ஆலயங்களின் இன்றைய ஆடம்பரங்கள்
பரமானந்த ப்ரஹ்மானந்த நிலையில் இல்லை.
வணிக ஸ்தலங்களாக மா.றும்
தீர்த்த ஸ்தலங்கள்.
தீர்த்தக் குளங்கள் குப்பை மேடாகும் காட்சி.
பவித்திரமான இடங்கள் இன்று
உண்மையான பக்தர்களின் உள்ளத்தில்
ஊமைக்காயங்கள்.
ஆற்றங்கரைகளின் அவலம் இன்று
பக்தி ஸ்தலங்கள் சுற்றுலா ஸ்தலங்களாகி
மல ஜலம் கழிக்க இடமின்றி
அது இயற்கை உபாதை என்பதை அறிந்தும்
கழிப்பிடம் கட்ட எதிர்க்கும் ஆன்மீக வேடதாரிகள்.
நடிகர் விவேக் ஒரு படத்தில்
ஒருகிலோ அரிசி ஒரு ரூபாய்,
ஆனால் கழிப்பிடக்கட்டணம் ஐந்து ரூபாய்.
நதிகள் ,ஏரிகள் ஆக்கிரமிப்புக் கட்டடங்கள்.
அதை அனுமதித்து மின்சாரம் ,வங்கிக்கடன்
அனைத்தும் வழங்கும் அதிகாரிகள்.
கேதா ர்நாத்தின் இந்த சுயநலக் கேடாளர்களால்
நாடு முழுதும் வெள்ளமாகவோ ,வரட்சியாகவோ மாறும் நிலை.
நான் பல பதிவுகள் பழனி ஆலயக்கேடுகள் பற்றி பதிந்துள்ளேன்.
கடம்பப்பூ மனமில்லை.-அங்கே ஒரு தெய்வீகம்
தேய்ந்த நிலை.
பக்தர்கள் நடக்க வழிஇல்லை.
நடைபாதை முழுதும் ஆக்கிரமிப்புகள்.
பேருந்து நிலையம் சிறுநீர் நாற்றம்.
புனித வையாபுரிக் கண்மாய்
கழிவுநீர் கண்மாயாக
மாறிய காட்சி.
ஆன்மீகம் என்பது வணிகமாக மாறினால்,
ஆண்டவன் அருள் எப்படி மாறுமோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக