வெள்ளி, செப்டம்பர் 07, 2012

புலம்பல்


புலம்பல் 

மனிதன் 

மனம்
எழும் எண்ணங்கள் 
ஏற்றமும் தரும்,
ஏமாற்றமும் தரும்.
எண்ணத்திற்கேற்ற 
வாழ்க்கை.
உயர்ந்த எண்ணங்கள் 
உயர்த்தும்.
தாழ்ந்த எண்ணங்கள் 
தாழ்த்தும்.
பேராசைகள் 
மைதாஸ் தொட்டது போல் 
ஆகும்.
பொறாமைகள் 
இறுதிவரை 
இன்னல் தரும்.
மன நிறைவு 
என்பது 
மன நிம்மதி என்பது 
முயற்சியில் 
கிட்டும் 
தோல்வியிலும் 
ஏற்பட வேண்டும்.
வெற்றியிலும் 
அகங்காரம் கூடாது.
மனதில் 
அகந்தை 
அழிவைத்தரும்.
ஆத்திரம் அறிவை
 ஆற்றதற்றலாக்கும்.
ஆட்டுக்குக் கால்  அளந்து வைத்ததுபோல் 
அவனவன் கர்மத்திர்கேற்ற 
வாழ்வு அமையும்.
அதுதான் 
ஆண்டவன்  அருள்.
ஆனால் தீயவன் 
கொடுமை -அவனின் 
ஆடம்பர வாழ்க்கை 

நேர்மையாளன் 
துன்பவாழ்க்கை 
அதுதான் 
தீமை வளர்க்கிறது.
அதுதான் 
புரியாத புதிராகிறது.
தீமைக்கு நல்ல பலன்.
உண்மை உரைத்தால் 
கெடுபலன்.
தீமைக்கு துணை நிற்க பலர் .
சத்தியவான் தனிமை
படுத்தப் படுவான்.
இதுதான் 
ஆன்றோர் உரை.
விதி என்பதே 
மதியைவிட 
வலிமை மிக்கது.
மதியால் வென்றவர் சிலர்.
விதியால் வாழ்பவர் பலர்.
மன எண்ணங்கள் 
விதியை மாற்றும்.
விதியை வெல்ல 
இறைவனருள் வேண்டும்.
அவனின்றி ஓரணுவும் அசையாது.





வியாழன், செப்டம்பர் 06, 2012

கோடீஸ்வரன்.



கோடீஸ்வரன்.

கூடிக் கூடி 
வாக்கு வாங்கி 
கோடிக்கோடி 
சேர்த்து 
மக்களை மடையர்களாக்கும் 
மக்கள் தலைவர்கள்.
மாயோனின் 
பேரைச்சொல்லி 
மக்களை 
மயக்கி 
கோடிகோடியாய் சேர்க்கும் 
சுவாமிஜி கள் .
கோடிக் கோடி 
சேர்க்கும் 
ஆலயங்கள் 
இத்தனை 
இருந்தும் 
நடைபாதைவாசிகள்,
பட்டினி  பட்டாளம்.
கொலை .
கொள்ளை.
கோடி  சேர்த்து  ஊழல் 
செய்தாலும் 
நீதி அவர்களுக்கு 
சாதகம்.
தண்டனை இல்லை.
இறை வா !!
நீ  இருப்பது 
மெய்யானால் 
மேதினியில் 
நல்லோரை வாழ விடு.
நலிந்தோரை 
வாழ விடு.
மந்திரிகளை,
ஊழல் செய்வோரை,
கையூட்டு 
பெறுவோரை 
கலக்கத்தில் 
ஆழ்த்திவிடு.
என் வீட்டிற்கு 
லஞ்சம் தராததால் 
மாநகராட்சி 
தண்ணீர் இணைப்பில்லை.
உண்மை 
உறங்கினால் 
பெரியார் தொண்டர்கள் 
தான் அதிகம் ஆவார்கள். 
அ ராஜகம் அதிகரிக்கும்.
கொலைவெறி தலை தூக்கும்.
தர்மம் தலை தெறிக்கும்.
இறைவா!!

புதன், செப்டம்பர் 05, 2012

குரு வணக்கம்




எழுத்து அறிவித்தவன்  
இறைவன் ஆவான்.
தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் 
கண் அளிப்பவர்.
கற்கவில்லை 
என்றால் 
கண்ணிருந்தும் 
பயன் இல்லை.
நம்நாட்டில் 
இறைவழிபாட்டை விட 
கு ரு பூஜைக்கு 
மகத்துவம் அதிகம்.
புனித கபீர் 
குருமஹிமை 
பற்றி 
சொல்லும் போது 

இறைவனும் குருவும் 
முன்னால் வந்தால் 
குருவின் காலில் 
விழுந்து வணங்குவேன் 
ஏனெனில் 
இறைவன் கண்ணெதிரே 
தோன்றக்காரணமே 
குருவின் வழிகாட்டல் தான்.
அந்த குரு 
ஆசிரியராக 
மாறி 
ராத கிருஷ்ணன் 
அவர்கள் 
நம் பாரத நாட்டின் 
ஜனாதிபதி 
பிறந்தநாளில் 
ஆசிரியர் தினமாக 
கொண்டாடும் 
இந்நநாளில் 
ஆசிரி யர்களுக்கு 
வணக்கம்.
எனது 
முதல் ஆசிரியை 
அன்னை.
பிறகு 
மாமா.
முத்தனேந்தல் 
தொடக்கப்பள்ளி 
ஆசிரியை பிலோறேன்சே.
பழனி 
மாநகராட்சி 
பள்ளி ஆசிரியர்கள் 
எஸ்.ஆர்.சுப்ரமணியம் 
அப்துல்ரகுமான் 
ப.சு.நடராஜன் 
சிவலிங்கம் 
வரதராஜன் 
அங்குசாமி 
கோபாலக்ருஷ்ணன் 
பரமசிவம் 
ஹிந்தி ப்ரசார  சபை 
ஆசிரியர் பயிற்சிப்பள்ளி முதல்வர் 
ராமச்சந்திர ஷா 
மீனாக்ஷிஜி 
சுமதீந்திராஜி 
தங்கப்பன் ஜி 
அனைவரும்தெய்வங்கள்.

அனைவருக்கும் 
குரு வணக்கம்.






செவ்வாய், செப்டம்பர் 04, 2012

முதலைக்கண்ணீர்


வேலைவாய்ப்பு 

திரு .காதர் ஒலி  என்பவரின் 
அனுபவ  ஒலி .
 சுயநல அரசியல் 
வாதிகள் 
தமிழகத்தில் 

ஹிந்தி  படிக்கவிடாமல் 
 தன் தன வாரிசுகளுக்கு 
ஹிந்தி தெரிவதால் 
மத்திய  மந்திரிசபை 
மந்திரிகள்.
தன்   வாரிசுகளுக்கு 
தமிழ்  தெரியாமல் 
ஆங்கிலம் 
படிக்கவைத்து 
இரண்டு தலைமுறையாக 
 அரசுப் பள்ளிகளில் 
ஹிந்தி இல்லை.
தென்னக மூன்று மாவட்டங்களில் 
மும்மொழி திட்டம்.
கிட்டத்தட்ட 18 கோடி மக்கள்.
தமிழர்கள்  வலி 
தலைவலி .
தனிவழியாக .
தமிழ் வளர்ந்ததா ?
அதுதான் இல்லை.
ஹிந்தி  மொழி  எதிர்ப்பு 
நான் ஹிந்தி 
எதிர்ப்பில் பங்கேற்றேன்.
ஆனால் என் தாயார் 
ஹிந்தி  கற்றதால் 
வேலைவாய்ப்பு 
என்று 
படிக்க வைத்ததால் 
வேலை பெற்றேன்.
என் 
நண்பர்கள் 
பேருந்து எரித்து ,
புகைவண்டி எரித்து 
போதுசொத்துக்கள் 
நாசம் செய்து 
மத்திய அரசு தரும் 
உதவித்துகை 
இழந்து 
மற்ற மாநிலங்கள் 
பெரும்  மத்திய 
உதவித்தொகை 
பெறாமல் 
சுயநல 
ஹிந்தி எதிர்ப்பு.
பெரியார் வீட்டில் தான் 
ஹிந்தி பிரசாரம் 
தொடக்கம்.
பிள்ளையார் கோயில் 
அவர் வீட்டில்  உள்ளது 
என கேள்வி.
தமிழ் அழகிய மொழி.
ஆனால் 
பணம் 
சம்பாதிக்க 
தமிழ்  போதுமா.
அம்மா அன்பானவள்.
அனால் 
வருமானமின்றி 
அம்மா பட்டினி தான்.
ஆங்கிலம்  வளர்ச்சிக்கே
பல  மொழி
கலப்படம் தான்.
தூய மொழிகள் வளர் வதில்லை.
வடமொழி தென் மொழி
கலந்த வளர்ச்சி.
தூய வடமொழி
இறந்த மொழி.
ஹிந்தி மொழி
இரண்டு இலக்கம் பேர்
பேசிய கடி போலி.
நூறாண்டு தான்
இந்தியின்
வரலாறு.
உலகின்
மூன்றாம் பெரும் மொழி;
 தமிழக  அரசியல்
தமிழை
அழித்து
முதலைக்கண்ணீர்
வடிக்கிறது.
நாற்பது ஆண்டு
கழக ஆட்சி
தமிழ்  வளர்ந்ததா?
மாமி டாடி
பட்டி தொட்டி எல்லாம்
ட்விங்கிள் த்வின்க்லே.








கன்னித் தமிழ்


கன்னித் தமிழ் 

அமெரிக்கா 

அங்கு 
சென்றதும் 
தான் 
தெரிந்தது 
தமிழ் 
பேசினால் 
தரம் 
தாழ்கிறது.
தெலுங்கு 
சுந்தரத் 
தெலுங்கு 
தேனில் 
பாய்கிறது.
தமிழ் 
கன்னித் 
தமிழ் -ஆதலால் 
நாணமடைந்து
மெதுவாக  
பேசுவது 
கேட்பதில்லை.
நம் பெண்கள் 
அடக்கி 
வைக்கும் 
ஆடை
சுதந்திர  
ஆசை 
வெளிப்படுகிறது.



சனி, செப்டம்பர் 01, 2012

மக்களும் உடந்தை

அரசியல் 

அரசியல்  
என்பது 
என்றுமே 
ஆளப் பார்க்கும்.
தமிழக அரசியல் 
மனசாட்சி 
அற்ற 
அரசியல்'
உறுதியற்ற 
கொள்கைகள்.
இறைவழிபாடு 
வேண்டாம் 
என்று 
மறைமுகமாக 
வழிபடும் 
தன்மை.
ஹிந்தி வேண்டாம் 
என்று 
தலைவர்கள் 
மட்டும் 
படி க்கும் எண்ணம்.
ஜாதி வெறியால் 
பாரதியை 
பாராட்டாமல் 
பாரதிதாசனை 
உயர்த்தும் 
அரசியல்'
கண்ணதாசனை 
ஓரம் கட்டும் 
ஓரவஞ்சனை.
அரசியலுக்கு 
அப்பாற்பட்ட 
கலை,இலக்கியம்,
அதிலும் 
அரசியல்.
இவர்களின் 
சுயநலத்தால் 
தமிழ் 
அழியும் நிலை.
தமிழ் தமிழ் 
என்று 
அதை 
காதலியாக 
அன்னையாக 
கொஞ்சி 
ஆங்கிலத்தை 
மிஞ்ச  வைத்த 
அரசியல்.
லாபமே 
என்பதற்காக 
கொள்கை 
மாற்றும் 
அரசியல்.
சிலைவைத்தாலும்,
கலைவளர்த்தாலும்,
மலையைத் தூளாக்கினாலும் 
தனக்கு  கோடி 
கிடைத்தால் போதும் 
என 
நேர்மையை ஓரங்கட்டி 
கோடித்துணி தான் 
மிச்சம்  என்பது 
உணராமல் 
கோலோச்சும் 
விந்தை.
இதற்கு 
மக்களும் 
உடந்தை.
அமுதவன் 
புலம்பல் 
ஆயிரமாயிரம் 
நெஞ்சங்களில்.
ஆனால் கோடிக்கு முன் 
அனைத்தும் 
ஊர்க்கோடியில்.




வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

தர்மம் எப்படி t?!!!

ஆலயங்கள் 
அதிகரிக்கும் 
இந்நாளில் 
அமர கவி 
பாரதியின் ,
பாடல் ஒன்று 
நினைவில் 
வந்தது.
ஆலயம் தோறும் 
பள்ளி சாலைகள் 
அமைப்போம்.
அறிவில்லா 
பக்தி,
பட்டம் 
அழைக்கும் 
பட்டம் பெற 
உதவாது.
அறம்  வளர்க்காது.
ஆறாம் அறிவு 
வேலை செய்யாது.
அறிவுடன் பணி  புரிய 
அறிவாலயம் .
ஆண்டவன் ஆலயம்,
சக்தி இருந்தால்,
 அரிச்சந்திரன்
மயானம் காக்கும் 
சோதனை ஏன் ?
வையகத்தில் 
வாய்மை ஊமை ஆகவோ.?!!!
அழிவிற்குப் பின் 
தர்மம் வெல்லும் 
என்றால் தர்மம் 
எப்படி 
தழைக்கும்?!!! 



இறைவன்


இறைவன் 

இன்றைய செய்தியில் 
எங்கும் 
வன்முறை,
வழக்காடும் 
வழக்கறிஞர் 
பதவி ராஜினாமா.
தனியார் பள்ளி 
ஊதிய  நிர்ணயக்குழு 
தலைவர் 
ராஜினாமா.
நீதிபதி 
மாற்றம்.
எல்லாமே 
ஒரு 
நாடகம்.
பலரிடம் 
கைபேசி எண்  இருந்தாலும்,
கண்டு பிடிக்க முடியாத 
சகான 
சிறு  சேமிப்பில்  மோசடி.
திருடர்களை 
உருவாக்கும் 
ஆய்வாளர்கள்.
அனைத்துக்கும் 
பொறுப்பு 
இறைவன்.

வியாழன், ஆகஸ்ட் 30, 2012

இறைவா! எழுந்தருள்.


பாரத நாடு பழம்  பெரும் நாடு.
பலம்  ஆன்மீக பலம் 
பழம் பெரும் நாட்டை 
காத்து வருகிறது.
நாத்திக வாதம் 
ஆஸ் திகத்தின் முன் 
ஆட்டம் போட்டாலும் 
ஆன்மீகத்தின் முன் 
அடங்கித்தான் 
போகிறது.
அலெக்சாண்டர் 
எளிய சாதுவின் முன் 
பணிந்த கதை உண்டு.
குளிரில் நடுங்கிய சாது 
என நினைத்து 
கம்பளி ஆடை வழங்கிய 
மாவீரன் 
அவரின் உலகியல் உண்மை 
தத்துவம் 
அவனின் ஆசையால் நேரும் 
ஹிம்சையை 
உணர வைத்தது.
வையகம் வாழ்க 
என்ற உயர்ந்த தத்துவம்,
விருந்தினர் களை 
தெய்வமாக நினைத்த தத்துவம்,
தேவாசுர போராட்டம் 
உலகியல் 
என்பதற்கே 
ராமாயணம் ,மகாபாரதம் 
கந்தபுராணம் 
ஐயப்ப ஜனனம்.
ஆணவம் ,
ஜாதிபேதம்,
பொறாமை,
பகை ,
அஹங்காரம் 
அனைத்தையும் 
அழிக்க 
ஒரு 
நரசிம்ஹ அவதாரம்,
அன்பைப்பெற 
துருவ 
சரித்திரம்.
எளிய 
பக்திக்கு 
கண்ணப்பர் ,
நந்தனார்,
ரைதாஸ் .
மீரா,
ஆண்டாள்.
இப்பொழுது 
ஊழல் அரக்கனை,
லஞ்ச அரக்கனை 
ஒழிக்க 
மீண்டும்  ஒரு 
நரசிம்ஹாவதாரம் 
எடுக்க 
நேர்மையாளர்கள் 
தவமும் 
நாம 
ஜபமும் 
பிரார்த்தனையும் 
செய்யும் காலம் 
இது.
காரணம் 
நீதிபதியே 
விலைபோகும் 
காலம் இது.
அரசியல் 
அதிகாரிகள் 
காப்பதற்குப் 
பதிலாக,
நேர்மை ,நீதியை,
கோடிக்கணக்கில் 
கேடிகளை 
உருவாக்கும் 
உண்மைப்போக்கு.
இதை நீக்க 
தேவை 
ஒரு சூரசம்ஹாரம்.
ஒரு நரசிம்ஹாவதாரம்.
ஒரு மோகினி அவதாரம்.
ஒரு மகிஷாசுர  அவதாரம்.
சாமியாரும் 
ஆடம்பரம்.
ஆட்சி 
யாளரும் 
ஆடம்பரம்.
ஆலயங்களும் 
ஆடம்பரம்.
கோடிக்கணக்கில் 
சொத்து 
இல்லையேல் 
சந்நியாசிக்கும் 
மதிப்பில்லை.
என்னே கொடுமை.
குடிசை சாமியார்கள்,
இன்று 
ஆடம்பர ஆஷ்ரமத்தில்.

இறைவா!
எழுந்தருள்.







எண்ணங்கள்  
சாபம்,
பழிபாவம்,

ஆன்மாவின் 
குரல்,
ஆண்டவன்  
தண்டனைஎதற்கும் 
அஞ்சாமல் 
நீதி தேவனுக்கும் 
அஞ்சாமல்,
கோடிக்கணக்கில் 
ஊழல் 
செய்யும் 
ஆட்சியாளர்கள்,
அதிகாரிகள் 
ஊழல் செய்தார் என்று 
உண்ணாவிரதம் 
இருப்போரும் 
ஊழல் 
கோயிலிலும் 
ஊழல்,
காவல் 
நிலைய 
ஊழல் 
நிலக்கரி