புத்தாண்டில்
புதிதாக யோசிப்போம்.
நமது தமிழ்நாட்டில்.
ஏன் இந்த கருத்து வேறுபாடு.
புரியவில்லை.
இறைவன் உண்டு /இல்லை
தேசிய மொழி ஹிந்தி வேண்டும் /வேண்டாம்.
திராவிடம்/ஆரியம்/
தை/சித்திரை.
புத்தாண்டு தினம்.
தலைவர் அண்ணா ,
அண்ணாவின் கொள்கைகள்
கட்சி தி.மு.க ., அ.மு..தி.மு.க., ம.தி.மு.க.,தே.தி.மு.க.,
அகில இந்திய ரீதியில்.
காந்தீயம் போற்றப்பட்டாலும்,
ஊழல் என்றே பெயர் பெற்றுள்ளது
காங்கிரஸ்.
பாரதீய ஜனதா பாராளுமன்ற
உறுப்பினர் ஊழல்,
மாநில கட்சிகள் ஊழல்,
ஊழலில் யாரும் தாழ்ந்தவர் இல்லை,
என்றும் குற்றவாளிகள் தான்
௨௫% முதல் ௩௦% சட்ட மன்ற/பாராளுமன்ற
உறுப்பினர்கள் என்றும் பல செய்திகள் .
ஊழல்கள் ,கருப்புப்பணம்,வெளிநாட்டுவங்கிகளில் சேமிப்பு,
பயங்கரவாதிகள்,நக்சலைட்டுகள்,கடத்தல்,தீவீரவாதிகளை
விடுவித்தல்.கூடங்குளத்தில்,வெளிநாட்டு சதி,
அனைத்தையும் மீறி நாட்டின் முன்னேற்றம்.
சோம்பேறிகளைத் தவிர அனைவருக்கும் வருமானம்.
ஊழல் என்றால் ஆயிரம் கோடி,லக்ஷம் கோடி,
திருடு என்றால் குறைந்தது 4பவுன் 5 பவுன்,
லக்ஷம் ரூபாய்கள்,
காவல் துறை என்பது களங்கப்பட்ட துறை என்பதை
காட்டாத சினத்திரை,பெரிய திரை கிடையாது.
பத்திரப்பதிவு என்பது பதிவாளரே பதிவு செய்ய,
பணம் பார்க்கும் துறை.
இது அனைத்துமே
மக்களால் சரி எனப்படுவதே .
இந்நிலையில் அனைவரும் ஒருங்கிணைந்து
நாட்டின் நலம் ஒன்றே பெரிது என நினைத்தால்,
நினைக்கவே ஆனந்தமாக உள்ளது.
பாரதம் பார் புகழும் தனிகரற்ற நாடாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக