ஞாயிறு, ஜனவரி 15, 2012

Hindi-Tamil similarity



தமிழ் நாட்டில் அதிகமாக பெயர்களை சமஸ்கிருதம் தேவ பாஷையில் வைப்பதால் அதன் பொருள் தெரிந்தால் ஹிந்தியும் சுலபமாகும்.
  

हिंदी ------------------------------------------------तमिल


मुख========முகம்
देह        தேகம்  

name  and meaning 
சமஸ்கிருதம்=ஹிந்தி=தமிழ்


புஷ்பலதா=மலர்க்கொடி

கனக லதா==பொற்கொடி
ஸ்வர்ணலதா==போர்க்கொடி
கனகராஜ்===பொற்கோ
ஹேமலதா=பனிக்கொடி
சிநேஹலதா=அன்புக்கொடி
தயாளு =இரக்கமுள்ள
தயாநிதி=இரக்கத்தின் சொத்து
கருணாநிதி=அருள் சொத்து
பிரேம்ராஜ்=yஅன்பரசன்
பிரேம்குமார்--அன்பு மகன்
ராஜ்குமார்=அரசன் மகன்
ஜெயலலிதா==வெற்றிக்கொடி
சசிகலா=பிறைநிலா
நடராஜ்=ஆடலரசன்
ராமதாஸ்=ராமனடிமை
தேவதாஸ் =இறைஅடிமை

கோபால்சாமி=இடையர் இறைவன்
விஜயகாந்த்=வெற்றி   ஈர்ப்பவன்
சுந்தரராஜ்=அழகரசன்


இதோ சில உதாரணங்கள்.






r
aa

tamil poet avvaiyaar-aksharmaala

अव्वैयार अक्षर माला.=
அவ்வையார் ஆத்திச்சூடி.
अगस्त्य  फूलमाला

அறஞ்செய  விரும்பு = अच्छे कर्म करना चाह ////धर्म कर्म करना चाह.

ஆறுவது சினம்==क्रोध दबाना   उत्तम गुण hai.
இயல்வது கரவேல் =jo दे सकते हो,वही  कहो .
ஈவது விலக்கேல்.=दान देने में विघ्न मत डाल.
வுடையது    விளம்பேல் =अपनी  संपत्ति और बचत दूसरों  से  मत  कह.
ஊக்கமது கை விடேல்.== कार्य  जो  भी हो,श्रद्धा और साहस से कर.

எண்ணெழுத்து இகழேல்.=गणित-शिक्षा आदि का अपमान मत कर.
ஏற்பது  இகழ்ச்சி =भीख माँगना  बेइज़्ज़ति hai.
ஐயமிட்டு வுண்=अन्न  खिलाकर.  खा.
ஒப்புரவு ஒழுகு =आम जनता की सेवा कर.
ஓதுவது ஒழியேல்=आजीवन  ग्रंथों   को पढता रह.
अव्वियम पेसेल.=அவ்வியம் பேசேல்=असत्य ,कठोर , व्यर्थ बातें मत बोल.
அக்கம்  சுருக்கேல்.=धंधे  में  नाप-तोल   कम मत कर.

.
.




.





சனி, ஜனவரி 14, 2012

பொங்கல் திருநாள்.
புதிய  தானியங்கள்,
எழில் பெரும் இல்லங்கள்
ஏற்றம்  தரும் நாள்.

கார்மேகம்
  படைக்கும்,
கதிரவனுக்கு
 நன்றி.

வயலைப்
 பண்படுத்தி,
 உலகின் பசிப்பிணி
  போக்கும்
உழவனுக்கு
நன்றி.

உழைக்கும்
கால்நடைகளுக்கும்
நன்றி

இந்த  இனிய  நாளில்
என்   இதயங்கலந்த  
வாழ்த்துக்கள் .
நன்றிகள் .






annai.

அன்னை அன்புக்கு
 அரவணைப்புக்கு
அழகு தமிழில்
ஒப்பீட்டு 
சிந்தித்து
கிட்டாததால்,
இறைவனுடன்
ஒப்பிட்டால்,
மறைந்து   விடுவாள் .
நிலவுபோன்று
என்றால்,
வளர் பிறை ,தேய்பிறை
வரும்.
நதியுடன் இணைத்தால்,

வறண்டுவிடும்.
அவள் ஒரு ஜீவ நதி.
நீர் ஊற்று.
அன்பிற்கு கடல் அலை.
கருணையின்
இணை-பிறவி.
.  .
மனைவிக்கு
மாட மாளிகைகள்
 குவியல்கள்
  பொருள் -
 .ஆனால்,
அன்னைக்கு
அன்பு
 வார்த்தைகள்  போதும்,   
அன்னையின் அருளாசிக்கு,
அவளின்
ஆத்மா
 திருப்திக்கு.



 ,




செவ்வாய், ஜனவரி 10, 2012

ulakaneethi =saansaarik neeti

சேராத இடம் தனிலே சேர வேண்டாம்.===जिसके संग रहना उचित नहीं हैं ,उसका संग रहना छोड़ दे .

செய்நன்றி  ஒருநாளும்  மறக்கவேண்டாம்.==जिसने मदद की है,उसको कभी मत भूल.कृतज्ञ रह.

ஊரோடும்  குண்டுணியாய்த்   திரிய வேண்டாம்.=गुस्ताखी  के संग मत रहना.
உற்றாரை உதாசினங்கள் சொல்லவேண்டாம்==नाते -रिश्तों   से  लापरवाही से  मत बोल.

பேரான  காரியத்தை  தவிர்க்க வேண்டாம்.==यश दिलाने वाले काम करना मत छोड़.

பிணைபட்டுத்  துணைபோகித் திரியவேண்டாம்.==बुरे काम   करनेवालों के संग मत घूमना.

வாராருங்  குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

प्रसिद्ध आखेटक  की पुत्री वल्ली के पति मयूर वाहन  वाले कार्तिक के  यशोगान में लगो,

saansaarik neeti niyam =ulakaneethi (tamil-hindhi)

உலகநீதி =सांसारिक नीति

கருதாமல் கருமங்கள் முடிக்கவேண்டாம்         =बिन सोचे -समझे कोई भी  कार्य मत कर.

கணக்கு அழிவை ஒருநாளும் பேசவேண்டாம்-------=नष्ट ,मिथ्या  गणित कभी मत बोल.

பொருவார் தம் போர்க்களத்தில் போகவேண்டாம்--=रणक्षेत्र पर तमाशा देखने मत चल.

பொதுநிலத்தில் ஒருநாளும்இருக்க வேண்டாம்.---=सरकारी  या दूसरों की जहग पर मत रह.
இரு  தாரம் ஒருநாளும் தேட வேண்டாம்.-------------=कभी   दो विवाह मत कर..
எளியாரை எதிரிட்டுக் கொள்ளவேண்டாம்.----------=गरीबों से दुश्मनी मत मोल लें.
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன் குமரவேல்பாதத்தை கூறாய் நெஞ்சே
.
 अरे मन!!!दीनबंधु  कार्तिक  भगवान का यशोगान कर.


 

திங்கள், ஜனவரி 09, 2012

manithan

மனிதன்

கவி ----நசீர் அக்பராபாதி
உலகின் பேரரசுனும் மனிதன்.
ஏழையும் பிச்சைக்காரனும் மனிதன்.
இரக்கமற்ற பணம் படைத்தவனும் மனிதன்.
அறுசுவை உண்டி ஆனந்தமாய்
 உண்பவனும் மனிதன்.
பிச்சை எடுத்து சாபிடுபவனும் மனிதன்.
ஐயா!
தொழுகை செய்பவனும் மனிதன்.
தொழுகை செய்விப்பவனும் மனிதன்.
மனிதன் தான் குரானையும் படிக்கிறான்.
மனிதன் தான்  
செருப்பைத்  thirudukiraan ,
திருடுபவனையும் கண்டுபிடிக்கிறான்.
மனிதனுக்காக உயிர் தியாகம்
செய்பவனும் மனிதன் தான்.
மனிதனை கொலை செய்பவனும்
மனிதன் தான்.
கொள்ளை அடிப்பவனும் மனிதன் தான்.
கூக்கிரலிட்டு  உதவிக்காக
அளிப்பவனும் மனிதன் தான்,
கூப்பிட்ட குரலுக்கு உதவ
ஒடிவருபவனும் மனிதன் தான்.
காதல் பாட்டுப் பாடுபவனும்
மனிதன் தான்.
பல்லாக்கினுள் அமருபவனும்
மனிதன் தான்.
பல்லாக்குத் தூக்குபவனும்
மனிதன் தான்.
குதிரையில் சவாரி செய்பவனும்
மனிதன் தான்.
குதிரைக்குப் பின்னால்.
ஹுக்கா-ஜாடி
எடுத்துக்கொண்டு
ஓடுபவனும் மனிதன் தான்.
மனிதனை மதிப்பவனும் மனிதன் தான்.
மனிதனை அவமதிப்பவனும் மனிதன் தான்.

 .
.







tajmahall

தாஜ்மஹால்

ஜனாப்   சாஹர் லுதியாநபி

தாஜ்மஹலை ஷஹ்ஜஹான்
கட்டுவித்து,
தன் காதலை  அமரக் காதலாக்கினான்.

ஆனால்

தாஜ் மகாலை கட்டி

அவன் ஏழையின் காதலை

கேலிச்சித்திரம் ஆக்கிவிட்டான்.

என்னருமைக்காதலியே!!
  தாஜ்மஹால் காதலின்
அன்புச்சின்னமாகத் தோன்றலாம்.
இந்த இறந்த பேரரசரின்
 கல்லறை கண்டு மகிழும் காதலியே!
நீ  உன் இருள் சூழ்ந்த உன் வீட்டினைப்பார்.

உலகில் எண்ண முடியாக் காதலர்கள்,
அவர்களின் காதலும் உண்மையானதுதான்.
ஆனால் வறுமையின்  காரணமாக
அவர்களின் காதல் ஒளிரவில்லை.
தஜ்மஹாலைப்பார்!
இந்த கல்லறைகள் ,
இந்த கோட்டை ,மதில் சுவர்கள்,
அழகுமிளிரும் தூண்கள்.
பூவேலைப்பாடு நிறைந்த ,
சுவர்கள் ,எழில் பூங்காக்கள்,
 வியர்வையும்
மிளிரும் விளக்குகள்,
உதிரமும்
உழைப்பும்
முன்னோருடையது.
இந்த தொழிலாளர்கள்
காதலிக்கவில்லையா?
ஆனால் அவர்களின் நினைவாக
எந்த அடையாளமும் இல்லை.
சிறிய மண் விளக்குகூட இல்லை.
பணம் படைத்தவர்கள்,
பாட்டாளியின் ரத்தம்
உறிஞ்சி
ஏழைகளின் காதலை
ஏளனத்திற்கு
உள்ளாக்கியுள்ளனர்.
என் அருமைக்காதல்,
கண்மணியே,
நாம் இந்த அவமானத்தின்
சின்னம்
தாஜ்மஹாலில்,
சந்திக்க வேண்டாம்.
வேறு எங்காவது
சந்திப்போம்.
.



 .





khudhaa =kadavul

குதா=கடவுள்

உருது கவிதை (தமிழாக்கம்)
அக்பர் இலஹாபாதி

இறைவனின் பெயர் ஒளி.
இறைவனின் பெயர் அன்பு.
இறை நாமம் ஜபித்தால்,
மன வலிமை கிட்டும்.
நாக்குக்கு பேசும்
உரிமை(திறன்) கிட்டும்.
இரவும் பகலும்
இறைவனின் ஆணைப்படியே.
விண்ணின் விண்மீன்கள்
ஏற்பாடும் ஆதிக்கமும்
ஆண்டவனின் அதிகாரத்திலே.
பருவ கால மாற்றமும்
பகவானின் கட்டளையே.
அவன் கட்டளையாலேயே
காற்று வீசுகிறது.
அவன் கட்டளையால்
பழங்களும் தானியங்களும்
விளைகின்றன.
அவன் கட்டளையே
மழை பெய்வதும்.
ஆனால் மனிதன்
ஆணவத்தால்
தன்னையே
உயர்ந்தவனாக
கருதுகிறான்,
மற்றவர்களை மதிப்பதில்லை
மரணம்  நெருங்கும்    போது
வேறுவழி இன்றி,
இருப்பான்.
செயல் நன்காக  இருந்தால்
உயர் இடம் கிடைக்கும்,
அழியும் இந்நில உலகில்
மனிதன் சோதனைக்கு
உட்படுத்தப்படுகிறான்.
நமக்கு தர்மங்கள்
நல்வழி காட்டுகின்றன 
பெரியோரை  
மதிக்கவேண்டும்.
இறைவனிடம்
அஞ்சவேண்டும்.
தீய செயல்களில் இருந்து
தப்பிக்க வேண்டும்.
இறை மார்க்கத்தில்,
செல்லவேண்டும்.



,

   




siriya virunthaali--- புதிய சின்னஞ்சிறு விருந்தாளி


சிறிய  விருந்தாளி

அக்தர் சீரானி உருது கவிஞர்

a
எனது வீட்டு விருந்தாளி ,என் சிறு குழந்தை
அதன் மேல் ஒரு குற்றச்சாட்டு.
நீ வந்தாய்.அகமகிழ்ச்சி தான்.
வரவேற்கிறேன்.-ஆனால்
என் அன்பு மனைவியின்
முழு அன்பையும் நீ
கொள்ளை
  அடித்து  விட்டாய்.
நீ அவள் மனதைப்
பறித்துக்கொண்டாய்.
என்மன ஆசைகளை,
 மகிழ்ச்சியை 
எடுத்துக்கொண்டு விட்டாய்.
விருந்தாளியாக வந்து
என் ஆனந்தத்தைக்
கொள்ளை கொண்டாய்.
என்மனைவிக்குச் செல்லமாய்,
எனக்கு விரோதி யாய்,
ஆனாய் நீயே.
என் இல்லத்தரசியின்,
முன்னர் கிடைத்த அன்பு,
நீ வந்த பின்  கிட்ட வில்லை.
என்னை மறந்து
எப்பொழுதும்
 உன்னருகிலேயே
உள்ளாள்
.உன் வருகையால்,
பெரும் புரட்சியே
நடந்து விட்டது.
அவள்
உன்னைவிட்டுப்
பிரிவதே இல்லை.
என்னிடம்
அன்புகாட்டுவதும் இல்லை.
காதல் சமிக்ஞையும்
இல்லை.
என்னிடம் அவள் வருவது
கனவாகி விட்டது.
ஒரே வீட்டில் இருந்தும்,
தனியாக இருக்கப்
பழகிக்கொண்டாள்
உன்னருகிலேயே  இருக்க 
என்னிடமிருந்து பிரிந்து விட் டாள்.
என் படுக்கையும் உன் படுக்கை
ஆகிவிட்டது.
நீவந்ததும்.
வீடு உன் அதிகாரத்திற்கு
வந்துவிட்டது.
பணியாட்களுக்கும்
எனக்கு சேவை  செய்வதை விட
உனக்கு சேவை செய்யவே
விருப்பமாக உள்ளது.
நீ வந்ததும் எனக்கு
வசந்தமில்லாமல்
எனக்கு குழந்தைப்
பருவமில்லாமல்,
எனக்கு வாலிபமும் 
இல்லாமல்,
அனைத்தையும் 
எடுத்துக்கொண்டாய் .
இல்லம் வருவோரும்,
உன் நலம் தான்
விசாரிக்கின்றனர்.--என் 
நலம் விசாரிக்க 
ஒருவரும் இல்லை.
அன்பின் அவதாரமாகி,
என் அன்பையும் சேர்த்துக்கொண்டாய்  .

நீ

புதிய    சின்னஞ்சிறு  விருந்தாளி  

.