவறை மறைக்க தவறு செய்யும் தவறு 

என  பூ உலகில் தவறுகளே காணுகின்றோம்.

உண்மை,நேர்மை,என்ற ஒன்றே இருந்தால் ,

வையகம் எப்படி இயங்கும் ?இப்படி எண்ணும் தவறு.


ஞாயிறு, ஜூலை 21, 2013

மக்களிடையே வருமா விழிப்புணர்ச்சி!!!

பெற்ற அறிவை பங்கிடுதல்,
பெற்ற அனுபவத்தை பங்கிடுதல்,
பெற்ற ஆனந்தத்தைபங்கிடுதல்
பெற்ற மகிழ்ச்சியைப் பங்கிடுதல்
பெற்ற ஆஸ்தியைப் பங்கிடுதல் -என
பெற்றவற்றை மற்றவர்களுக்கு
பங்கிடுவதில் மட்டற்ற மகிச்சியே  காண்.
அறிவைப்பங்கிடுவதால் அறிவு பெருகும்.
சிந்தனைகள் சிறகடிக்கும்.-நற்
சிந்தனை கருத்துரைகள் விவாதங்கள்,
நானிலத்தை சிறக்கவைக்கும்.-இன்றைய
அறிவு வளர்ச்சிகள்,அன்பைப் பெருக்குகிறதா?
பண்பைப் பெருக்குகிறதா  என்ற சர்ச்சை.
அனைத்திற்கும் முதலீடு.
குழந்தை பிறக்க இலக்ஷங்கள் .
வளர்க்க  இலக்ஷங்கள்.
மூன்று வயதிலி ருந்தே
ஆண்டுக்கு இலக்ஷங்கள்.
மேற்படிப்புக்கு பல இலக்ஷங்கள்.
திருமணத்திற்கு இலக்ஷங்கள்.
இப்படி ஒவ்வொரு படியிலும் இலக்ஷங்கள் .எனவே
இலட்சியங்கள்  கோடி ரூபாய் சேர்ப்பதிலே.
அறிவு வளர்க்கிறது.அறிவியல் வளர்கிறது. ஆஷ்திகள் வளர்கிறது.
அன்பும் பண்பும் பரோபகாரமும்  இரக்கமும் ஒழுக்கமும்
ஊழல் கை ஊட்டு இல்ல தன்னலமற்ற சேவை மனப்பான்மை
வளருகிறதா ? அதுதான் குறைந்து கொண்டே வருகிறது.
விளைவு?செய்த்திதாள்களில்  அன்றாடம்
கொலை,கொள்ளை,தற்கொலை,குடி ,கூத்து கும்மாளம்.
பட்டங்கள் பெற்று என்னபலன்.?!!
சட்டங்கள் பயின்று என்ன பலன்!!!?
குறுக்குவழியில் பணம் சேர்ப்பதே குறிக்கோள் என்றால்
மனிதப் பிறவி எடுத்ததால் என்ன பயன்?
ஆட்சி பீடம் ஆஸ்தி சேர்க்க என்றால்
ஆவி பிரிந்த பின் !!!
வன் முறை அரசியல்;ஜாதி அரசியல்;கள்ளப் பண அரசியல்.
இதை ஒழிக்க எழுமா ஒரு புரட்சி.
கருத்துக் கணிப்புகள் ஊழலுக்கே வெற்றி என பறை சாற்றுகின்றன.
மக்களிடையே வருமா விழிப்புணர்ச்சி!!!



 

வியாழன், ஜூலை 18, 2013

இதைப் புரியா மக்கள் மாக்களே ஆவரே. '

இவ்வுலகில்  இறை சக்தி இருக்கிறதே

இதைப் புரியா  மக்கள் மாக்களே ஆவரே. '

இன்னல்   களைவதும் ,இன்னல்  தருவதும்

இறைசக்தியே; இதை அறிந்தும் ,

நிலை இல்லா செல்வத்திற்காக ,

இறைவன் அளிக்கும் பதவிகளை ,

இப்புவி இன்பத்திற்கு  தன் இச்சைப்படி

இத்தரணியில்  துஷ்ப்ரயோகம் செய்பவர்கள்

இலக்குமிதேவியின்  இன்னருள் பெற்றாலும்

இன்னலே  மிஞ்சும் காண்பீர்.

கோடிக்கணக்கில்  கொள்ளை அடித்த பணம்,

ஆட்சி ,பதவி,இறைநிந்தை,இறைவழிபாடு,

மாட மாளிகை ,ஆனால் வையகம் அம்மா என்றாலும்

தன்  பிள்ளை அம்மா என்று சொல்ல இயலா நிலை.

பிள்ளைகள் பல இருந்தாலும் தூற்றுவோர் தூற்றட்டும்  என

தன்  பிள்ளை பதவிக்காக  முறிந்த உறவை ஒட்டி பலியேற்ற நிலை.

இல்லை இல்லை இல்லை என்ற சிலை முச்சந்தியில் வைத்து

சாந்தி சிரிக்க வன்னத்துண்டும் ,பரிகாரமும் செய்யும் நிலை.

ஐயகோ ! ஆவி பிரியும் வேளை ! தன்  பாவம் விடாதன்றோ !

இப்புவியில் வாழ கோடிகள்  சேர்த்தாலும் .

இறைவன் தரும் தண்டனை மரணம் அன்றோ.

இதில் தப்ப கோடியில் சேர்த்த கருப்புப்  பணம் ,

வெறும் கோடித்துணியில்  முடியுமன்றோ.

தவறு செய்யா மனிதன்  தரணியில் இல்லை -என்றாலும்

தவறை உணர்ந்து நல்லது செய்தால் ,

இறைவனின்  கருணை கிட்டுமன்றோ.








சனி, ஜூன் 29, 2013

காந்தி கணக்குபோல் இனி தமிழ் வழக்கு ஆகும்.

கண்ணதாசன் பார்வையில் இன்றைய அரசியல்..?

'கறுப்புப் பணம்’ படத்தில் கண்ணதாசன் எழுதினார்...

கையிலே பணமிருந்தால்

கழுதைகூட அரசனடி!

கைதட்ட ஆளிருந்தால்

காக்கைகூட அழகனடி!

பொய்யிலே நீந்தி வந்தால்

புளுகனெல்லாம் தலைவனடி!





தேர்தல் வெற்றி-தோல்வி 

அரசர்கள்  காலத்தில் போரிட்டனர்.

பல்லாயிரம்  வீரர்கள் மடிந்து 

பலரை அனாதைகள் ஆக்கி ,

விதவைகள்  ஆக்கி ,

அரண்மனையில்  அந்தப்புரத்தில் 

ஆனந்தமாக வாழ்ந்து ,

அரசனை இறைவனின் பிரதி நிதி 

அவர்கள் ஆண்டவனின் மறுபிறவி 

என்றே புகழ்ந்து 

கல்வி என்பதை அனைவருக்கும் வழங்காமல்

ஆண்ட காலங்கள்  .


மக்களை  மடையர் களாக்கி,

புலவர்களை வஞ்சப்புகழ்ச்சி அணியில் பாட வைத்து,

பொற்காசு  அளித்து 

படித்தோரை வறுமையில் வாழ வைத்த காலம் .

அதன் பயனாய் வந்த முகலாயர்காலம்.

ஆங்கிலேயர் காலம்.

யார் வந்தாலும் அவர்கள் மொழி கற்று 

ராவ் பஹாதூர்,சர்,பட்டம் பெற்று 

வாழ்ந்ததோர் கூட்டம்.

அதன் பயன் அவர்களை விரட்டினாலும் 

அவர்கள் மொழியின்றி வாழ முடியா பாரதம்.

அந்த ஆங்கில ஆட்சியில் 

ஏற்பட்ட பெரும் நன்மை 

தேச ஒற்றுமை.

தலித்துகள் ,தாழ்த்தப்பட்டோர்

கல்வி பயில ஓர் வாய்ப்பு.

சீர் திருத்தவாதிகள் 

விதவைகள் மறுமணம்,

ஹரிஜன முன்னேற்றம் 

அனைவருக்கும் சமவாய்ப்பு.

பெண்கள் முன்னேற்றம் .

ஆனால் 

விடுதலைக்குப் பிறகு 

தியாகிகள்  ஆட்சிப்பொறுப்பை ஏற்கவில்லை
.
ஆட்சியில் அமர்ந்தவர்கள் 

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்திற்கும் 

பெரும்பாலான கிராம மக்கள் 

கிராமங்களிலேயே வசிப்பதற்கும் 

முக்கியத்துவம் அளிக்கவில்லை.

வெளிநாட்டினரோடு கலப்பு காதல் மணம் .

அலெக்ஸாண்டர்  காலத்தே தொடங்கினாலும்,

வெளிநாட்டு முதலீடு ,தொழில்வளம் என்று 

நாட்டுத் தொழில்களை 

அழித்து   நகரமயமாக்கி 

பெட்டிகள் பெற்று கோடிகள் சேர்த்து,

வெளிநட்டு வங்கிகளிலும் ,வீடுகளிலும் 

பதுக்கிவைக்கும் அரசியல்வாதிகள்.

அவர்களை அண்டிப் பிழைக்கும்  அதிகாரிகள்.

நேர்மை அதிகாரிகள் நடவடிக்கை 

எடுத்தாலோ  மாறுதல்.

இன்றைய பாரத ஜனநாயகம் 

ஜனநாயகம் என்ற பெயரால் 

ஒரு சர்வாதிகாரம்.

ஆளும் கட்சியினர்

 தவறைக்கேட்டால் வழக்கு .

விமர்சித்தால் வழக்கு.

மாற்றுக்கட்சி  சட்டமன்ற  உறுப்பினர்களை

ஆளும் கட்சிக்கு  ஆசை காட்டி

 இழுக்கும்   இழிவு  வழக்கு.

ஊழலுக்கு  கை கொடுக்கும் கைகள்.

நீதி கேட்டால் வாழ முடியா நிலை.

 மக்கள்  பயந்து பயந்து வாழும் நிலை.

லஞ்சம் ஊழலுக்கென்றே சில துறைகள்.

இப்பொழுது கல்வி அனைவருக்கும் என்றாலும் 

தனியாருக்கு மறைமுக ஆதரவு;

அதற்கு அரசியல்வாதிகள் துவங்கும் கல்வி நிலையங்கள்.

தாய் மொழி வழிக் கல்விகூடங்களில் 

இன்று ஆங்கில வழி  வகுப்புகள்.

தாய் மொழி வழியில்

 படிப்போருக்கு தாழ்வு மனப்பான்மை.

 அந்த வகுப்புகளை ஏளனமாக ,

முட்டாள் மடையர்களாக பார்க்கும்  சமுதாயம்.

இனி ஒரு வழியும் இல்லை

 தாய்  மொழி படிப்போருக்கு.

வேலையில்லை;சோறில்லை;

தேர்தல் நேரத்தில் மட்டும் 

தமிழுக்கு உயிர் கொடுப்போம்.

தமிழ்  என் தாய்.

தமிழ் என் காதலி.

எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்  என்று 

ஆட்சிக்கட்டில் அமர்ந்தோர்  ஆட்சியில் 

எங்கே தமிழ் என்றும் தேடும் நிலை.

அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி,

அது ஊழலுக்கும், 

 பரிந்துரைக்கும் ,

கைஊட்டுக்கும் 

ஏற்படுத்தும் தனிவழி.

வாழ்க தேர்தல்!வாழ்க ஜனநாயகம்!

வாழ்க தமிழ்;

வளர்க ஆங்கிலம்.

காந்தி கணக்குபோல்,

 இனி தமிழ் வழக்கு ஆகும்.


திங்கள், ஜூன் 24, 2013

ஆண்டவன் அருள் எப்படி மாறுமோ.?

ஆலயங்களின் இன்றைய ஆடம்பரங்கள் 

பரமானந்த ப்ரஹ்மானந்த  நிலையில்  இல்லை.

வணிக  ஸ்தலங்களாக  மா.றும் 

தீர்த்த ஸ்தலங்கள்.

தீர்த்தக் குளங்கள் குப்பை  மேடாகும் காட்சி.

பவித்திரமான  இடங்கள்  இன்று 

உண்மையான பக்தர்களின் உள்ளத்தில் 

ஊமைக்காயங்கள்.

ஆற்றங்கரைகளின் அவலம்  இன்று 

பக்தி ஸ்தலங்கள் சுற்றுலா ஸ்தலங்களாகி 

மல ஜலம்  கழிக்க இடமின்றி 
அது இயற்கை உபாதை என்பதை  அறிந்தும் 
கழிப்பிடம் கட்ட எதிர்க்கும் ஆன்மீக வேடதாரிகள்.
நடிகர் விவேக் ஒரு படத்தில் 
ஒருகிலோ அரிசி ஒரு ரூபாய்,
ஆனால் கழிப்பிடக்கட்டணம்  ஐந்து ரூபாய்.
நதிகள் ,ஏரிகள் ஆக்கிரமிப்புக் கட்டடங்கள்.
அதை அனுமதித்து மின்சாரம் ,வங்கிக்கடன் 
அனைத்தும் வழங்கும் அதிகாரிகள்.

கேதா ர்நாத்தின்   இந்த சுயநலக் கேடாளர்களால்

நாடு முழுதும் வெள்ளமாகவோ ,வரட்சியாகவோ மாறும் நிலை.

நான் பல பதிவுகள் பழனி  ஆலயக்கேடுகள்  பற்றி  பதிந்துள்ளேன்.
கடம்பப்பூ மனமில்லை.-அங்கே  ஒரு தெய்வீகம் 
தேய்ந்த நிலை.
பக்தர்கள் நடக்க வழிஇல்லை.
நடைபாதை முழுதும் ஆக்கிரமிப்புகள்.
பேருந்து நிலையம் சிறுநீர் நாற்றம்.
புனித வையாபுரிக் கண்மாய்
 கழிவுநீர் கண்மாயாக 
மாறிய காட்சி.
ஆன்மீகம் என்பது வணிகமாக மாறினால்,
ஆண்டவன்  அருள் எப்படி மாறுமோ.







வியாழன், ஜூன் 20, 2013

இளைஞர்களே!!

இறைவன் படைப்பில் பல அற்புதங்கள்.
இயற்கையின் விந்தைகள் 

இதயத்திற்கு ஒரு இன்பம்.

மனதிற்கு ஒரு அமைதி,

இன்றைய உலகம் எப்படி உள்ளது?

மற்றவர்களுக்காகவே  வாழும் சிலர்.
நாட்டிற்காக வாழும் சிலர்.
தங்கள் குடும்பம் சுற்றத்திற்காக  வாழும் சிலர்.
தங்கள் குடும்பத்திற்கு மட்டும் வாழும் சிலர்.

நேர்மைக்காக  சிலர்,
வாய்மைக்காக சிலர்.
நீதிக்காக சிலர்,
தன் மன நிம்மதிக்காக சிலர்,
தனக்காக சிலர்,
தன் சுய நலத்திற்காக  சிலர்.
தன் பதவிக்காக ,
தன் வாரிசின் பதவிக்காக .
மற்றவர்களின் உழைப்பில் வாழும்  பலர் .

இந்த மற்றவர்களின் உழைப்பில் வாழ்பவர்கள் 


தான் உண்டு ,தன்குடும்பம் உண்டு  என 
என்று இறைவன் அளித்தது போதும் என்று 
கிடைத்ததைக்கொண்டு வாழ்பவர்கள் 
எவ்வித பேராசையும் ,உலக இன்பங்களை 
அனுபவிக்கவேண்டும் என்று ஆசைப்படாதவர்கள்  பலர்.

இந்த பலரின் வாழ்க்கை ,ஜனனம், மரணம்  எல்லாம் 

எப்படி அமைகிறது?

இதைப் புரிந்துகொண்டால்  இறைவனாகலாம் .

இந்த கடும் மந்தணமான  பணி

மனித சக்திக்கு அப்பாற்பட்ட  ஒரு  சக்தி.

அதைத்தான்  இறைவன் என்கிறோம்.

அந்த இறைவன்  ஒருவரே.

ஆனால்  பல மதங்கள்.

மனிதர்களை நெறிப்படுத்த.
மனிதர்கள் மனதில் மனித நேயம் வளர்க்க.
மக்களிடம் உள்ள வேற்றுமைகளை ஒழித்து 

ஒற்றுமை வளர்த்து 
வையகம் வாழ   என்று உணர்த்த.

சஹிப்புத்தன்மை  வளர.

இந்த உயர் தத்துவம் உலகிற்கு உணர்த்தும் ஒரே நாடு 

பரந்த உள்ளம் கொண்ட பாரத நாடு.

விருந்தினர்களை தெய்வமாக  போற்றும் நாடு .


राम एक है,रहीम एक है,
मज़हब नहीं सिखाता आपस में वैर रखना 
ईश्वर अल्ला तेरे नाम सबको संमति दे भगवान!
हिन्दू मुस्लिम सीख ईसाई ,आपस में है भाई -भाई.

மஹா கவி பாரதி, கவிஞர் கண்ணதாசன் 

போன்றோர் அனைத்து மதங்களையும்  புகழ்ந்து பாடினர்.

இதனால் தான் நாடு ஊழல்கள் வளர்ந்தாலும் 

நாடும் வளர்ந்து  வருகிறது.

இளைஞர்கள்  அறிவுத்திறனைக்கண்டு  

அகிலமும் புகழ்கிறது.

பாரதம் வாழ்க! வையகம் வாழ்க!
வையகம் ஒரு குடும்பம்.

ஆகையால் தான் விவேகானந்தர் ,

இந்திய இளைஞர்களுக்கு 

ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இளைஞர்களே!!

இந்தியாவின் எதிர்காலம்  உங்கள் கையில்.

ஜய்   ஹிந்த்!

















புதன், ஜூன் 19, 2013

என்று தணியும் நேர்மையின் தாகம் .

இந்திய அரசியல்.

தடி எடுத்தவன் தண்டல் காரன்.

இன்று பணம் என்ற தடி கொண்டவன் 

அரசியல்வாதி ;மக்கள் பிரதிநிதி;

மக்கள் வரிப்பணம் அதையே இலவசமாக 

வழங்கி வாக்குப் பெரும் அரசியல் தந்திரம்;

அம்மா உணவகம்  நல்ல திட்டம்;

ஆலயங்களில் அன்னதானம் உயரிய திட்டம்.

கல்விக்கொடங்களில் இலவசங்ககள்;

அனைத்தும் உயரிய திட்டங்கள்;

பாராட்டப்பட வேண்டியவைகள்;
அரிசிகார்டுக்கு  இலவசம் ;
சர்க்கரை  கார்டுக்கு கிடையாது.

ஒய்வு பெற்ற முதியோர்கள்,
வருமானம் இழந்தோர் 
எத்தனையோ பேர் 
அன்றைய சூழலில் சர்க்கரை அட்டையாக மாற்றியோர்,

அன்றைய அரிசி  அட்டை,
இன்று  பணவசதி கொண்டோரிடம்,

இலவசங்கள் ஏழைகளை சென்றடைவதில் எத்தனையோ 

ஊழல்கள்; சிக்கல்கள்;

ஒரே வீட்டிற்கு இரண்டு  மூன்று இலவசங்கள்;

இதற்கு ஒரு விசாரணை குழு போட்டால் 

இலவச விநியோக முறைகேடுகள்;

விசாரணைக் குழுக்கள் அறிக்கை  வெளிவராது;
சொத்துக்குவிப்பு வழக்குகள் போல்;

பல விசாரணைக்குழுக்கள் ,பல அறிக்கைகள் 

மீண்டும் கருணை அல்லது ஜெயா;
வேறு மாற்று வழியில்லை 
தமிழக மக்களுக்கு;

என்று ஏற்படுமோ விழிப்புணர்வு;
என் காலம் முடியும் நேரம்;
விழி த்து க்   கொள்ளுமா 

இளைய சமுதாயம்;

பணத்திற்கும் ,இலவசத்திற்கும் 

விலைபோகுமா ,
விலைமதிப்பில்லா வாக்குரிமை.

பாரதி இருந்தால் பாடி இருப்பான்.

என்று தணியும் இந்த இலவச மோகம்,

என்று தணியும் நேர்மையின் தாகம் .



செவ்வாய், ஜூன் 18, 2013


அன்னையர் தினம், சுவைக்கு ,அன்பிற்கென்றால் ,

அப்பாக்கள் தினம் ,அறிவுக்கு,ஆஸ்திக்கு.

அப்பா மட்டும் பொருளாதாரம் என்ற
 நிலை மாறிவரும் சமுதாயம்.
அன்னை யும்  பிதாவும் சேர்ந்து
சம்பாதிப்பதால் பொருளாதார தன்னிறைவு.

ஆனால், மன நிறைவு?

இது என்னைப்போன்ற ஒய்வு பெற்றோரின் புலம்பல்.

ஆனால் ,அனுபவத்தில் பார்த்தால்

எவ்வளவு முன்னேற்றம்.

குழந்தைகளின் திறமைகள்  வெளிப்பட

பொருளாதாரம் தன்னிறைவு ?

அப்பாவின் வருமானம் ,
போதும் என்றால் போதும்.

ஆனால் பெற்ற குழந்தைகளைப் பள்ளிக்கு மட்டும்

அனுப்பினால் போதுமா?

ஓவியம்,இசை,விளையாட்டு,இசைக்கருவிகள்,கராட்டே ,

இன்னும் எத்தனையோ புதைந்து கிடைக்கும் திறமைகளை

வெளிப்படுத்த  தனிப்பயிற்சி. கட்டணம்.

இருவர் சம்பாதிப்பதால்  குழந்தைகள் தங்கள்

திறமையை வளர்த்துக்கொள்ள முடிகிறது.

அதே சமயம் தனிப்பயிற்சி கட்டணம் கட்டி

நேரத்திற்கு குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்ப முடியாமல்

குழந்தைகளின் பயிற்சி அரைகுறை யாவதும் உண்டு.

குழந்தைகளின் ஆர்வம் குறைவதும் உண்டு.

பெற்றோர்கள் சற்றும் அயராமல்,ஓய்வெடுக்காமல் இருக்கவேண்டும்.

இது எவ்வளவு  தூரம் சாத்தியமாகிறது என்றால்......

அது கேள்விக்குறி தான்.








இச்சா சக்தி ,ஞான சக்தி இரண்டும் இருந்தால் தான் க்ரியா சக்தி.

ஆன்மிகம் என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை உணரச்செய்வது.

அது எல்லோரின் வாழ்க்கையிலும் எப்படியோ ஏற்பட்டுவிடுகிறது.


சிலர் தன் ஆணவத்தால் தன்  ஆற்றல் வெளிப்படும் வரை உணர்வதில்லை.
தனிமனிதன் அனைத்தும் தன் முயற்சியால் முழு வெற்றிபெறும் என்றே நினைக்கிறான்.

முயற்சி-முயற்சி-முயற்சி-
- என்னதான் முயற்சி எடுத்தாலும் முதல் பரிசு  ஒருவருக்கே.

அனைவரும் முதல்வராக முடியாது.

அனைவரும் குடியரசுத் தலைவராக முடியாது.

முயற்சி எடுப்போர் அனைவரும் சிறந்த பாடகராக முடியாது.

பணம் படைத்தோர் அனைவரும் தான் நினைத்ததை  சாதிக்க முடியாது.

சாதித்தவர்கள் அனைவரும்  பணம் படைத்தவர்களாக இருக்க முடியாது.


அறிவும் திறமையும் இருந்தாலும்  அனைவரும் புகழும் /ஆதரிக்கும் மகானாக
முடியாது.

முதுகலை/ஆராய்ச்சி படிப்பில் பட்டம் பெற்றாலும்  வரகவிகள் போல்
கதையோ /கட்டுரையோ/கவிதையோ எழுத முடியாது.

பட்டம்,பதவி,புகழ்  முயற்சியால் கிடைத்தாலும் அதற்கு இறைவனின் கருணை வேண்டும்.

படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு,பாடம் படிக்காத மேதைகளும்

பாரினில் உண்டு. என்ற திரைப்பட பாடல்.

ஆலயங்கள் புதிது புதிதாக தோன்றினாலும் ,சில ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம்  அலை மோதுகிறது.

சில ஆலயங்களுக்குச் சென்றால்,மீண்டும் மீண்டும் செல்லும் உணர்வு மேலோங்குகிறது.
சில ஆலயங்களுக்கு செல்லவே மனம் ஈடுபடுவதில்லை.
அப்பொழுது பக்தர்களுக்குள் வேறுபாடு.
விநாயக பக்தர்கள்,காளிதாஸ்,காயத்ரி ,
சிவதாஸ்,ஐயப்ப பக்தர்கள்,முருக பக்தர்கள்,ராமதாஸ்,கண்ணதாஸ் ,சக்தி உபாசகர்கள்,ஹனுமான்  உபாசகர்கள்,

இவைகளைத்தவிர  தேவதூதர்கள்,ஸ்வாமிஜீக்கள், ஆஷ்ரமங்கள் ,மடாலயங்கள்.பாபாக்கள்.அகோரர்கள்,சித்தர்கள்.

   இத்தனை அலௌகீக  சிந்தனை தூண்டுவோர்கள் ,சுய விழிப்புணர்கள்

ஏற்பட்டாலும்  லௌகீக மாயை/சைத்தான்/சாத்தான்  மனிதர்களை
மிகவும் கவர்ந்து ஆட்டிவைக்கிறது.

இதை உணரும் வரை மனிதர்களுக்கு நிம்மதியில்லை.

ஊழல் ,லஞ்சம்,சுயநலம் ,மோகம் முதலியவை  ஒழிய வழியுமில்லை.

மன அமைதிக்கு,மகிழ்ச்சிக்கு,நிம்மதிக்கு ஒரே வழி  மனத்தூய்மை யான

பவித்திரமான  பக்தி.  ஒருநாள் வாழ்நாளில் உணர்வ தே ஆன்மிகம்.

ஆகையால் தான் ஆன்மிகம் பலரின் புகலிடமாக விளங்குகிறது.

பண ஆசை பல   ஆன்மீக  ஆண்டவன் அருள் பெற்றோரையும் பொய்யர்களாக்கி  அவப்பெயர் ஏற்படுத்துகிறது.

அதனால் தான்  மக்கள் சண்டை-சச்சரவு,துன்பம் போன்றவைகளை அனுபவிக்கின்றனர்.

ஆசையே துன்பத்திக்குக் காரணம் என்பதைவிட பேராசையே காரமாகிறது.

இச்சா சக்தி ,ஞான சக்தி இரண்டும் இருந்தால் தான் க்ரியா சக்தி.

ஆனால் இந்த இச்சை  பேராசையாக,புலனடக்கம் இன்றி அதிகரித்தல் துன்பமே மிஞ்சும்.