என்னத்தே எழுதுவது,-நான்
என் எண்ணங்களை எழுதுகிறேன்.
செய்த புண்ணியங்களையா-அல்லது
சேர்த்த பாவங்களையா ?
சொன்ன பொய்களையா ,
சொல்லமுடியாத உண்மைகளையா?
என்னத்தே எழுதுவது-என்
எண்ணங்கள் எழுதுகிறேன்.
கொட்ட முடியாததை
கொட்ட நினைத்தாலும்,
சமுதாய அச்சத்தால்-சற்றே
அடங்கியே எழுதுகிறேன்.
அடங்கியே அடக்கியே வாசித்தாலும்,
அட்டகாச சிரிப்புக்கு
அமைதியாக எழுதம் எண்ணம்,
அலைஅலையாய் வந்தாலும்,
ஆசிரியர் ,ஆ சிறியரா?
என்ற எண்ணம் எழா வண்ணம்,-
எழுதுகிறேன்.
நெடுமால் திருமுருகா ,
நித்தம்-நித்தம்,
இந்த இழவா ?
ஏடு தொலையாதோ ,
எழுத்தாணி முறியாதோ,
வாத்தியார் சாவாரோ
வயித்தெரிச்சல் தீராதோ/
என்றே எண்ணம் கொண்ட
மாணவர் சமுதாயம் இருந்த
பள்ளியில் ,பணியேற்ற நாள் முதல்,
ஆசிரியர்கள் விலைபோகும்
பள்ளியில் பணியாற்றும் சூழலில்,
கற்க ஆர்வமுள்ளோர் அரசு பள்ளிகளை
விட்டு தனியார் பள்ளி செல்லும்போது,
படும் எரிச்சல் எப்படி எழுதுவதோ/
என்னத்தே எழுதுவது,
எண்ணங்கள் எழுதுகிறேன்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக