என் சிந்தனையில் அக்கம் பக்கத்தில் உள்ள குடும்பங்கள் மற்றும் உறவினர்களின் குடும்பங்கள் என்று 1990 ஆம் ஆண்டுக்குப்பின் பார்க்கும் பொழுது பல புதுமண தம்பதிகள் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது/காதல் திருமணம் என பார்த்தால் நிம்மதியான மன நிறைவான மகிழ்ச்சியான தம்பதிகள் அரிதாகவே உள்ளது.எதோ ஒரு இறுக்கம் இருப்பதை உணரமுடிகிறது
எனக்குத்தெரிந்த ஒரு குடும்பம். வசதிக்குக் குறைவில்லை.அழகான குழந்தைகள்.மகிழ் வுந்து,பங்களா .திடீரென்று ஒரு நாள் காலை அவர்கள் வீட்டுமுன் சிறுகூட்டம். விசாரித்ததும் எனது மன வேதனைக்கு அளவே இல்லை.
அந்த வீட்டு அழகான மறமகள் ௨௨-௨௩ வயது தற்கொலை செய்துகொண்டாள்.
அந்த இரு அழகான ௨-௪ வயது குழந்தைகள் என் கண் முன்னே தோன்றின,
எப்படி இந்த எண்ணம் வருகிறது.உயிரை விட துணிச்சல் அதிகம் தேவை.
வசதி,பணம்,அனைத்து இருந்தாலும் மனிதன் எப்படி இந்த முடிவுக்கு வருகிறான்.புரியவில்லை.
எனது நண்பர்களில் ஒருவன் முத்து ஜோதிலிங்கம். எங்கள் நண்பர்களில் அவன் ஏழை.மதிய தரைக்குடும்ப்ம்.
வந்கித்தேர்வில் வெற்றிபெற்று அவனுக்குத்தான் வேலை கிடைத்தது.திருமணமும் ஆகியது.திடீரென அவன் தற்கொலை செய்தி கேட்டு அதிர்ச்சி.அவன் நண்பர்கள் எல்லோரும் வேலை இன்றி மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம்.ஏன்? இப்படி.
அவன் திறமை சாலி.நல்ல பாடகன்.நண்பர்களின் எண்ணிக்கை அதிகம்.வில்லு பாட்டு பாடுவன்.பொது அறிவு அதிகம் கல்லூரி தேர்வில் முதல் வகுப்பு.வங்கி போட்டித்தேர்வில் வெற்றி. வேலை.அதுவும் அந்த கால கட்டத்தில் வங்கி பணி புரியும் கடை நிலை ஊழியனுக்கே மிக மதிப்பு.ஸ்டேட் வங்கி வேலை.அனைத்தும் இருந்தும் அவனது முடிவு.ஏன்/எனது மனம் அழுதுகொண்டே இருக்கிறது.
கேடாரினாராயணன் என்ற பாட்டு ஆசிரியர் மகன்.மிகவும் கெட்டிக்காரன்.
குளத்தில் குளிக்கச்சென்றவன் வரவில்லை.பிணம் தான் கிடைத்தது.
இதுவும் ஒரு அதிர்ச்சி.
இவை ஏன் நடக்கின்றன?இவர்கள் மனம் ஏன் தடுமாறுகிறது.
மற்றவர்கள் பார்வையில் அவர்கள் பொறாமைப்படும் நிலையில் இருந்தவர்கள்.அவர்கள் போல் நாம் இலையே என்று தான் அனைவரும் நினைக்கும் நிலை.
அவர்கள் முடிவு? சோகம்.
இதுதான் விதியா?தலை எழுத்தா?புரியாத புதிர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக