செவ்வாய், அக்டோபர் 09, 2012

செய்யுங்கள் பிரார்த்தனை.எது எதற்கோ பிரார்த்தனை,வேள்வி நடத்தும் மக்கள், இதற்கு ஒரு வேள்வி நடத்தவில்லையா?

இறைவன்  ஒருவன் இருக்கிறானா,
தினம் ஒரு செய்தி,
அமைச்சர்கள் செய்யும் ஊழல்,
அமைச்சரின் தொந்தரவால்,
விமானப்பணிப்பெண் 
தற்கொலை.
மந்திரி மகள் ஊழல்.
மருமகள் ஊழல்.
மகன் ஊழல்.
தோழி ஊழல்.
இந்தியா ஒரு ஆன்மீக நாடு.
ஆனால் 
கோயில்,மடாலயங்கள்,ஆஸ்ர மங்கள் 
அனைத்திலும் ஊழல்.
பள்ளியில் ஊழல்.
கல்லூரியில் ஊழல்.
ஐ.ஐ.டி .யில் படித்து  பட்டம்பெறுவான் /வாள் 
என்ற   ஆசையுடன் காத்திருக்கும் 
பெற்றோர்களுக்கு 
அவர்கள் தற்கொலை செய்தி.
கூலி ப்படைவைத்து கொலைகள்.
குழுசேர்ந்து கற்பழிப்பு 
கருப்புப்பணம் .
கடத்தல்.
காவல் அதிகாரிகள்  கையூட்டு வாங்கி 
காலில் விழும் வீடியோ  காட்சிகள்.
ஒரு வாலிபனிடம் பைக் திருட கட்டாயப்படுத்தும் 
வீடியோ காட்சிகள்,
இரக்கமில்லாமல் அடிக்கும் காட்சிகள்.
இறைவன் உள்ளானா ?
மக்கள் பொறுமை உடன் உள்ளனரா?
எது எதற்கோ பிரார்த்தனை,வேள்வி நடத்தும் மக்கள்,
இதற்கு ஒரு வேள்வி நடத்தவில்லையா?
இல்லை என்றால்,
இனிமேல் இதற்காக வேள்வி நடத்துங்கள்.
நாட்டுப்பற்றுள்ளவர்களே !!
நாடு முன்னேற ஊழல்கள் ஒழியவேண்டும்.
மழைக்குப்  பிரார்த்தனை.
சினிமா  நடிகர்கள்  பிழைக்க பிரார்த்தனை.
இப்பொழுது  நாடு அராஜகம்  நோக்கி செல்கிறது.
நாட்டிற்காக   உயிர்த் தியாகம் செய்தோர்   பலர்.
அவர்கள் தியாகத்தில்  சுதந்திரம்
என்ற மாளிகை  கட்டப்பட்டுள்ளது.
இன்று அதிகாரத்திலுள்ளவர்கள்
பதவிக்காக  நாட்டை  வெளிநாட்டினர்
லாபத்துக்காக  பயன்படுத்துகின்றனர்.
தங்கள்    லாபத்துக்காக.
நம் நாட்டுத் திறமைகள்.
கலைஞர்கள்
அழிந்து வருகின்றனர்.
நம் நாட்டு  கலைப்பொருட்கள்
வெளிநாட்டில்   மதிக்கப்படுகின்றன.
இனிமேல்  பலசரக்கு நிர்வாகம் கூட
 அன்னியர்கள்  கையில்.
நாட்டார் கடை என்று ஓடும் நாம்
வால்   பிடித்து  வால்  மார்ட் ஓடும்
. நிலைக்கு வருவோம்.

போதும்;போதும்;



இவ்வளவு ஊழல் ஒழிய 
நடத்துங்கள் 
பிரார்த்தனை.
வேள்வி.
ஊழல்கள்   ஒழிந்து  ஊழல்வாதிகள் தண்டனை பெற்றால் 
உள்ளான் இறைவன்.
செய்யுங்கள்  பிரார்த்தனை.
வரும் தேர்தலில் நேர்மை ஆளர்கள் 
ஆட்சிக்கு வரட்டும்.
பிறப்பு இறப்பு உறுதி.
ஆறிலும் சாவு.நூறிலும் சாவு.
செய்யுங்கள் பிரார்த்தனை.
இறைவன் உள்ளான் என்பதை 
ஆஸ் தீகர்களே !!!
நிரூபியுங்கள்.







யார் குற்றம் ?

யார் குற்றம் ?

வழியில் செல்லும்போது.
தள்ளுவண்டி வியாபாரியிடம் ,
இரண்டு டசன்  வாழைப்பழம்
எடுத்துச்சென்ற போக்குவர த்துக்காவலர்.
 வியாபாரியிடம் கேட்டேன் .பதில்
ஐயா,
நான் என்ன   செய்ய ?
இங்கு நின்று  வியாபாரம் செய்ய,
அங்கு போக்குவரத்து அதிகம்.
என் பொழப்பு அப்படி.
அன்று வரும் வாடிக்கையாளர் ஏமாந்தால்
விலை அதிகம்.
 இது  யார் குற்றம்?

கனரக்வாஹனம்.
தடுத்து நிறுத்தியதும்,
காவலருக்கு  ஓட்டுனர் காணிக்கை.
பலர் முன்னிலையில்.
உடனே இது தவறு என்பது போய்
எனக்கு காவலர் வேலை கிடைக்கவில்லையே?
என்று வருத்தப்படுவோர் அதிகம்.

போக்குவரத்து அலுவலகம்,
மின்வாரியம்.
மாநகராட்சி அலுவலகம்,
பத்திரப்பதிவு அலுவலகம்
என எங்குமே லஞ்சம் .
நாடறிந்த உண்மை.
அனைவருக்கும் மகிழ்ச்சி
அலையவைக்காமல்
காரியம் நடக்கிறதே
பல முறை ஆட்டோ சிலவு மிச்சமாகிறதே.
இது எல்லாம் யார் குற்றம்?
67 ஆண்டுகள்  விடுதலை அடைந்து
அனைத்து  அலுவலகங்களிலும்
மக்கள் மனம் விரும்புவது
கொடுத்தால் காரியம் ஆனால்
சரி.
அதனால்  இது அங்கீகரிக்கப்பட்ட
குற்ற நியாயங்கள்.
இந்நிலைதீருமா?
எப்படியோ காரியம் ஆனால் சரி என்று
மக்கள் கருதும் போது .
இது பொதுவான குற்றம் .
ஆகையால் நியாயம் தானே?





திங்கள், அக்டோபர் 08, 2012

ராமர். ராமர் குடி கொண்டு அருள் புரிவார்.


ராமர்.
ராமரைத் தேடினேன்.
செங்கலால் கட்டப்பட்ட 
ஆடம்பரக் கோயில்களில் 
அவரின் பதுமைகளை 
மட்டும் கண்டேன்.
எளிய மக்களின் இதயங்களில் 
ராமரின் உயிர் துடிப்பைக்கண்டேன்.

அவர்  14 ஆண்டுகள் ஆட்சி  செய்தது 
ஒரு குடில்.
இன்றைய அரசியல் வாதிகள் போல் 
இசட்  பாதுகாப்பு இல்லை.
மக்களுக்கு பயந்து 
மக்களுள் மக்களாக 
கலந்து கொள்ளும் 
மக்களாட்சி தலைவர்கள் இல்லை.
தேர்தல் நேரத்தில் மட்டும் சந்திக்கும் 
தலைவர்கள்.
அவர்களிடம் ஏமாந்தாலும் 
அவர்களுக்கே ஓட்டுப்போடும் 
ஏழை நடுத்தர மக்கள்.
40% தான் ஒட்டுப்போடுவதில்லையே?!!
ராமரின் உயிரும் ,ஆத்மாவும் 
உள்ள இடங்கள்:
அடிபட்ட ஜடாயு.
அங்கதன்.
ஹனுமான்.
குஹன்.
அனுசுயா.
சீதா .
கௌசல்யா.
அஹில்யா.சபரி.
ஏழையின் பக்தியில் இறைவன்
 இருப்பதால் தான் 
ஏழைக்கு நிம்மதியான தூக்கம்.
களங்கமில்லா  சிரிப்பு.
இறக்கம்.
பரோபகாரம்.
சுற்றங்கள். நட்பு.
பணக்காரர்கள் 
ஏழையின் உதவியும் 
இல்லாமல் 
வாழ முடியுமா?
ஏழையின் தயவால் வாழும் 
பணக்காரர்கள் 
ஆட்சியைப்பிடித்து, 
ஏழைகளை ஏழையாகவே 
சாலை வசதியின்றி 
மின்வசதியின்றி
குடிநீர் வசதியின்றி 
நிம்மதியாக தூங்குகின்றனர்.


பணக்காரர்களால் 
கோடிகோடி கறுப்புப் பண அரசியல் 
வாதிகளால் 
தூங்க  முடியுமா?
ஏழைகள் இறைவனின் ஆசி பெற்றவர்கள்.
மழலைச்செல்வம் பெற்றவர்கள்.
மன நிறைவு பெற்றவர்கள்.
ஆகையால் தான் 
தரித்ர நாராயன் சேவையில் 
நாராயண னைக் காணலாம்.
ஏழையின் சிரிப்பில்
 இறைவனைக் 
 காணலாம் 
என்றனர்.
இந்த கேடி அரசியல்வாதிகளால் 
நித்யாநந்தர்களும்,ப்றேமானந்தர்களும் 
பணக்காரர்களால் ஆஷ்ராமங்களும் 
அங்கு போதைப் பணக்காரகளின் 
போலியான ஆனந்தமும் 
கூடுகின்றன.
அந்த ஆஷ்ராமங்களில்
 சேரும் பணம்'கொடுக்கும் பணங்களை
 சாலைவசதிகளும்,
கோயில் தெப்பங்குள ங்களில் 
மழைநீர் சேகரிக்கும் குழாய்களும் அமைக்க
கொடுத்தால் 
ஆண்டவனின் கோடி ஆசிகளும் 
நிம்மதியும் 
கிடைக்கும்.
பகட்டு பக்தியை விட்டு 
உண்மை பக்தர்களின் 
மனதில் தான் 
ராமர் குடி கொண்டு அருள் புரிவார்.



சனி, அக்டோபர் 06, 2012

கீழ்க்கண்ட செய்திகள் வராத நாள் கிடையாது.

கீழ்க்கண்ட செய்திகள்  வராத நாள் கிடையாது.

காதலிக்க மறுத்த  பெண் மீது ஆசிட்  வீச்சு,
ஆசிரியர் திட்டியதால் தற்கொலை,
காதலனைக் கொன்று  காதலியும்.
காதலியையைக்கொன்று  காதலனும்
தற்கொலை.
 சமுதாயம்   இந்த மாதிரியான  சூழ்நிலைக்கு காரணம் என்ன?
தற்கொலை செய்வதில் எந்தமாநிலம் முதன்மை என்று கணக்கெடுத்து
தமிழ்  மாநிலத்திற்கு இரண்டாவது இடம்.

நமது கல்விமுறையில் நீதி போதனை வகுப்புகள்  குறைந்துவிட்டது.
நீதிபோதனை  நேரத்தில் கணிதம் /அறிவியல் பாடங்கள்.

மதசார்பற்ற  நாடு என்பதால் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும்.
அப்படியாவது தமிழ்  வளர்ந்ததா? வாழ்த்தோடு மட்டும் சரி.
அண்ணா  வாழ்க என்று ஊழல் புரியும்  தலைவர்கள் போல.
ஆங்கிலம் கலந்த திரைப்பாடல், வசனம்.திரைப்படப் பெயர் மட்டும் தமிழ்.
வரி விலக்கு.
மனத்தில்  நல்ல எண்ணங்கள் வளர இறைவழிபாடு அவசியம்.
அதற்குத் தடை.(பெரும்பான்மை கல்வி நிறுவனங்களில் மட்டும்)

மனக்கட்டுப்பாடு ,இந்திரியக்கட்டுப்பாடு,பிரம்மச்சரியம் என்பதெல்லாம்
கூறும்  தமிழ் மருத்துவம்  மறுக்கப்பட்டு, காதல் உணர்வு தேநீர் அருந்துவதுபோல் தீர்க்கப்பட வேண்டியது என்ற ஆங்கில வைத்தியம்
விவாகரத்துக்கள்,நிம்மதியில்லா  குடும்ப வாழ்க்கை,கள்ளக்காதல்,
என்ற அமைதியற்ற சூழல் உருவாக்கி உள்ளது.

இதற்கு அரசாங்கம்  மாணவர்களுக்கான ஆலோசனை,கலந்தாய்வு ,நீதி போதனை,புலனடக்கம் என்பது போன்ற கல்வி திட்டம்   ஏற்படுத்தவேண்டும்.
 திரைப்படங்களில் காதலுக்கான வன்முறை மாற்றும் நிலை ஏற்படவேண்டும்.
காதல் என்பது  கண்ணியமாக கட்டுப்பாடு நிறைந்ததாக இருக்கவேண்டும்.
திரைப்படங்கள்  காதலை மையப்படுத்திகட்டாயக் காதல்,பெற்றோரை மதிக்காத காதல்,ஓடிப்போகும் காதல், காதல் வந்தால் எதையும் பொருட்படுத்தக்கூடாது என்றெல்லாம் அடிக்கடி காட்டுவதால் இளசுகள் காதலுக்கு முதலிடம் தரும்.காதைக்கவில்லை என்றால் கொலை வரை செல் கின்றனர்.  பொரிக்கிகளால்  கட்டாயக்காதல் ஏற்படுத்தும் கதைகள்.சமுதாய நல சிந்தனை உள்ளவர்கள்  இவ்வாருபடம் எடுக்க மாட்டார்கள்.அவர்கள் வீட்டில் இவ்வாறு கடத்திமிரட்டி காதல் பண்ண முடியுமா?
காதல் தான் இளைஞர்கள் வீரம் என்பதுசமுதாயக் கேடு.
சூழல் ஏற்பட்டு ,இளம்வயதில் பெற்றோர்களை தவிக்க வைக்கும்  முடிவை எடுக்கின்றனர்.
மன இயல் வல்லுனர்கள் ஆராய்ந்து இளம் சமுதாயத்தினரின் மேல் அக்கறை காட்ட வேண்டும்.
நல்ல காட்சிகள் கண்டால் நல்ல எண்ணங்கள்  தோன்றும்.



வெள்ளி, அக்டோபர் 05, 2012

எல்லாம் பழனி ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

தமிழ்  நாட்டில்  தண்ணீர்  பஞ்சம். ஏன் ?


       எனது சொந்த ஊர் பழனி. அங்கிருக்கும் வையாபுரிக்கண்மாய் ,ஆயக்குடியில் இருக்கும் கண்மாய்,பெரியா வுடையார் கோயில் கண்மாய் என நீர் சேமிப்பு இடங்கள் .ஷண்முக நதியின் இருபக்கங்களிலும்  பச்சை பசேல் என்ற  வயல்வெளிகள். அடிவாரத்திலும் அப்படியே.

இன்று  அங்கு சென்றால்  பாதி வையாபுரிக்குளம்   பேருந்து நிலையம்.

பெரியநாயகியம்மன், பெருமாள் கோயில் கோயில் போன்ற கோயில்களின்  தேரோட்டம்  நடக்கும் வடக்கு ரத வீதியில் உபயோகிக்காத  நீர்நிலை த்தொட்டி.

தேரோட்டம் பார்க்கும் பக்தர்கள்   கூட்டத்திற்கு இடைஞ்சலாக.
எங்கள் தாத்தா  முப்போகம் விளையும்  வயல்கள் என்ற ஷண்முக நதி விளைநிலங்கள்  பள்ளிக்கூடங்கள்,பெட்ரோல் பங்க்  என மாற்றப்பட்டுள்ளது.
பெரியநாயகி அம்மன் கோயில் தெப்பக்குளம்  என்றுமே பராமரிப்பின்றி குப்பை கொட்டும் இடம்.கோயில் அருகில்  உள்ள மண்டபம் மறைக்கப்பட்டு
ஒரு கடை  அதன் .பின் சென்று பார்த்தால்  கல் மண்டபம். ஆக்கிரமிப்பு.

நீர் நிலைகள்  பராமரிக்கப்படாததால்  வறட்சி. புனித ஸ்தலமான கிரி வீதி முழுவதும்   கடைவீதி. கடம்ப மரங்கள்,கடம்பப் பூ மனம் இல்லை.
இடும்பன் குளம் ,சக்திவினாயகர் கோயில் செல்லும் குளம் எங்கும் வறட்சி.

பருவ மழை  பொய்க்கவில்லை. இறைவன் கொடுத்த மழை  நீர் வீணாக் கப்பட்டுள்ளது.


இது  ஊர்மக்களுக்கும் தெரியும். சுயநல அரசியல் வாதிகளுக்கும் தெரியும்.

அதிகாரிகளுக்கும் தெரியும்.

இருந்தாலும் ஒரு எழுச்சி இல்லை. வறட்சி தான் மிச்சம்.

எல்லாம் பழனி ஆண்டவனுக்குத்தான்   வெளிச்சம்.

விளைநில  ஒழிப்பு, நாட்டுக்கு இழைக்கும்  துரோகம்.
இன்றைய வாழ்வு,நாளைய வீழ்ச்சி.

நாட்டில்  உள்ள அனைத்து நீர்   நிலைகளுக்கும்  இந்த கதி. நாளைக்கு அதோ கதி.

மழை  பெய்கிறது  உண்மை. மலை நீர் வீணாவதும்  உண்மை.
இறைவா! நல்ல அதிகாரிகளைக்கொடுத்து  நீ கொடுக்கும் வளத்தைக் காக்க அருள்  வாயாக.


வியாழன், அக்டோபர் 04, 2012

Mathangal மதங்கள்

கோவில் , மசூதி,சர்ச்   மனித வேற்றுமைப்   படுத்துமிடம்.
மதுசாலை   மனிதர்களை ஒன்று படுத்துமிடம்
  (ஹிந்தி கவி:-ஹரிவம்ச ராய் பச்சன்.)

கபீர்:
வேதங்கள் படிக்கின்றனர். குரான்  படிக்கின்றனர்.
இறைவனை மறந்து விடுகின்றனர்.  மனிதர்களுக்குள் சண்டை ஏற்படுத்துகின்றனர்.
இறைவன்  மதங்களுக்கு அப்பாற்பட்டவன்.

இக்பால்:

மனிதர்களுக்குள்  சண்டைபோட மதங்கள் கற்பிப்பது   இல்லை.


புதன், அக்டோபர் 03, 2012

வாழ்க ஜனநாயகம்.

   சோனியா   காந்திஜியின் புதிய
           காந்தீயக்  கொள்கைகள்.

 இன்று குஜராத்தில் சோனியா காந்தி 

காங்கிரஸ்  ஒன்றுதான்  காந்தீயக் கொள்கைகளைப் பின் பற்றுகிறது  என்று பேசி யுள்ளார். இது தினமணி செய்தி.அதில் குஜராத் மாநிலம் வளர்ச்சிபெற்றுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கு மத்திய அரசு 
கொடுத்த நிதி என்றும் கூறி உள்ளார்.
அதாவது குஜராத்தின் மோடி அரசு 
மத்திய அரசு கொடுத்த பணத்தை  நியாயமாக  சிலவு செய்துள்ளது  என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார்.
இன்றைய  காங்கிரெசின்  காந்தீயக் கொள்கைகள்.

  1. வெளிநாட்டு  வங்கிகளில் கருப்புப்பணம் சேர்ப்பது.
  2. ஊழல் அமைச்சர்களை காப்பது.
  3. உலகப்பட்டியலில் காங்கிரஸ் தலைவியின் பட்டியலை நான்காவது இடத்தில் இருந்து  முதல் இடத்திற்கு  முயற்சிப்பது.
4. பிரபல கொள்ளையர்கள்,கடத்தல்காரர்களை 
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கி 
நீதிமன்றம்,காவல்துரைகளை கேலிக்கூத்தாக்குவது.
5.இந்தியாவின் வளர்ச்சிக்கு இத்தாலி மற்றும்  அன்னிய முதலீடுகள்  வாணிகத்திற்கு வழிவகுப்பது.
வாழ்க ஜனநாயகம்.
விவசாயிகள் ஒழிந்தால் நாட்டுக்கு நலம்.உணவுப்பொருள் இறக்குமதி என்ற பெயரில்  சில கோடிகள் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யலாம்.
       இறைவன் இதையெல்லாம் மீறி நாட்டை வளம் படுத்துகிறான்.




       

     

வேள்வி யாகம் செய்யும் ஆன்மீக மேம்பாடு தான் ஹிந்து தர்மம்.

ஒற்றுமையாக  இருப்போம்.

தனி மரம் தோப்பாகாது.

ஊரு இரண்டு பட்டால்  கூ த்தாடிக்கு கொண்டாட்டம்.

கூட்டுறவே  நாட்டு உயர்வு.

சமத்துவம் சஹோதரத்துவம் 

ஊரு கூடி தேர் இழுப்போம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

ஒற்றுமையே உயர்வு.


ஒற்றுமைக்கான பழமொழிகள்  ,
சிறுகதைகள்,காளைமாடுகளும் சிங்கமும் நரியும் கதை
,கட்டு குச்சிகள் உடைக்கமுடியாது.ஒற்றைக்குச்சி உடைக்க முடியும் ..என்று ஒற்றுமைக்கு எவ்வளவோ கதைகளும் ,பழமொழிகளும் இருந்தாலும்
,வேற்றுமைகள்  தான் அதிகம் இயற்கையில்.
அந்தவேற்றுமைகள் ஒன்றுபட்டால் தூய ஒளி .
பிரிந்தால் எழுவண்ண வானவில்.
வேற்றுமையில் ஒற்றுமை ஒரே  வண்ணம்.
பலவண்ண பூக்கள் மலரும் பூங்கா அழகு.
ஆனால் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக  இருந்தால் அழகல்ல.

நமது நாட்டில் இயற்கை வேற்றுமைகள் அதிகம்.
மொழிகளில் வேற்றுமை;சீதோஷ்ண நிலைகேற்றவாறு உடைகளில்வேற்றுமை.
பாரதநாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையாக திகழ்வது எண்ணங்கள்.

அந்த எண்ணங்களின் ஒற்றுமைக்கு   காரணம்  ஆன்மிகம்.

அந்த ஆன்மீகத்திலும் வேற்றுமை.அந்த
ஆன்மீகவேற்றுமையிலும் 
ஒற்றுமை.

இறைவன்  ஒருவனே என்பதற்கு கீதையில் விஸ்வரூபம்.
அனைத்தும் நானே . கீதோபதேசம்.

இந்த  ஆன்மிகம் துண்டுபட்டு  சனாதனதர்மம் அல்லல் படக்காரணம் 
சுயநலமான பக்தி.,
அதற்கு ஞானம்  கொடுத்த இறைவன் 
அவ்வப்பொழுது  இறைவன் ஒருவனே என்று எடுத்துரைக்க 
மகான்களைப் படைக்கிறான்.
மகான்கள் மனித சேவைக்கு  பல நல்வழி காட்டுகின்றனர்.
பாரத தேச ஆன்மிகம் எந்த மதத்தையும் தாக்கவில்லை.
மனிதர்களுக்குள் அன்பு ,பரோபகாரம் ,மனிதசேவை ,
துறவுநிலை,அஹிம்சை ,சரணாகதி அடைந்தவர்களைக் காத்தல் என்ற 
உயரியசிந்தனைகளை உலகுக்கு அளித்து 
ஒப்பில்லா  பாரதமாக ஆன்மிகம்  உலகுக்கு  வழிகாட்டுகிறது.

ஷீரடி  சாய் பஜனையில் பாடல் அல்லா சாய்,இயேசு சாய் ,என்று வருகிறது.
மஹாத்மா மோகன்தாஸ்கரம் சந்த்  காந்தி  அவர்களும் 
மத ஒற்றுமைப்பாடலைப்  பாடினார்.
சுவாமி விவேகானந்தர் உலகளவில் அனைவரையும் 
சகோதர,சகோதரிகள் என்று விளித்து 
பாரத நாட்டை உலகில் ஒளிரச்செய்தார்.
வசுதைவ்வ  குடும்பகம் 
உலகமே ஒருகுடும்பம் ,வையகம் வாழ்க 
என்பதை உணர்த்துவது பாரதம்.
பாரத நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை இருப்பதுபோல் 

சனாதனதர்மத்திலும் வேற்றுமையை  ஒன்றுபடுத்தும் 
உயரிய சஹிப்புத்தன்மை உள்ளது.
கடவுள் இல்லை என்று முச்சந்தியில் கல்வெட்டில் எழுதி 
வைத்தாலும் அவர் தொண்டர்கள் வேள்வி யாகம் செய்யும் 
ஆன்மீக மேம்பாடு தான் ஹிந்து தர்மம்.











செவ்வாய், அக்டோபர் 02, 2012

சமயம்பார்த்து தண்டித்து மனதை மாற்றும்.


மகாத்மா காந்தி

உலகம் போற்றும் தலைவர்.

சிக்கனத்தின் சிகரம்.
அரை ஆடை பக்கரி.
பொதுப்பணத்தில்  அரைத்தம்படி
தனக்காக எடுக்காதவர்.
தனது வாரிசுகள் பற்றி
கவலைப்படாதவர்.
 ஒருநாள் அவர் எதையோ
 தேடிக்  கொண்டிருந்தார்.
அது ஒரு பென்சில் துண்டு.
இதைப்போய் ஏன் தேடுகிறீர்கள்
என்பதற்கு அவர் கூறியது
அது ஒரு சிறுவனின் அன்பான அன்பளிப்பு.
யாருக்குவரும் அந்த எளிமை.
இன்றைய காந்தீய வாதிகளுக்கு வருமா?

சிறுவர்களுக்கான  கதைகள்.
ஒருநாள்  பள்ளிக்கு கல்வி அலுவலர் வந்தார்.
அவர் வகுப்பில் ஒரு கதை கூறினார்.
குழந்தைகளே!
நீங்கள் ஒரு அடர்ந்த காட்டிற்குள்
 சென்று கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுடன் உங்கள் தாயும் தந்தையும் வருகின்றனர்.
உங்கள் முன் அப்பா செல்கிறார்.
உங்கள் பின்னல் அம்மா. நடுவில் நீங்கள்.
அப்பொழுது பசியுடன் ஒரு சிங்கம்
உங்கள்மூவரையும் நோக்கிவருகிறது.
நீங்கள் யாரைக் காப்பாற்றுவீர்கள்?
குழந்தைகள் பதில் சொல்ல வேண்டும்.
அப்பொழுது
காந்தி குழந்தை என்னசொன்னது தெரியுமா?
நான் நேரே சிங்கத்திடம் சென்றுவிடுவேன்.
எனது தாய் தந்தை இருவரும் காப்பாற்றப்படுவார்கள்.

இதுதான்  காந்தீஜீயின்  தியாக எண்ணம்.
அவ்வாறே  ஹிந்து -முஸ்லிம் ஒற்றுமைக்காக
உயிநீத்த உத்தமர்.
சுதந்திர இந்தியா ஊழல் மயமாக
உத்தமரை  கொலை  செய்தனர்.
அவரது ஆன்மா அல்பாயுசு தான்.
அது அழுது கொண்டுதான் இருக்கிறது.
அது இந்த அரசியல் கொள்ளையர்களை
சமயம்பார்த்து
தண்டித்து மனதை மாற்றும்.
வாய்மை வெல்லும்.
அதர்மம் ஒழியும்.
அவரது அவதாரம் மீண்டும் எடுக்கும்.
இந்திய இளைஞர்கள்
வெகுண்டு எழுந்தால்
காந்திஜியின் கனவு நினைவாகும்.











அவரது ஆத்மா நாட்டின் ஊழல்கண்டு அழுது கொண்டுதான் இருக்கும்


தேசத்தந்தை 
உலகின் அனைத்து நாடுகளும் 
போற்றி  வணங்கும் 
உத்தமத் தலைவர்.
சுதந்திரப் போராட்டத்தில் 
அனைத்து மதங்களையும் 
இணைத்து 
மனித சமுதாயத்திற்கு விடுதலை 
என்பதை உணர்த்தியவர்.
ஈஸ்வர் அல்ல தேரே நாம் 
சப்கோ சன்மதி தே பகவான் என்று 
பஜனைப்  பாடல் பாடியவர்.
ஹிந்து ,முஸ்லிம் ,सीख சீக்  ஈசாயீ 
ஆபஸ் மென் ஹைன் பாயி  பாஈ  என்று 
இசைத்தவர்.

காந்தி என்றால் வைஷ்யர் ;பனியா ;செட்டியார்;
இந்த சாதிப்பெயர் பொதுப்பெயராக மாறி 
ஜாதி வேறு பாட்டை ஒழித்தவர் .
இத்தலி மருமகளும் சோனியா காந்தி.(செட்டியார்)
சென்னையில் ஹிந்தி பிரசார் சபையின் 
மையம் அமைத்து 
தமிழகத்து மக்கள் 
ஆளும் அரசு எதிர்த்தாலும் 
இந்தியத் தொடர்புக்கு 
ஹிந்தி மொழி கற்க 
1918இல் அடிக்கல் நாட்டியவர்.
ஹிந்தி தெரியவில்லை என்ற ஆதங்கம் 
இன்று தமிழகம் முழுவதும் மக்கள் 
ஆழ்  மனதில் உதிக்க கார ணமானவர் .
தொழில் கல்வி அவசியம் என்றவர்.
தாய் மொழி கல்வியே தரம் .
சிந்தனை வளர்ப்பது என்றவர்.
உண்மை.நேர்மை,அஹிம்சை ,எளிமை என்று வாழ்ந்தவர்.
ஆனால் 
இன்று ஆண்டவன் பெயரைச் சொல்லி யும் 
உத்தமர் காந்திபெயரை சொல்லியும் 
கருப் பு ப் பணம் வெளிநாட்டில் சேகரித்து,
கோடிக்கணக்கில் கேடிகளை வைத்து 
அரசியல் நடத்தும்  அநியாயத் தலைவர்கள்.
உத்தமர் சமாதியில் வணங்கி 
உத்தமக்கொள்கைகளையும் சமாதி வைக்கின்றனர்.
அவரது ஆத்மா நாட்டின் ஊழல்கண்டு 
அழுது  கொண்டுதான் இருக்கும்.
இன்று முதல் 
அவரது கொள்கைகளை 
உண்மையாக நடத்த உறுதியுடன் 
இருப்பது தான் அவரது ஆத்மசாந்தி யடைய 
நமது  சிர ந்தாஞ்சலி.

வாழ்க  காந்தீஜி.