பக்தா ! அறிவை அளித்தேன் ஆசை அடக்க!
S.Anandakrishnan, M.A, M.Ed.,
Retired Head Master of Hindu Higher Secondary School, Chennai, India
சனி, ஜூன் 24, 2023
எனது சிந்தனைகள்
அருணகிரி சரித்திரம் காட்டினேன்,
கோவலன் முடிவைக்காட்டினேன்
ரத்தக்கண்ணீர் கதை காட்டினேன்
கலைஞரின் கண்ணீர் காட்டினேன்
அஹல்யா கல்லானகதை காட்டினேன்
இதைஎல்லாம் படித்துசிந்திக்கும் அறிவையும் கொடுத்தேன்
விஷம்-அமிருதம்--மாட்டுப்பால்--கள்ளிப்பால்
முள் -பூ - அறிய வைத்த அறிவு ,
என் நாமம் ஜபித்தே ,
முழுசரணாகதிஅடையா வாழ்க்கை
நீ அமைத்த வாழ்க்கை.
என் தவறல்ல! சித்தர்களைபடி
சித்தம் . தெளியும்.
கடவுள் ஒரு தூசி எழுப்பி துன்பம் தருவார்,
பூமி நடுங்கச் செய்தும் துன்பம் அளிப்பார்.
கடல் அலை எழுப்பியும் துன்பம் தருவார்
கொசுக்கூட்டம் அனுப்பியும் துன்பம் தருவார்,
கடும் பஞ்சம் விளைவித்தும் இன்னல் தருவார்.
இவைகளைக்கண்டும்
மனிதன் மனிதனாகவில்லை என்றால்
இன்பமே இல்லை இந்த வையகத்தில்.
அவன் துதிபாடி மகிழ்ந்தோர் வையகத்தில்
மறந்தாலும் வாழ்வார்கள்
ஆனால் அவன் பெயர் சொல்லி ஏமாற்றும் கூட்டம்
இன்பத்தில் ஊறி துன்ப சாகரத்தில் உழல்வர் காண்.
இன்னாலில்லா இனம் உண்டா வையகத்தில்
இதை உணர்ந்து நேர் வழி செல்லா அறிவு ஜீவி
இந்நில உலகில் வாழ்வதே கடினம்.
செவ்வாய், ஏப்ரல் 25, 2023
அன்பு ? எப்படிக் காட்டுவது?
அன்பு என்பதை எப்படிக் காட்டுவது என்பதே
புரியுமா? புரியாதா?
தெரியாது.
குழந்தை மிட்டாய் கேட்கும்.
வாங்கித்தரலாம்.
ஸ்கூட்டர் சைக்கிள் கார்
வீடு அனைத்தும் வாங்குவது கொடுப்பது
பெற்றோரின் அன்பல்ல
பெத்த கடன்.
படிக்க வைப்பதும் கடன்.
அதையும் மீறி அன்பு என்பது பெற்றோர் காட்டுவதில்லை. அவர்கள் திருமண சுகம்.
அதனால் தோன்றிய குழந்தைகள்.
இப்படி பெற்றோர் பெற்று கடமையைச் செய்கிறார்கள்.
இன்று பெண்கள் மிக அறிவாளிகள். கணவனுக்கு சமைத்து துவைத்துபஅ போடுவதே பெரிய கடமை.
ஆண்கள்?
அவர்களின் மன நிலை பற்றி ?
கைகேயியை மகிழ்ச்சி படுத்த தசரதன் மகனை காட்டுக்கு அனுப்பினார்.
தசரது மனவேதனையை சோகத்தை கைகேயி அறியவில்லை.
இதுதான் . அம்மாவை அப்பா பிரியமாக வைத்துக் கொள்ளவில்லை என்பது பெரும்பாலான குழந்தைகள் எண்ணம்.
அப்பாவின் மன நிலை படைத்த பிரம்மாவிற்கே தெரியாது.
வள்ளி க்காக முருகன் வேடனாக விருத்தனாக மாறினாரே ஒழிய வள்ளி என்ன செய்தாள். முருகனை காதலித்தாள்.
காதலியை அடையதத்தான் போர்.
மும்தாஜை அடைய ஷாஹ்ஜஹான் கொலை காரணானான்.
ஆண்டவன் படைப்பில் பெரும் மாயை பெண்கள். அவர்களை மகிழ்ச்சி படுத்த பல தியாகங்களையும் ஆண்செய்கிறான்.
என்பதை புரிவது கடினம்.
ஆணுக்கு திருமணம் ஆனால் அம்மா வீட்டில் பொண்டாட்டி தாசன். மாமனார் வீட்டில் அம்மா தாசன். அது தான் குழந்தைகள் மனதில் பதிகிறது. அப்பாவின் அம்மா வீட்டை விட அம்மாவின் உறவுகளுக்கு த்தான் உரிமை சலுகை உதவி அதிகம். உங்கள் தம்பி எனக்கு பெரிதல்ல என்ற அளவிற்கு மனமாற்றம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)