ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

நீதிகிடைக்கா ஏழை மக்கள்.

ஒரு   ஏழை வீட்டின் அருகில் உள்ள இரண்டடி -மூன்றடி  அகல 15 அடி நீள  இடத்தை ஆக்கிரமித்தால்  அந்த ஏழையால் அதை அகற்றமுடியாது.நகராட்சியிலிருந்து வருகின்ற கடிதம்  இதுதான்  உங்கள் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றம் மூலம் செல்லவும்.
நீதிமன்றம் மூலம் செல்ல வசதீ இல்லை என்றால்  அந்த ஆக்கிரமிப்பை அகற்றமுடியாது.

அந்த ஏழை வசதிபெற்று  வீடு  இடித்துகட்ட முயன்றால் மேலும் இரண்டடி தள்ளி கட்ட வலி உறுத்தல் .நியாயமில்லா தவர்கள்  ஆக்கிரமிப்பு ஏழை நிலம். மீட்க வழி இல்லை.

நியாயமில்லா நகராட்சி சட்டம்.

ஞாயிறு, ஜனவரி 27, 2013

இன்றைய  பெற்றோர்

 அன்புமகன்  / மகள்  அன்னியமண்ணில்,

அன்பகலா  பேரன் பேத்திகள் ,

காண முடியா பெற்றோர்கள்.

உற்றாரைப்பிரிந்து,
உறவினர்களைப் பிரிந்து,
உற்ற நண்பர்களைப் பிரிந்து,
ஊராரைப்பிரிந்து,
பெற்றோரைப்பிரிந்து,
தனிமையில் தவிக்கும்
இளைஞர்கள் .


இங்கோ,நொந்திருக்கும் பெற்றோருக்கு,
வயதான காலத்தில் தவிக்கும்
தனிமை,
அங்கு பேற்றோறோரின்  பிரிவில் வாடும்,
குழந்தைகள்.
தாத்தா -பாட்டி அன்புக்கு ஏங்கும் மழலைகள்.

இங்குள்ள  மகன்கள்,
பெற்றோர் சேர்ந்திருக்க முடியா நிலை.

வயதான தாய்-தந்தை,
பேரன்-பேத்தி உடன் இருந்தும்
   கொஞ்ச முடியா நிலை.
பார்க்க முடியாநிலை.

அன்னியமண்ணில் ,
தாய் மண்ணில்  அந்நியம்தான்.














புதன், ஜனவரி 23, 2013

அவனியில் ஒற்றுமை ,அஹிம்சை வளர்ப்போம்;

இறைவன்  படைப்பில் ,
மனிதன்  உயர்ந்தவன்.
ஔவை  சொன்னபடி ,
அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது.
ஆனால் ,மனிதர்கள்  மனிதர்களாய் ,
இல்லை என்றால் ,மானிடப்பிறவி 

மண்ணுலகில்  பயனற்றதாகும்.

மதம் என்ற பெயரில் எத்தனை பிளவுகள்,
மதம் பிடித்த யானை போல் ,
மானிடர்களைத் தாக்கும் மதம்.
மனிதனை மிருகமாக்கும் மதம்.
சிவன் காக்கும் கடவுள் என்றாலும் 
அல்லா அருளும் கடவுள் என்றாலும்,
ஏசு  இறங்கும் கடவுள் என்றாலும் 
இறப்பு என்றால் இறைவனடி சேர்த்தல் 
என்பதே பொது தத்துவம்.
மதமும் மரிப்பவனை காப்பதில்லை.

பணம் -பணம் என்றாலும்,
பயனில்லா  வாழ்க்கை இது.
ஆவிபோவது நிச்சயம்.
கோடிகள்,கருப்புப்பணம் ,
அதிகாரம்,மருத்துவப்படி,
பாது காப்புப் படை  இருந்தாலும்,
பறக்கும் உயிரைப் பிடிக்க முடியாது.
வரும் நோய்களைத் தடுக்க முடியாது.
விபத்துகள் எப்படியும் வரலாம்.
கள்ளப்  பணமோ ,நல்ல பணமோ,
கறுப்புப் பணமோ ,அதிகார பலமோ,
காலனிடம் இருந்து காக்காது.

அறிவயல் விந்தைகள் ஆயிரம் காணலாம்.
ஆவிபிரிந்த பின் உயிர் வருவதைக் காணமுடியாது.

இருக்கும் வரை இறைவனை வழிபடுவோம்.
நன்மைகள் செய்வோம்;நேர்வழி நடப்போம்.
சத்தியம் காப்போம் ;அறவழி நடப்போம்.
அன்பு காட்டுவோம்;பண்பாக இருப்போம்.
உதவிகள் செய்வோம்;
விதிவழி செல்வது இயற்கை.
அதை உணர்வோம்;
அவனியில் ஒற்றுமை ,அஹிம்சை 
வளர்ப்போம்;


உபவாசத்தால் ஏற்படும் நன்மைகள்=


உபவாசத்தால் ஏற்படும் நன்மைகள்=

   உபவாசம் என்பதும் தக்கவர்களின் வழிகாட்டுதலால் இருக்கவேண்டும்.

உபவாசம் இருக்கும் நாளில் குடல் ஒய்வு பெறுகிறது.
  1. வாரம் ஒருமுறை உபவாசம் இருப்பவர் தன்னையும் அறியாமல் ஒரு தெய்வீக சக்தி பெற்று முகத்தில் ஒரு ஒளி தேஜஸ் பெறுகிறார்.
  2. அவர் மனதில் தெய்வீகப் பற்று ஏற்படுகிறது.
  3. உபவாச காலத்தில் ஆண்டவனைப்பற்றிய சிந்தனை அதிகமாகிறது.
  4. இறைவனை சரணாகதி அடையும் நிலையில் லௌகீக கவலைகள் பறந்துவிடுகின்றன.
  5. வயிறுநிறைய  சாப்பிடுபவனுக்கு ஒரு தனிமயக்கம்தான் ஏற்படும்.அவன் ஆசைகளில் தவறான வழிகளைப் பிபற்றுகிறான்.வாழ்க்கையில் ஒரு அரக்க குணம் ஏற்படுகிறது.
  6. உபவாசம் தெய்வீக இன்பத்தையும் பிரம்மானந்தத்தையும் தருகிறது.
  7. அலௌகீக  ஆனந்தம் அநுபூதி உபவாசம் இருப்பதை அதிகரிக்கிறது.
  8. அந்த மெய்யுணர்வு வர்ணிக்க இயலாது.
  9. உபவாசகருக்குத் தெரியாமலேயே வரும் இறைவனின் மேல் ஏற்படும் பக்தி ,தெய்வீக சக்தி,உபவாசம் இருப்பவரை இந்த அழியும் உலகில்  இறைவனின் பேரரசை ஆளும் தன்மை பெறுகிறான்.
  10. அவர் உள்ளத்தில் தோன்றி வெளிப்படும் கருத்துக்கள் புற இருளைப்போக்கி   ஒரு ஆன்மீக ஒளி வீசச் செய்யும்.

செவ்வாய், ஜனவரி 22, 2013

உபவாசம் தொடரும் .-பகுதி -2

 ஸ்ரீ சுவாமி  சிவானந்த எழுதிய "practice of nature cure"  நூலில் உபவாச சிகிச்சை என்பது 14வது அத்தியாயம்.


உபவாசம் நமது உடலில் உள்ள கழிவுகளை  வெளி ஏற்றுகிறது .உபவாசத்தால் சக்தி  அதிகமாகிறது.

உபவாசம் செய்து பிரார்த்தனை செய்தால் நோய்கள் இல்லா வலிமை மிக்க உடல்  ,ஆரோக்யமான உடல்,இறை சக்தி கூடுகிறது.

உபவாசம் இருந்து தியானம் செய்யுங்கள் --உணவில் சுயக்கட்டுப்பாடு அவசியம். அதற்கு இறைவனின் அச்சத்தால் ஏற்படும் விரதம் வழிவகுக்கும்.
இக்காலத்தில்  அறிவியலுக்கு முக்கியத்துவம் தருவதால்,ஆன்மீக பயம் நீங்கி

தவறுகள் நிகழ்கின்றன..அறிவியலில் மாற்றம் உண்டு.ஆன்மீக இறைதத்துவங்களில் மாற்றம் இல்லை.

இறைதத்துவங்களில்  இயற்கை நம்மை குணப்படுத்துவதில் நான்கு தத்துவங்கள்  என்று நம் நாட்டு வைத்திய முறைகள் கூறுவதாக சுவாமிஜி எழுதிஉள்ளார்.
அவை--1.சூரிய வெளிச்சம்.2.புதிய காற்று.3.உபவாசம்.4.ஒய்வு.

நோயின் அறிகுறிகள்--1.சளி,2.தலைவலி 3,லேசான காய்ச்சல்,4.சிறிது இருமல் 5.சுமை ஏறிய  வயிறு.

மேற்கூறிய ஆபத்துக்களைத் தடுக்கவே நம் சாஸ்திரங்கள் கூறியவை.
தெய்வீக அருள் பெறும்  உபவாசங்கள்.உண்ணாநோன்பு.

ஏகாதசி,2.பிரதோஷம்,3.பௌர்ணமி,4,அமாவாசை,5.கார்த்திகை,சோமவாரவிரதம் என்று வார விரதங்கள் முதலியவை.

உபவாசம் தொடரும் .-பகுதி -2

விரதம் உபவாசம் மிகவும் பயனுள்ளதாக ஆயுர்வேதம்,சித்த மருத்துவ முறையில்

நம் முன்னோர்கள்  அடிக்கடி விரதம் இருப்பார்கள்.அன்று எதையும் சாப்பிடமாட்டார்கள்.சிலர் பழரசம் அருந்துவார்கள்.
அவ்வாறு செய்வது ஒரு சிகிச்சை என்பதை அவர்களோ,அவர்களுக்கு முன்னோரோ கூறவில்லை. அவர்கள் ஒவ்வொரு அறிவியலையும் ஆன்மீகத்துடன் இணைத்து தெய்வீக பக்தி என்றே கூறிவந்துள்ளனர்.
  நகத்தைக்கடிப்பது ஆசாரம்,மடி என்றதால் ஏளனம் செய்தோம்.

இன்று அறிவியல் ஆராய்ச்சிப்படி  உபவாசம் என்பதும்  ஒருசிகிச்சை என்று கூறப்படுகிறது.
நீராகாரத்திற்கு  மகத்துவம் அளிக்கப்படுகிறது.
ஜீரண  உறுப்பிற்கு ஓய்வு அளிக்க உண்ணாவிரதம் .
அன்று சாப்பிடும் எண்ணம் தோன்றாது இருக்க .
சாப்பிடும் ஆசை வராதிருக்க இறை பக்தி ஆன்மிகம்  உறுதி அளித்தது.

நமது நாட்டின் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள் ஆன்மிகம் என்ற பயத்துடன் உடல் ஆரோக்யத்திற்கு முக்கியத்துவம் அளித்துவந்துள்ளது .அதில் ஏகாதசி,கார்த்திகை விரதம் உபவாசம்  மிகவும் பயனுள்ளதாக ஆயுர்வேதம்,சித்த மருத்துவ முறையில் விளக்கப்பட்டுள்ளது.
உபவாசத்தின் முக்கியத்துவத்தை அடுத்த பதிவில் காணலாம்.




சனி, ஜனவரி 19, 2013

        மனிதனின்  பேராசை தான் மனிதனை  மிருகம் ஆக்குகிறது. அவன் மற்றவர்களுக்கு துரோகம் செய்கிறான்.மற்றவர்கள் சொத்தை அபகரிக்கிறான்.கொலை செய்கிறான்.பொய் பேசுகிறான்.குற்றங்களையும் ,குற்றவாளி களையும் மறைக்கிறான்.ஏமாற்றுகிறான். பாவங்கள் செய்கிறான். பொறாமைப் படுகிறான்.கோபப்படுகிறான். வெறுக்கிறான்.துன்புறுத்துகிறான்.கருமிஆகிறான் .அதனால் தான் புத்தர் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார். ஆசைப்படுபவனால்  மனதை சஞ்சலப்படுத்த முடியுமே தவிர  மனக்கட்டுப்பாடு  என்பது இயலாத காரணம்.

 பற்றற்ற  வாழ்க்கை என்பது வேறு.தேசப்பற்று,இறைப்பற்று,மொழிப்பற்று.  ஆசை,பேராசை வேறு.இந்த பற்றை த்தான் உலகப்பற்று.லௌகீகம் என்கின்றனர். உலகத்தில் தாமரை இல்லை தண்ணீர் போல் ஒட்டியும்,
ஒட்டாமல் இருக்கவேண்டும்.  
மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.நடைமுறையில்  மனிதர்கள்  தன்மானம் இழப்பதை விரும்புவதில்லை. அப்பொழுது தான் வெறுப்பும் ,பகையும் அதிகமாகிறது. சிலருக்கு மற்றவர்களை அவமானப்படுத்தி மட்டம் 
தட்டுவதில் எவ்வளவு ஆனந்தம். 
      

வியாழன், ஜனவரி 17, 2013

உள்ளம் மனித உள்ளம்,

உள்ளம்  மனித உள்ளம்,
உலகில்  அறியமுடியாதது.
  புரிய முடியாதது.
நல்ல  உள்ளம்  எப்படி இருக்கும்?
அது மனிதனின் வளர்ந்த விதம்.
சூழல்,ஆசை, அவன் உற்றார்,உறவினர்,
கல்வி,மனதின்  இயற்கை  குணம்,
பரம்பரை,நட்பு,என்ற  அடிப்படையில் 
மாறும்.

அமைதியும் பொறுமையும் ஒருவனுக்கு  இயற்கையாக அமையும்.
சிலரின் முகம் அமைதியாக இருக்கும்.
பேச்சு தித்திக்கும்.
அவன் பெரும் உதவியாளன் போல் தோன்றும்.
அப்படிப்பட்டவனின்  செயல்கள் சுயநலத்தின் ஆணிவேராக இருக்கும்.


சிலரைக் காணும்போதே மரியாதை தோன்றும்.
சிலரைக் காணும்போதே ஏளனம் செய்யத்தோன்றும்.
சிலரைக் காணும்போதே வெறுப்பு தோன்றும்.
சிலரிடம் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டாகும் .
சிலரின் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.

ஒரே சொல் ஒருவர் கூறும்போது ஆறுதலாக இருக்கும்.
அதே சொல் மற்றொருவர் சொல்லும் போது கேட்கவே பிடிக்காது.
சிலரைப்பார்க்கப் பிடிக்கும்.சிலரைப்பார்க்கவே  பிடிக்காது.

சிலரிடம் உதவி கேட்கத் தோன்றும்.சிலரிடம் கேட்கத் தோன்றாது.
சிலரின் முகம் தெய்வீகமாக காட்சி அளிக்கும்.
சிலரின் முகத்தில் வில்லத்தனம் தோன்றும்.
உதவி செய்பவர் யார்?புரியாது.
சிலரிடம் கேட்காமலேயே உதவி கிட்டும்.
சிலரிடம் கேட்டாலும் கிட்டாது.
சிலர் நட்பு பாராட்டி,வெறுப்பு காட்டுவர்.
சிலர் ஏமாற்றவே நட்பு பாராட்டுவர்.
தேவைப்பட்டால் தலையில் வைத்துக் கொண்டாடுவர்.
காரியம் ஆனதும் உதறிவிடுவர்.உயிருக்கே உலைவைப்பர்.
அது மனைவி ஆகவும் இருக்கலாம்.மகனாகவும் இருக்கலாம்.
மகளாகவும் இருக்கலாம்.மருமகளாகவும் இருக்கலாம்.
நண் பனா கவும் இருக்கலாம்.

பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்று 
அனைவருக்கும் நல்லது செய்யும் மனம் படைத்தோரும் 
நானிலத்தில் உண்டு.

சூழ் நிலைக்கேற்று  அனைவரையும் கவர்ந்து ஏமாற்றுவோரும் உண்டு.
நன்மை செய்தே  தீய பெயருடன் மற்றவர்களின் வெறுப்புடன் வாழ்வோரும் உண்டு.
தீமை செய்தே  நல்ல பெயருடன் வாழ்பவரும் உண்டு.

ஒரு வீட்டில்  மிகவும் உழைத்து அனைவரின் தேவை அறிந்து 
தன்னலம் கருதாமல் இருப்பவர்களை,அவனால் ஆதாயம் பெற்றவர்கள் வெறுத்து ஒதுக்குவதும் உண்டு.

உற்றாருக்கும்,ஊருக்கும் ,உலக  நடைமுறை நீதிக்கும் பயந்து உண்மை மறைப்பவரும் உண்டு.
தன்னலமே பெரிது என்று சத்தியம்,நேர்மை நாணயம்,அன்பு,என்று அனைத்தையும் குழி தோண்டி புதைப்பவர்களும் உண்டு.
 அன்பு காட்டி காரியம்  சாதித்தவுடன் ,வெறுக்கும் மனைவியும் உண்டு,
தன் தாயார்வீட்டின் தவறுகளை,இழிசெயல்களை மறைத்து,
  செய்யும் நன்மைகளை மறைத்து,சிறிய தவறுகளையே பெரிது படுத்துவோரும் உண்டு.
மனிதர்கள் தான் அவர்கள் குணம் தான் அறியமுடியாது.

எல்லாம் ஆண்டவன் செயல் என்று பற்றற்ற முறையில் எதையுமே கண்டுகொள்ளாமல் வாழ்பவர்கள் ஞானிகளாவார் .
தாமரை  இல்லை தண்ணீர்போல் ஒட்டாமல் வாழ்பது தான் ஞான நிலை.
அந்நிலை அடைந்தால்  துறவறம் தான்.

உலகில் வாழ்ந்தால் உண்மை இது என்று உறுதியுடன் கூறமுடியாது.
நேர்மை இதுதான் என்று கூறமுடியாது.
தவறுசெய்பவர்கள் தாயாகவும் இருக்கலாம்.தந்தையாகவும் இருக்கலாம்.
சகோதரர்களாகவும் இருக்கலாம், இருக்கலாம் அதை வெளிப்படுத்த 
துணிச்சல் வேண்டும். அது எத்தனை பேருக்கு வரும். உலகில்  பெற முடியாது.










திங்கள், ஜனவரி 14, 2013

தைப்பொங்கல் இவ்வாண்டு,

தைப்பொங்கல் இவ்வாண்டு,
பேராசியர்கள்  வீட்டிலும்
பொங்கவில்லை;
நடிகர்களுக்கும் சேவைவரி
துக்கம்;
விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லா,
விளைச்சல் இல்லா வேதனை;
கொடுத்த கவரில் 100 ரூபாய் இல்லை  வெத்துக் கவர்
சிலருக்கு.

நாட்டின் பெரும் கவலை இரண்டு வீரர்களின் 

தலை போனது. பாகிஸ்தானியர்களின் 

இரக்கமற்ற செயல்;

ஊழல்,பலாத்காரம் ,எதுதான் இல்லை;

மயிலையில் தீப்பிடித்த விசாலாக்ஷி நகர்;

போதுமா  வேதனை;

வரும் ஆண்டுகளில் வருத்தம் இல்லா பொங்கல்,
வறட்சி இல்லா பொங்கல்,
தண்ணீர்  காவேரி பிரச்சனையை தீர்ந்த பொங்கல்,

அகில பாரதத்திலும் நேர்மை யுள்ள ஆனந்த பொங்கல்,
அடுத்த ஆண்டில் மன நிறைவுப் பொங்கல்,
அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சி தரும் பொங்கல் 
வர முயற்ச்சிப்போம்;இறைவனை வேண்டுவோம்.

ஞாயிறு, ஜனவரி 13, 2013

ஜாக்கிரதை! பெண்களே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்;



Tuesday, January 8, 2013


ஜாக்கிரதை! பெண்களே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்;

 அன்பும்,பண்பும் ,உயரிய நோக்கம்

கொண்ட  புதுமை இளம் பெண்களே!!!

செய்தித்தாள்களில் வரும் செய்திகள்,

கற்பழிப்புக்கு பெண்களின் ஆடைகள்,அவர்களின் சம்மதமே காரணம்

என்று    சாமியார் ஆசாராம் பாபு கூறியுள்ளார்.

நடுராத்திரியில் பெண்கள் நடமாட்டம் கூடாது
 என்று ஜனாதிபதி மகன்  கூறி உள்ளார்.

திரௌபதி துகில் உரிய  திரௌபதியே  காரணம்.

அவள் சிரித்து துரியோதனின்  கோபத்தைத்  தூண்டியவர்.

அதனால் பெண்களின் அவமானம்  பெண்களால் ஏற்படுவதே.

ஆசாரம் இப்படி கூறியதற்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் அனைவரும் நாய்கள்.

ஆஷ்ரமங்கள் வளர்வதே அமைதி தேடிச்செல்லும் பெண்களால்.

அதனால் அவர்கள் பெண்கள் சில சுலோகத்திற்கும்,ஆஷிர்வாதத்திற்கும்
மயங்குபவர்கள் என்ற எண்ணம்.

அதனால் தான் பெண்கள் தெய்வங்களாக,காளி ,மூளி ,மாரி ,
என்று பயங்கர ஆயுதங்களுடன் ,வெட்டுண்ட தலை கையில் ஏந்தி
முண்டத்தில் மீது நின்று அதி பயங்கரமாக காட்சி அளிக்கின்றனர்.

இன்று பெரும் நகரங்களில் இளம் பெண்கள் பணிபுரிந்து  வீடு திரும்பும் நேரம்  உங்களுக்குத் தெரியும்.

நீங்கள் காளி ,மூலி ,நீலி  யாக மாறி தற்காத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு சட்டம் பாதுகாப்பு அளிக்குமா?சீரழிந்த பின் சட்டநடவடிக்கை.

அரசியல் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் பலாத்காரம்

செய்தால் நீதிமன்றம் தண்டனை வழங்க வாய்ப்பில்லை.அவர்கள் பதவி நீக்கம் செய்ய முடியாது.

   இராமாயண மகாபாரத காலத்தில் இருந்தே இதே நிலை.

  இப்பொழுது ஒரு புதிய கூட்டம்;உயர் சாதிப்பெண்களை  விரட்டி விரட்டி
காதலித்து களங்கப்படுத்தி சீரழிப்பது என பா.மு.க. தலைவர் கூறி உள்ளார்.

ஜாக்கிரதை! பெண்களே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்;