சனி, மார்ச் 17, 2012

maanavarkal

நமது பாரதப் பண்பாடு ஆசானை இறைவனுக்கு சமமாகக் கருதினாலும் ,குருவின்றி குருவின் ஆசிகள் இன்றி,வழிகாட்டல் இன்றி ஞானம் கிட்டாது என்றும் மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ளனர். அறிவுரை வழங்கி உள்ளனர்.
ஆனால்,திரைப்படம்,சினத்திரை என்றாலே ஆசிரியர்களை அவமானப்படுத்துதலே.
காரணம் சில திறமைகள் மாணவர்களிடம் அதிகமாக இருக்கும்.அது அவர்கள் அனுபவத்தாலோ அல்லது பெற்றோகள் அல்லது குடும்ப சூழ்நிலையினால்  ஏற்படுவது.

என்னிடம் படித்த மாணவர்களிடம் மரியாதை  குணங்கள் காணப்பட்டாலும்
பெற்றோர்கள் பலரால் அவர்கள் மன நிலை வேறுபட்டிருந்தது.
பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நிலையில் மாணவர்கள் போக்கு காணப்பட்டது.எட்டாம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவன் வேறு பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ந்தான்.அவனிடம் நான் தெரிந்து கொண்டது.பிறந்தநாள் சான்றிதழ்  பணம் கொடுத்து புதிதாக வாங்குவது.அந்த வயதே இருந்தால் விளையாட்டில் புதிய சலுகைகள் பெறுவது.
மற்றொரு மாணவன்  ஏழாம் வகுப்பு படிக்கும் போதே தந்தேன் வியாபாரத்தில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பது.அவனிடம் விசாரித்த போது நான் படிப்பில் கவனம் செலுத்தாவிட்டால் என்ன,என் தந்தை படி த்தவறல்ல.
அவருக்கு பல சொந்தவீடுகள் உள்ளன. வாடகையே மாதம் முப்பதாயிரத்துக்கும் மேல் வருமானம்.அவன் ஆசிரியர் வீடு .ஊதியம் ஒப்பிட்டு
தன திறமைக்கு பல ஆசிரியர்கள் அவனிடம் கடன் வாங்குவதையும் குறிப்பிட்டான்.நடிகர்கள்,பாடகர்கள்,ஓவியர்கள்,பல கலை வல்லுனர்கள்  ,அரசியல்   தலைவர்கள்  ,எழுத்தாளர்கள் ,கவிஞர்கள்
 என பட்டம்  பெறாதவர்களை ஒப்பிட்டுப் பேசுகிறான்.பணம் பெற்று வினாத்தாள் தருவதையும்,டியூஷன்  மாணவர்கள் பெரும் சலுகைகளையும் ,
காணும் மாணவன்,காவல் துறையையும் கவருவதில் திறமை அடைகிறான்.
பள்ளிகளில் ஒழுங்கீனம் எங்கிருந்து வருகிறது .ஒரு மாணவன் நீண்ட நாள்
பள்ளிக்கு  வரவில்லை.அவன் பள்ளிவரை   சென்று வீடு செல்வது வழக்கம்.
ஆனால் அவன் பெற்றோர்கள் மருத்துவ சான்று ஐம்பது அளித்து  பெற்றுவந்தனர்.மாணவன் ரூபாய் ஐம்பதுக்கு மருத்துவசான்று கிடைக்கிறது என்று சக மாணவனிடம் கூறுகிறான்.
படிப்பு,திறமை,முன்னேற்றம்,பணம் மூன்றும் தொடர்பு இன்றியும் தொடர்புடனும் இருப்பதே ஒழுங்கீனத்திற்குக் காரணம்.



வெள்ளி, மார்ச் 16, 2012

maanavar nilai. student and teacher

பள்ளி ஆசிரியராகவும் த.லைமை    ஆசிரியராகவும் ஒரு ஹிந்தி ப்ரசாரக்காகவும்    கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக   பல்வேறு    MAANAVARKALAI  சந்தித்துள்ளேன்..
AANAAL  இன்று வரும்   செய்திகள்   முன்பெல்லாம் நடந்தாலும்  சமுதயத்திற்குப்பயந்து   வெளிவராமல்  இருந்தன .இப்பொழுது  அறிவு  VALARCHCHI ENRA ரீதியில் செய்திகள் VELI வருகின்றன.


அதில் மிக வேதனை யான செய்தி 17 வயது மாணவனை  37 வயது ஆசிரியை அழைத்துச்சென்றது.
பள்ளி மாணவர்கள்   திருட்டில்  ஈடுபடுவது ,ஆசிரியர்  திட்டியதால்  தற்கொலை செய்துகொள்வது , அதை விட மனம் நடுங்கவைக்கும்  செய்தி ஆசிரியரை 
கொலை  செய்வது.
காரணம்   திரைப்படம்.திரைப்படப்பாடல் .


தண்டச்சோறுன்னு அப்பன்  சொன்ன டேக் இட் ஈஸி பாலிசி.
கொலைவெறி , அதை ரசிக்கப்பெரும்  கூட்டம் உலக  அளவில்.
காதல் அணுக்கள்.
கசமாலம் பீச்சங்  கைய வைக்க ..
;
கபீர் கூறினார்:    உலகம் உண்மையை நம்பாது.தீமை என்பதை விரும்பி தேடி ஏற்றுக்கொள்ளும். அதற்காக அவர் மேற்கோளிட்ட வாசகம்:- பால் வியாபாரி 
வீடு வீடாக சென்று பால் வியாபாரம் செய்கிறான். ஆனால் சாராய  வியாபாரி 
அமர்ந்த இடத்திலேயே பால் வியாபரியைவிட மிக அதிகமாக வியாபாரம் செய்கிறான்.ithilirunthe தெரியவில்லையா  உலகம் நல்லதைவிட தீமையை விரும்பும் என்பது.

திங்கள், மார்ச் 12, 2012

tharamaana ilakkiyangal

இறைவன்  அருள்

நான் இறையருள் பெற்ற புலவர்கள் வரலாறு படித்தேன்.அனைவரும் ஆண்டிகளாக கோயில்களில் பாட்டுப்படி பல அதிசயங்கள் நிகழ்த்தி உள்ளனர்.
ஆனால் அவர்கள் பொருளுக்கு ஆசைபட்டது இல்லை.ஆனால் பொருள் பொதிந்த பாடல்கள் இயற்றி உள்ளனர். காசுக்காக கண்டபடி கட்டிப்பிடி பாடல்கள் பாடவில்லை.பல யுகங்களுக்கு மனிதன் அமைதியான மன நிறைவான மகிழ்ச்சியான நீண்ட ஆரோக்யமான வாழ்க்கைத் தத்துவப்பாடல்கள் பாடினர்.
எக்காலத்திற்கும் என்றென்றும் நிலைத்து நிற்கும் பாடல்கள் பாடினர்.
ஆனால் காலப்போக்கில் அவை பொக்கிஷங்களாக நூலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு விட்டன..அவை எல்லாம்  விலை மதிப்பற்ற காவியங்கள் என பாராட்டப் பட்டதால் ஒரு சிலரால் பட்டிமன்றங்களிலும் .மேடைகளிலும் மேற்கோளுக்காக  எடுத்துக்காட்டப்பட்டு சிந்தனைகளைத் தூண்டின.


காலப்போக்கில்  பட்டிமன்றங்களும் திரைப்படப்பாடல்கள் கலாசார மேம்பாடா/
சீரழிவா என்று மாறிவிட்டன.
நல்வழி மறந்து சில நேர இன்பங்களுக்கான பாடல்கள் இன்றைய சமுதாயத்தில் குழந்தைகளைப் பாட வைத்து ரசிக்க ஆரம்பிக்கின்றனர்.
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை //சைவக்காதல்/அசைவக்காதல்
ஆன்மீகக் காதல்/ இலக்கியக்காதல்.
இதில் அழிந்துபோவது ஆண்கள்.சவரக்கத்தி முதல் அனைத்திலும் கவர்ச்சி.
இளம் தலை முறையினர்  அழிந்து பெற்ற குழந்தையை தவிக்க விட்டு மாற்றானை விரும்பும் பெண்கள் உயர்ந்து வருகின்றனர்.பல குடும்பங்களில்
நிம்மதியில்லை.






rajayokam.

உலகில் உண்மை என்பதே உன்னத நிலை அடைந்தாலும் ,பொய் என்பது பண பலத்தாலும் ,அதிகார பலத்தாலும்,ஆணவத்தாலும்,தன்னலத்தாலும், நட்பு ,விரோதம்,குரோதம் ,பாசம் ,நேசம் என்ற மாயையில் தலைவிரித்தாடுகிறது.
அதற்காக கையூட்டு,ஊழல்.சிபாரிசு,,ஜால்ரா ,சூழ்ச்சி,கொலை,கொள்ளை,கடத்தல்,என்ற செய்திகள் நாள்தோறும் பார்க்கிறோம்.என்ன செய்வது./?
இறைவன் இவ்வுலகில் இப்பாவிகளுக்காகவே நோய்,விபத்து,மரணம்,இயற்கையின் சீற்றம்,மழலைப்பேரின்மை,அகால மரணம்,,தோல்விகள்,அவமானங்கள்,பைத்தியம்,குருடு,செவிடு ,அங்க ஹீன அவஸ்த்தைகள்,கோடிக்கணக்கில் பணம் இருந்தும் தீராத நோய்கள் என 
நேரடியாக இன்றி மறைமுகமாக முரசரைந்துகொண்டிருக்கிறான்.

நமது முன்னோர்கள் இதை அவ்வப்பொழுது வேதம்.பகவத் கீதை,குரான் பைபிள் 

போன்றவைகள் மூலம்  பல முறை வலியுறித்தியும்,அன்றாட  இறைவணக்கம் 
மூலமும், உணர  வைத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் கலியுகத்தில் ஆன்மிகம்   என்பது கோயில் உண்டியலில்  பணம் போடுவதும் ,கொலைவெறி  பாடலுக்கு  முக்கியத்துவம்  கொடுப்பதாகவும்  உள்ளது .

இது இன்றைய  கல்யுகத்தில்  மட்டுமல்ல ,இராமாயண மகா பாரத காலத்திலும் 
இருந்துள்ளது.இல்லை என்றால் ராம-ராவணப்போர்,மகாபாரதப்போர் ஏன் வந்தது.கல்லால் அடித்ததும் ,சிலுவையில் அறிந்ததும் ஏன் நடந்தது.
ஆகையால் தான்  
முனிவர்களும் ,யோகிகளும்,சித்தர்களும்,துறைவிகளும்,சிங்கம்,புலி,சிறுத்தை,பாம்புகளும் வாழும் காடே மேல் என்று அங்கு சென்று வாழ்ந்தனர்,அதற்கு மனம் வேண்டுமல்லவா? முற்றிலும் துறக்கும் மனம் ...சித்தார்த்தர் போல்,மகா வீரர் போல்.
ஊரில் வாழும் ஆடம்பர ஆஷ்ராமவாசிகள் பட்டதற நிலையில் இல்லை.
ராஜ யோகம் என்று இதைத்தான் கூறுகின்றனர்.



வெள்ளி, மார்ச் 09, 2012

மேலைநாட்டு கலாச்சாரத்தை கேலி செய்யும் தமிழகமே திரும்பி பார்

மேலைநாட்டு கலாச்சாரத்தை கேலி செய்யும் தமிழகமே திரும்பி பார்e

 இங்கு   கோயில்  திருவிழா  ரௌடிகளின்  சாம்ராஜ்யம்.

எந்திரன்  திரைப்  படத்தில்  பார்த்திருப்பீர்கள் .   

கோயில் ஒரு  புனித இடம்.  
when i visited a church in u.s. as a foreigner and Hindu.they give me warm welcome and give me v.i.p chair to watch the prayer and allow me to take photos each and every part of the search.but when a foreginer want to visit hindu temples ,vendors are cheating them.they want to enjoy to see our temple idols and their beauity and skill.the temple authorities are not allowing because they are not hidus.

i humbly requiste to think deeply the reality.i like this article because i am a real patriot  like you.

புதன், மார்ச் 07, 2012

penkaldinam.

பெண்கள்  தினம்.
ஹிந்தி கவிஞர்  சுமத்திரா நந்தன்  பந்த்  தன் கவிதையில் பெண்களைப்பற்றி 

உலகில் சுவர்க்கம் என்று ஒன்று இருக்கிறதென்றால் ,
பெண்ணின்  இதயத்தில் தான்.
நரகம் என்று உலகில் இருந்தால் அதுவும் பெண்ணின் இதயம் தான் 
  என்கிறார்.
ஆவதும் பெண்ணாலே,அழிவதும் பெண்ணாலே என்று ஒரு பாடல்.

பெண்ணின் மகத்துவத்தை ஹிந்து மதத்தில் உணர்ந்து தான் 
முப்பெரும்   பிரம்மா,விஷ்ணு,மகேஸ்வரன் ஆகிய வர்களை முறையே 

படைத்தல்,காத்தல், அளித்தல் என்ற  தத்துவத்தை அளித்து, உலகில் மனிதன் வாழ அத்தியாவசிய  மான கல்வி,தனம்,வீரம் மூன்றிற்கும்  கலைமகள்,அலைமகள்,மலைமகள் என்ற முப்பெரும் தேவிகளை வழிபடுகிறான்.கிராம தெய்வங்களாக ,மதுரைவீரன் ,முனீஸ்வரன்,
கருப்பணசாமி, என்ற ஆண் தெய்வங்களை வெட்ட வெளியில் காவல் தெய்வங்களாக  வைத்து அம்மன் கோயில்கள் பிரபலமான சக்திவாய்ந்த 
தேவிகளாக வணங்கப்படுகின்றன.
காளியம்மன் கோயில்,மாரியம்மன் கோயில்,நாகாத்தம்மன் கோயில்,பச்சையம்மன் கோயில்,முண்டகக்கண்ணியம்மன் கோயில்,
ரேணுகாதேவி,திருவீதிம்மன்,துரௌபதி அம்மன்,சப்த  கன்னிகள்,அங்கால பரமேஸ்வரி கோயில்,மீனாக்ஷி அம்மன் ,காமாட்சி அம்மன்,அலமேலுமங்கை,
என அம்மன்கள் தான் எத்தனை.

இவ்வளவு முக்கியத்துவம் இருந்தாலும் சமுதாயத்தில் பெண்களுக்கு சற்று 

அடிமையான இடம் தான். அடுப்போதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற வினாதான்.இன்று  பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசினாலும் அவர்கள் 
பலஹீனம் தாய்மை.பெண்களை அபலை என்பர்.பலம் என்ற சொல்லுக்கு எதிர்ப்பதம்.
ஆனால் பெண்மை ,மேன்மை என்று ஒன்று இல்லை என்றால், தாஜ்மஹால் 
என்ற உலக அதிசய மஹால் கட்டப்பட்டு பாரதத்துக்கு பெருமை கிடைத்து இருக்குமா.

இருப்பினும் ஒரு வருத்தம் படித்த பெண்கள் பொறுமை இல்லாமல் விவாகரத்துக்குத் தயாராகின்றனர்.ஆண்கள் செய்யும் அட்டகாசம்.குடிவெறி,
மனைவிகளை முரட்டுத்தனமாக அடித்தல்,கொத்தடிமை போல் திருமணத்திற்குப்பின் நடத்துதல்,இதெல்லாம் பொறுத்தது போதும் என்று 
பெண்ணினம் பொங்கி எழுந்தால்  அமைதி இல்லாமல் ஆண்கள் தனிமையில் 
அலையும் நிலை ஏற்படும்.
ஆனால் இன்று பல நகரங்களில்  மனைவிகளால்  துன்பப்படும் கணவன் மார்கள் அதிகம். ஆண்களுக்கு  வேலைவாய்ப்பும் குறைவு.ஆண்களைவிட அதிகம் படிப்பவர்கள் பெண்களே.
இன்றைய திரைப்பட கதை நாயகர்கள் அனைவருமே பொறுக்கிகள்.போக்கிரிகள்.சட்டத்தை காக்கும் குற்றவாளிகள்.
ஆகையால்  எதிர்காலம்  இல்லறம் நல்லறமாக இருக்குமா ?என்ற ஐயமே 
நீதிமன்ற வழக்குகள் எண்ணிக்கை அதிகமாவது கண்டு ஏற்படுகிறது..




ர.

செவ்வாய், மார்ச் 06, 2012

kalvi-indiscipline in education.


கல்வி - ஒழுக்கமின்மை


  ஆசிரியர்கள் பற்றி ப்ளாக்கில்  பாலா என்பவரின்  சிந்தனைகளும் அதில்

நல்ல ஆசிரியர்களை மையப்படுத்தி எழுதப்பட்டது  என்ற  குறிப்பும்

 காணப்பட்டது.


அதில் பெரிய திரை சின்னத்திரை ஆசிரியராக

 நடிக்கும் நடிக-நடிகைகள் பற்றியும் குறிப்பிடுகின்றார்.

கல்வித்துறை என்பது ஒரு நாட்டின் மிகப் பொறுப்பு  வாய்ந்த முக்கியமான

துறை.நான் படித்த பள்ளியில்  குடிகார ஆசிரியர் என்றே ஒருவர்.

அவர் மேல் நடவடிக்கை  எடுக்கப்படவில்லை.காரணம் அவரின் குடும்பம்

என்னவாகும் என்பதே ஆசிரியர் சங்கத்தின் வாதம்.அதிலும் அவ்வாசிரியர்

செல்வாக்கு உள்ளவராக இருந்தால் போதும்.

இதில் ஜாதி-மதம் என்ற  போர்வையில் செய்யும்

அட்டகாசங்கள்.இந்தப்பள்ளியில் இந்த ஜாதிக்கு உயர்வு.இந்த மதத்திற்கு

உயர்வு.ஆகையால் நான் அதற்க்குத்தகுதியில்லாததால் என் மீது நடவடிக்கை

என்று கூறியே பள்ளி நேரத்தில் வகுப்புக்குச் செல்லாமை.

தன்  சொந்த மேல் வருமானத்திற்கு  திட்டம் தீட்டல்,மாணவர்களை டியூஷன்

எடுக்க  கட்டாயப்படுத்துதல்,மாலை நேர வேலைக்கு பள்ளிநேரத்தில்

ஒய்வு.பூர்வ ஜன்ம பலன்.ஒய்வு ஊதியம்.சம்பள நாளன்று ஓய்வூதியம்

வாங்கியாச்சா /?என்ற  குசலம் விசாரிப்பு.

ஆசிரியர்களை    மதிக்கும்  மாணவன் ஆசிரியர்கள்

 அனைவரையும் மதிக்கிறான்

.ஆனால்  குறைகளைக்கண்டால், ஆசிரியர்களின்  பல  ஹீனனங்களை

 தெரிந்து  விட்டால்   போதும் ஆசிரியர்கள் அவ்வளவு தான்

  அடைக்கலம்.

உறவு,செல்வாக்கு ,சங்கம் ,ஜாதி, மதம்,பணம் நடமாட்டம் இருக்கும் வரை

ஒரு ஆசிரியரை   மற்றொரு  ஆசிரியர்   தன்  வகுப்பில்   மட்டம்

தட்டுதல் ,பொறாமை வெறுப்பு
                                                                     இருக்கும் வரை,

நேர்மையான கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்காதவரை


காவல் துறையும் ,கல்வித்துறையும் மட்டமாகத்தான் சித்தரிக்கப்படும்.


 l

திங்கள், மார்ச் 05, 2012

man and his sufferings. WHY?wrong thoughts

அவனியில் மரணம் என்று ஒன்று இல்லையெனில்,அசுரசக்தி ஆட்டிப் படைத்துக்  கொண்டு இருக்கும். அசுர  சக்தியை  உருவாக்கிய  ஆண்டவனே
அச்சம் அடையும் அளவுக்கு  அது வளர்ந்து  விட்டது. மனிதன் நல்லவனாக, நேர்மை உள்ளவனாக ,சத்தியவானாக இருக்கத்தான் நினைக்கிறான்.ஆனால்
இந்த   உலக மாயைகள் ,உலக வாழ்க்கை முறை அவனை இறக்கமற்றவனாக்குகிறது .

தனக்காக   சிபாரிசு,லஞ்சம் அளித்தால்-பெறல் ,பெற்றால் கொடுத்தல், பணம் பெற தவறிழைத்தல், தவறு செய்து லஞ்சம் அளித்தல் இது ஆண்டவன் ஆடல்.
அசுரசக்திகளின்  ஆதிக்கம் அதிகமாகும் போது அது அடியோடு  அளிக்கப்படுகிறது
மீண்டும் மீண்டும்  சமுதாய அக்கறைகொண்டவர்கள்  இறை அன்பர்கள் கூறுவதெல்லாம்  ஒன்றே.உன் கர்ம வினை உன்னை விடாது. நீ செய்யும் பாபங்கள்  தொடர்ந்து உனது வாரிசுகளை பாதிக்கும். உன் பாவங்களால் நீ சேர்க்கும்
பொன் பொருள் ஆஸ்திகள் நேர்வழியில்  பயன்படாது . மதுவிற்கும்  மருத்துவத்திற்கும் ,கேளிக்கைகளுக்கும்  என  கரைந்து   வறுமையில்  வாடுவார்கள் . தீராத நோய்களால் அல்லல் படுவர்.பழிச்சொல்லுக்கு ஆளாகி அவமானச்சின்னமாவர்.இந்த உலகிலேயே நரக வாழ்க்கை வாழும்  எத்தனையோ  செலவச்சீமான்களை நாம் கலி உகத்தில்  இந்நிலை உலகில்  பார்க்கிறோம்.
தர்மங்கள் அனைத்துமே கூறும் சத்திய வழி,நியாய வழி..அவைகளை   அறிந்தும்  புரிந்தும்
மனிதன் தவறுவதால்   அவன் துன்பங்களை ஆண்டவன் அளித்ததாகவும் சுகங்களை தன முயற்சியால் அடைவதாகவும்  தப்பான  எண்ணங்கள் .


ஞாயிறு, மார்ச் 04, 2012

பகுத்தறிவும் பகவானும்.

பகுத்தறிவும் பகவானும்.
அறிவுள்ளவன் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து 

பெருக்கி வகுத்து கழித்து நல்லவற்றை பெருக்கி 

அல்லவற்றை கழித்து ,அல்லவற்றிலும் வகுத்து 

கழித்து மீதியை விட்டு விடுகிறான்.

இந்த பகுத்தறியும் அறிவால் கண்டறிந்த மூல   

தத்துவம்   தான் நுண்ணறிவால் காணும் 

ஆண்டவன்


சூக்ஷ்ம திருஷ்டி .இது எத்தனை பேருக்கு வரும்.???

அந்த நோக்கில் கண்டு உணர்ந்து தெய்வீக    

கருத்துக்கள்  , வேதங்களாகவும்   ,குரானாகவும் 

,பைபிளாகவும் .மனித  நேயம்   வளரவும்  ,மனித 

ஒற்றுமைக்காகவும்  ,வையகம்  வாழவும் ,வாய்மை 

வெல்லவும்  ஆன்மீக வழிகாட்டியாக அமைக்க 

ஆண்டவன் அருள் பெற்றவரன்றி வேறு  யாரால் 

முடியும்

அறிவியல் விந்தைகள் பற்றிய குறிப்புகளும் அந்த 

ஆன்மீக தெய்வீக நூல்களில் காணப்படுவதும் 

விந்தை தானே.

.ஆனால் சில பகுத்தறிவு வாதிகள் சுயநல முள்ள 

ஆன்மீக வாதிகளின் போலி வேஷத்தை கலைத்து 

சிந்தனைகள் தூண்டுகின்றனர்.

அறிவு வளம் பெற்ற இந்த உலகில் தீயவை 

சீக்கிரமாக வெளிப்பட்டு விடுகின்றன.







வெள்ளி, மார்ச் 02, 2012

kabeer eeradi dheiveeka uravu

நல்ல மனிதர்கள் ,உயர்ந்த மனிதர்கள் இந்த உலகில் உள்ள தீயவைகளை அகற்றி நல்ல குணங்களை மட்டும் ஏற்பர்.வித விதமான  மலரின் மணம் அறியும் வண்டு அதன் மதுவை உறிஞ்சுவதைப்போல் ,உயர்ந்த மனிதன் ஒவ்வொரு மனதிலும் இருக்கும் பகவானை அறிந்து கொள்ளுவான்.
औगुन को तो ना गहै,गुनही को लै बीन. घट घट  महंके   मधुप ज्यों ,परमातम लै चीन.


६.
அன்னப் பறவை  பாலும் தண்ணீரும் கலந்து வைத்தால்  பாலை மட்டும்  அருந்தும். நீரை விட்டு விடும்.அவ்வாறே இறைவனை இதயத்தில்  வைத்துள்ள  
இறையன்பன்  அந்த ஆன்மீக தத்துவத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு ,மற்ற
உலகியல் தீயவைகளை விட்டு விடுவான்
हंसा पय को काढी ले ,छीर नीर निर्वार.ऐसे गहै जो सार को,सो जन उतरे पार.
७.
छीर रूप सतनाम है, नीर रूप व्यवहार. हंस रूप कोई साध है,तत का छाननहार.

இறைவனின்   நாமம்  பால் போன்று தத்துவம் நிறைந்தது.உலகியல் விவகாரங்கள்  தண்ணீர் போன்று சார மற்றது.இவ்வாறே அன்னம் போன்று
சாது -மகான்கள் சாரம்- சாரமற்ற தன்மை அறிந்து  இறைவனையே சரணடைகின்றனர்.
8 .
समदृष्टि  सतगुरु  किया,दीया अविचल ज्ञान.जहँ देखौ तहँ एक ही ,दूजा नाहीं आन.

எனக்கு குருவானவர்  அசையாத திட மான அறிவை தயக்கமில்லா அறிவை 
கொடுத்துள்ளார். சம நோக்கைக் கொடுத்துள்ளார்.ஆகையால் நான் எங்கு
நோக்கினும் அந்த ஒரே தத்துவமான இறைவனை பார்க்கிறேன்.வேறு ஏதும்
எனக்கு எண்ணங்கள் (உலகவியல்)ஏற்படவில்லை.
௯.
சமநோக்கு என்பது அமைதி ,எல்லா மதங்களையும் சமமாக பாவிப்பது.
எல்லா பிராணிகளின் ஆன்மாக்களையும் ஒன்றாகக் கருதுவது.சமமாக நோக்குவது.
समदृष्टि  तब जानिये,सीतल समता होय.सब जीवन की आत्मा ,लखै एक सी सोय.


 







r