சனி, ஜூன் 08, 2013

இதுதான் பகுத்தறிவுப் பிரச்சாரமா?

இன்று காலை .

இறைவன்  பற்றிய எண்ணம்.

இல்லை என்போர் வாதம்.

இறைவன்  ஏன் இல்லை என்ற வாதத்திற்குள்?

முச்சந்தியில்  பெரும் கூட்டம் கூடும் இடங்களில் 

இல்லை இல்லை கடவுள் இல்லவே இல்லை.

அதற்கு அருகிலேயே ஆலயம் .

ஆண்டவன்  தன்  சக்தியைக் காட்டும் 

நாகாத்தம்மன் ஆலய.ம்

ராயப்பேட்டை வே.மு.தெரு நடைபாதைக்கோயில்.

அருகில் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்ற சிலை.

அதற்கு அருகில் இராமலிங்க அடிகளார்.

நடைபாதைக்கோயில்  சனீஸ்வரர்,தக்ஷிணாமூர்த்தி
நாகாத்தம்மன்.

பக்தர்கள் கூட்டம் ;
அம்மனின் மேல் சிரத்தை,பக்தி,
அங்கு புதிதாக வாகனங்கள் வாங்குவோர்,
சுப காரியங்கள் செய்வோர் என்ற பெரும் கூட்டம் 
அன்றாடம் அலைபாயும் பக்தர்கள்.
உண்டியல் வசூல் அரசாங்கமே ஆலயத்தை 
ஏற்கும் அளவிற்கு.

அருகில் தி.க. கூட்டம்.
இறைவன் இல்லை என்ற ஆபாசப் பேச்சு.
அதை காதில்வாங்காமல்   
ஆலயத்தின் பூஜைகள்.

ஹிந்துக்கள் எவ்வளவு  பொறுமை யும்
 சாஹிப்புத்தன்மையும் 
 உடையவர்கள்.

பகுத்தறிவுப் பிரசாரம் நடிகர்கள் கட்டௌட்டிற்கு

பாலாபிஷேகம் செய்யும் அளவிற்குத்தான் 

இளைஞர்கள் மனதில் பதிந்துள்ளது.

கல்லுக்கு அபிஷேகத்தை எதிற்கும் நாத்திகவாதிகள்,

நடிகர்கள் கட்டௌட்டிற்கு  பாலாபிஷேகம் செய்வதை 

எதிர்க்காதது ஏன்?

இதுதான் பகுத்தறிவுப் பிரச்சாரமா?

பலகோடி இந்துக்கள் மனம் புண் படும் நாத்திக பிரசாரம் 

நடிகைக்கு கோயில் கட்டும் அளவிற்கு 

பக்திமயமாகி உள்ளது  என்பது 

அவர்களின் நாத்திகப் பிரசாரம் வீண் 

கடவுள் உள்ளார் என்பதற்கு 

அடிப்படையாக உள்ளது.







வெள்ளி, ஜூன் 07, 2013



அன்புக்கு ,ஆற்றலுக்கு,இன்பத்திற்கு ,ஈகைக்கு ,எங்கும் ஏற்றத்திற்கு ,

ஐயம் இல்லா ஒப்பில்லா ,ஓங்கும் புகழுக்கு ,

கடும் முயற்சிக்கு  இறைவனின்  கடைக்கண் பார்வை ,

க்ருபா கடாக்ஷம் ,பூர்வஜன்ம இந்த ஜன்ம நல்வினைப்பயனே

மூலகாரணமாகும்..

இவ்வுலகில்  தோன்றிய எத்தனை பேர் தங்கள் விரும்பிய வாழ்க்கையை அடைந்துள்ளனர்.?
 எத்தனை பேர் தங்கள் குறிக்கோளில் வெற்றிபெற்றுள்ளனர்.?

எத்தனை பேருக்கு தங்கள்  விரும்பாமலேயே  பதவியும் புகழும் கிடைக்கிறது?

புகழைத் தேடி அலைந்தாலும் கிடைக்காதவர்கள் எத்தனை பேர்?

இந்த சூக்ஷமத்தை அறியும்  ஞானிகள்  எங்கே ?


இறைவன் எங்கே?

இறைவன்  எங்கே?

ஒவ்வொருவருக்கும் 

மனித சக்திக்கு அப்பாற்பட்ட

 ஒன்று 

இவ்வுலகை ஆட்டிப்படைப்பதை 

உணர்ந்தே ஆகவேண்டிய நிலை ஏற்படுகிறது.

மனிதன் தனக்கு இருக்கும் தனித்திறமையால் 

வெற்றி அடைந்து  கொண்டே இருந்தால் 

தனக்கு நிகர் தானே என்று  செருக்கடைகிறான்.

அந்நிலையில்  ஆண்டவனை  மறந்துவிடுகிறான்.

அப்படிப்பட்ட நிலை இப்புவியில் 

எவருக்கேனும் இருந்துள்ளதா?

 இல்லையே?

இந்த இறைவன் எங்கே?

அவனைக்காண முடியாது.

நமக்கு இன்னல் நேரும் போது

நமக்கு அறிமுகமாகாத ஒருவர் 

உதவி செய்வார்.

அவருக்கும் நமக்கும் 

எவ்வித சம்பந்தமும் இருக்காது.

நாம் அவரிடம் 

தெய்வம்போல் எங்களுக்கு

 உதவி செய்துள்ளீர்கள் என்போம்.

சிலரை எனக்கு அவர்தான் தெய்வம் என்போம்.
நமக்கு எத்தனையோ 
அறிமுகம் ஆனவர்கள் இருந்தாலும் 

முன்பின் தெரியாதவர்கள் 
எதிர்பாராத இடத்தில் செய்யும் உதவி 

அங்குதான் இறைவன் நமக்கு உதவி யுள்ளார்.


 அதைத்தான்  கடவுள் மனித உருவத்தால்  வந்துள்ளார் 

என்கிறோம்.

நாம் குழப்பத்தில் இருக்கும்போது 

முன்பின் தெரியாதவர்கள் நம் 

குழப்பத்தைத் தீர்க்கும் படி நம் காதில் 
விழும்படி பேசிக்கொண்டு செலவர்.

அது நம் குழப்பம் தீர 





  

வியாழன், ஜூன் 06, 2013

பணம் இருந்தும் பொருளற்று ஆகிவிடும்.

      நண்பர்களே ! உற்றார் -உறவினர்களே,


நமது புராணக்கதைகள் ,

நட்புக்கு இலக்கணமாகவும் ,

பங்காளிப்பகையால் ,ஏற்படும்  அழிவையும்

நம்பிக்கை துரோகத்தையும் காட்டுகின்றன.

பொறாமை,வெறுப்பு,பாரபட்சம் ,ஆணவம்,காமம் ,மோசடி.

 ஞானம்  இருந்தும்  செய்து போராடும் குணம்.

அஞ்ஞான லௌகீக  மோகத்தால்,

அழியும் உலகில் போராட்டம். அதனால்

மன அழுத்தம் .கொலைவெறி.

 இரக்க மற்ற தன்மை.

பதவி மோகத்தால் தன சகோதரர்களையே

அழிக்கும்  வரலாற்று நிகழச்சிகள்,

வாலி,சுக்ரீவ் ,ராவணன்,விபீஷணன் ,

சமுதாய கௌரவத்தால் பெற்ற குழந்தையை

ஆற்றில் வீசிய   குந்தி,

குளக்கரையில் விட்டுச்சென்ற கபீர்தாசரின் அன்னை,

மாற்றான் மனைவியின் மோகத்தால்

அவனைக் கொன்று மனைவியை கவர்ந்த கதை,

அகலிகை ஏமாந்து கல்லான கதை.

கோபத்தால் தவ வலிமை  இழக்கும் ரிஷிகள்.

அனைத்தும் கற்பிக்கும் தாய்மொழி வழி  கல்வி

இன்று வேண்டாம் என்ற பெரும்பான்மை

விளைவு ஆன்மீக  நாட்டில்

உணர்த்தும்  நேர்மை,சத்தியம்,இரக்கம்,

கடமை, தானம்,பரோபகாரம்,தியாகம்

நியாயம்  காணா நிலை/குறைந்த நிலை.

பக்தி பெருகினாலும் ,

ஆலயங்கள் அதிகரித்தாலும்

ஆன்மீகப் பிரசாரகர்கள் ,துறவிகள்,

அதிகரித்தாலும் ,

ஊழல் தலைவர்களால்


சுயநல அரசியல்வாதிகளால்,

பணம் படைத்தோரால்,

சுயநல அதிகாரிகளால்,

நாட்டில் கொலைகள்,

கற்பழிப்புகள்,

தற்கொலைகள்,

கையூட்டுகள்,

விளைநிலங்கள் வீடுகளாகும் நிலை.

விளைவு மழை இன்மை.

விலைவாசி உயர்வு.

எத்தனையோ  கஷ்டங்கள்.

இருப்பினும் ஆன்மீக சக்தியால் அனைத்தும்

வெட்ட வெளிச்சமாகும் நிலை.

பாரதத்தைக் காக்கும்  பார்புகழும்

ஆன்மிகம்  விவேகானந்தர் காட்டிய வழி.

அந்த ஆன்மீக தெய்வ பலத்தால் ,


இன்றும் பார்வியக்க வளரும் பாரதம்.

இன்று எந்தக் கதைக் கருவும்  அந்த புராண இதிகாசக்

கதைகளால் உருவானதே.

அக்கதைகளில் காதலும் உண்டு.

காம வெறியர்களும் உண்டு.

சிசுக்கொலை களும் உண்டு.

இனத்  துரோகிகளும் உண்டு.

தேச துரோகிகளும் உண்டு.

அல்லிராஜ்யமும் உண்டு.(ஓரினச் சேர்க்கை}

விந்து பரிமாற்றமும் உண்டு.

விருந்து பரிமாற்றமும் உண்டு.

இந்த பாரதக் கதைகள்

இன்றைய  கல்வி முறையில்

இன்றியமையாத அங்கமாகும்.

ஆனால்,பொருளாதாரம்  ஆங்கிலத்தையும்

ஆங்கிலக்கல்விமுறையையும்  ஆதரிக்கிறது.

அவற்றுக்குமேல்  இந்த ஆன்மீகக் கல்வி

முக்கியத்துவம் பெற்றால்

இன்றைய இளைய தலை முறை

சமுதாயம் அமைதிபெறும்.

அல்லது நல்லோளுக்கமில்லா

பொருளில்லா  பணக்கார வாழ்க்கை

பணம்  இருந்தும் பொருளற்று ஆகிவிடும்.





















சனி, ஜூன் 01, 2013

பழையன கழிதல் ,புதியன புகுதல்,

கூட்டுக் குடும்பம்  ஆனந்தமே!-ஆனால்

இன்றைய இளம் தலை முறையினர் ,

கல்வியில் முதுகலைப்பட்டம்.

ஆனால் , பொறுமை என்பதே 

மழலையர்    பட்டம்.

பிடிவாதம் ,படித்த செருக்கு 

வேலை நல்ல ஊதியம்.

உறவினர்களுக்கு உதவுவதை விட 

பெற்றோர்களுக்கு சிலவு செய்வதை விட ,

சொந்த தம்பி தங்கைக்கு உதவு வதைவிட,

ஐந்து நக்ஷத்ர ஹோட்டல் ,

ரிசார்ட்  ஆடம்பர சிலவில் 

ஆனந்தம்.

தனித்து வாழ்ந்து  தன குழந்தைகளை ,

மழலையர் காப்பகத்தில் மாதம் ஐயாயிரம் 

சிலவளித்து     ,பெற்றோர் உறவினர்களை 

அரவணைக்காமல் ,தனி ஆனந்தம்.

விளைவு   காதல் ,விவாகரத்து, பிரிந்து  வாழ்தல்,

புரியாமல் வாழ்தல்  இன்றைய இளம் தலைமுறையினரின் 

வாழ்க்கை வினோதம்.

அனைவருக்கும் வேலை,ஆணும் பெண்ணும் 

சம்பாதிப்பதால் வருமானத்திற்கு குறைவில்லை.

சந்தோஷம் என்பது தான் வெளிவேஷம்.

வீடு பெரிது.உள்ளத்தில் ஒரு வெற்றிடம்.

அனைத்தும் இருந்தும் 

no  peace  of mind  தான்.

நிமிடத்திற்கு  ஒரு சண்டை,

ஒரு நொடியில் சமாதானம் 

இல்லையேல் தனித்து பிரிந்த வாழ்க்கை.

அல்லது மறுமணம்.//.விவாகரத்து.

பொருந்தாக் காதல்.

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்.

என்ற விபரீதம்.

கல்வி அறிவு பெருகுவததென்பதில் 

பண்பாடும்  காக்கப்படவேண்டும்.

பொறுமை,தியாகம் ,குடும்பபாசம்,

இல்லா உயர்கல்வி 

தேசபக்திக்கும் ஊறுவிளைவிக்கும்.

இளைய தலைமுறையினர் பிரிந்து வாழும் சூழல் 

இயற்கையாகவே அமைந்துவிட்ட நிலை.

அண்ணன்,தம்பி வெவேறு நாட்டில்,

பெற்றோர் பாடு பெரும்பாடு.

என் குழந்தைகள் வெளிநாட்டில்,

வீடுகள் இருக்கின்றன.

விருந்தினர்கள் வருவதில்லை.

விடுமுறை இல்லை.

ஓரிருநாட்கள் விடுமுறை 

ஓய்வுக்காக.

இன்றைய தலை முறையினருக்கு 

வரப்பிரசாதம் 

வலை தளம். மின் அஞ்சல் 

சந்திப்பு ;பேச்சுவார்த்தைகள்.

அதற்கும் நேரம் வேண்டும்.

இந்தியா போன்ற நாட்டில் 

மின் தட்டுப்பாடு,வலைதள சேவை 

இல்லாத ஊர்கள்.

மடிகணினி இலவசம்.

ஆனால் அதை பயன்படுத்த முடியா நிலை.

இருப்பினும் தொலை தொடர்பு 

கைபேசி மூலம்.

இன்றைய தலைமுறையினரின் 

மகிழ்ச்சி ,நிம்மதி,சந்திப்பு ,பேச்சு எல்லாமே 

கைபேசி. அறிவியல் விந்தை.

மூத்த குடிகளின் முணுமுணுப்பு.

என்னடா வாழ்க்கை. 

இளைய தலைமுறையினருக்கு 

இணையில்லா ஆனந்தம்.

பழையன கழிதல் ,புதியன புகுதல்,

இதுவே இன்றைய தலைமுறை ஆனந்தம்.












வியாழன், மே 30, 2013

ஆனந்தம் என்றாலே பொருளுள்ள வாழ்க்கை

பொருள் என்றால் செல்வம்,

பொருளுள்ள என்பதில் செல்வமும் அடங்கும் .

அர்த்தமும் உள்ளது.

வடமொழியிலும் அர்த்த என்பதற்கு செல்வம் ,பொருள் என்ற

இரட்டை பொருள்.

பொருளா ?தாரமா.? என்றால்

இல்லானை இல்லாளும் வேண்டாள்

என்று இவ்வுலக வாழ்வில்

பொருளும் இணைந்தே புகழ் பெற்றுள்ளது.

பொருள் -பொருள்  இல்லாதவருக்கு

இவ்வுலக ஆனந்தம்  எங்கே?

இதுதான் வையகம். ஐயோ!பாவம் !நல்லவன் !

தரணி ஆள  ,
பொறுத்தார் பூமி ஆள்வார் 

பொறுமை  கடலினும் பெரிது.

இந்த பொறுமை வையகத்தில் சாத்தியமா?

குனியக் குனியக் கொட்டுவோரே அதிகம்.
ஐயோ !பாவம்! நல்ல மனிதர் !

என்பதை ஆராய்ந்து ஹிந்தியில் ஒரு கதை.

யார் ஏமாறுகிறார்களோ அவர்களையே சமுதாயம் 

ஐயோ பாவம் நல்ல மனிதர்கள் என்கிறது.

பல ஆண்டுகளாக வாடகை உயர்த்தாத 

வீட்டுச் சொந்தக்காரர்,

குறைந்த வாடகையில் வரும் ரிக்ஷா தொழிலாளி,

கதை,கட்டுரை எழுதி பணம் கேட்காத எழுத்தாளர் 

என ஒரு பெரிய பட்டியலுடன் நகைச்சுவை 
கலந்த கதை  ஐயோ !பாவம்! நல்லவர்கள்.

கடன் கொடுத்து திருப்பிக் கேட்காத நண்பர்கள்,
கைமாறு கருதாமல் கூலி அதிகம் கேட்காதவர்கள் 

ஐயோ!பாவம் !நல்லவர்கள்.
அனுபவத்தில் கதை ஆசிரியருக்கு 
தன்னை யாரும் புகழ்ந்தாலோ /
நல்லவர் என்று சொன்னாலோ  

அவர் மனதில் தோன்றுவது 

தான் ஏமாறுகிறோம் /அல்லது ஏமாற்றுகிறோம் என்பதே.

கெட்டிக்காரன்/சாமார்த்திய சாலி என்று 

பாரட்டப்படுவோர் கிரிக்கெட் விளையாட்டைப்போல் 

அரசியல்வாதிகள் போல் 

மற்றவர்கள் கருவைத்திருடி 
 கதை மாற்றி எழுதுபவர்கள் போல் 

எமாற்றுபவர்கலாகவே இருக்கின்றனர்.

பொறுத்ததுபோதும் பொங்கி எழு 

என்பது இந்நிலையில் பொருத்தமாகிறது.

அதே நிலையில் தான் நானும்.
உறவினர்களுக்கு பொருளுதவி செய்து 
அவசரத்திற்கு திருப்பிக்கேட்டால் 
அவர்களின் வாக்குச் சாதுர்யம் 
என்னை பகவனாக்குகிறது.
அதைத்தான் 

கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை என்கின்றனர்.



மற்றவர்கள் ஏமாற்றும் பொழுது 
.
ஏமாறிக்கொண்டே இருந்தால் 

ஐயோ!பாவம் !நல்லவன் !

விழித்துக்கொண்டால் .....

அனைவருக்கும் பகை.

இதுதான் வையகம்.



திங்கள், மே 27, 2013

ஒரு யுகப்புரட்சியின் போக்கா என்ற மனக் குழப்பமே மிஞ்சியது.



புதுச்சேரி  ,

பாரதியார்  புகலிடம் பெற்ற இடம்.

அரவிந்தரின் ஆன்மீகத்தால் புகழ் பெற்ற இடம்.

பிரஞ்சு ஆதிக்கத்தால் சதுரங்கக் கட்டம் போல் 

அழகாக அமைந்த இடம்.
இந்தியாவுடன் இணைந்ததும் 

அதன் இயற்கை அழகில் பெரும் மாற்றம்.

அழகான தெருக்கள்,
இன்று அதில் அழகு குறைந்தே தென்படுகிறது.

விரிவாக்கப் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக 

௧௯௭௨ இல் எனது முதல் பணிநியமனம்  அங்கே.

மட்ராஸ் கபே  என்று ஒன்று உண்டு,

 மதிய மாதச் சாப்பாடு  ரூபாய் முப்பது
அளவு கிடையாது.
திருப்தியான சாப்பாடு.
அதற்கு எதிரில் ஒரு ஐயர் இட்லி வியாபாரம்.

ஒரு இட்லி ஒரணா.
இன்றைய இட்லிகளைவிட
 நான்கைந்து மடங்குக்குகுமேல் 
பெரிது.

மாதச்சம்பளம் ரூபாய்  நூற்று ஐம்பது.

 மன நிறைவான மன மகிழ்ச்சியான நாட்கள்.

இப்பொழுது நான் பாண்டியில் 

கிளப் மகேந்திராவில் தங்கியுள்ளேன்.
மூன்று நேர ஒருநாள்  சாப்பாடு 
ஆயிரத்து முப்பத்தைந்து கூடுதலாக வரி.

மனதில் ஒரு நெருடல்.

பாரதம் முன்னேறி உள்ளதா?

ஆம்.  அங்கும் கூட்டம்.
பணத்தை அலட்சியமாக சிலவு செய்யும் கூட்டம்.

ஏழ்மையான சூழலில் எத்தனையோ பேர்கள்.

எங்கும் ஒரு பெரும் கூட்டம்.

இங்கே உணவு அலட்சியம் செய்யப்படுகிறது.

லக்ஷிமிதேவியின் ஓட்டம்  அதிகம்.

அங்கு  கடல் கரையில்  தானே புயலின் தாக்கம்.

விலை போய் வீடுகளாகி காட்சி அளிக்கும் 

விளை நிலங்கள்.

பாரதம் பொருளாதரத்தில் முன்னேறினாலும் 

ஏக்கப் பெருமூச்சுவிடுவோர் எண்ணிக்கையில் அதிகம்.

நாடு முன்னேறியதா? என்பதில் ஐயம் அதிகம்.
மனித மனம் கல்மனமாக 
இரக்கமற்றதாக சுயநலமாக மாறிவருகிறது.
அரசியல் நாட்டு முன்னேற்ற சமத்துவப் 

பாதையில் செல்லாமல் ,
சிலைகளுக்கும் நினைவு மண்டபங்களுக்கும் 
கோடிக்கணக்கில்  சிலவு செய்வது 

முன்னேற்றமா ?எதிர்கால சந்ததியினர்களின் 
ஒரு யுகப்புரட்சியின் போக்கா 
என்ற மனக் குழப்பமே மிஞ்சியது.










.




வெள்ளி, மே 24, 2013

போராட்டமே. ஐம்பது சதவிகிதம்.



திருமணம்  என்பதில் மன ஒற்றுமைக்கும் ,

அன்பிற்குமே முதலிடம்  கொடுக்கவேண்டும்.

ஆனால் அதில் பெற்றோர்கள்  இளம் உள்ளங்களை 

பாதிக்கும் அளவிற்கு  பேசும்  பேச்சுக்கள்,

அதை மறந்து வாழ்ந்தாலும் அதை நினைக்கச் செய்யும் 

மீண்டும் மீண்டும்  சம்பவங்கள்.

இன்றைய கல்விப்புரட்சி யுகத்தில் 

பிரிந்தோ பிரிக்கப்பட்டோ வாழும்

 இளம் தலைமுறையினர்,

சின்ன சின்ன விஷயங்கள்,அதனால் வரும் 

மன அழுத்தங்கள் ,விளைவாக விவாகரத்துக்கள்.

பெண்கள் வீட்டிலும் சரி,ஆண்கள் வீட்டிலும் சரி 

இளம் உள்ளங்களை பிரித்துவிடும் ஆலோசனைகள் 

விவாக ரத்து வழக்குகள்.

கொலை ,தற்கொலை ,வெறுப்பும் எல்லை.

பொறுமை,சகிப்புத்தன்மை இல்லா நிலை.

கட்டுப்பாடற்ற வாழ்க்கை ,

குழந்தைகள் படும்  திருமணத்திற்குப் பின் ,

இல்வாழ்க்கை கசக்கும் நிகழ்ச்சிகள்.

அநாதை நிலையில் பெற்றோர்கள்,

கல்விப்புரட்சி  யுகத்தில் 

திருமண பந்தங்கள் போராட்டமே.
ஐம்பது சதவிகிதம்.










மனித மனம்.

  மனிதன்  மன எண்ணங்கள்,எண்ண அலைகள்,நடவடிக்கைகள்,நண்பர்களை

இணைத்தல்,நண்பர்களை ஒதுக்குதல்,நண்பர்களால் ஒதுக்கபடுதல்,

உறவினர்களால் போற்றப்படுதல், வெறுக்கப்படுதல் ,மற்றவர்களின் மனம் கவரப் பேசுதல்  இந்த ஆற்றல்கள் இயற்கையாகவே ஏற்படுகின்றன.

மனிதர்கள்  போற்றப்படும் ,இகழப்படும் குணங்கள் இயற்கையாகவே வருகின்றன.

அதனால் ஒருவர் சிறந்த தலைவர்களாக முடிகிறது.சிலரால் சிறந்த நிர்வாகியாக முடிகிறது.

மனித மன எண்ணங்கள் மாறுவதும் ,எண்ணங்கள் மனதில் தோன்றுவதும்
ஒரு இயற்கையான ஒரு சக்தியால் ஏற்படுகின்றன.அதை மாற்றி உத்தமனாக
மாறும் அறிவையும் ஞானத்தையும் இறைவன் அளித்துள்ளான்.அந்த மெய் ஞானத்தைப் பெற முயற்சிக்கும் மனிதன்  தெய்வமாகிறான்.

இவ்வுலகில் உண்மை பேசுவதால் நண்பர்களை ,உற்றார்களைப் பிரிய நேரிடுகிறது. கசப்பான உண்மைகள் அதாவது நண்பர்கள் தவறு,உற்றார் உறவினர்கள் தவறு  ,தலைமைப்பீடங்கள் செய்யும் தவறுகள் மறைக்கப்பட வேண்டும்; அல்லது  போற்றப்படவேண்டும். இதுதான் உலகியல் எண்ணமாக,உளவியல் எண்ணமாக மாற்றப்படுகிறது.