வியாழன், ஜனவரி 26, 2017

குடியரசு நாளில்
 நாம் நாட்டின் குறிப்பாக தமிழகத்தின்
வரலாறு பற்றி சிந்தித்தால்
தீர்க்கதரிசி பாரதியின் பாட்டு
நமக்கு நினைவிற்கு வரும்.
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவருக்கும் தாழ்வே".
  சேர சோழ பாண்டிய நாடு.
மண்ணிற்கு ஒரு குணம்.

வெட்சி நிறைகவர்தல் ;
மீட்டல் கரந்தையாம்.
வட்கார் மேல் செல்வது வஞ்சி;
எயில் காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை--அதிரப்
பொருவது தும்பையாம்;
போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்.
இப்படி நில அமைப்பு.
  கல்வி பண்பாடு உள்நாட்டு
வெளிநாட்டுத் தொடர்பு
என்ற சிந்தனையில் பார்த்தால்
பாரதம் என்ற தேசிய சிந்தனை
விடுத்து  குறுகிய  தமிழன் என்ற சிந்தனை நாட்டை வளர்க்குமா?
 பல்லவர்களாட்சி
தெலுங்கர்கள் ஆட்சி
சரபோஜி மராட்டிய ஆட்சி
இவர்களது ஆட்சியில்
தமிழ் நாடு வளம் பெற்றதா
இல்லையா?
தமிழ்   மொழி வளர்ந்ததா இல்லையா?
மதுரையில் மக்கள் தொகையில்
சௌராஷ்ட்ர மொழி பேசுவோரின் வாக்குகள் தான்
அந்த நகர மக்கள் பிரதிநிதியை நிர்ணயிக்கும்.
இங்குள்ள  தமிழ் தாய்மொழி இல்லாதவர்கள் தமிழை மிகவும் வளர்த்துள்ளனர்.
நாயக்கர்கள் ஆட்சியில்
தெலுங்கு கற்பிக்கப்படவில்லை.
மராட்டிய மன்னர் ஆட்சியில்
மராட்டி கற்பிக்கப்படவில்லை.
 இங்கு சிந்திக்க வேண்டியது
கல்வி வியாபாரத்திற்காக
தமிழ் வழிக்கல்வி    மூடப்பட்டு
ஆங்கிலப்பள்ளிகள் அதிகம்
திறக்கப்பட்டு தமிழ்  வழி வேலைவாய்ப்பில்லை
என்ற நிலை திராவிடக்கட்சிகள்
ஆட்சி வந்தபின்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
என்று இந்திப் போராட்டத்தில்
பல இளைஞர்களை பலியிட்டு
ஆட்சி பிடித்தபின்
அவர்கள் திறப்பது ஆங்கிலப்பள்ளிகள்.
 தமிழ்  தமிழ் என்று வாக்கு வாங்க.
சிந்தியுங்கள்.
தேசீயம் பாரதம்
இந்திய தேசம்
என்பதே நம்மை வளர்க்கும்.

புதன், ஜனவரி 25, 2017

திங்கள், ஜனவரி 23, 2017

மாணவர்கள் இடையில் அராஜக அரசியல் வாதிகள்.

முகநூலில்    மட்டும் தொலை தொடர்பு  சாதனங்களில்

தவறான செய்திகள்,படங்கள் போட்டு
நாளுக்கு நாள்  நம்பகத் தன்மை இழந்துவருகிறது. இழந்துவிட்டது,

சனி, ஜனவரி 21, 2017

ஜல்லிக்கட்டு போராட்டம்.

 ஜல்லிக்கட்டு  போராட்டம்
 அதிக மனமார்ந்த ஆதரவு
தன்னிச்சையான  போராட்டம்.
இதே போராட்டம் கிரனைட் ஊழல்,
டாஸ்மாக்  ஊழல்,
௨ஜி ஊழல்,
நீதிமன்ற தீர்ப்பு  ஒத்திவைப்பு
வராதது,
அம்மா மரண சந்தேகங்கள்
லஞ்சம் , ஆலய நிலங்கள் ஆக்கிரமிப்பு ,
மணல் கொள்ளை ,
சகாயம் அளித்த அறிக்கை மீது நடவடிக்கை
பல நாட்டுத்துரோக ,
இறைவன் விரோத செயல்கள்
மின்வாரிய ,மாநகராட்சி ஊழல்கள்,
இன்னும் எத்தனையோ.
இறைவா! நீ தான் ஒரு எழுச்சியைத்தரவேண்டும் .
நாட்டை காப்பாற்ற உன்னிடமே சரணம்.
இப்படியே செய்தால்   இறை நம்பிக்கை குறையும்.
தர்ம நம்பிக்கை குறையும்.
கோடிகள்  சேர்த்து நாடுக்காக்கா  அரசியல் கட்சிகள்
இன்றல்ல நேற்றல்ல வரலாற்று நிகழ்ச்சிகள்.
இறைவனே சரணம் !

வியாழன், ஜனவரி 19, 2017

தினம் தினம்

   தினம் தினம் ஆட்டுக்கறி
   விற்கப்படுகிறது.
சேவல் சண்டை , ஜல்லிக்கட்டு
போன்ற பாரம்பரிய பண்பாட்டு
விளையாட்டுக்குத் தடை.
இது முட்டாள் தனமப்பா.
நீதிபதிக்கு என்னாச்சு?
நிதிபதி ஆகிட்டாரா ?
வெளிநாட்டு மோகம்
பாரதீய கலாச்சாரத்தை அழிக்குமா?
பொறுத்தது போதும் பொங்கி எழுந்தாச்சு.
மனசாட்ட்சியுள்ள காவல் அதிகாரிகளாக
செயல்பட்டு அமைதிப்போராட்டம்
வெல்ல வழிவிட்டால் போதும்.
காளை வளர்ப்பது ஒருகலை.
அதை அடக்கி வீரம் வீரமுள்ள
இளைஞர்கள் உருவாக்க வேண்டுமே ?
ஆண்டுக்கு ஒருநாள் காளை விளையாட்டு .
ப்ளுகிராசே ! பீட்டாவே!
தினம் தினம் நீ திங்கும்
மீன்கள், ஆடுகள், ஒட்டகம் ,
கடல் ஜீவராசிகள் ,
பைத்தியக்கார எதிர்ப்பு.
மனசாட்சி இல்லா சட்டமேதைகள்.
நீதியா இது ?
நீதி வாழ  ஜல்லிக்கட்டு
நடத்த தீர்ப்பு வேண்டும்.




  தினம் தினம் பலவித
மாமிசங்கள் உயிர்ப்பலி
ஊர்வன, பறப்பன, நடப்பன ,
முட்டை, முட்டடைபோட்ட கோழி ,
சேவல்,  காடை என பலியிடும்
மனித  இனம் .
ப்ளுக்ராஸ் , பீட்டா  தெரியுமா ?
தெருநாயிக்கு பாதுகாப்பாம்,
அது துரத்தி எத்தனை விபத்துக்குள்
தெரியுமா  இந்த பீட்டாவுக்கு.
எலிக்குன்ஞ்சு அடித்ததற்கு
கல்லூரி அழகுப் பெண்கள்
ப்ளுகிராஸ் சென்றதும்
காவல்துறை விசாரிப்பு,
அந்த எலிகள் எங்கள் வீட்டு
தொலைகாட்சி பெட்டி ,
துணிமணிகள்  , நோட்டுகள்,
நோட்டுப்புத்தகங்கள்
கடித்து குதரவுவது தெரியுமா ?
கொசுவும் ஒரு ஜந்துதானே ?
கரப்பான் பூச்சியும் ஜந்து தானே
ஹிட் விளம்பரம் தடை செய்யுமா?
முட்டாள் ப்ளு கிராஸ்,பீட்டா,
சட்டம் வீணாக விலங்கினங்கள் காக்கிறதாம்.
ஆண்டவன் படைப்பில்
மாமிசம் மட்டுமே சாப்பிடும் மிருகங்கள்,
பூனை வளர்ப்பதே எலித்தொல்லை நீங்க,
அரசர்கள் வேட்டை ஆடுவது
கொடிய மிருகங்கள் வதம் செய்ய.


செவ்வாய், ஜனவரி 17, 2017

ஜல்லிக்கட்டு.

 ஜல்லிக்கட்டு

தேவைதான் . ஆனால்

போராட்டத்தில்
நாட்டை துண்டாடும் கோஷங்கள்.
மோடியைத்திட்டுவது
சென்ற ஆண்டு ௨௦௧௧இல்
காங்கிரஸ் -தி.மு.க இரண்டும்  சேர்ந்து செய்த தடை .
மோடி என்றும் , தனித்தமிழகம் என்றும்
தேசீயம் உடைக்கும் கோசம்
ஆந்திராவில் கோழிச்  சண்டையில் இல்லை.
அங்கு முதல்வரே ஆதரவு.
இங்கு மாநில அரசே தடைக்கு ஆதரவு.
சிந்திப்பீர்.
ராஜா தன மாட்டுடன் களத்தில்.
௨ஜி ராஜா காலத்தில் வந்த தடை.
பாரதம் துண்டாடும் கோஷங்கள் சரியில்லை.
தேவை இல்லை.
இது வெளிநாட்டு சதி.
ஒரே போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி.
தேச விரோத கோஷங்கள்
தேசீயக் கொடி விரோத முழக்கங்கள்
கண்டிக்க தண்டிக்க வேண்டியவை.
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கு.
போலீஸ் தடியடி வேண்டாம்.
அது மாநில அரசின் அடக்குமுறை.
சிந்தித்து தெளிய வேண்டும்.

திங்கள், ஜனவரி 09, 2017

இறைவன்

காலை வணக்கம்.
இறைவன் காட்சிப்
பொருளா?
உணரும் மஹா சக்தியா?
ப்ரம்மானந்தம் என்கின்ற 
நிலையில்
அவர் தன்னை முதலில் பல
வகையிலும் உணரவைக்கிறார்.
கந்தர் அநுபூதி
ஈஷ்வராநுபூதி
இது லௌகீகம்.
அலௌகீகம் என்பது
மெய்மறந்த உயர்நிலை.
தன்னையே மறத்தல்.
ஆண்டவன் வேறா?
நான் வேறா?
ஆத்மா வேறா?
பரமாத்மா வேறா?
மனிதன் அனைவரும்சமமா?
நாம் சொல்லமுடியுமா?
ஒருவரைப் பார்க்கிறோம்.
நமக்கு மிகுந்த மரியாதை
தோன்றும் .
மற்றொருவரை பார்க்கிறோம்
நம்மையும் நம் கட்டுப்பாட்டையும் மீறி
சிரிப்போம் கோபமோ மகிழ்ச்சியோ
அல்லது அவரை விட்டு விலகியோ
அல்லது. சேர்ந்தோ இருக்கத் தோன்றும்.
இந்தவுணர்வுகள் எப்படி தோன்றும் ?
புரியாத புதிர்.
குழந்தைகள் நம் வீட்டிற்கு வரும்
உறவினர்கள் நண்பர்களிடம்
ஒரே மாதிரியான பழகுகின்றன?
பலரிடம் பயம்.அந்த மாமாவை கூப்பிடட்டு மா.?அழுகும் குழந்தை
அழுகை நிறுத்தும்.
சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தை
சாப்பிடும்.
சிலரிடம் மட்டுமே அன்பு.

சிலரிடம் அந்தரங்க அன்பு.
சிலரிடம் மட்டுமே அன்பு.
சிலரை பார்த்தாலே எரிச்சல்.
இந்த மனநிலையில் ஒரு விசித்திர நிலை.
நம்மை வெறுத்து துரோகம் செய்பவர்களிடமும் அன்பு.
இரத்த பந்தங்கள்.
இவைகள் அனைத்துமே
உணரும் நாம்
நம்தன்னிலைகளை மறந்து
அமர்ந்து தியானம்.
அதுவே மெய்ஞானம்.
இறைவன் உணர்வு
இறையன்பு.
இது உண்டியல் காசு போட்டு
பாலாபிஷேகம் தங்கத்தேர்
போன்ற கமர்சியல் பக்தி அல்ல.

சனி, அக்டோபர் 29, 2016

ஏக்கம்

Kalyaணம்  செய்யாதோருக்கு ஏக்கம் ஒன்றே.
செய்தவர்களின்
பெருமூச்சு  பட்டால் தான் .
எது செய்தாலும்
ஏக்கப் பெருமூச்சு இருக்கத்தான் செய்யும்.
ஏப்பத்திலும்
பசி ஏப்பமாம் புளி ஏப்பமாம் .
மூச்சினிலும் ஏக்கப் பெருமூச்சு.
பணக்கார ஏக்கம்
ஏழை ஏக்கம்
பாருங்கள்
இரண்டு பட்ட வையகம்
இனிப்பும் உண்டு கசப்பும் உண்டு.
அன்பும் உண்டு வெறுப்பும் உண்டு.
வெறுக்கபப்பட்டவர்களை விரும்புவோரும் உண்டு.
கை நாட்டுஆட்சியை
விரும்வோரும் எதி்ப்போரும் உண்டு.
கை நாட்டு சுய நினைவா ?
கட்டாயமா ?
பார்த்த பொது மனிதன்
வார்டு கண்ணாடி ஓட்டையில் கூட இல்லை
என்ன மர்மமோ ?
புரியாத புதிர்.
பொது்தேர்தல் பொதுநோக்கர்கள் வேண்டாமா !
சிந்திப்பீர்கள்

புரியவில்லை

நான் பேசுவது புரயவல்லையா !
பேசத்தெரியவில்லையா ?
உலக நடை முறை புரியவில்லையே !
பாரதத்தை கொள்ளை அடிக்க வந்தவர் பலர்.
செல்வச் செழிப்பான பாரதம்
ஏன் தன் தொழில் வளம் மறந்து
மொழிவளம் மறந்து
கலை வளம் மறந்து
உயர் பண்பாட்டினை மறந்து
ஆங்கிலம உயர்ந்து என்ற நிலை
வரக் காரணம்
ஜாதிக் கொடுமைகளா ?
சாதனைகள்  அறியா
புரியா
தெளியா
மன்னர்களா ?
பச்சோந்திகளா ?
சுயநலமுள்ளோர்களா ?
பங்காளிப்பகையா!
இன தேச துரோகிகளா ?
ஆன்மீக ஏமாற்றுக்காரர்களா !
புரியவில்லையே!
இறைவழிபாடு ஆடம்பரம்
அந்த இறைவனருளாலா ?
புரியாத பேச்சா ?
அறியாத வாக்காளரகளா .?

செவ்வாய், அக்டோபர் 25, 2016

வித விதமான மாண்புகள்.

தலாக்  இஸ்லாமிய  தர்மம்  அதாவது  அறம்.

கிளி போல  ஒரு  மனைவி இருந்தாலும்  குரங்குபோல் ஒரு  வைப்பாட்டி---பெரிய  மனிதர்கள்  கௌரவம்.
மாற்றான்  மனைவிக்கு  வாழ்வளிப்பது  ஒரு புரட்சி.
மாற்றான்  கணவனை வைத்து  சிலை  வைப்பதி புரட்சி  மார்க்கம்.
மனைவி  துணைவியாகி துணைவியின்  மனைவி  என்பது  ஒரு  ரகம்.

ஆண்மை இல்லாதவனுக்கு  திருமண செய்வித்து அவளிடம்  இன்பம்  காண்பது  ஒருவகை.

அறுபது  வயதுக்குமேல்   ௨௯ஐ  திருமணம் செய்வது  சீர்திருத்த  பகுத்தறிவு.

இப்படி  பார்த்தால் இராமாயண காலத்தில்  இன்று வரை  ஆட்சி செய்வோர் அனைவருமே

தனிப்பட்ட  வாழ்க்கையில்  தரமானவர்களா ?  என்பது கடினம்.மனசாட்சி  இல்லா விஷயங்கள்,