புதன், டிசம்பர் 28, 2011

rashyaavum bhagavan krishnaleelaiyum

உலகம் போற்றும் உத்தமமான தெய்வீக நூல் பகவத் கீதை.  உலகிற்கே அன்பையும் அஹிம்சையையும் எடுத்துக்காட்டியது.
உலகிற்கு சகோதர  பாசத்தையும், நேசத்தையும்   ,மனித   நேயத்தையும் எடுத்துக்காட்டி  "வையகம்  வாழ்க ";வையகம் ஒரு குடும்பம்" "விருந்தினர்கள் தெய்வம் ",ஒருமைப்பாடு,அஹிம்சை,அமைதி,என்ற ஆதர்ஷங்களை நிதர்ஷ்ணப்படுதியது பாரதம்.
கிடைத்ததைக் கொண்டு  வாழ்,அதிகம் ஆசைப்படாதே,கடமையைச் செய்,பலனை எதிர்பாராதே ,நாம் எதையும் எடுத்துவரவில்லை,எதையும் எடுத்துச்செல்வதில்லை,உலகம் நிலையற்றது.என்றெல்லாம் வாழும் நெறி காட்டுவது.
இன்று ரஷ்யாவில் கீதை பற்றிய விவாதம் நீதி மன்றம் சென்றுள்ளது.அதற்கு ரஷ்யரே கூறியுள்ளார்.பகவத் கீதை அறநெறி காட்டுவது.இருபத்தைந்து ஆண்டுகளாக அப்புத்தகம் இந்த நாட்டில் உள்ளது.அதனால் எந்த பாதிப்பும் இல்லைஎன்று.
என் சிறிய அறிவில் தோன்றியது இதுதான்.இதுவும் இறைவனின் லீலை தான்.
இதுவரை கீதையைப்பற்றி கேள்விப்படாத மேலும் கீதை படிக்காத வெளிநாட்டினரும் கீதை படிக்கத் தூண்டுகோலாய் இந்த வழக்கு அமைகிறது.
அதில் அப்படி என்ன விசேஷம் என்று படிக்காதவர்களும் படித்து கிருஷ்ணா பரந்தாமன் புகழ் பாடத்தான் போகிறார்கள்.இறைவன் ஸ்ரீ கிருஷ்ண லீலை எப்படி இருக்கு.

russia and bhagavat gheetha

हिन्दू  धर्म  संसार को बताती है  कि "वसुदेव कुटुम्बकम" और "जय जगत".भारत के इतिहास में  भारत अपने ऊँचे सिद्धांत के कारण गुलाम बना.भारत का सनातन  धर्म  सहनशीलता सिखाती है."अतिथि देवो भव " के अनुसार चलनेवाले भारतीय  शांति के पथ पर  यह सोचता है कि सुख या दुःख ईश्वर की देन है.जो कुछ स्वतः मिलता है,उससे संतुष्ट होकर जीना श्रेष्ठ है.भारत पर विदेशी आक्रमणकारी चढाई करने आये तो उनके पक्ष में या समर्थन में
भारत के ही लोग थे.भाग्य पर विश्वास करने वाले भारतीय अलेक्सान्दर के सेनापति सेल्यूकस की बहन को अपनी
बहू बनाकर विश्व बंधुत्व का साक्षी  हैं.भारत के वेड शास्त्र पुराण में और कहानियोमें जाति.समन्वय  की बातें है.

अहिंसा की बातें है.भागवत गीता की चर्चा रूस में हुई तो उस ग्रन्थ को और भी पढने वाले होंगे.उसको आज तक किन लोगोंने पढ़ा नहीं, उनको पढने की प्रेरणा भगवान् कर रहे हैं.उस ग्रन्थ के श्रद्धालु और अधिक होंगे.अतः वास्तव में यह मुकद्दमा श्री कृष्ण के भक्त संख्या बढाने का कार्य करेगा. 

prayer for religious tolerence/matha sakippuththanmaikku iraivanakkam

மதங்கள் மனிதர்களிடம் 
சகிப்புத்தன்மை, மனிதநேயம்,
அன்பு,சேவை ,அஹிம்சை,பாசம்,நேசம்,
வளர்ப்பதாக,ஒற்றுமை வளர்ப்பதாக,
ஒருமைப்பாடு வளர்ப்பதாக அமைய ,
நபி,இயேசு , புத்தர், சங்கரர்,மகாவீரர்,
ஒற்றுமை வளர்க்க மதங்கள்.
ஆனால் மதங்களால்  கலவரங்கள்,
இதை ஆண்டவனும் விரும்பமாட்டார்.
இந்த ௨௦௧௨ புத்தாண்டில்,
மத இனக்கலவரங்கள் நடக்காமல்,
மனத்தால்,இனத்தால்,மொழியால்,
கலவரங்கள்,கொலைவெறி நடக்காமல்,
உலக அமைதிக்கு,நட்புக்கு,நேசத்திற்கு,
அல்லாவைத்தொழுவோம் .
யேசுவிடம் விண்ணப்பிப்போம்.
சிவனிடம் பிரார்த்திப்போம்.
ஷீரடி  சாய் பாபா வழியில்,
அல்லா சாயீ,இயேசு சாயீ,
ஷங்கர் சாயீ,விஷ்ணுசாயீ,
என்றே நாளும் ஜெபிப்போம்.
வையகம் வாழ,ஜெய் ஜகத்,
மகாத்மா வழியில்,
ஹிந்து ,முஸ்லிம் ,சீக் ,ஈஸாஈ.
ஆபஸ் மே ஹை பாய் பாஈ,
என வையகம் வாழ,
சுவாமி விவேகானந்தர்,
கூற்றுப்படி,
வையகம் முழுதும்,
சர்வதர்ம ஒற்றுமை பெற ,
ஆண்டவன் உடனிருக்கப்
பிரார்த்திப்போம்.





new year greetings

2012 Happy new year

௨௦௧௨  புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஆங்கிலப்புத்தாண்டு ,
ஆனந்தமாக,
இன்னல்களின்றி,
இன்பங்கள் நிறைந்த ,
ஈடு இணையற்ற,
இயற்கை இன்பமாக,
உள்ளம் நிறைவான,
ஊக்கம் தரும்.
எண்ணங்கள் நிறைவேறும்,
ஏற்றம் தரும்.
ஐந்து கரத்தான்,
ஆணை முகத்தான்.
ஆறுமுகத்தான்,
அருள்மழை பொழியும்
வழிநடத்தும் ஆண்டாக
அமைய வாழ்த்துக்கள்.
பிரார்த்தனைகள்.

2०१२ नव वर्ष की शुभ कामनाएँ
                                                               नए  साल में  आप सब को,         

                                                   
                                      
                                                                  अनंत आनंद मिले.इच्छाएं आपको ,ईश्वर की कृपा से,

उत्तम हो .

आप को नाम मिलें,
दाम मिलें .
सारे सपने आपके ,
साकार हो.
अग जग में,
अघ हटें,
आनंद मंगल
प्रसन्नता,
शान्ति,
आशा,
भाई -चारा,
बंधुत्व
प्रेम पाश से
बंधुत्व बढ़ें.
अग-जग में
न्याय  चलें .
प्यार बढें.
प्राकृतिक
बाधाएं
दूर हो.
भगवान सब की भला करें.










செவ்வாய், டிசம்பர் 27, 2011

thiru.vi.kaa vin dhiyanam patriya karuththu

தியானம்
தியானம்  மனிதனை தெய்வமாக்குகிறது.
மனிதன் விலங்கினின்று தோன்றியவன்
.அவன் பால் விளங்கியல்புகள் மலிகின்றன.
அம்மலிவு சுருங்கி அருகுதல் வேண்டும்.
இதற்கு வழி தியானம்.
 என்று திரு வி.கல்யாணசுந்தரம் வழிகாட்டுகிறார்.


தியானம் மனிதனிடத்துள்ள விலங்கியல்பைக் களைய வல்லது.
புற மனத்தை ஒடுக்கி ,   நடு மனத்தை எழுப்பி ,அடிமனத்தை விழிக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது.
தியானம் மனிதனை அமைதித் தெய்வமாக்கும்.
தியானத்திற்கு ஒரு கொழுகொம்பு தேவை.
அக்கொழு கொம்பு விலங்கியல்பைப்  பெருக்குவதே.
கருவி காரணங்களை  எரிப்பததாய் ,
மூர்க்கத்தை வளர்ப்பதே இருக்கக்கூடாது.
அக்கொழு ,மனத்தைப் பண்படுத்துவதாய்,
அன்பை விளை விப்பதாய்
அமைதியை ஊட்டுவதாய்,
இருத்தல் வேண்டும்.
அதுவே பரம்பொருள்.
வாழ்க்கை வழி.
திரு வி.கல்யாணசுந்தரனார்.



manitha manam

மனித மனம்
மனித மனம் குழப்பமாக இருக்கிறது.காரணம் சமுதாயச் சூழல்.பள்ளிக்கு  செல்லும் போதுபடிக்க வேண்டும் ,கல்லூரிக்கு செல்லும் போது பெற்றோர் விரும்பும் படிப்பு படிக்கவேண்டும்.ஆலயங்களுக்குச்சென்றால் ,ஆன்மீகச் சொற்பொழிவுகள் கேட்டால்   குழப்பம். நானே கல்கி,நானே சிவன்,நானே அம்மன்,நானே சித்தர்,நானே ஆஞ்சநேய  உபாசகர்.ஷீரடி சாய்பாபா ,புட்டபர்த்தி சாய்பாபா,ராகவேந்திரர்,அனைவரும் ப்ரத்யக்ஷ மாக இறைவனின் ஸ்வரூபம்.
இவர்களின்  பக்தர்கள் ,தேவி உபாசகர் ,அம்மன் உபாசகர்,இவைகளெல்லாம் கடந்த ஆனந்த சாமியார்கள்.முதல் நாள் ஆசிபெற்று மறுநாள் அவரகளைபற்றிய அவதூறு செய்திகள்.அப்பாடா  தெளிவுபெற என்று ஒருமார்க்கம்  தோன்றும்.
அப்பாடா  என்று  அரசியலுக்கு வந்தால் அங்கு  அனைவரும் ஒரே தலைவர்  பெயரைச் சொல்லி பல தலைவர்கள் .தனிதனி கொடிகள்.
நம் நாட்டில்  பொது சொத்துக்களை எரித்தல்,சாலைகள் உடைத்தல், பள்ளி கல்லூரி  சொத்துக்களை சேதப்படுத்துதல்,மரங்களை வெட்டுதல்,அதிலும் ஆட்சிகள் மாறினால் வண்ணங்கள் மாறுதல்,அனைத்திலும் மாற்றங்கள்.

மனித மனம்  மனிதத் தன்மையாக  மாறுமா? காட்சிகள் மாறுமா?கட்சிகள் பெருகுமா?









direct witness--neradi saatchikal

ஆண்டவன் அருள்வேண்டி
 பரமானந்தம் அடைந்து,
ஆண்டியாக ஞானம்
பெற்றோரும் உண்டு.
ஆண்டவன் இல்லை
 என்று ஆனந்தமாக
ஆட்சி செய்வோரும் உண்டு.
ஆசார அனுஷ்டானத்துடன்
ஆண்டவனைத் தொழுவோரும்,
ஆஸ்திகளுடன் ஆடம்பரமாக,
வழி  படுவோரும் உண்டு.
உண்ண உணவின்றி ,
உடுக்க உடையின்றி,
படுக்க படுக்கையின்றி,
இருக்க இல்லமின்றி,
இறைவனை வழிபடுவோரும் உண்டு.
பிரஹலாதணும்உண்டு/
ஹிரண்ய  கஷ்யபும் உண்டு.
எதற்கு இல்லை எடுத்துக்காட்டு.
நாத்திக வாதம் பேசியும்,
ஆலயங்களில்  அலைமோதும்
பக்தர்கள்,
குவியும் உண்டியல் காணிக்கை.
தங்கம்,வெள்ளி கிலோ கணக்கில்.
ஆலயத்தின் மூலம்
அர்ச்சகர்கள் குடும்பம்,
பண்டாராங்கள்,ஊழியர்கள்,
ஆலயங்கள் சுற்றி கடைகள்,
உணவகங்கள், விடுதிகள்,
மலர் வியாபாரிகள்,புத்தகக்கடைகள்,
தானம் அளிப்பவர்கள்,
பிச்சை  எடுப்பவர்கள்,
சாதுக்கள்,சந்நியாசிகள்,
மடாலயங்கள்,ஜோதிடர்கள்,
பாடகர்கள்,உபன்யாசம் செய்வோர்,
இசைகருவிக் கலைஞர்கள் ,
வேடதாரிகள்,கள்ளர்கள்,
ஜேப்படிகள்,பொட்டுவைத்து
 சம்பாதிப்பவர்கள்,
எத்தர்கள்,ஏமாற்றுபவர்கள் ,
வழிப்பரிசெய்வோர்,
காவலாளிகள்,
காவல் துறை ,
அறநிலையத்துறை ,
ஆன்மீகவாதிகள்,
சித்தர்கள்,சிந்தித்தேன்
ஆண்டவன் அனைவருக்கும் படி அளப்பார்,
என நேரடி சாட்சிகள்.









இன்னல் உற்று இறைவனைத் தொழுவோரும்,

thirukkural( hindhi )---nasheeli ka kuprabhav

மனிதனின் மதியை இழக்கச்செய்வது மதுவும் மாதுவும்.மதுவின் மயக்கம் இயற்கை ஆனாலும் அதற்கும் மனக்கட்டுப்பாடு தேவை.புலனடக்கம் தேவை.இல்லை என்றால் பால் வினைநோய்கள் தாக்கும்.
மதுவின் சுவை மயக்கம் தீய நண்பர்களால் ஏற்படுவது.அதை முதன் முதலில் பருகும் போது படும் அவஸ்தை  அதன் சுவை எப்படி போதைக்கு அடிமையாகி பாதை மாறுகிறார்கள் என்பது வியப்பிற்கு உரியது.அரசும் வருமானத்திற்காக இரவு பதினொன்று வரை கடை திறந்து வைப்பது .....வள்ளுவரின் கள்ளுண்ணாமையில் தெரியவரும்.
அதன் பொருளை ஹிந்தியில் எழுதுகிறேன்.

  1. உட்கப் படா அர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
 கட்காதல் கொண்டொழுகு வார்

जो राजा मधु पीने की चाह में मस्त रहता है,उससे शत्रु नहीं डरते.
उसके पूर्वजनों ने जो यश छोड़कर गए,उस तेज़ को भी खो देंगे.

२.உண்ணற்க கள்ளை உணி லுனக  சான்றோரான்
 எண்ணப்பட  வேண்டா  தார்.
जो बुद्धिमान है ,उनको बेवकूफी बनानेवाले मद्यपान नहीं करना चाहिए.
जो अपने को बुरा मानना चाहते हैं ,अच्छे लोगों से नाम पाना नहीं चाहते ,
वे ही शराब  पीते  हैं.
३.







.

திங்கள், டிசம்பர் 26, 2011

golden words(tamil)ponmolikal

  1. ஒரு ஞாநியின் அருகில் உள்ளவர்கள் ,அவரின் ஞானத்தை அறிவது இல்லை  .அவரின் வாழ்க்கையை பார்க்கிறார்கள். அவரின் வாழ்க்கையை பார்க்காதவர்கள்  அவரின் ஞானத்தை அறிகிறார்கள்.
  2. தர்மம் ஒன்றுதான்.சம்பிரதாயங்கள் பல. தர்மத்தை அறியாதவர்கள் அவர்களின் தர்மத்தையே சம்பிரதாயமாக கூறுகிறார்கள்.
  3. மதங்களில் உள்ள மூட நம்பிக்கைகள் ஞானம் பெற்றால் தான் விலகும்.மதச்சடங்குகள் மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றன,
  4. அறியாமை நிலையானது. அறிவு பெறக்கூடியது.அறியாமையின் உணர்வுதான் அறிவின் நுழை வாயிலைத் திறக்கிறது.
  5. மனிதன் சமுதாயம் என்ன சொல்லும் என்பதை நினைக்கக் கூடாது.அவனை தொடர்ந்து முன்னேறச்செய்யும் தன்னம்பிக்கையைதான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  6. வேள்விகள்,சடங்குகள் மனிதனை மாற்ற முடியாது.அவை மனிதனை ஆன்மீகவாதி என்று ஏமாற்றுபவை.
  7. அறிவியல் என்பது பாலங்கள்,பாதைகள்,ஏவுகணைகள்,கணினிகள் போன்றவற்றை உருவாக்க முடியும்.நல்ல மனிதனை நிர்மாணிக்க முடியாது.அறிவியல் நீதி ,அன்பு,நல்லுணர்வு,இறக்கம் ,போன்ற மனித குணங்களை உருவாக்க முடியாது.இந்த உன்னத காரியங்களை தர்மமும் ஞானமும் தான் செய்ய முடியும்.
  8. ஒரு நாட்டிலோ சமுதாயத்திலோ ஆசிரியர்களின் மதிப்பும் கௌரவமும் குறைந்தால்,அந்த நாட்டை வீழ்ச்சியிலிருந்து தர்மமோ ,அரசியலோ தடுக்க முடியாது.
  9. குறிக்கோள் நாம் எடுத்து வைக்கும் காலடிகளில் ஒட்டி உள்ளது.குறிக்கோளை அடைய காலடிகளை முன்னால் வைத்து செல்லவேண்டும்.
  10. அறிவியல் காரணமாக அநீதிகளும்,ஊழலும்,கொள்ளைகளும் ஊக்கமடைகின்றன.தர்மத்தால் ஏழ்மை ,சுரண்டல்,மூடநம்பிக்கைகள் வளர்கின்றன. அறிவியல் மற்றும் தர்மத்தால் சமுதாயம் ஆறுதலோ,அமைதியோ பெறவில்லை.

VIVEKAANANDAR KATHAIKAL --BROAD MIND

கிணற்றுத்தவளை
 சுவாமி விவேகானந்தர் சமதர்ம மகாநாட்டில் சகோதர சகோதரிகளே என்று உலக மதங்களின் ஒற்றுமையின் மேன்மையை உணர்த்தியவர்.
மனித நேயம் ,மனிதர்களுக்கான சேவை,அன்பு  என்ற உயர்ந்த பரந்த மனப்பான்மைக்காக பல சிறு கதைகள் கூறுவார். அதில் என் மனம் கவர்ந்த கதை. நாம் அனைத்து மதங்களின் ஆழ்ந்த அறிவை தெரிந்து ஒற்றுமையாக வாழவேண்டும்.
சூரியன் ஒன்று.சந்திரன் ஒன்று.ஆகாயம் ஒன்று. காற்று உருவமில்லா உணர்வு.
அவைகள் அனைவருக்கும் பொது. மனிதர்களின் உணர்வுகளும் ஒன்றே.
பசி,தாகம்,சிரிப்பு, அழுகை,மரணம் ,இன்பம், துன்பம் அனைத்து இன மக்களுக்கும் ஏற்படும். நம் மனம் தாராளமாக தயை நிறைந்து விளங்கவேண்டும்.
சுவாமிஜியின் கதை:----
ஒரு முறை ஒரு கடல் தவளை கிணற்றில் விழுந்து விட்டது.அப்பொழுது கிணற்றுத்தவளை கடல் தவளையிடம் உன் கடல் என் கிணற்றைவிட பெரியதா என்று வினவியது.
கடல் தவளை  என்கடல் மிகப்பெரியது என்றது.
கிணற்றுத்தவளை எனது  கிணற்றை விட கடல் மிகப்பெரியதாக இருக்கமுடியாது.
இவன்  பொய் சொல்கிறான். இவனை விரட்டுங்கள் என்று கத்தியது.

இது தான் பல ஆண்டுகளாக மனித இன ஒற்றுமைக்கு பாதகமாக விளங்குகிறது.
நான் ஹிந்து .நான் என் சிறிய கிணற்றுக்குள் இருந்து என் மதம் தான் பெரியது என நினைக்கிறேன்.இதுதான் முழு உலகம் என்று நினைக்கிறான்.
கிறிஸ்தவன் தனது மதம் தான் உலகம் என்று கிணற்றுத்தவளை போல் கருதுகிறான்.அவ்வாறே முஸ்லிமும் தன சிறு கிணற்றில் இருந்து கொண்டு ,அதுதான் முழு உலகம் என்று நினைக்கிறான்.
நமது இந்த குறுகிய  மதங்களின் எல்லைகளை உடைத்தெறிய
இறைவன் அருள்புரிவான் என்ற நம்பிக்கை சுவாமிஜிக்கு இருப்பதாகக் கூறுகிறார். இதே நம்பிக்கை  அனைத்து மனித நேயர்களுக்கும் ஏற்பட இறைவன் அருளட்டும்.