புதன், மே 01, 2013

வாழ்க தொழிலாளர்கள்.



உழைப்பாளர் தினம்.

ஊர்  சுத்தமாக இருக்க தேவை
 ஒரு  உழைப்பாளி.

காணி விளைய தேவை உழைப்பாளி .

தொழில் புரிவோர் எல்லோரும்
உழைப்பாளி வர்க்கம்.

அழகான ஆடை  தைக்க தையல்
தொழிலாளி.

ஆடம்பரமான கட்டடம் கட்ட
 கட்டிடத்  தொழிலாளி.

சிகை அலங்காரம் செய்ய
முடிவெட்டும் தொழிலாளி.

பேருந்து ஓட்ட ஓட்டுனர்
நடத்த நடத்துனர்,

மர  வேலை செய்ய ,
நகைகள் செய்ய

பாட்டாளி தொழிலாளி

இல்லை என்றால் ஏற்றம்

உண்டா வையகத்திற்கு,
ஆகையால் தேவை  தொழிலாளி.

கைத்தொழில்  ஒன்றைக் கற்றுக்கொள்,
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.

சமையல் தொழிலாளி

இந்த தொழிலாளர்கள் வாழ மகிழ

தொழிலாளர்  இல்லை எனில்
என்ன  ஆகும்.
நகரப்புரங்களில்  பழைய பொருட்கள் சரி செய்ய
ஒரு சிறந்த தொழிலாளர்  அமைப்பு  தேவை.
விலை  உயர்ந்த பர்னிச்சர்கள்,ஆடைகள்,மின் சாதனங்கள்
இன்னும் எத்தனையோ வேலைகளுக்கு
சிறந்த பனி புரியும் தொழிலாளர் அமைப்பு இருந்தால்.
நேர்மையும் திறனும் இருந்தால் வேலைவாய்ப்பு அதிகம்.

இத்தகைய தொழிலாளர்களை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும்.


வாழ்க தொழிலாளர்கள்.







வியாழன், ஏப்ரல் 25, 2013

சான்றோனாக்குவது தந்தைக்குக் கடனே

      இன்றைய  கட்டுரைத் தலைப்பு  "என்னை செதுக்கிய நூல்கள்",.செதுக்குதல் என்ற சொல் ஆழ்ந்த கருத்துடையது.கல்லை சிலையாக செதுக்குவர்கள்.
உருவமற்ற கல்  ஆண்டவனாக உயிர் பெறுகிறது..அதற்கு உளிகொண்டு அடிக்கிறார்கள். ஒரு அழகிய சிலை உருவாகிறது.அது தெய்வச்சிலை ஆனால்
அனைவரும் வழிபடுகிறார்கள்.அவ்வாறே நல்ல நூல்கள் ஒருவனை அழகாக செதுக்கி மரியாதைக்குரிய  மனிதனாக்குகிறது.மனிதனை மனிதனக்குவது கல்வி. அந்தக் கல்விக்கு வேண்டியவை  நல்ல நூல்கள்.ஒவ்வொரு நூலும் கட்டாயம் ஒரு நல்வழி அல்லது நீதி புகட்டுவதாகத்தான் அமையும்.

      நூலகம்  வாசகர் வட்டம் கட்டுரைப்போட்டி -- நூலகர்  கலந்துகொள்ளத் தூண்டியதும்  சரி என்றேன்.என்னைப்போன்றே ஒய்வு பெற்றவர்கள்  ஆறு பேர் கலந்துகொண்டோம். நீண்டனாட்களுக்குப்பின்  பேனா வில்  எட்டுப்பக்கம்  தோன்றியதை எழுதினேன்.

இறுதியில் துளசிதாசர் தோகையின்  தமிழ் கருத்துடன் முடித்தேன்.

அப்பொழுதுதான் நூலின் அருமை தெரிந்தது.நூல்கள் மனிதனை எப்படி செதுக்கு கின்றன என்பதை அறிந்தேன் .
 அறம் செய விரும்பு ... ஒரு சிறிய ஆத்திச்சூடி.ஆனால்எவ்வளவு  பெரிய படிப்பினை. ஊக்கமது கைவிடேல் -எப்படிப்பட்ட தன்னம்பிக்கை தரும் சூடி.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் ,அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.

எப்படிப்பட்ட குரள்.

சான்றோனாக்குவது தந்தைக்குக் கடனே. எப்படி செதுக்குகிறது.

  

முதலிடம் பெறவேண்டும்

 இன்றைய தேவை  மனிதம்.இது

இன்றியமையாத  ஒன்று.

ஆணவம்,பேராசை,காமம் ,கோபம்  இவை
நான்கும் மிருக குணங்கள்.

ஆசை ,அவா ,வெகுளி ,இன்னா சொல் இவை நான்கும்
இழுக்க இயன்றதரம் .  என்றார் வள்ளுவர்.

நமது பண்பாடு கற்புக்கு முதலிடம் அளித்தது.

பத்தினிப்பெண்டிர்களை  தெய்வமாகப் போற்றியது.

இன்று  கற்பழிப்பு செய்திகள் அதிகம்.

இரக்கமில்லா கள்ளக் காதல் கொலைகள் அதிகம்.

பிறர் மனைவி,கணவன் ஆசையால் தம் மக்களை

தன் கட்டிய மனைவியை கொலை செய்தோர் அதிகம்.

விவாக ரத்து வழக்குகள் அதிகம்.

காரணம் நம் தமிழ் நீதி நூல்கள்  இன்றைய தலைமுறையினர்கள்

மறந்து ஆங்கிலமோகம் .
கல்வியில் நேர்மை இல்லை.
மழலைகள் பள்ளிக்கே பல லக்ஷம்.
மேற்கல்விக்கோ  மேலைநாட்டு மோகம். விளைவு
நமது சித்தர்கள்,சித்த வைத்தியம் சொன்ன

புலனடக்கம்  புறக்கணிக்கப்படுகிறது.

புலவர்கள்  புவியில் ஒரு ஒழுக்கம் ஏற்படுத்த

நீதி நூல்கள் எழுதினர்.

மம்மி டாடி யாருமில்லை -கண்ணாளா
என்றெல்லாம்  பாடல் எழுதவில்லை .

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா என்ற பாடல்,
விவசாய முக்கியத்துவப்பாடல்
இன்று ஒரு போக்கிரி கதாநாயகன்.
காவல் துறை வேடிக்கை பார்க்க,
போக்கிரி  ,பொறுக்கி என்று காவல் துறை மேம்பாடு.
கறுப்புப் பணம் கள்ளப்பணம்  கையூட்டு
இது ஒரு பழமொழியை நினைஊட்டுகிறது

அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்.
அரசு வருமானத்திற்கு போதைப் பொருள்  அங்காடிகள்.
அரைகுறை ஆடை வருமானத்திற்கு,
திரைப்படம் முக்கியத்துவம்.
நாயகிகள் கதா நாயகிகள் அழகு காட்டும்  விதம்,அதுவே வருமானம்.
அனைத்திலும் அலங்கோலம். 
அறுபது வயதுக்கே கிறுகிறுக்கும் என்றால்.
இளம் மாணவர்கள் மதிப்பெண் 
மதிப்பு  என்ன ஆகும்?
மாணவர்கள் தேர்ச்சி குறைவு ?
காரணம் கவர்ச்சிப்பாடல் ,கவர்ச்சி காட்சி அதிகம்.
மன சாட்சியுடன் இதற்கு ,
பண சாட்சி மறந்து,
பண்டைய பிரம்மச்சரியம் ,புலனடக்கம்  ஆகியவை முதலிடம் பெறவேண்டும்.

 मनुष्य तभी बनता है, जब उसमें  जीती है मनुष्यता.
अब  आहिस्ते -आहिस्ते  मनुष्यता तोड़ रही है दम;
मनुष्यता  में  सत्य  निहित है,  
मनुष्यता में  दया निहित है,
मनुष्यता में संवेदना निहित है;
मनुष्यता में अहिंसा  और  प्रेम  निहित है;
मनुष्यता में सहानुभूति निहित है;
मनुष्यता  में  संयम प्रधान है;
ब्रह्मचर्य  विशिष्ट  तत्व है;
ईमानदारी ,कर्त्तव्य परायणता  तो प्रधान अंग है;
निस्पृह जीवन इंसानियत का  सार  है;
दूसरों के लिए  जीना-मरना इंसानियत के प्राण है;
अब  ये इंसानियत के गुण छत्तीस  का नाता बनकर 
नव -दो ग्यारह बन गए --कारण स्पष्ट  है---
यथा राजा तथा प्रजा --लोकोक्ति सार्थक बनता जा रहा है.

புதன், ஏப்ரல் 17, 2013

வாக்களித்து பாரதத்தின் நற்பெயரை,புகழை வானளாவச் செய்வதே கடமை .தேசப்பற்று.


    ௨௦௧௪   பாராளுமன்ற தேர்தல்.

பார் புகழ்  பாரதம்,
 இன்று  ஊழல்,லஞ்சம் ,பலாத்காரம்  என்று

பார் இகழ் பாரதமாக
பாரினில் களங்கப்  பெயருடன்
பயணிகள் வெளிநாட்டுப் பயணிகள்
பயப்படும்  படி  எச்சரிக்கைகள்
கொடுக்கும் பத்திரிகைச் செய்திகள்.


குற்றவாளிகள் தண்டிக்கப்  பட்டாலும் ,
நாட்டை இரத்தக் கிளறி ஆக்கும் குண்டுவெடிப்புக்குத்

துணை போனாலும் நீதிமன்ற தீர்ப்பிற்கு மேல்

ஆதரவளிக்கும் மத்திய அமைச்சர்கள் ,மின்னும் விண்மீன்கள் ,
குடித்து காரோட்டி பலரைக் கொன்றாலும்
வழக்கு நடந்துகொண்டே இருக்கும் அவல நிலை.
அவர்களை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் .

இவைகளைக்  கருத்தில் கொண்டு ,
இந்தியாவின் இன்னல்களைத் தீர்க்கும்
அச்சம் போக்கும் அனைவருக்கும்
ஆனந்த மளிக்கும் நேர்மைக்கும்
உரிமைக்கும் நீதிக்கும் உண்மைக்கும்
ஊக்கமளிக்கும் அரசாங்கம் அமைய
இந்திய இளைஞர்கள்
இந்த பாராளுமன்ற தேர்தலில்
 வாக்களித்து பாரதத்தின் நற்பெயரை,புகழை
வானளாவச் செய்வதே கடமை .தேசப்பற்று.






இதை நாட்டு நலனுக்கும் ,ஏழை எளியோருக்கும் பயன் படுத்தலாமே ?

 இறைவனைப் பற்றி ,
பற்றுக  என்பதே ஆன்றோர் வாக்கு.
அனுபவத்தில்  மனிதன் தனக்கும்
 தன் சமுதாயத்தில்  மிக உயரிய நிலையில்
இருப்பவர்களை ஒப்பிடுகிறான்.

அவனுக்கு  இறவனைப் பற்றுக என்ற எண்ணம் மேலோங்குகிறது.

சாய்பாபா  கோயிலுக்கு ௨௦௦ கோடி ரூபாய் நன் கொடை கொடுத்த செய்தி.

திருப்பதி எழுமலையானுக்கு 16 கோடி .

வைரக்கிரீடம் .

காணிக்கைகள் குவி கின்றன.

அரசர் காலத்திலிருந்தே  பணமும் தங்கமும் குவியும் இடம் கோயில்.

இந்த ஆலயங்களில் இருக்கும் பணம் ,ஆஷ்ரமங்களில் இருக்கும் பணம் .

இதை நாட்டு நலனுக்கும் ,ஏழை எளியோருக்கும்  பயன் படுத்தலாமே ?

என்பது நாத்திக வாதமா?பகுத்தறிவு சிந்தனையா? இறை  நிந்தனையா?

என்ற சிந்தனையில்  என் மனத்தில் தோன்றும் சிந்தனை  இந்த துகை/நகை/
மூலம் ஊழலற்ற ,லஞ்சம் அற்ற நேர்மையான அரசு ஊழியர்கள்,அமைச்சர்கள்
மற்றவர்கள் இருக்க ஏற்பாடு செய்யலாமே?

ஆண்டவனிடம் ஒரு பிரார்த்தனை --
(  ஏனென்றால் பல நிகழ்வுகள் ஆண்டவனைஉணர ச்செய்கின்றன.)

ஊழல் ஒழிக்க  / இரக்கமற்ற லஞ்சம் ஒழிய ஒரு அரசு சக்தியை
அசுர சக்தியாக ஏற்படுத்தட்டும்.பணம் தான் எல்லாமே சாதிக்கும் என்ற எண்ணம் ஒழிய கருணை காட்டட்டும்.
மக்கள் குறிப்பாக அதிகாரம் படைத்தவர்கள் மனதில் கடமை /நேர்மை
கோப்புகளை உடனுக்குடன் முடித்தல்,பொதுமக்களை வீணாக அலைக்களைத்தல்  ஆகியவை மாற ஆண்டவனிடம் பிரார்த்தனை.

திங்கள், ஏப்ரல் 15, 2013

ஞானம் வரும் இது அறிவியல் உண்மை.




தூய மனத்துடன் 

தும்பிக்கையானை
  நாளும் துதித்து 
நம்பிக்கையுடன் 
துவங்கும் பணிகள் 
துரிதமாக  
துள்ளியமாக
தங்கு தடையின்றி
நினைத்தபடி 
நிறைவேறுமே.

சங்கடங்கள் தீர்ப்பான் 
சக்தி மைந்தன் ,
சங்கட ஹர விநாயகன்.
சகல சுகம் தருவான் 
சர்வ சித்தி விநாயகன்.
சகலமும் தருவான் 
கற்பக விநாயகன்.
கந்தனுக்கு 
மூத்தோன்.
சிக்கலைத் தீர்ப்பான் 
சிவனின் ஜேஷ்ட குமாரன் .
முக்திக்கும் சக்திக்கும்
 வித்தாவான் 
முக்குருணி விநாயகன்.
சக்திகள் நவநிதி தருவான் 
சக்திவினாயகன்.
காதலுக்கும் கரம் கொடுப்பான்
கார்த்திகை சகோதரன்.
தாய் தந்தையரே உலகம் என்று 
சிறாருக்கு வழிகாட்டி,
கலியுகத் தெய்வம் கந்தனை 
பழனியம் பதிக்கு அனுப்பி,
தென்னாட்டில் 
தமிழகத்தில் 
காக்கும் தெய்வமாக 
தண்டாயுத பாணியை 
முருகப்பெருமானை,
ஆறுமுகனை,
கந்தனை,கடம்பனை
அனுப்பி அனுக்ரகித்த
யானை முகத்தோனை,
எளிய பக்திக்கு 
எங்கும் வீற்றிருக்கும் 
எலி வாகனனை 
இருசெவி பிடித்து 
தோப்புக்கரணம் 
போட்டால் 
ஞானம் வரும் 
இது அறிவியல் உண்மை.














விஜய வருடம்

தொண்டரடிப்பொடி ஆழ்வார்  என்று தொண்டு செய்யவே 
தொல்லுலகில்  தோன்றியோர் பலர்  நம் பாரதத்தில் - 
ஆன்மீகக் கொள்கைக்கும் ,ஆசையில்லா வாழ்க்கைக்கும் 
வழிகாட்டிய  தர்மத் தலைவர்கள் ,கவிஞர்கள் 
வெற்றிநடை   காட்டிய  வழியினில் 
பக்தி  வழியில் பார் புகழும் பாரதத்தில் ,
பாதை தவறி முறை தவறி  பணமே பெரிதென்று 
நீதி தவறி வாழ்வோர் மனம் மாறி நேர்மை வளர 
நேர்வழியில் செல்ல  ஆண்டாள் நாச்சியார் 
ஆள்வோரை சீர் படுத்த இரு கரங்கள் கூப்பி ,வேண்டி 
விஜய  வருடம் அனைவருக்கும்  வெற்றி தர 
வாழ்த்துக்கள்; பிரார்த்தனைகள்.

ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

இதை அறிவு ஜீவிகள் புத்தாண்டு விஜய் வருடத்தில் சபதமாக ஏற்றால்

 பொதுமக்களே! நாட்டைக் காப்பாற்றுங்கள் !

    விஜய  வருடம்  வெற்றி தரும் வருடம்.

இந்த வருடம் நல்ல வருடமாக அமையட்டும்.

நமது சனாதன தர்மம் நல்ல நல்ல அறிவுரைகளைக் கொண்டது.

வையகம் வாழ்க!வையகம் ஒரு குடும்பம்; -என்ற

இணையற்ற குரல் கொடுத்தது;

ஆகாயம் ஒன்றே;பூமி ஒன்றே ;

சூரியனும் ஒன்றே;

நிலவும் ஒன்றே ;

ஆகையால் மனித இனம் ஒன்றே  என்றது;

வீசும் காற்று வேற்றுமை பார்ப்பதில்லை;

கொட்டும் மழை  வேற்றுமை பார்ப்பதில்லை;

மரணமும் தக்க நேரத்தில் வேற்றுமை பார்ப்பதில்லை;

 நாம் அறிவு ஜீவிகள்;

நாம் மதம்,இனம்,மொழி என்ற வேற்றுமையால்

ஒருவர் மற்றொருவரை உயர்த்தவேண்டுமே ஒழிய

15 நொடியில் ஒரு இனத்தையே அழிப்பேன்  என்று பேசுவோரின்

முட்டாள் பேச்சை செவி மடுக்கக் கூடது;

நடிகர்களின்  கட் அவுட்டுக்கு  பாலாபிஷேகம் செய்யக்கூடாது;

அவர்களை உருவாக்கிய அறிவு ஜீவிகளின் கருத்தை

ஆராதிக்கவேண்டும்.

நடிகர்கள் இயக்குனர்,பாடலாசிரியர்,கதை ஆசிரியர்களின்

கருத்துக்களை  எடுத்துச்சொல்லும் நடிகர்கள்;

நமது தேர்தலில்  60-65% ஓட்டளிப்பதும்.

40% சதவிகிதம் ஓட்டளிக்காததும்

ஊழல் ,லஞ்சம்,அராஜகம்,கற்பழிப்பு செய்யும்

அரசியல் வாதிகளுக்கு  சாதகமாகிறது.

பணத்திற்காக  சுய லாபத்திற்காக சம்பாதிக்கும்

நடிப்புமேதைகளை  விட நல்ல கருத்துக்களை உருவாக்கி

மக்களின் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்
அறிவு ஜீவிகளைத் தேர்ந்தெடுத்து

2014 தேர்தலில் வெல்பவர்கள் ஊழலை ஒழிப்பவர்களாக,

நாட்டின் நலனே பெரும் நலனாக கருதும்,

வீரவாஞ்சிகர்மவீர,ஆசாத்,பகத் சிங் ,கொடி  காத்த குமரன்

போன்றவர்களாக இருக்கட்டும்;

இதை அறிவு ஜீவிகள் புத்தாண்டு

விஜய் வருடத்தில் சபதமாக ஏற்றால்

நாடு வையகத்தில் உயர்ந்து விளங்கும்.


சௌராஷ்டிர சங்கத்தின் தஸ்வா வின் திருவையாறு ஆராதனை

 सौराष्ट्र  संघ  द्वारा आयोजित  "पंच रत्न कीर्तन " -मेरे दोस्त जयराम .M.S.(MASTER of success)
 के और संघ के कठोर प्रयत्न से सौराष्ट संगीतन्ज्ञों  की झाँकी 

  डा ०.  जेयारम ने   नया सन्देश दिया कि   सौराष्ट्र   जाति  के वेंकट रमन भागवतर  ने ही   भक्त त्यागराज के कीर्तनों को लिखा है;
 तस्वा  विन  तिरुवैयारु - आराधना महोत्सव  पि.एस.एस. स्कूल के आडिटोरियम में 

बड़ी भीड़ के बीच   यह कर दिखाया कि  "सौराष्ट्र  के लोग पञ्च रत्न कीर्तन" में बेजोड़ है;
उनका  यह  प्रदर्शन सराहनीय रहा.  

சௌராஷ்டிர சங்கத்தின் தஸ்வா  வின் திருவையாறு ஆராதனை மகோற்சவம்  சென்னை  பி.எஸ்.எஸ். மேல் நிலைப்பள்ளி  கலை அரங்கில் மிக விமர்சன மாக  அரங்கேறியது.
அந்த சமூகத்தினரின் சங்கீதத் திறனை  உலகிற்கு எடுத்துக்காட்டிய அந்த நிகழ்ச்சி  மிகவும் இணையற்றதாக பாராட்டும்படியாக இருந்தது.

பஞ்ச இரத்தின கீர்த்தனைகளை மிகவும் ரசிக்கும் படி பாடியது அந்த சங்கீத மேதைகளைப்  பாராட்டும்படி அமைந்தது.

எனது இனிய நண்பர் மருத்துவர் ஜெயராம்  இன் நிகழ்ச்சியின் முக்கிய பொறுப்பாளர்  என்பது எனக்கு பெருமிதத்தை  தந்தது.

ಚೆನ್ನೈ ಪಿ.ಎಸ್.ಎಸ್. ಪಲ್ಲೀಕ್ಕೂದ ಕಲಿ ಅರನ್ಗಾಲ ಸೋರಾಸ್ತ್ರ ಸಂಗಮ್ ತ್ಯಾಗರಾಜ ಸ್ವಾಮಿಕಲ್ ಪಂಚ ರತ್ಹ್ಥಿನ ಕೀರ್ಥ್ಥನೈಕಲ್  ಕಾರ್ಯ ಕ್ರಮಾಲ ಆ ಸಂಗ ಜಾಥಿವಾಳ ಪಂಚ 
ರತ್ನ ಕೀರ್ಥ್ಥನಿ ಕಾರ್ಯಕ್ರಮಂ ಸಾಲ ಬಾಕ ಜರಿಹಿಂಡಿ, ಡಾಕ್ಟರ್ ಜೆಯರಂ ಆ ಕಾರ್ಯಕ್ರಮ ಆಯೋಜನ ಮುಕ್ಕಿಯ ಸದಸ್ಯದು. ವಾಲ ಪ್ರಯಥ್ಥನಂ ಪ್ರಸಂಯ ನೀಯಂಗ ಉನ್ದನು. 
ಸೌರಾಷ್ಟ ಸಮಯಾನಿ ಸಂಗೀತ ಜ್ಞಾನಂ ಭಾಗ 

வியாழன், ஏப்ரல் 11, 2013

.500 ரூபாய் வாங்குபவனுக்கு வேலை போய்விடுக்றது;5000 கோடி ஊழல் ஆட்சி செய்கிறது. இது நாத்திகவாதம். கடவுள் !!!!????

நம்பள்கி   என்பவர் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க நேரடியான சான்று

கூறி உள்ளார்.500 ரூபாய்  வாங்குபவனுக்கு வேலை போய்விடுக்றது;5000 கோடி ஊழல் ஆட்சி செய்கிறது. இது நாத்திகவாதம். கடவுள் !!!!????

இதைப்பற்றி கூறும் போது  அதிக கருத்துக்கள் காற்று பற்றிதான் வரும்.
காற்று உணர்கிறோம்; பார்க்க முடியாது.
மின்னோட்டம் சக்தி பெறுகிறோம் பார்க்க முடியாது.

உருவமற்ற இரண்டில் உணரும் காற்று இல்லை என்றால் இறந்துவிடுவோம்;

மின்சாரம் தொட்டால் இறந்துவிடுகிறோம்;

இவை இரண்டும்  உணரக்கூடியவை.

இறைவனையும் நாம் உணரத்தான் முடியும்;

  இறைவன் இல்லை என்ற குழுக்கள் உருவாவதற்குக் காரணம் இறைப்பற்றாளர்களே.

 ஆய கலைகள் 64 என்கின்றனர்;
இதில் ஓவியம் மற்றும் சங்கீதத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்;சிற்பக்கலையும்  சேர்த்துக்கொள்ளலாம்;

ஒரு பணக்காரர் தன்  மகளுக்கு ஒரு சங்கீத மேதையிடம்  சங்கீதம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார்; அனால் அவர்கள் வீட்டில் பணிசெய்த
பணிப்பெண்ணிற்கு அழகாக பாட முடிந்தது;ஆனால் அவர் பெண்ணிற்கு பாட்டு வரவில்லை; அவ்வாறே ஓவியம் சிற்பக்கலை இரண்டும் தெய்வீகக்
கலைகள்; ஐந்துவயதில் அழகான ஓவியம் ஆசிரியர்கள் வழிக்காட்டுதல்
இல்லாமல் வரையும் ஆற்றல் பெற்ற குழந்தைகளைப்பார்க்கிறோம்.

நோயாளிகள் கோடிக்கணக்கில் சிலவு செய்தாலும் தீராத நோய்கள்;
எத்தனையோ நோயாளிகளை மருத்துவர்கள் கைவிட்டாலும்  உயிருடன் இருக்கும் அதிசயம்.

இதனால் தான் நாத்திகவாதம் எடுபடவில்லை.
பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது;
கடவுளை உணர்பவர்கள் பல கோடி;
கடவுளை காண்பவர்கள் தெய்வப்பிறவிகள் ; இறை தூதர்கள்;
மனிதனை நல்வழி ,நேர்வழி ,அன்பு,பரோபகாரம்,சத்திய மார்கத்தில் அழைத்து செல்பவர்கள்.

ஆனால் சீடர்கள் அவர்கள் மறைவிற்குப்பின் செய்யும் தவறுகள் சுயநலத்தால்
மனிதர்களை பிரித்து சண்டையிட வைத்து சுகம் காண்கிறார்கள்; அரசியல் கட்சிகள் போல்;இவர்களுக்கு தெய்வ பக்தி கிடையாது; அவர்களுக்கு நாட்டு பக்தி கிடையாது;
500 ரூபாய்  வாங்குபவனுக்கு வேலை போய்விடுக்றது;5000 கோடி ஊழல் ஆட்சி செய்கிறது.