புதன், செப்டம்பர் 26, 2012

ஆன்மிகம்----நாத்திகம்.-.சனாதன தர்மம்.



சனாதன தர்மம்.

தர்மம்  சார்ந்த கதைகள்
 சொல்லப்பட்ட  கதைகள்
 மீண்டும்  மீண்டும்  
சொல்லப்   படவேண்டிய  கதைகள்.
ராமாயணம்,மகாபாரதம் 
வால்மீகி இராமாயண மாகவே 
இருந்திருந்தால் 
பலருக்கு  அது புதிராகவே  இருந்திருக்கும்.

துளசிதாசர் ராமசரிதமானஸ் எழுதிய பின் 
இல்லந்தோறு ம்  படிக்கப்பட்டது.

இலக்கிய  ராமாயணம்  படித்து தெரிந்தவர்களை விட 
கிராமியப்  பாடல்களில் தெரிந்து கொண்டவர்கள் அதிகம்.
அதனால் தான் ஆன்மீகவாதிகள் செய்யும் 
தவறுகளை 
"படிப்பது இராமாயணம் ,இடிப்பது பெருமாள் கோயில் ""
என்ற பழமொழி  வந்தது.

சனாதன தர்மத்தில் 
இறை நம்பிக்கை  ஒன்றே ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவன் கொடியவன் என்றால் அவன் ஜாதகப்படி 
அவன் பிறந்த நேரம் அப்படி என்பர்.
பச்சைக்கிளி  கூண்டில் இட்டு வளர்த்தல் 
அடுத்த பிறவியில் சிறை  தண்டனை என்பர்.
அவன் செய்த தவறுக்கு இப்பிறவியில் 
தண்டனை இல்லை  என்ற கருத்தல்ல.
இப்பொழுது தவறு செய்யாதே என்று பொருள்.
ஒருவன் வறுமையில் வாடினாலும்
 அவன் விதி என்பர்.
ஒருவன் செல்வச்செழிப்பில் இருந்தால்
 அவன் செய்தபுண்ணிய மென்பர்.
செல்வந்தனுக்கு துன்பம் ஏற்பட்டால் 
அவன் சம்பாதித்த  பணம்
 பாவப்பட்ட பணம் என்பர்.
ஒருவனுக்குப் பதவி வந்தாலும் 
பூர்வ ஜன்ம பலன் என்பர்.
அவன் தவறு செய்து
  வேலை இழந்தால் 
ஆண்டவன் கொடுத்த அதிர்ஷ்டம்
 அவனாக கெடுத்துக் கொண்டான் 
அறிவிருந்தும் அவன் விதி 
அறிவுகெட்ட செயல் செய்து 
மாட்டிக்கொண்டான் என்பர்.
விபத்தில்   இறந்தால்,
எமன் அவனுக்கு வாகன 
 உருவத்தில் வந்துள்ளான் என்பர்.
ஒவ்வொரு உயர்வுக்கும் வீழ்ச்சிக்கும் 
இறைவனே காரணம் என்பர்.
மகாபாரதத்தில் கூட வீரர்களின் 
கௌரவர்களின் மரணம்
 சிந்திய ரத்தம் .
அனைத்தும்  விஷ்ணுவே என்பர்.
அனைத்துக்கும் மூலம் ஆதிமூலம்.
இதிலும் 
ராமாவதாரமும் க்ரிஷ்ணாவதாரமும் 
அதில் வரும் பாத்திரங்கள் 
ஆண்டவன்  அனுக்ரஹத்தால் 
என்பர்.
சிவபுராணத்தில்
 நெற்றிக்கண்ணில்
 தோன்றியவன் 
கார்த்திகேயன் .
கார்த்திகைப்  பெண்களால் 
வளர்க்கப்பட்டான்..
ஐயப்பன் 
சிவன் -விஷ்ணு விற்குப்பிறந்தவன்.
சீதை பூமியில்  இருந்து எடுக்கப்பட்டவள் .
ஆண்டாள்  பூங்காவனத்தில் தோன்றியவள்.
சங்கராச்சாரியாரின் அத்வைத்துவம் 
நான் கடவுள்  என்பது 
படிக்காத கபீர்  தோஹையில் 
கூறினார்.
ஆனால் அவர்  ஒரு சாதுவின்
 ஆசிர்வாதத்தால் 
தோன்றியவர்.
இன்று 
ஷீரடி சாய் பகவான்   உலகத்தில் 
கோடிக்கணக்கான மக்களால் போற்றப்படுபவர்.
ஆனால்  அவரது  பிறப்பு  ரகசியமானது.
ஏசுநாதரின் பிறப்பில் அவரது அன்னை முற்றிலும் 
கன்னியாகவே இருந்துள்ளார்.
தெய்வப்  பிறவிகள்,தெய்வீக  நூல்கள் 
அனைத்தும் என்றென்றும் மாறாத் தன்மை வாய்ந்தவை.
அதுதான் உலகில் நிலையான கோட்பாடுகள்.
அறிவியல் உண்மைகள் கண்டுபிடிப்பு க ள் 
மாற்றமும் மன சலனமும்  ஆசைகளும் 
விபத்துகளும் ஏற்படுத்தி துன்பங்களை
 இன்பங்கள் போல் தந்து 
அழிவைத்  தருபவை.
முன்னேற்றம் என்று இருந்தால் 
மனம் திருப்தியைத் தரவேண்டும்.
அறிவயல்முன்னேற்றம்
 மனநிறைவைத் தருகிறதா?
எதுவுமே  புரியாமல் ஒரு  ரகசியமே 
ஆன்மிகம்.

அதை ஆழ்ந்து புரியாத 
ஒரு மேற்போக்கான பார்வை நாத்திகம்.
.
**********************************************






















செவ்வாய், செப்டம்பர் 25, 2012

தர்மத்தின் மூல தத்துவம்.சனாதன தர்மம் -2.



சனாதன தர்மம் 

ஹிந்து  மதத்தில்  இயற்கையின் ஆற்றலுக்கு மதிப்பளித்து 

இயற்கையை வழிபட்டு வந்துள்ளனர்.இன்றும்  ஹிந்து 
மதம்  பற்றுள்ளவர்கள் சூர்ய  நமஸ்காரம் செய்கின்றனர்.
பஞ்ச பூதங்கள் எனப்படும் பூமி,ஆகாயம்,அக்னி ,நீர்,நெருப்பு 
அனைத்துமே  பகவான்களாக போற்றப்படுவது சனாதன தர்மத்தில் தான்.
இறைவனை ஒளி வடிவாக வழி பாடு செய்யப்படுகிறது.
அதற்காக ஹோமம் வளர்க்கப்படுகிறது.
ஹோமப்புகை,அதில்போடும் மூலிகைகளால் 
ஒரு மாசுக்கட்டுப்பாடக பயன் பட்டுள்ளது.
இயற்கையைப் பாதுகாக்க வனங்கள் காக்கப் பட்டன.
ஆலயங்களில் ஸ்தல விருக்ஷங்கள் வளர்க்கப்பட்டன.
நந்தவனங்கள்  வளர்க்கப்பட்டன.
நீர்வளம் சிறக்க ,பெருக்க குளங்கள் அமைக்கப்பட்டன.

ஆனால்  இன்று கோயில் குளங்கள் குப்பை கொட்டும்
  இடமாகவும்,அரசியல் கட்சிகளால்  ஆக்கிரமிக்கப்பட்டு 
வீட்டுமனைகளாக மாறி வருகின்றன.
அறக்கட்டளை  ,தர்ம  கார்யங்களுக்காக  ஒதுக்கப்பட்ட 
நிலங்கள்,வீட்டுமனைகள்  ஏழை எளி   யோருக்குப் பயன் படுத்தப்படுவதில்லை .
அரசியல்  படுகொலைகள் அதிகமாகின்றன.
காதல் கொலைகள் அதிகமாகின்றன.
பொருளாதாரத்தால் செழித்து இருக்கும் 
அரசியல்வாதிகள், அதிகாரிகள்   தனிப்பட்ட வாழ்க்கையில் 
நிம்மதி இருக்காது. பணம் மட்டும் கோடிக்கணக்கில் இருக்கும்.
அநியாயங்கள் நடை பெறும் .
மனிதமனத்தில்  பணம்,சுயநலம்,குடும்ப வாழ்க்கையில் விவாகரத்துக்கள்,
கண்டதே கோலம்,கொண்டதே காட்சி  பிறர் கணவன் அல்லது 
மனைவி மீது  மோகம் ,இவை எல்லாமே 
இயற்கைக்கு மாறுபட்டு அதர்மம் தலை தூக்குவதால் தான்.
இதுதான் சனாதன தர்மத்தின் மூல தத்துவம்.

திங்கள், செப்டம்பர் 24, 2012

சனாதன தர்மம்.


சனாதன தர்மம் 

இவ்வுலகில் பாவ மன்னிப்பு உண்டு  என்பதற்கு அனைத்து மதங்களிலும் 

மனம் வருந்தி இறைவனிடம் சரணடைதல் என்ற தத்துவம் 

மேற்கோளாக கூறப்பட்டுள்ளது.

சனாதன தர்மத்தில் எண்ணங்களுக்கேற்ற பலன் என்றே கூறப்பட்டுள்ளது.
நல்ல  எண்ணங்கள் நன்மையைத் தரும்.
தீய எண்ணங்கள் தீமையைத்தரும்.
கர்ம பலன் என்று மனிதனுக்கு செயலுக்கேற்ற பலன் என்று கூறுகிறது.

எப்பொழுதும் தீய சக்திகள் அதிக வலிமை உடையவை.
அதை எதிர்த்துப்போராடும் வலிமை தெய்வீக சக்தி கொண்டவர்களால் தான் முடியும்.சனாதன  தர்ம கதைகளில் வரம் கொடுத்த ஆண்டவனே பயந்து 
ஓடிய கதைதான் ஐயப்பன் கதை.
பாத்திரம் அறிந்து பிச்சை போடு ,கோத்திரம் அறிந்து பெண்ணைக்கொடு என்பது பழமொழி.
அதே சமையத்தில்  ஆண்டவனே காதல் திருமணம்  செய்ய 
மாமனாருடன்  போரிட்ட கதைகளும் உண்டு.
ராமாவதாரம் ஒன்றே  ஏக பத்னி  வ்ரதத்தை  வலியுறுத்துகிறது.
மகாபாரதத்தில்  கிருஷ்ணனுக்கு இரு மனைவிகள்.
குந்தி தேவிக்கு  திருமணத்திற்கு முன் குழந்தை.
பாண்டுவிற்கு  பஞ்ச புத்திரர்கள்.அனைவரும் மந்திரத்தால் .
ராமாயணத்தில் மூன்று மனைவிகள்.ஆனால் அமிருத கலசத்தை 
அருந்தியதால்  பிறந்த குழந்தைகள்.
திரௌபதிக்கு ஐந்து கணவர்கள்.
இவ்வுலகில்  இந்த கலி யுகத்தில்  அனைத்துமே நடக்கின்றன.
ஜாதிமத பேதம் ஒழிய விதுரன்.
ராமாயணத்தில் குஹன்,சபரி.
மிருகங்கள் பழக்கினால் மனிதர்களுக்கு உதவும் 
குரங்கு,கரடி,அணில்,அனைத்தும் உதவுகின்றன.
புலி,சிங்கம்,மயில்,மூஞ்சூறு,காளை ,குதிரை ,கிளி,கருடன்  வாகனங்கள்.அனைத்துமே  இறைவனின்.
நாகதேவதை என்றும் சிவனுக்கு நாகாபரணம் என்றால் விஷ்ணுவிற்கு 
சயனம் .காமதேனு  ,கல்பக விருக்ஷம்.
வாழ்க்கைக்கு என்றும் தேவையான 
மாற்ற மில்லா அறிவியல் தத்துவமே சனாதன தர்மம்.

ஆனால் அதில் சில ஆசுரி சக்திகள் லௌகீகத்தை புகுத்தி 
அதை அசிங்கப்படுத்துகின்றன.
மதத்தின் சக்திக்கு ஆண்டவன் அழகுச்சிலை ஊர்வலம் .
சிலை அவமதிப்பு என்பதை மாற்றி இந்து அமைப்புகள் எளிய 
இந்துமத  நூல்கள்,குறுந்தகடுகள்,பிரசாரம் என்று 
அழியும் சிலைகளுக்கான சிலவுகளை விநாயக சதுர்த்தி கொண்டாடும் நேரத்தில் 
ஆக்கரீதியில் பயன் படுத்தலாம்.
இந்து மதச் சிறப்பைக்  கூறும் மேலை நாட்டு அறிஞர்கள்  கூற்றைத்  தொகுத்து 
எளிய மக்கள் புரியும் வண்ணம் கோடிக்கணக்கான துண்டு 
பிரசுரங்கள் வெளியிடலாம்.
"உருவச்சிதைவு என்பது உருவ வழிபாடு "

உயர்ந்ததாகக் கருதும்  இந்துக்களுக்கு 

ஏற்றதா என்பது   இந்து முன்னணி  சிந்தனைக்கு .







ஞாயிறு, செப்டம்பர் 23, 2012

மதி


'மதி 

"மதி "

மதியால் விதியை வெல்லலாம்.
மதி என்றால் நிலவு என்றும் ஒரு பொருள்.
மதிக்கும் மதி என்பது குளிர்ந்து 
இருக்கும்.
சுட்டெரிக்கும் சூரியன் போல் 
மதி நடந்தால் 
மதிகெட்டுப்போகும் .
விதி  விளையாடும்.
ஆகையால் 
மதி என்ற சொல்லுக்கு 
அறிவு,நிலவு  என்ற 
பொருள் போலும்.
மதியாதார் தலைவாசல் மிதிக்கவேண்டாம் 
எனவே 
மதிப்பு மிக்க வாழ்க்கைக்கு மதிவேண்டும்.
வள்ளலார்  முருகனிடம் 
முதலில் கேட்பது மதி.
மதி வேண்டும்.
நின் கருணை நிதிவேண்டும் என்கிறார்.
"மதம்"என்பதை பேய்  என்கிறார்.
அது ஆணவமாகவும் இருக்கலாம்.
தன்  மதம்  தான் பெரிது 
என்ற எண்ணம் வரக்கூடாது.என்றும் 
இருக்கலாம்.
இறைவன் மதங்களைக்கடந்தவன்.
மதம்  கொண்டவனிடம் இறைவன் இருப்பதில்லை.
மனிதநேய மிக்கவனிடம் இறைவன் 
குடிகொண்டிருப்பான்.
மதி  மதத்தைத் தணிக்கும்.
மதிக்கு அழகு என்று சொல்வார்கள் 
மதியழகன் ,அறிவழகன் ஞான சுந்தரம் 
என்று மதிக்கும் பெயர்.
மதி தான் மதத்தை வெல்லும்.
மனித~ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

வெள்ளி, செப்டம்பர் 21, 2012

அமானுஷ்யசக்திதான்


மனிதனும் மதமும் 


மதம் பிடித்த யானையும் 
மதப்பற்றுள்ள  மனிதனும் 
மனித நேயம் மறுப்பவர்கள்.
மதங்கள்  தோன்றியதே 
அன்பை வளர்க்க.
சத்தியத்தை காக்க.
அஹிம்சை வளர்க்க.
நேர்மை செழிக்க.
அறம் வளர,
தானங்கள் வளர.
பற்றற்ற வாழ்க்கை வாழ.
**************************

ஆண்டவன் பெயரால் 
ஆஸ்திகள் சேர்க்க அல்ல.
தன்  தெய்வம் தான் 
தன் மதம் தான் உயர்ந்தது 
என்று மனிதர்களுக்குள் 
சண்டை போட வைத்து 
மதத்தலைவர்கள் 
மமதையுடன் 
மன்மத லீலையில் 
மகிழ்ந்திருக்க,
வீடியோக்கள் 
அனைத்து ஆஸ்ரமங்களிலும் 
வைத்தால் தெரியும் என்று 
எதிர்கால ஆதீனம் பேட்டி  கூற,
அரசியலின் சுயநலத்திற்கும் 
ஆஸ்திக சுயநலத்திற்கும் 
அதிகாரிகள் சுயநலத்திற்கும் 
அகலா ஒற்றுமை.
மதங்கள் ஊழல் செய்தால் புது மதம் 
உதயமாகிறது.
அரசியல் ஊழலால் 
புதிய கட்சிகள் 
உதயமாகிறது.
உதயசூரியன் 
சுட்டேரிக்கும்போது 
இரட்டை இலை.
முடிவு 
ஊழல்கள்   மலியும்  போதும் 
கேடுகள் அதிகரிக்கும்போதும்
சங்கரர்,இயேசு ,முஹம்மது நபி,ஜைனர்புத்தர் 
போன்ற இறை தூதர்கள் 
தோன்றுகின்றனர்.
அவர்கள்  மறைந்த  பின் 
மதங்கள் துண்டாடப்படுகின்றன.
அரசியல் தலைவர்கள் இறந்த பின்,
கட்சிகள் துண்டாடப்படுகின்றன.

சயனவாதிகள் கைகளில் 
கோடிகள்  புரள்  கின்றன.
அப்பாவி ஜனங்கள் அவர்கள் 
மயக்கும்மொழிகளில் 
மயங்கி  
போதையில் தன் வயம் இழக்கின் றனர்.
போதை  ஏற்றுபவர்கள் 
ஆனந்தப்  படுகின்றனர்.
அடிமையானவர்கள் அல்லலுறுகின்றனர்.
அமானுஷ்ய சக்தி தான் 
மக்களை காக்க வேண்டும்.






வியாழன், செப்டம்பர் 20, 2012

கணநாயகா !! நீ படும் சிதைவு , என் நெஞ்சத்தை சிதைக்கிறது.

கபாலீஸ்வரர்  மூத்த குமாரன்,
கார்த்திகேயன் சஹோதரன்,
கண நாயகன்,
நவகோள்களின் அதிபதி,
நவசித்தி நவ நிதி 
தரும் தயாளன்.
கஜவதனன்.
தயாநிதி.
அரசமரத்தடியில் 
அமர்ந்து 
தன்  சக்தியால்.
காப்பாளர்கள் இன்றி 
தரணி ஆள்பவன்.
அருகம்புல் 
அர்ச்சனையால் 
அகம் மகிழ்பவன்.
எளி மையில் 
ஏற்றம் பெற்று 
ஏழைகளுக்கு 
ஏற்ற தெய்வம்.
ஆகையால் தான் 
ஆராதனைக்குப்பின் 
அலட்சியத்துக்கு 
ஆளாகிறான் .
நாட்டு விடுதலைக்கு 
மக்களை ஒன்று படுத்த 
திலகருக்கு 
தூண்டுதல் அளித்து,
இந்து மதத்திற்கு ஒற்றுமை அளித்தவன்.
அதனால் தானோ 
இன்று 
விடுதலை 
இந்தியாவில் 
துண்டாடப்படுகிறனோ!!?
ஒற்றுமைக்கு 
உறுதுணை அருள் புரிந்தவனுக்கு 
தக்க சன்மானம்.
ஆராதனை செய்து 
அவனை நடுக்கடலில் ,
ஆற்றில் 
போடுவது.
வினாயாகா!!
கணநாயகா !!
நீ  படும் சிதைவு ,
என் 
நெஞ்சத்தை சிதைக்கிறது.
ஒற்றுமை என்பது,
மதம் வளர்வது,
பதட்டம் பயம் இன்றி 
மகிழ்ச்சியால் 
வருவது.
அந்நாளில் 
விநாயகர் புகழ் பாடலாம்.
கரையும் விரயத்தை,
பக்தி கறுந்தகடில்நிரப்பி ,
நூல்கள் பல அச்சடித்து,
நிலையாக ஒற்றுமை 
நிலை நாட்டலாம்.
மற்றவர் புண் படும் தடத்தில் செல்வேன் 
என்று ஒரு பதட்டம்.
காவல்துறை  பாவம்!!
கொலைகளைத் தடுக்குமா!
கொள்ளைகளைத்  தடுக்குமா?
வழிப்பறி தடுக்குமா?
ஷாந்தி அளிக்கும் பக்தி.
அசாந்தி  ஆவதை தடுக்குமா/?
அறிவியல் யுகம் .-ஆனால் 
ஆண்டவன் பெயரால் 
ஆதங்கம்.
அமைதிப்படுத்த பக்தி.
ஆத்திரமூட்ட அல்ல.
பலத்தைக்காட்ட ,
ஒற்றுமை ஏற்படுத்த,
அன்னதானம்,
 புனித நூல்  தானம்.
கோதானம்,
பூதானம்,
கடவுள் உருவச் சிதைப்பு அல்ல.






நானும் பக்தன் தான்


நானும் பக்தன் தான்.


அவனின்றி ஒரு அணுவும் அசையாது  

சிவன் கட்டளை இன்றி எறும்பு கூட கடிக்காது.

கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன்.
காடுடைய சுடலைப் பொடி  பூசி ,
எந்நாட்டிற்கும் இறைவனாய் ,
விஸ்வனாதனாக 
விளங்கும் விநாயகன் புதல்வன்,
தன்னை 
ஆற்றிலும் கடலிலும் கிணற்றிலும் 
போட்டு ,
ஊர்வலத்தன்று ஒரு பயத்தையும் 
பதட்டத்தையும் 
உருவாகும் 
ஆராதனையை 
உள்ளம் விரும்பி ஏற்பானா ?
உலகம் இப்படிப்பட்ட 
பக்தியை ரசிக்குமா?
அல்லது கரை ஒதுங்கும் 
அசிங்கப்பட்ட 
அலங்கரத்தைப்பார்த்து 
உள்ளாடைகளிலும் 
காக்க காக்க கனகவேல் காக்க 
என்று 
உருவத்தை அச்சடித்து அணிவதை 
எதிர்க்க நமக்கு அருகதை உண்டா?
சற்றே சிந்தித்த பின் 
எனது பிரார்த்தனை.
விநாயகா!
கணங்களின் நாயகா!
பக்தர்கள் உன்னை சிதைப்பதைத்  
தடுக்க 
அவர்களுக்கு ஞானம் கொடு.
நீ உன்னை அவமானத்தில் இருந்து காத்துக்கொள்.
இது நீ விரும்புகிறாய் ,
என்றால் எனக்கு 
உன்னை சிதைக்கும் செயல் 
நல்லது என்று சாந்தப்படுத்து.
எனக்கு 
உன் உருவம் சின்னாபின்னமாவது 
வேதனையின் 
எல்லைக்கே அழைத்துச் செல்கிறது.

புதன், செப்டம்பர் 19, 2012

ஊழ் - Fate


ஏரிகள் ,விளை  நிலங்கள்,
விலை போகிறது.
சட்டத்திற்குப் புறம்பாக.
மலைகள் தூளாகின்றன.
மலைப்  பிரதேசங்கள் 
குடி இருப்புகளாக மாறுகின்றன.
விளைவாக,
விளைச்சல் குறைகிறது.
மழை குறைகிறது.
குடிநீர்  பஞ்சம் ,
அரிசி விலை ஏற்றம்.
சுற்றப்புற சூழல் 
மாசு படுகிறது.
காசுக்காக 
அரசியல் வாதிகள் 
நில  ஊழல் குற்றச்சாட்டு 
அனைத்துக் கட்சிகள் மேலும்.
ஆனால் 
ஆட்சி மாறும்  போது 
ஆளும் கட்சியினர் மறைக்கப் படுகின்றனர்.
எதிர்க்கட்சியினர் 
கைது செய்யப்படுகின்றனர்.
சிறுசேரி முதல் ஊட்டி ,கொடைக்கானல் 
என 
கட்சினரின் ஊழல் செய்த்தித்தாளில் 
செய்திகளாக வருகின்றன.
செய்திகள் மறக்கப் படுகின்றன.
ஊழல்கள் தொடர்கின்றன.
இது மக்களுக்கு ஊழ்வினைப் பயனாகின்றன.


செவ்வாய், செப்டம்பர் 18, 2012

paadam panivom.பஞ்சகரன் , பாதம் பணிவோம்


Why this ad?
Virtualization White Paper - www.aternity.com - Learn effects of virtualization on business performance & productivity


வேலனின் மூத்தோன்,
வேழமுகத்தோன் ,
சிவகுமாரன்,
சித்திகள் தருவோன்,
பார்வதி குமரன்,
பார் புகழ் பகவான்,
பக்தர்களுக்கு அருள்வோன்,
பார்க்கும் இடமெல்லாம்,
நோக்கர்களுக்கு எளியோனாய்,
கம்மாக்கரையிலும்,
ஆற்றங்கரையிலும் ,
அரசமரத்தடியிலும் ,
வெட்டவெளியிலும் ,
எழுந்தமர்ந்து ,
வேண்டிய வரமளிக்கும் 
வேலனுக்கு மூத்தோனை ,
வேழமுகத்தோன் 
எளிய இறைவன் 
கண நாயகன்,
பஞ்சகரன் ,
பாதம் பணிவோம்.

W & productivity

Expand all

Print all

In new window

(no subject)

வேலனின் மூத்தோன்,
வேழமுகத்தோன் ,
சிவகுமாரன்,
சித்திகள் தருவோன்,
பார்வதி குமரன்,
பார் புகழ் பகவான்,
பக்தர்களுக்கு அருள்வோன்,
பார்க்கும் இடமெல்லாம்,
நோக்கர்களுக்கு எளியோனாய்,
,

எழுந்தமர்ந்து ,
வேண்டிய வரமளிக்கும் 
வேலனுக்கு மூத்தோனை ,
வேழமுகத்தோன் 
எளிய இறைவன் 
கண நாயகன்,
பஞ்சாக்ஷரன் ,
பாதம் வணங்குவோம்.

திங்கள், செப்டம்பர் 17, 2012

ஓம் கணேசாய நமஹ.


ஓம்  கணேசாய  நமஹ.

சனாதன தர்மத்தில் உருவ வழிபாட்டுக்கு என 

ஒரு மகத்தான இடம்.

புத்தர் சிலை சிதைத்ததற்கே சிந்தை கலங்கினோம்.

ஆனால்,

அடுத்தவாரம் ஆயிரக்கணக்கான 
பூஜிக்கப்பட்ட 
ப்ராணப்   பிரதிஷ்டை செய்யப்பட 
ஆயிரக்கணக்கான 
அழகான கவர்ச்சி 
சிலைகள்.
ஆராதனை செய்யப்பட்ட அழகு 
இறை உருவங்கள்.
ஆராதனைக்குப்பிறகு 
வரம் தர ஆயத்தமான 
ஆர்வமுடன்  இருக்கும் 
வினை தீர்க்கும் விநாயக சிலைகள்.

அடுத்தவாராம் கடல் அலைகளால் 
அலங்கோல மாகும் 
அநாகரீகக் காட்சிகள்.
ஆகையால் தான் 
ஆள்பவர்கள் மனதில் 
சுயநலம்.
ஊழல் .
லஞ்சம்.
ஆசிரியர்கள்.
காவலர்கள் 
அதிகாரிகள்,
அலைபேசி.
தொலைபேசி 
அனைத்திலும் 
அழியும் உலகத்திலும் 
அகலா  மாயை.
காம வாசனைகள்.
கற்பழிப்புகள்.
கொலைகள்.
கொள்ளைகள்.
கொலைவெறிப் பாடல்கள்.
வரம்கொடுக்காமல் வரும் விக்னங்கள்.(தடைகள்)
உருவ வழிபாட்டுக்கு  நேரும் அவமானங்கள்.
விநாயக பக்தர்களே!
சற்றே சிந்தியுங்கள்.
அவரின் அழகு உயிர்பெற்ற (பிராணப் பிரதிஷ்டை)
உருவங்களை 
சிதைக்காதீர்கள்.
அவரை இவ்வாறு அலங்கோலப்படுத்துவது,
அவரிடம் அருள் பெறவா ?
சாபம் பெறவா ?
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கணேசாய நமஹ.