ஞாயிறு, ஜனவரி 13, 2013

ஒன்றே வழி;பெண்ணினம் காக்க





விவேகானந்தர்  ஞானக்  குழந்தை,
அவர் இளைஞர்களுக்கு அறிவுரை அளித்தார்.

பாரதியார் பாப்பாவிற்கு.

ஆனால் அரசின் வாரிசுகளுக்கு ;
ஆணவம் பிடித்தோருக்கு 
அதர்ம  வெறி பிடித்தொருக்கு,
அதிரடி தண்டனை,
உடனடி  தண்டனை தேவை.

பெண்களைபோற்றும்  நாட்டில் ,
பெண்ணடிமை தான் என்றுமே;


ராவணன் சீதையை சிறை வைத்தான்;

அனைத்தும் தெரிந்த ராமன் 

அவளை கானகம்  அனுப்பினான்.

தேவேந்திரன்  செய்த தவறு,
அகலியை   கல்லானாள் .

துகில் உரித்தான் துச்சாதனன்;

அறம்  தக்க தருணத்திற்காக 

அமைதி காத்தது;

அப்பரம்பரை  இன்றும் 
தருணிகளை தரக்குறைவாக பார்க்கிறது.



அமைதி காக்க  இது என்ன வேடிக்கையா?
சல்லிக்கட்டா?  சர்க்கசா?
ராமன் உத்தமபுருஷன்.
சீதையை  கானகம் அனுப்பி 
பெண்ணினத்திற்கு ஒரு தரக்குறைவை 
ஏற்படுத்தினான்.


அன்று கண்ணன் உடனடி காயடித்திருந்தால்,
பெண்ணினம் உயர்ந்திருக்கும்.
தர்மன் பணயப் பொருளாக்கியது.

அதர்மம் போகப் பொருளாக்கு கிறது.
அதிகார வர்க்கம் துணைபோகிறது.
பெண்கள்  ஆடை அரைகுறை;
புத்தி பேதலிக்கும் இளைஞர்கள்.
இதில் தவறு யாரது;
பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி;

வீடு திறந்துள்ளது என்றால் கொள்ளையர் 
புகுவது குற்றம் என்றால்,
ஆடை குறைந்த பெண்களைக் கெடுப்பது 
குற்றமில்லையா?
மனிதன்!புலன் அடக்கம் தேவை?
நாயா?நடுத்தெருவில்......ச்சே!
நாயைவிட கேவலம்;
மிருக ஜன்மம் நான் என்றான் வாலி;
அடுத்தவன் மனைவியை  தனதாக்கி;
அவன் குரங்கினம்;
மனிதனை மனிதனாக்குவதே,
மனதை அடக்குவதும்,காமத்தை அடக்குவதுமே.


புரட்சி எண்ணங்கள் தேவை;புதிய பார்வை தேவை;
புரட்டு எண்ணங்களும் ஊழலும் குறைய,
புவியினில் ஒரு பிரளயம் தேவை,.

உடனடி தண்டனை கடும் தண்டனை 
ஒன்றே  வழி;பெண்ணினம் காக்க.

வெள்ளி, ஜனவரி 11, 2013

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து 

தைப் பொங்கல்,
தமிழர் பண்டிகை 
அதே நாள் சங்கராந்தி 
ஆந்திராவில் பண்டிகை;
ஆனந்தப்பண்டிகை;
புதுமை  அனைத்திலும் புதுமை;
தைத் திங்கள் தமிழ்ப்புத்தாண்டு 
பாரம்பரியத்தை மாற்றும் சூழல்;
இன்று புத்தாண்டு கொண்டாடுவோருக்கும்,
புதுப்பானைவைத்து 
பொங்கல் கொண்டாடுவோருக்கும் 
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அடுத்த ஆண்டுக்குள் காவிரி 
பொங்கட்டும்;
இந்த ஆண்டு காய்ந்த வயல்கள் 
வரும் ஆண்டு பசுமை யாகட்டும்;
இயற்கை அன்னையின் 
அருள் கிடைக்கட்டும்;
அனைவரின் வாழ்விலும்
 மகிழ்ச்சி  பொங்கட்டும்;
மாரி  அருள் பொழியட்டும்;
முருகன் அருள் மலை பொழியட்டும்;
முக்கண்ணன் அருளால் 
நாட்டில் தர்மம்,நியாயம்,நேர்மை ,சத்தியம்  பெருகட்டும்;
பார் புகழ, 
பாரதம் 
வாழட்டும்.
வளரட்டும்;
வழிபாடுகள் தூய்மை பெறட்டும்.
பொங்கல் நன்னாளில் 
என் 
பிரார்த்தனைகள்.
வாழ்த்துக்கள்.








வியாழன், ஜனவரி 10, 2013

தண்டனையும் நிச்சயம்.

இயற்கை   மருத்துவம்- practice of nature cure--SRI SWAMI SIVAANANDA

நோயின் மூல காரணம்-

மனிதன் பிறக்கும் போதே அழுவதும் ஒரு துன்பத்தை அனுபவிப்பதால் தான்.
எல்லா நோய்களுக்கும் மூல காரணம் மனம் தான்.

மனிதனுக்கு மன பயம்,மன அழுத்தம் இரண்டுமே பல நோய்களுக்குக் காரணம்.

மனத்தைத் தூய்மையாக வைக்கவேண்டும் .அனால் மனத்தூய்மை என்பது உலகின் மாயை/நண்பர்கள்/உற்றார் உறவினர்கள்/சூழல்களால்  ஏற்படுகிறது.
அச்சமும் நம் மனத் தூய்மையைக் கெடுக்கின்றன.

மனோவலிமைக்குத்  துணையாக இருப்பவை ஆன்மீகப் பயிற்ச்களே.


நமது சமய நூல்கள் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்று கூறுகின்றன.

கருடபுராணம்  ஒரு குறிப்பிட்ட ஒரு நோயின் குறிப்பிட்ட ஒரு காரணத்தை
கூறுகிறது.ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்பு எழுதப்பட்ட  இக்குறிப்புகள்  நீதி நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய இன்றியமையாமையை  எடுத்துக்காட்டி வலியுறுத்துகின்றன.
இது பிற விப்பயனாக  உண்டாகின்றன.
நாம் இதை சமுதாயத்தைப்  பார்த்து இதிலுள்ள  சத்தியத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
பிற உயிரினங்களுக்கு நாம் தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும் .துன்பப்படும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.
அறச்செயல்களை  நாம் உடல் நலத்தோடும்,மன நிறைவோடும்,மகிழ்ச்சி யோடும் செய்யவேண்டும்.

நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல/தீய செயல்களுக்கேற்ற பரிசும் நிச்சயம்;தண்டனையும் நிச்சயம்.

உடல்நலம் என்பது  இயற்கையுடன் வாழ்வதில் தான்  உள்ளது.
"நீங்கள் விதைத்ததை நீங்களே அறுவடை செய்கின்றீர்கள்."






செவ்வாய், ஜனவரி 08, 2013

நமக்கே தண்ணீர் இல்லை;பிறருக்குப்பால். எண்ணம் உயர்ந்தது;செயலாக்கம்?

திருமண பந்தம்


   வாழ்க்கையில்  திருமணம் என்பது ஒருமுறை;

  அது வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சி தர;

  ஆனால்,  இன்று இளம் தலை முறையினர்
 
இருநாள்  திருமணம் தானே ,ஒருமுறை தானே

என பத்திரிகை அடிக்கவே இருபதாயிரமாம்.

ஒரு பத்திரிகை 100 ரூபாய்;

இது தவிர பெற்றோர் அடிக்கும் பத்திரிக்கை வேறு;

சத்திர வாடகை  75,000/
சாப்பாட்டுச்சிலவு   காலை  ஒரு இலைக்கு 100/
மதியம்  ஒரு இல்லை         160-180/

வரவேற்பு சாப்பாடு 200/

மாலை டிபன்  80/

மொத்தம் 640/ குறைந்த பக்ஷம் 500 =            320000/

மற்ற சிலவுகள் -------------பந்தல்,போகஸ்  விளக்கு ,மேளம்,ப்ரோஹிதர்,
பூ ,அலங்காரம்,அழகு நிலையம்,நகை

நடுத்தர வர்க்கம்  குரிவிபோல் சேர்த்ததோ/கடனோ/பரம்பரை வீடை விற்றோ , தன்  அன்றாட அத்தியாவசிய தேவைகளைக் குறை த்தோ

இருநாள் ஆனந்தம்;பல ஆண்டு  பொருளில்லா போராட்டம்.

இதைக் குறைக்கச் சொன்னால் மனப் போராட்டம்; பொருளில்லை என்று.

கர்நாடகத்தில் வீணாகும் திருமண சாப்பாடு 3000/ கோடி  என்ற செய்தி.

இந்தத் துகை  பெருந்துகையோ /சிறுதுகையோ

என் எண்ணத்தில் இது பெரும் முதலீடு;
ஒரு நாள் ஆனந்தம்.

அந்த சிலவு செய்யவில்லை என்றால் என்ன கல் யாணம் என்ற பிடுங்கல்.

அறிவியல் முன்னேற்றம் ஆஸ்தி உள்ளவர்களுக்கே;

ஞானம் உள்ளோர் சிக்கனம்  என்றால் கஞ்சன் என்றே பெயர்;

கஞ்சன் என்றால் தங்கம்;

நாம் நமக்காக வாழ்கிறோம்;

நம் இன்னலில்  பொருள் கொடுக்க மாட்டார்கள்;
பொருளில்லா உலகம் பொருள் இல்லை என்றால் மதிக்காது.

திருமண சிக்கனம் ,நம் மகிழ்ச்சிக்கு.

ஊர்ப்பெருமை,நமக்கு சிலநாள்;
நடுத்தர மக்களே! சிந்திப்பீர்! செயல் படுவீர்;

வீண் சிலவுகள்;வீண் வேதனைகள்;

நமக்காக வாழ்ந்தால்  தான் பெருமை;
பிறருக்காக வாழ்வது இன்னல் தரும் .

நமக்கே தண்ணீர் இல்லை;பிறருக்குப்பால்.
எண்ணம் உயர்ந்தது;செயலாக்கம்?














  

ஞாயிறு, ஜனவரி 06, 2013

ஜனநாயக முறைப்படி

பாரதநாடு  உலகில் உயர்ந்தது.
ஆன்மீக நாடு;
இவ்வுலகில் பாவங்களுக்கு 
ஈடில்லா தண்டனை தரும் 
கருட புராணம்;
நீதி தேவன் தண்டனை தரும் 
கருப்பணசாமி ;ஐயனார் ;முனீஸ்வரன்
காளி ;மூழி ;நீலி;
எங்கும் ஆலயம்;
எதிலும் பாவம் புண்ணியம்;
இறைவனின் பயங்கர சிலைகள்;
கற்புக்கரசி கண்ணகி;
ஆனால்  இந்த புண்ணிய பூமியில்,
நாளும் கற்பழிப்புகள்;
ஊழல் புகார்கள்;
இலஞ்சப்புகார்கள்;
காவல்துறையின் அநீதியால்.
தீக்குளித்த ஆட்டோ ஓட்டுனர்.
தீவீரவாதம்;
பலாத்காரம் செய்யும் நாடாளுமன்ற 
சட்டமன்ற உறுப்பினருக்கு 
உரிய தண்டனை கொடுக்க வாய்ப்பில்லா  உச்ச நீதிமன்றம்.
பதவியில் இருத்து நீக்க அதிகாரம் 
யாருக்கும் இல்லை;
குற்றவாளிகளின் புகலிடம் அரசியல்;
அரசியலில் வெற்றி தாதாக்கள்  கைகளில்.
மக்கள் வரிப்பணம் விமானப்பயணங்கள்;
ஏழை நடுத்தர மக்கள் வாழும் பகுதிகள் 
புறக்கணிக்கப்பட்ட பகுதிகள்;
சாலைகள் கிடையாது;சாக்கடைவசதிகள் கிடையாது;
ஓட்டுப்போட காசுகொடுத்தால் 
ஓட்டுப்போட ஒரு கூட்டம்;

பணம் படைத்தோருக்கு வரி கொடுக்காமல் தப்ப ஆயிரம் வழிகள் ;
கொலை ,கொள்ளைகள் பெருகிவரும் காலம் இது.
கலியுக தெய்வம் கார்த்திகேயனையே 
சுரண்டிய சேதியும் உண்டு.
லஞ்சத்தால் ,ஊழலால் வளரும் 
பெருங்கூட்டம்;
எதிர்காலம்  
ஒளிமயமான எதிர்காலம்
  ஊழல் ஒழிக்கவேண்டும் -என்பதெல்லாம்.
தேர்தல் பிரச்சாரத்திற்கே;
மக்களும் தன சுயநலத்தால் 
விரும்புவது  ஊழலே;
ஒழியாது இந்த தொற்றுநோய்;
ஏழைகளை ஒழிக்கவே   இந்த நோய்;
மருந்தில்லை;இதை ஒழிக்க மே மந்திரமில்லை;
ஆதரிக்கும் கூட்டம் அதிகம் என்பதால்.
ஜனநாயக முறைப்படி ,
வாழ்க ஊழல்;








புதன், ஜனவரி 02, 2013

இன்று மம்மி டாடி கலாச்சாரத்திற்குக் காரணம்.

எளிய  மொழி 

       படித்தவர்கள்  அனைவரும் புரியும் படியான எளிய மொழிநடையைக் கையாள வேண்டும்.
தங்கள் மொழி அறிவை ,மேதாவித்தனத்தை வெளிக்காட்ட கடின சொற்களை பயன் படுத்துவதால் தான் 
தாய் மொழியான தமிழ் கற்க  அல்லது இந்திய மொழிகள் கற்க இன்றைய மாணவர்களின்  ஆர்வம் 
குறைந்து வருகிறது. ஆங்கிலத்தில் வரும் வாக்கியங்கள் ,சொற்கள் மிக நடைமுறையில் உள்ளதாக இருக்கிறது.
ராமாயணம்,மகாபாரதம்  போன்ற காவியங்களை மூலத்தை விட எளிய உரைநடையில் புரிந்து கொள்வோரே அதிகம்.
வால்மீகி ராமயனத்தைவிட  மக்கள் புரிந்து கொள்ளும் துளசிராமாயணம் வட இந்தியாவில் அதிகம் போற்றி படிக்கப்படுகிறது.
திரைப்பட பாடல்கள் மாணவர்கள் மனதில் பதிவது போல் மனப்படப்பகுதியில் உள்ள பாடல் கடினமாக உணரப்படுகிறது.
பாரதியார்,வாலி,கண்ணதாசன்,வைரமுத்துவின் பாடல்களில் பழமையின் அரிய கருத்துக்கள் எளிய தமிழில் 
அறிந்து கொள்ள முடிகிறது.பொருள் அறியாமல் படித்த வடமொழி பேச்சுவழக்கற்றதாக   மாறியதற்கு ,அறிவியல் மொழியானது 
வெறுப்பிற்கும் ஆளானது அதன் கடினத்தன்மையும் ,தவறான உச்சரிப்பு பாவம் என்பதும்  பரந்த  மனப்பான்மையுடன் 
அனைவருக்கும் கற்பிக்காமல் இருந்தததே.அதன் பலனை நாம் இன்று  உணர்கிறோம்.
ஆங்கிலமும்  இந்தியும் வளர்ந்ததற்கு அதன் பரந்த மனப்பான்மையும் தனித்தன்மை அற்றதும் தான்.
தோய மொழிகள் காலப்போக்கில் அழிந்து விடுகின்றன.தமிழ் வாழ்வதற்கு  ஐம்பெருங்  காவியங்களும் ,ஆதி பகவன் என்ற பிரயோகமே.
சூரியனாரயனார் என்ற பரிதிமாற்கலைஞர்  தனிதமிழ்  நடைப்பற்றாளர்கள்  உறுதியாக இருக்க முடியாமல் இருக்க ஆங்கிலம் கலந்த தமிழுக்கு  மரியாதையும்,இந்திய மொழிச் சொற்கள் கலந்தால்  ஏற்காததும் இன்று மம்மி டாடி கலாச்சாரத்திற்குக் காரணம்.

ஞாயிறு, டிசம்பர் 30, 2012

ஆங்கிலப் புத்தாண்டு பிரார்த்தனை.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டு பிரார்த்தனை.

அன்பும் ,ஆற்றலும் பெருகவே,
அநியாயங்கள் அகலவே,
அதிகாரிகள்,பொதுமக்கள்,
அரசியல் வாதிகள்,
பேராசையின்றி கடமை செய்யவே,
ஊழால்-லஞ்சம் ஒழியவே 
பேரருளாளன் ஆண்டவன் 
அருள் பொழிய ,
அனைவரையும் 
நல்ல நேராளனாக மாற்ற 
நல்லவர்கள் நோய்-நொடி இன்றி 
சகல செல்வங்களும் பெற்று 
தீயவர்கள் நல்லவராகி ,
அன்பும் பாசமும்,நேசமும்,
தேசப்பற்றும் உள்ளத்தில் 
கொண்டு வாழ கிருபைகாட்ட 
கணேசனிடம் பிராத்தனை.
அவன் தம்பி ஆறுமுகனிடமும்.
அவர்கள் தந்தை சர்வேஸ்வரநிடமும்,
விஷ்ணு விடமும் 
அல்லாவிடமும்,
ஏசுவிடமும் 
ஜகம் முழுவதற்கும் கிருபை காட்ட 
பிரார்த்தனை.
புத்தாண்டு பிரார்த்தனை.
ஆங்கிலப் புத்தாண்டு 
பிரார்த்தனை.

சனி, டிசம்பர் 29, 2012

சரியான தண்டனை.

பாலியல் பலாத்காரம்
தில்லியில் படு அமர்க்களம்.
தமிழகத்தில் செய்திதாள்களில்
வராத நாளில்லை.
அதுவும் சிசுக்கள்
மனிதர்களா?மிருகங்களா?
நாய் ஜென்மங்களா?
ஈடுபடுவோர் மட்டுமல்ல,
இக் காமக் கொடூரர்களைக்
காக்க  வக்காலத்து வாங்குவோரும்,
அந்த கொடியோர்களை ஆதரிப்போரும்
தண்டனை பெறவேண்டும்.
இக்கொடூர செயல் எந்த உருவத்திலும்
காக்கக் கூடாது.
குற்றவாளிகளை ஆதரிப்போருக்கும்
தண்டனைகள் கடும் தண்டனைகள்
தரப்படவேண்டும்.
பாலியல் கொடுமை,
மரணத்திற்கு மரண தண்டனையே
சரியான தண்டனை.

இனிதே கொண்டாடி, இந்தியப் பண்பு காப்பீர்.

ஆங்கிலப் புத்தாண்டு ,
 ஆடம்பரமாகக் கொண்டாடுவோம்.
ஆங்கிலம் இல்லையேல்
இல்லையே  வேலை.
வேலை இல்லையேல்
வேதனைதானே.
வைத்தியம் ஆங்கிலம்,
கல்வி ஆங்கில வழி
ஆனால்
காலம் தவறாமை,
கடமை தவறாமை,
கண்ணியமான பார்வை,
பொன் ஆசை இல்லாமை
நேர்மை போன்றவை
பின்பற்றப்படாமல் ,
அங்கு வெறுப்பதை
ஒதுக்குவதை  இங்கு  ஏற்பது ஏனோ?
ஆங்கிலம் அனைத்தும்
தந்தாலும்
நள்ளிரவுக் கும்மாளம்
நமக்கு ஏற்றதா?
எத்தனை எத்தனை இழிசெயல்கள்.
கேக் உணபதற்கா? உடலில் பூசவா?
உடலில் பூசும் கேக்கை
உதவும் கரங்களுக்கு ஈயலாமே?
நடுநிசியில் போதை,ஆட்டம்,
நம் நாட்டு சீதோஷ்ணத்திற்குப்
பொருத்தமா?
இறுக்கமான ஆடைகள்
சில தோல்நோய்கள் அரிப்பு,படைக்குக்
காரணம்.
வெப்பமுள்ள நாட்டில்
வேனைக்கட்டிவருமே/
வியர் வைக்கிருமிகள்
பெருகுமே.
ஆங்கிலத்தைக் கொண்டாடுங்கள்.
நம் பண்பாடு விட்டு
பட்டுப் போகாதீர்கள்.
உணவு நம் முன்னோர்வழி
தான் சிறந்தவழி.
வேக  உணவு,
வேகமாக ஆரோக்கியக்கேடு.
பட்டம் பெற்றோரே!
நள்ளிரவு உணவாக விடுதி
வீண் ரகளை
ஆங்கிலப் புத்தாண்டு
துயர சம்பவம் இன்றி
கொண்டாடுங்கள்.
இங்கிலீஷ் இளைஞர்களுக்கு
ஆங்கிலப்புத்தாண்டு.
இனிதே கொண்டாடி,
இந்தியப் பண்பு  காப்பீர்.







வெள்ளி, டிசம்பர் 28, 2012

ஆண்டவனை வேண்டி , அ றம் செய்வோரைக் காக்கும் கலியுகம். அமைய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆங்கிலப்புத்தாண்டு  2013 ,
ஆனந்த  மிக்க ஆண்டாக ,
இனிய சுகங்கள் தரும்,
மன நிறைவுதரும் ஆண்டாக.
மகிழ்ச்சிதரும்  ஆண்டாக,
மங்களம் தரும் ஆண்டாக,
சத்தியவான்களும்,
நேர்மையாளர்களும்
நியாயவாதிகளும்
தலை நிமிர்ந்து பயமின்றி செல்லும்
ஆண்டாக ஆரம்பித்து,
ஆண்டாண்டுகள்   தொடர,
ஆண்டவனை   வேண்டி ,
அ றம் செய்வோரைக்
காக்கும் கலியுகம். அமைய
புத்தாண்டு வாழ்த்துக்கள்.