செவ்வாய், டிசம்பர் 25, 2012

கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.

ஏசுநாதர்  பிறந்த நாள்.
எளிமை,சேவை,அன்பு, மனிதப்பண்பு,
 பாபங்கள்   தான் ஏற்று ,
மனிதனை துன்பத்திலிருந்து விடுவிக்க,
ரத்தம் சிந்திய மகான்.

இந்நன்னாளில்  நல்லதே செய்து,
செய்த பாபங்கள் உணர்ந்து
 உயர்ந்த சிந்தனைகளுடன் ,
உண்மை,நேர்மை ,சத்தியம் ,அன்பு ,சேவை,
பரோபகாரம் என்ற உயர் குணங்களுடன் ,
உலகில் வாழ்ந்து இறை தூதர் துணையுடன்
உயர்ந்த மனிதனாக வாழ , உள்ளநிறைவு,மகிழ்வுடன்
வாழ ,
கிறிஸ்மஸ் தின 
வாழ்த்துக்கள்.

வெள்ளி, டிசம்பர் 21, 2012

ஜாதி ஒழிந்தது. ஜாதிப் பற்றாளர்கள் ஒழியவில்லை.

"காந்தி என்ற பெயரில் என்ன  இருக்கிறது"---என்றதொரு கட்டுரை.


"காந்தி "  என்ற  பெயரில் ஜாதி இருக்கிறது.பனியா ,வைஷ்ய  என்பதுதான் பொருள்.

நம்த தலைவர்களை  அன்னாஜி ,நேஹ்ருஜி,காமரஜ்ஜீ  என்பதுபோல்

மோகன் ஜீ  என்று அழைத்திருக்கலாம்.இப்பொழுது அனைவரும் காந்தி  சேர்ப்பதால்  ஜாதி ஒழிந்துவிட்டது. ஆனால் ,காந்தி என்றால் இந்திரா,ராஜீவ்,சோனியா  என்றே பலர் நினைக்கின்றனர். படித்தோருக்குத் தெரிந்து  இப்பொழுதுதான்  அனைவரும் துணிந்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

நான் முதலில் இதை வெளியிட்ட பொழுது பலர் ஆச்சரியப்பட்டனர்.

ஹரிஜன்  என்ற  சொல் கபீரின்  தோஹையில்  உள்ளது.

கபீர்  சொல்கிறார்=="நாடும்,சொத்தும்,பெயரும்,புகழும் இறைவன் அளிப்பவை.

இறைவனை அளிப்பவன் பக்தன் ,அதற்கு அவர் எழுதிய சொல் "ஹரிஜன்".

எளிய மொழியில் ஆழ்ந்த கருத்தை வெளி யிட்டால் அது படிக்காதவன் ,கிராமீயப்பாடல்.
அது அனைவருக்கும் புரியும்  மொழி. அனைவராலும் ஒதுக்கப்படுவது

அதனால் தான் நாம் அடிமையானோம் .

இன்றும் பலர் பல விஷயங்கள் புரியாமல் இருக்கும் மொழியிலேயே

புரிந்துகொள்ள விரும்புகின்றனர்.

சோனியா காந்தி ஊழல் என்றால் காந்தியின் வாரிசின் ஊழல் என்று
நினைப்போரும் உண்டு.
தேசீய கீதம்   வங்க  மொழி என்பது தெரியாதவர்களும் உண்டு.

    காந்தி  என்பதற்கு முக்கியத்துவம் அளித்து  ஜாதிப்பெயர்   பொதுப் பெயராகியது.

ஜாதி ஒழிந்தது.

ஜாதிப் பற்றாளர்கள் ஒழியவில்லை.




. இதுதான் உலகம்.

நமது முன்னோர்கள்  வாழ்க்கையை பிரம்மச்சரியம்,க்ரஹஸ்தம், வானப்ரஸ்தம்,சன்யாசம் என்று பிரித்து   மனப்பக்குவம் ஏற்படுத்தி உள்ளனர்.

அமெரிக்காவிலும் அவர்கள் வாழும் முறை சாகும் வரை தன சக்தியை நம்பியே.90 வயதில் கார் ஓட்டி  செல்லும் முதியர்.ஒரு கை இல்லாமல் ஒரு முதிய பெண் சாமான்களை எடுத்து காரில் வைத்தபொழுது உதவச்சென்ற  என் மகனைத் தடுத்துவிட்டார்.அது அவர்கள் தன்னம்பிக்கை. நான் 58 வயதில் வயதில் ஒய்வு பெற்றதும் தளர்ந்துவிட்டேன்.அங்கு சென்றதும்  இளமையை உணர்ந்தேன். ஏன் என்றால் எங்கள் வீட்டின் அண்டைவீட்டுக்கரர் என் அப்பா சிறுவயதில் இறந்துவிட்டார் என்றார், அப்பாவின் வயது 74.
நம் சனாதன  தர்மம் வாழ்க்கைத் தத்துவங்களைக் காட்டுகிறது. தசரதர் மூப்படைந்ததும் இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவெடுத்தார்.

நாம் வயதானாலும் 52 வயது மகனை குழந்தையாய் தான் பார்க்கிறோம். நாம் நமது கலாச்சாரத்தை ஆழ்ந்து படித்தால் பிரிவு ஒன்றும் பெரிதல்ல.

தாயின் கருவில் இருக்கும் காலம் தாய் நாடு.பின் நாம் வெளிநாடுதான். இயற்கை நீதி  ஆகையால் தான் நம் சகோதர மதம் இஸ்லாம் இறப்பில் சிரிக்கிறது.  பிறப்பில் அழுகை.வாழ்க்கையின் எதிர் நீச்சல். இதுதான் உலகம்.

வியாழன், டிசம்பர் 20, 2012

குஜராத் தேர்தல்

குஜராத்  தேர்தல் 

மோதியின்   வெற்றி அவரின் தனிப்பட்ட சாதனையின்  வெற்றி. அதன் சான்றுதான் 
ஹிமாச்சல் பிரதேச  தோல்வி.

மக்கள்  சாதனைகளைப்ப்பார்க்கிறார்கள் ,சாதி-மதம் 
பார்ப்பதில்லை.இருப்பினும் ஊழல் என்று போற்றப்படும்  காங்கிரஸுக்கு  ஓட்டுகளும் ,வெற்றியும்   மக்களின் மோகம் சற்றே குறைந்தாலும் சற்றே மீண்டும் காங்கிரசுக்கு  ஆதரவு  உள்ளது. மக்கள் ஊழல்களை ஆதரிப்பதுபோல்  உள்ளது. படுதோல்வி ஏற்பட்டாலே விழிப்புணர்வு என்ற நிலை மாறி 
சற்றே  அதற்கு உயிர்காற்று கிடைத்துள்ளது. 
மக்கள்  மீண்டும்  தங்கள் சக்தியை 2014 தேர்தலில் காட்ட  வேண்டும்.ஒரு முறை ஊழலுக்கு மரண  அடி கொடுக்கத் தயங்காத  நாட்டுப்பற்று வரவேண்டும். சர்வசக்தியான ஆண்டவன் அருள பிரார்த்தனைகள்.

புதன், டிசம்பர் 19, 2012

மன சாட்சி இல்லா போராட்டம்.


நாட்டில்  ராமரையும் இறைபடங்களையும் செருப்பால் அடித்தபோது மௌனம்.

இறைவன் உருவம் பதித்த உடைக்கு எதிர்ப்பு. 

எத்தனையோ புடவைகள் இறைவனின் படத்துடன் வந்துள்ளன.

கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடலாமா என்ற பாட்டிற்கு எதிர்ப்பு இல்லை.

குஷ்பு விஷயப்போராட்டங்கள்   வீண்.மன சாட்சி இல்லா போராட்டம்.

இறவன் படம் நாமம் போட்ட துண்டுகள் அணிகிறோம்.
ஐயப்பன்  பெயர் எழுதிய துண்டுகள்.
கோயிலில் சாமி படம் போட்ட திரை. 

அதில் துடைக்கும்  ஈரக்   கைகள்.
சாமி அல்லது அம்மன் திரை அழுக்குத்திரையாக.

வீண் போராட்டங்கள் விடுத்து ஆக்கப்பணிகள் செய்தால் 
மதங்கள்  வளரும்.

ஏழைகள் வேதனைப் படமாட்டார்

மனிதர்கள்  மனம் ஆழ்கடல் போன்றது.

அதில் யதார்த்த வாதிகள் படும் துன்பம் 


அவர்களுக்குக் கிடைப்பது அவமரியாதை 

மட்டுமல்ல,வெறுத்து ஒதுக்கும்  மனிதர்கள்.

சுயநலம்  வேண்டியபொழுது மட்டும் பயன்படுத்தல்,உடனே அந்த யதார்த்தவாதியை 

அவமரியாதை என்ற சிகரத்தில் ஏற்றல் ,
அலக்ஷியம்  செய்தல்,உண்மையாக இருந்தால் 
மிஞ்சுவது    அவமானமே.

உண்மை யாக இருப்பதால் நான் அவமானப்படுகிறேன்.
வெற்றிவாய்ப்பு தோல்வியாக மாறுகிறது.
கிடைக்க வேண்டிய பாராட்டுக்கள் கிட்டாமல் போகிறது.
உற்றார்  உறவினர்கள்,நண்பர்களால் ஒதுக்கப் படுகிறேன்.
ஒருவர் செய்யும் தவறுகள் சுயநலம் உள்ளோரால் 
கபட தாரிகளால் மறைக்கப்படுகின்றன.
தவறே செய்யாத யதார்த்தவாதியை   பெரும் கூட்டமே  சேர்ந்து ஒழி க்கப்பாடு  படுகிறது.

அரசியல்,ஆன்மிகம் இரண்டுமே ஏழைகளை ஒழிக்கும்   சாமார்த்தியமான தலைமைகளக் கொண்டவை.
கோடிக்கணக்கில் சேரும் பணம்  இரண்டுதுறையைச்  சேர்ந்தவர்களையும்
 பேராசைக்காரர்களாக்குகிறது .

அவர்கள் பணத்தைப் பதுக்கி  நாட்டுநலம் என்பதில் 

அக்கறை காட்டுவதில்லை.

கோடிக்கணக்கில்  பணம் புதைத்து கிடக்கிறது.
அதை நாட்டு நலத்திட்டத்தில்  பயன் படுத்தினால் 

ஏழைகள் வேதனைப் படமாட்டார் என்ற பாடல் 

மெய்யாகும்.



திங்கள், டிசம்பர் 17, 2012

குஜராத் தேர்தலும் இந்தியாவின் எதிர்காலமும்

குஜராத் தேர்தலும் இந்தியாவின் எதிர்காலமும் 

    குஜராத் தேர்தல் மாநில அளவில் நடந்தாலும்   பாரத நாட்டின் எதிர்கால அரசியலை நிர்ணயம்  செய்யும் தேர்தல்.
இதில்  நாட்டு  மக்கள் சுயநலத்தை மறந்து ஓட்டுப் போட  வேண்டும்
,.ஜாதி,மதம்,இனம் என்று மக்கள் மனதில் விஷ விதைகள் தூவும் அரசியல் தலைவர்கள் ,சுயநல அரசியல் வாதிகள் 
ஒழிக்கப்படவேண்டும்.
கருப்புப்பணத்திற்கு முக்கியத்துவம் அளித்து வெளிநாட்டு முதலீட்டிற்கு  கை ஊட்டுப்பெறும்  சோனியா காங்கிரெஸ்  முற்றிலும் 
ஒதுக்கப்படவேண்டும். பல ஊழல் புகார்கள் மேல் எவ்வித உறுதியான நடவடிக்கை இன்றுவரை எடுக்கப்படவில்லை. அப்படிப்பட்ட அரசியல் 
கட்சிகளும் ,ஊழலுக்குத் துணை  போகும் மாநிலக்கட்சிகளும் மாறி மாறி கூட்டணிவைத்து நாட்டின் பொருளாதாரம் ஏழைகளுக்குப்  பயன்படாமல் 
பணமுள்ளவர்களே கல்வி பெறமுடியும் என்ற அரசியல் ஒழி க்கும் சக்தி  மக்களிடம் தான் உள்ளது. இந்திய மக்களின் விழிப்புணர்வு  எப்படிப்பட்டது 
என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். பாரத நாட்டைக் காக்கும் ஒரு தெய்வீக சக்தி மக்கள் மனதில் நேர்மை உணர்வைத்  தரவேண்டும்.

சனி, டிசம்பர் 15, 2012

வளரும் பாரதம். ஆண்டவன் காக்கும் பாரதம்.

பாரத நாட்டில் ஊழல் ,ஊழல் என்றாலும் ,
மக்களும்,மந்திரிகளும் ஊழலுக்கு ஆதரவு என்றாலும்,

நாட்டின் முன்னேற்றம் ,அயல்நாட்டினரை அசரவைக்கிறது.

நாடு என்பதற்கு வள்ளுவன் காட்டிய இலக்கணம்,
மற்றவர்களை நாடக்கூடாது என்பதே.

ஆனால் ,நம் நாட்டின் கல்விமுறை ,
ஆங்கிலேயர் வந்தபின் தான்
அனைவருக்கும் கல்வி என்ற நிலை.
சமவாய்ப்பு,சம அந்தஸ்து என்றாலும்,
அனைவருக்கும் முன்னேற வாய்ப்பு என்ற நிலை இருந்தாலும்,

புதிய தலைமுறையினர் சிந்தனைக்கும்,
பழைய தலைமுறையினர் சிந்தனைக்கும்
மலை-மடு வுக்கு உள்ள வேறுபாடு.

மதங்களால் மனிதனை  பிரிக்கும்
சுயநல ஆட்சியாளர்கள்,
ஜாதிவெறி தூண்டும் குறுகிய மனநிலையாளர்கள்,
சுய நலத்திற்காக   நாட்டைக்காட்டிக்கொடுக்கும்
நயவஞ்சகர்கள்,நா நயம் தவறுவோர்,
தன்  சகோதரனையே அழித்து  நாட்டின் ஆட்சி பிடித்தோர்,
பங்காளிப் பகைகள்,
மாமன்-மச்சான்  வெறுப்புகள்,
இரக் கமில்லா  ஒரு கூட்டம்,
தன்  மொழி தன் இனம் தன பண்பாடு
தன் கலைகள் அழிந்தாலும்
தன தனம் காக்கும் கூட்டம்,
ஆலயங்களின் ஆஸ்திகள்,
ஆஷ்ரமங்களின் ஆஸ்திகள்,
ஆண்டிகளின் கோலங்கள்,
தியாக உணர்வு,
சுய  நலமில்லா கூட்டம்,
  இதற்கு நடுவில் நாட்டின் முன்னேற்றம்,
அதுதான் இது ஆன்மீக பூமி.
அதிகாரம் இருந்தாலும்,
ஆஸ்தி இருந்தாலும்
இங்கேயே நரகவேதனை
மனவேதனை,
கலியுக தண்டனை.
பாரத பூமி, பழம்  பெரும் பூமி,
இந்நினைவு அகற்றாதீர்கள்,
என்ற பாரதியின் கூற்று.
ஆன்மீகத்தால் வளரும் பாரதம்.
ஆண்டவன் காக்கும் பாரதம்.




வினைப்பயன் ,மனமாற்றம் மனிதனை மகானாக்குகிறது.

மனிதமனம்

மனிதன்  தன்  கடந்த  காலங்களை  மறந்து

உறவை விரும்பினாலும் சில உறவினர்களின்

பேச்சுக்கள் உறவை துண்டிப்பதாகவே அமையும்.

மலரும் நினைவுகளும்  சுகமளித்தாலும்.

கசப்பான அனுபவங்கள்

ஆழ்மனதில் இருந்து நீங்கி சாதரணமான  நிலைக்கும்

சஹஜ நிலைக்கும் வருவது

கடினம்.
இந்நிலையில் தான்  பட்டினத்தார்
அனைத்தையும் வெறுத்து
ஒட்டைஅப்பம்  வீட்டை சுடும் என்றார்.

இந்த விரக்தியில் தான் சித்தர்கள் நிலை.

சித்தர்த்தருக்கு  சமுதாயத்துன்பங்கள் துறவு நிலைக்குத் தள்ளியது.

மன்னர் பர்த்துஹரிக்கு ராஜசுகம் கசந்தது.

அருணகிரிக்கு நாரிசுகம் ரோகத்தை அளித்து  பக்தனாக மாற்றியது.

சிலர் பிறவியிலேயே தெய்வாம்சம் அடைகின்றனர்.

அசோகர் கொடுங்கோலனாக இருந்து

புத்தமதத்தைத் தழுவிய பின்

மக்கள் போற்றும்  பேரரசர்.

பலர் திருந்துகின்றனர். சிலர் இறுதிவரை அவப்பெயர் .

அவன் ஹரிச்சந்திரன்.அவன் விபீஷணன்.

இவன் கர்ணன். அவன் மைதாஸ் டச்.
பேராசை. இவன் இராவணன்.

இவன் ப்ருடஸ் .(துரோஹி)

எட்டப்பன் பரம்பரை.
செயல் எப்படி மனிதனை உயர்த்திதாழ்த்துகிறது .

காந்தியைத் தாத்தா என்கிறோம்.
நேருவை மாமா என்கிறோம்.
ஹிந்தியில் "சாச்சா "என்கின்றனர்.
காமராஜரை கர்மவீரர் என்கிறோம்.
படேல் இரும்புமனிதர்.
வினைப்பயன் ,மனமாற்றம் மனிதனை மகானாக்குகிறது.












--
Regards,
Anandakr

வியாழன், டிசம்பர் 13, 2012

ஆற்றலும் "நான்" என்ற பார்வையில் அழிவையும் தரும்.


இன்றியமையாத  ஒன்று 
இறைவழிபாடு  என்று 
அகிலம் கூறினாலும் ,
அறிவியல் அறிஞர்கள்  கூறினாலும்,
சிலருக்கு சில சமயம் 
உலக  நடப்பினைக் கண்டு '
உலகநாதன் மேல் வெறுப்பு 
ஏற்படுவது உண்டு.
நாம் கடவுளின் மேல் நம்பிக்கை வைத்துள்ளோம்.

நாம் துவக்கும் செயல் தோல்வி கண்டால் 

அச்செயலை மாற்றி விடுவோம்.
அதே செயல் அடுத்தவர்களுக்கு 
வெற்றிக் கனி தருவது கண்டு,
மீண்டும் அதே செயலில் 
ஈடுபடுவோர் உண்டு.
மீண்டும் தோல்வி என்றால் 
விதி என்ற ஓர் கருத்து எழுவது உண்டு.

அதை அதிர்ஷ்டம் என்போரும் உண்டு.
 'அத்ருஷ்ட ' என்றால் பார்க்காத என்ற பொருள்.
பார்வைக்குப் புலப்படாத ஒரு சக்தி 
நமக்கு தரும் ஆற்றல் /தோல்வி 
அதுவே  ஆன்மீக சக்தி.
அமானுஷ்ய சக்தி.
அதுவே இறைவன்.
இறைவனுக்கு முன்
 மதங்கள் 
கிடையாது.
மனிதனின் வினை தான் முக்கியம்.
மனிதனுக்குத்   தீய நோக்கம் ஏன்  வருகிறது 
என்ற வினா  எழுவது உண்டு.

முள், மலர், அம்ருதம் விஷம் 
இதில் நல்லதை ஏற்று அல்லதை 
விடும்  அறிவு/ஞானம் 
மனிதனுக்கு உண்டு.
பூபாரம்  குறைக்கவேண்டும்.
அதற்கு பாவ எண்ணங்கள் .
புண்ணியவான் மரணம் 
பாவி மரணம் 
அனைத்தையும் சிந்தித்தால் 
ஆட்டிப்படைக்கும் ஆண்டவன் ஆற்றல் 
அண்மையில் தெளிவுறும் தென்படும்.
அளவுக்கு மீறி கொடுத்த அறிவும்  
அளவுக்கு மீறி கிடைக்கும் செல்வமும் 
அகங்காரம் அளித்து 
நல்லதைச் செய்தாலும் 
தீமையே அதிகம் செய்யும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிருதமும் நஞ்சாகும்.
அப்பொழுது ஆண்டவன்  ஆற்றலும்   "நான்"
என்ற பார்வையில் அழிவையும் தரும்.