காலை நேரம்.கொட்டும் மழை. என் தந்தை யாரின் நினைவு. அவர் மார்கழி மாத பணியிலும் காலை மூன்று மணிக்கே எழுந்து பல் தேய்த்து குளித்துவிடுவார்.அவர் எங்களையும் தூங்க விடமாட்டார். நாங்களும் அவர் கட்டளைக்குப் பணிவோம். கோவிலுக்கு செல்வோம்.
நான் இப்பொழுது தந்தை. என் தந்தை செய்த எரிச்சலூட்டும் செய்கை செய்யக்கூடாது அல்லவா.அவர் பல் தேய்க்கும் வாய் கொப்பளிக்கும் சத்தம் எரிச்சலூட்டும். ஆனால் இன்று எனக்கு என் தந்தை வயது,தொண்டையில் இருக்கும் கோழை வெளிவர அதே தொண்டை குரல் சத்தம். சத்தம் வராமல் துப்ப முயற்சித்தேன். குழந்தைகளை எழுப்பவில்லை. காரணம் அவர்கள் தொழில் நுட்ப கணினி பணியில் இருந்து தாமதமாக வந்து தூங்குகின்றனர்.எனக்கு காலை மூன்று மணிக்கே முழிப்பு வந்து விடும்.
மனைவியை எழுப்பி காபி கேட்க முடியாது. அவளும் குழந்தைகள் வரும் வரை முழித்து அவர்களுக்கு ஆகாரம் காபி கொடுத்து தாமத மாகத்தான் தூங்குவாள்.
என் தாயாரின் நினைவு.அவள் அம்மியில் ஆட்டுக்கல்லில் அரைத்தது. தண்ணீர் கொண்டுவருவது. அவளின் சுறுசுறுப்பு .கணவனுக்கு அக்காலப்பெண்கள் எப்படி அடங்கி இருந்தனர். அப்பா வந்தாலே அமைதி. அப்பாடா .பேசாம இருடா கோபம் வந்திடும். ஆனால் இன்று படித்து விட்டு பணம் சம்பாதிக்கும் இளம் தம்பதிகள்.இயந்திர வாழ்க்கை. அன்றைய அப்பா ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்து திரும்பி விடுவார், இன்று சூழ்நிலை வேறு.
கோபம் அன்று குடும்ப ஒற்றுமைக்கு அவசியமாக இருந்தது. இன்று பொறுமை இல்லை. கோபம் வந்தால் அக்காலம் போல் கூச்சல் கிடையாது.குழந்தைகளை அடிப்பது மிரட்டுவது எல்லாம் போய் குழந்தைகள் வளரும் விதம் அறிவுக்களஞ்சியங்களாக.ஆனால் அன்றைய குதூகலம் மகிழ்ச்சி,ஆனந்தம்,இன்றைய சமுதாயத்தில் குறைவே.முதியோர்கள் இல்லம் கூடுமே தவிர குறையாது.காலத்தின் கட்டாயச் சூழல்.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக