செவ்வாய், நவம்பர் 29, 2011

நாம் இறைவனை நம்புவோம்

ஒவ்வொரு செயலிற்கும் ஒரு காரணம் உண்டு என்று நம்புவது சனாதன தர்மம்.ஐந்து லிட்டர் பால் கொட்டிவிட்டால் வருத்தப்படமால்  அது பூமிதேவிக்கு சமர்ப்பணம்  என்றும் அது இறைவனின் சித்தம் என்றும் அடுத்த செயலில் ஈடுபடுத்த ஊக்கமளிப்பது சனாதன தர்மம். அது கவனக்குறைவால் ஏற்பட்ட இழப்பு  என்று திருத்திக்கொள்ள வேண்டும் என்று மற்றவர்கள் கூறினாலும் அந்த இழப்பு கவனமாக இருந்தாலும் ஏற்படுவதுதான் ..இருந்தாலும் எல்லாம் அவன் செயல் என்ற படிப்பினை.

சாலையின் நடுமையத்தில் ஏற்படும் விபத்தை விட சாலையின் நடைபாதையில் செல்வோருக்கு விபத்துக்கள் ஏற்படுகின்றன.பால் குடிக்கும் போதோ வெற்றிலை போடும்போதோ இருமல் வந்து மடிந்தொரும் உள்ளனர்.
இதய நோய் உடனடி மரணம்.ஆஸ்மா பிராணா வஸ்தை  கொடுத்துக்கொண்டே இருக்கும். மரணம் சம்பாதிக்காது. புண்ணியவான் பேசிக்கொண்டே இருந்தான்.
திடீர் மார்பை பிடித்து வலி என்றான் உயிர் பிரித்துவிட்டது.இதில் இருந்தும் தாப்பா ஆண்டவன் சிலருக்கு ஞானம் அளித்து சிகிச்சை முறையால் பிழைக்க வைக்கிறான்.அது மருத்துவ விரயம்.திருமணச் சிலவு சுப் விரயம்.பணம் வைத்துக்கொண்டு நகைகள் வைத்துக்கொண்டு உயர்ந்த ஊதியம் பெற்றுக்கொண்டு வரன் வது  தேடி  அலையும் பெற்றோர்களைப் பார்க்கிறோம்.எதோ திடீர்னு மாப்பிள்ளை வீட்டார் வந்தனர் /பெண்வீட்டார் வந்தனர் .திருமணம் முடிந்து விட்டது. பணத்திற்கு எப்படி ஏற்பாடு  செய்தேன்  என்றே  தெரியவில்லை. அனைவரும் பாராட்டும் படி நடந்தது.என்பர்..

பல விஷயங்கள் மனிதன் எதிர்பாராமல் நடக்கின்றன.அதற்கு மனித முயற்சியும் இறைவன் அருளும் இணைந்தே உள்ளன.கடும் முயற்சி எடுத்தும் தன் நோக்கத்தில் வெற்றி பெறாதவர்கள் உண்டு.தன் விருப்பங்கள் நிறைவேறாமல் தன் நோக்கை மாற்றுபவர்களும் உண்டு.நான் பொறியியல் வல்லுனராக ஆசைப்பட்டேன் ..திடீர்னு மாமா என்னை மருத்துவம் படிக்க வலியுறுத்தினார். என்று மருத்தூவராவதும்   அவ்வாறே மருத்துவர் ஆக விரும்பியவர்  வேறு துறைக்கு மாறுவதும் விதிப்படியாக அமைவது.சிலருக்கு தான் விரும்பியதெல்லாம் நடக்கும். சிலருக்கு விரும்பாததெல்லாம்  நடக்கும்.வெளிநாட்டில் வேலை கிடைக்க கடும் முயற்சி எடுத்தாலும் வெளிநாடு செல்ல முடியாத நிலை. சிலர் வெளிநாட்டுப்பயணம்  என்ன என்பதை  கனவிலும் நினைக்காதவர்கள் வெளிநாடு செல்வர்.இதெல்லாம் எப்படி?
இந்நிலையில் எல்லாம் அவன் செயல் என்று ஆண்டவன் அளித்த கடமை அல்லது துன்பம் அல்லது இன்பத்தை மன மகிழ்ச்சியுடன் ஏற்று மன திருப்தி யுடன் இருக்க  ஊக்கமும் ஆக்கமும் அளிப்பது சனாதன தர்மம்.
அதுவே கீதாசாரம்.எது நடந்ததோ நன்றாகவே நடந்தது.எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்குமோ நன்றாகவே நடக்கும்.

In God We Trust  இது  ரூபாய் நோட்டிலும் நாணயத்திலும் காணும் வாசகம். இது எந்த  நாட்டில்.பாரத நாட்டின் பக்கம் பார் முழுவதையும் திரும்பிப்பார்த்து
மதிப்பளிக்கச்  செய்த  சுவாமி விவேகனந்தர் சகோதர சகோதரிகளே என்று ஆன்மீகச் சொற்பழிவு   செய்த நாடு.

கருத்துகள் இல்லை: