kabeer eeradi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kabeer eeradi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, நவம்பர் 13, 2011

kabeer vaani -love /friendship

கபீர்

அன்பு என்பது தோட்டத்தில் வளராது.அன்பு என்பது சந்தையில் விற்கும்
பொருளல்ல.
அரசனோ ஏழையோ தன்உயிர், ஈந்து தான் அன்பைப்பெற முடியும்.
(பணத்தலோ அல்லது அதிகாரத்தாலோ அன்பை பெறமுடியாது.தியாகத்தால் தான் அன்பைப்பெற முடியும்.)

प्रेम न बाढ़ी ऊपजै, प्रेम न हॉट बिकाय.I राजा परजा जेहि रुचे,सीस देई लै जाय.II
************************************************************************
நட்பு
நல்ல நட்பு  கிடைப்பது அரிது.நல்ல நட்பு முறியக்கூடாது
முறிந்த நல்ல நட்பு,பாக்யவான்களுக்கே  மீண்டும் கிட்டும்.
मिलना जग में कठिन है,मिली बिछुड़ी जनि कोय.I;बिछुड़ा सज्ज़न तेहि मिलै,जिन माथे मणि होय. II

saakhee=kabeer eeradi

கபீர் ஈரடி(கபீர் சாகி)


(௧)



நற்குரு சத்குரு  போன்று யாரொரு உறவும் இல்லை.
.நல்ல தத்துவம்  ,அறிவு போன்று  வேறொரு சிறந்த   தானம் இல்லை.
பகவானைப்போன்று யாரொரு நன்மை தருபவறும் இல்லை
 பக்தனைப்போன்று  எந்த ஒரு  வுயர்ந்த ஜாதியும் இல்லை..
सतगुरु सवां को सगा,सोधी सई  न दाती;  हरिजी सवां न को हितू,हरजन सई न जाति II 
(௨)

சத்குருவின் மகிமை அளவற்ற எல்லை யுடையது.
அவர் செய்த உபகாரம் அளவில் அடங்காதது.
அவர் என் அறிவுக்கண் திறந்தவர்.
அளவற்ற அருள்  அனந்தத்தை தர்சிக்கச் செய்தவர். 
(அறிவுக்கண்   தந்து    இறை அருள்  பெற மூல
காரண கர்த்தர்.) 

सतगुरु की महिमा अनंत ,अनंत किया उपगार I 
लोचन अनंत  उघाडिया ,अनंत दिखावंहार II


(௩)

இராம நாமம் என்ற அறிய பொக்கிஷத்தை சத்குரு வழங்கினார் .

அதற்கு ஈடான ஒரு குரு காணிக்கை என்னிடம் எதுவுமில்லை.

நான் எப்பொருளால் குருவின் மனதை திருப்தி செய்ய முடியும்.

குரு காணிக்கை செலுத்தும்  அளவில்லா ஆவல்
மனதிற்குள் அடக்கி வைத்துள்ளேன்.

राम नाम कै पतंत्रै ,देबे कौं कछ नांही,I  क्या ले गुर संतोषिये ,हौंस रही मन मांही .

திங்கள், நவம்பர் 07, 2011

kabeer eeradi

கபீரின் பார்வையில் இறைவழிபாடு :

துன்பத்தில் எல்லோரும் இறைவனை வழிபடுகின்றனர்;சுகத்தில் யாரும் வழிபடுவது இல்லை.
சுகத்தில் வழிபட்டால் துன்பம் ஏன்?
दुःख में सुमिरन सब करैं,सुख में करैं  न कोय.  जो सुख में सुमिरन करैं ,तो दुःख काहे होय..


பெரியோர் குணம்:----

சிறியோரின் தொந்தரவுகளை பெரியோர்கள் மன்னிக்க வேண்டும்.
பிருகு முனிவர் விஷ்ணுவின் மார்பில் உதைத்ததை,விஷ்ணு மன்னித்தார் .
விஷ்ணுவின் புகழ் குறைந்ததா என்ன? 
छिमा ब ड न  को   चाहिए ,छोटन को उत्पात . कहा विष्णु को घटी गयो ,जो भृगु मारी लात  

௩.இனிய சொல்லின் மகிமை
ஆணவம் இல்லா இனிய சொல் பேசுங்கள்.அது ஏன் /?
உன் நண்பரும் உனக்குள்,உன் விரோதியும் உனக்குள்.(இனிய சொல்லல்)
.सीतल शब्द उचारिये ,अहम् आनिये नाहीं.तेरा प्रीतम तुझ में ,सत्रु भी तुझ माहीं.

இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்ப காய் கவர்ந்தற்று.(திருவள்ளுவர்)


ஞாயிறு, நவம்பர் 06, 2011

கபீர் ஈரடி.



साई इतना दीजिये,जामें कुदुम्ब समाय; मैं भी भूखा न रहूँ,साधू न भूका जाय.

இறைவனே இந்த அளவில் வசதி கொடு;
எதனால் நான் என் குடும்பம் நிர்வஹிக்க முடியும்.
நானும் பசியோடு இருக்கக்கூடாது.,
என் இல்லம் தேடி வரும்
சாதுக்களும்மகான்களும்
வயிறார உண்டு செல்ல வேண்டும்
 --------------அஞ்சாமை ..........................

जिन ढूंढा  तिन पाईयां ,गहरे पानी पैठ. मैं बौरी डूबन डरी,रही किनारे बैठ.

ஆழ் கடல் மூழ்கி ,அஞ்சாமல் செயல் புரிந்தோர் விலை இல்லாமுத்துபெற்றார்
அஞ்சி நான் கரையில் அமர்ந்து காத்ததுதான் .எனக்கு எதுவும் கிட்டவில்லை.
பரோபகாரம்
वृक्ष कभी फल न भखै,नदी न संचै नीर. परमार्थ के कारणे साधुन धरा शरीर.

....மரம் தன பழங்களை தானே சாப்பிடுவது இல்லை.ஆறு தன நீரை தானே
பருகாது.  அவ்வாறே மற்றவர்களுக்காகவே மகான்கள் புவியில் வாழ்கிறார்கள்.






பருகுவது


இல்லை.



kabeer eeradi arimukam

ஹிந்தி பக்தி இலக்கியத்தில் கபீர் ஹிந்து மற்றும் முகலாயர்களால் சமமாக மதிக்கப்பட்ட கவி.அவரது தோஹை அதுதான் ஈரடி என்று மொழிபெயர்ப்பு.
கையில் ஜபமாலை,வாயிலோ இறை நாமம்,
மனமோ பத்து திக்கில் ,அது இறைவழி பாடா?!!

௨.)உன் இறைவன் உனக்குள்,பூவின் மணம் போல.
        மணமிக்க கஸ்தூரி மான் வயிற்றிலே,,அதை அறியா  மான் புல்வெளியில் தேடுமாம்,அறியா மான்  போல் ,அலையாதே மனிதா.உனக்குள் இறைவனை அறிந்து கொள்.
௩.)கெட்டவனைத் தேடிச் சென்ற எனக்கு,கெட்டவனே கிடைக்கவில்லை.
என் மனதுக்குள் என்னையே ஆராய்ந்த போது,
என் போல் கேட்டவன் யாருமே இல்லை.
௪)எழுகடல் நீரை மையாக்கி,மரங்கள் அனைத்தையும் ,எழுதுகோல் ஆக்கி,
நிலம் முழுவதும் எழுதும் காகிதமாக்கி,
இறைவன் புகழ் பாட முயன்றேன்,அவை
போதுமானதாக இல்லை எனக்கு.(சிலர்குருவின் புகழ் என்கின்றனர்)

௫)இவ்வுலகம் உண்மையை ஏற்காது, தீயதை  விரும்பி தேடிச் சென்று வாங்கும்.
பால் விற்பனையாளர் சத்துள்ள பாலை தெரு தெருவாக விற்கிறான்.மது விற்பவனோ ஓரிடத்தில்
அமர்ந்து ஓய்வாக விற்கிறான்.பொய்யை விரும்பி நாடிச்செல்லும் உலகமிது.