செவ்வாய், நவம்பர் 29, 2011

devotional thoughts

முற்பகல்  செய்தால் பிற்பகல் விளையும்.

மனிதனுக்குத்   தன் வாழ்நாளில்  பல விஷயங்கள் புரியாமல் கழிகின்றன.ஆனால் அவன் தன்னால் அனைத்துச் செயல்களும்  செய்யமுடியும் என நினைக்கிறான்.அவன் ஆணவம் ஒழிய ஒரு சிறு தூசி போதும் என்பதை ஒரு ஹிந்தி கவிதையில் படித்துள்ளேன்.
 கவிஞர் தான் தான் என்ற ஆணவத்துடன்,பால்கனியில் நின்று,
வேடிக்கை பார்த்துக்கொண்டிருத்தர். அப்பொழுது வீசிய காற்றில் ஒரு துரும்பு
கண்ணில் விழுந்தது.அந்த தூசி கண்ணில் இருந்து வரும் வரை உலகமே இருண்டு இருந்தது.  பத்து நிமிடம் அவர்  பட்ட பாடு தான் என்ற அகம்பாவத்தை

அடியோடு அழித்தது. ஒரு தூசியால் மனிதன் துடிக்கிறான். அவன் ஆணவம் அழிகிறது.இவ்வாறே பல விஷயங்கள் அவனுக்கு புலப்பட தூசி கண்ணில் விழுந்து உருத்துவதுபோல் நடைபெறுகிறது.
எப்படிப்பட்ட   உயர்ந்த பொருளாதாரத்தில்  உள்ளவர்களுக்கும் .உயர்பதவியில் இருப்பவர்களுக்கும்,கண்ணில் தூசிபடுவதுபோல் சில துன்பங்கள் ஏற்படுகின்றன. அதனால் தான் உலகில் மக்கள் அநியாயம் செய்ய அஞ்சுகின்றனர்.தவறு செய்பவர்கள் பாவ மன்னிப்பு கேட்கின்றனர்.அசோக சக்கரவர்த்தி நாட்டிற்கு பல நன்மைகள் செய்துள்ளார். அவர் எவ்வளவு கொடுமையான இரக்கமற்றவர் என்பதை சரித்திரம் படித்தவர்களுக்குத் தெரியும். அன்பின் சின்னமான தாஜ்மஹால் கட்டிய ஷஹ்ஜஹான் தான் மகளின் காதலன் கொப்பரைக்குள் ஒழிந்து  இருப்பதறிந்து அக்கொப்பரையை தீயில் வைத்து கொன்ற கொடுமையான செயலை  மதுரை தொலை கல்வியில் கல்வியியல் பேராசிரியர் வர்ணனை செய்ததைக் கேட்டு சிலர் கண்ணீர் வடித்தனர்.அதே ஷஹ்ஜஹான் சிறையில் அடைக்கப்பட்டு தான் கட்டிய தாஜ்மகலை காணமுடியாமல்  புதல்வனே கொடுமைப்படுத்தியதையும்
காண்கிறோம். இதைதான் முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்கின்றனர்.  இவைகளை எல்லாம் அறிந்தும் மனிதன் தவறுகள் செய்கிறான் என்றால் அவன் துன்பப்பட வேண்டியதுதான்.

இவ்வுலகில்  ஹரிச்சந்திரர்களுக்கும்  அமைதி  கிடையாது ஹிரன்யகச்யபுகளுக்கும் நிம்மதி கிடையாது.ராமனுக்கும் கிடையாது.

கருத்துகள் இல்லை: