நகைச்சுவை ,
நகை என்றாலே ,
பொன்னகை;
அதனாலேதான் வரும்
புன்னகை;
விலை உயர்ந்த சுவை;
விவேகம் கலந்தால்
வேதனை தீர்த்து,
சிந்தனை உணர்த்தும் சுவை;
அது மனக்கவலை தீர்க்கும்
மாமருந்து;
நகை பொன்னால் செய்யவேண்டும்;
(கவரிங் நகை)
முலாம் பூசப்பட்ட நகை'
காமடி பீசு.
புஷ்வானம்;
பொன்மொழி நகைச்சுவை
ஆத்திரம் அதிகரித்தாலும்
அடங்கிவிடும்.
அதுவே விலை உயர்ந்த நகைச்சுவை;
பாரதியாரைப் பார்த்து அதி சினப்பயல்
என்றதற்கு
அவர் சொன்ன பதில்
கோபத்திலும்
அடங்கிய அடக்கமான வெளிப்பாடு;
காந்தி மதி நாதனைப்பார் , அதி சின்னப்பயல்.
இதிலே காந்தி ஒளி ,
மதி நிலவு,அறிவு,
நாதன் தலைவன்;
பாரதி பார்+அதி
பார் =உலகம்
அதி- மிகை
இந்த மொழி தமிழ்மொழி
எத்தனையோ நகை.
ஆனால் இன்று
take it policy aaka,
why this கொலைவெறியாக,
முலாம்பூசப்பட்ட நகையாக.
ஏனென்றால்
அலைமகள் சேர அலையும் கூட்டம்.
தமிழில் கலப்படம்.
குறுக்குவழியில் குறுகிய வட்டம்.
வடமொழி கூடா என்ற கூட்டம்,
அதை கை கொட்டி சிரிக்கிறது;
வெளிநாட்டு மோகத்தில் ,
குளிர்காய்கிறது;
அலைமகளின் ஆட்டம்
தமிழை கலப்படமாக்கி,
நகைச்சுவை தருகிறது.
1 கருத்து:
உங்களது ஆதங்கம் ரொம்பவும் சரி.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
கருத்துரையிடுக