வெள்ளி, அக்டோபர் 26, 2012

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு. வையகம் ஒருநாள் உணரும்;உணரும்; வையகம் ஒருநாள் உணரும்;உணரும்;

 திரை  கடல்  ஓடியும் திரவியம் தேடு.

நம் நாட்டு மக்கள்  வணிகம்,வேலைவாய்ப்பு என 
வெளிநாடுகளுக்கு   செல்கின்றனர்.
அப்பொழுது   அவர்கள் செய்யும் தியாகம்,
சிந்தித்து    பலவகையில் 
நாட்டு மக்களும் ,உற்றாரும் ,நண்பர்களும் 
உதவ வேண்டும்.
ஆனால்  நம் நாட்டின் மன நிலை;
வெளிநாட்டுப்பணம்   முடிந்த அளவு  கர .
என்று பிடுங்கும் கூட்டம்.
அந்நிய நாட்டில்  அலுவல் புரியும் .
அந்த இளைஞர்கள்  வந்தால் 
என்னகொண்டுவந்தார்கள் 
என்று  பார்க்கும் கூட்டம்.
செட்டிநாட்டு அழகு கட்டிடங்கள் பார்க்கிறோம்.
ஆனால் 
கோடிக்கணக்கில் சம்பாத்திதவர்கள் 
எத்தனை ஆண்டு குடும்பத்துடன் 
வாழ்ந்தார்கள் பாவம்.
ஆஸ்திகள் சேர்க்க அவர்கள்  செய்த தியாகம் 
நினைப்பவர்கள் யார்.???
மொழி மறந்து ,இனம் மறந்து,உற்றார் 
உறவினர்மறந்து செல்லவில்லை.
செட்டிமகன் ,கெட்டிமகனாக வாழ்ந்து,
செட்டி தமிழ் என்று தமிழ் வளர்த்த பெருமை.
வையகம் உணர்ந்து போற்றும்.

தமிழ் வாழ் இலங்கைத் தமிழர்கள் 
தமிழ் மொழிக்கு ஆற்றும் தொண்டு,
தமிழ் தமிழ் என்று,
ஆட்சியைப் பிடித்தோர்,
இந்தி எதிர்ப்பு என இளைஞர்களை 
பலியாக்கி 
சிற்றூரிலும் ,பேரூரிலும் 
மம்மி,டாடி , ட்வின்கில் ,ட்வின்க்கில்,
என்று பாட வைத்த பெருமை.
தன்  செல்வங்களை மத்திய அமைச்சராக்கி,
ஹிந்தி பேச வைத்த பெருமை.
அவ்வையின்  அறம்  செய விரும்பு 
பேசினால் ஊழல்கள் எடுபடாது 
என்று 
ரெயின் ரெயின் கோ எவே 
என மழலை அமுதம் 
கேட்கவைத்த பெருமை,
ஏ ,பி,சி,டி, என்ற இருபத்தாறு எழுத்தும்,
ஐந்து ஆங்கில " மீனைப்பிடி,தண்ணீரில் விடு"'
போன்ற ஐந்து பாடல் படிக்க 
குறைந்த பக்ஷம் பத்தாயிரம் ரூபாய்.
தப்பித்தவறி தமிழ் பேசும் 
மழலைகளுக்கு 
தர்ம அடி.அல்லது மிரட்டல்.
அரசியல் சட்டம் ஆங்கிலம் வளர்க்க அல்ல.
நாட்டு மொழிகள் வளர்க்க.
அதை மறைத்து 

ஹிந்தி படித்தல் தமிழ் அழித்தல்  என்ற மாயை.

இந்திய நாட்டில்,
தமிழ் நாடு,பாண்டிச்சேரி  பத்து கோடி மக்கள்.
மற்ற மூன்று மாநிலத்தில் 
26 கோடி மக்கள்.
அவர்கள் ஏற்ற மொழித்திட்டம்.
ஆங்கிலமின்றி  அரசு வேலை என்றால் 
எழுத்தர் வேலை கூட கிடையாது.
ஆங்கிலம்  வளர்க்க 
விடுதலை ஆன 67 ஆண்டுகள்,
நாம்பாடு பட்டிருக்கிறோம்.
தமிழாசிரியர் ஒன்றே தமிழ் வாய்ப்பு.
தேவாரம்பாடு என அரசு வழிகாட்டி.
மண்டபங்களும்,சிலைகளும் கட்டிய  கோடிகள் 
ஆங்கில புத்தகங்கள் மொழிபெயர்த்திருந்தால்.
அலுவலக  விண்ணப்பங்கள் தமிழில் அடித்திருந்தால் 
நாட்டு மொழி வளர்ந்திருக்கும்.
மேடைப்பேச்சில் தமில்வலர்த்து ,(தமிழ் வளர்த்து)
ஆங்கிலம் கலந்த தமிழ் பேசி 
தமிழ்  வருமானத்திற்கு வழிவகுக்காது,
என்ற சூழல் உருவாக்கி 
அமைதி காணும் அரசியல் தலைவர்கள்,
வையகம் ஒருநாள் உணரும்;உணரும்;




ய்தி »தமிழ்நாடு
அரசு பள்ளிகளில் ஆய்வு தமிழில் தடுமாறும் 9ம் வகுப்பு மாணவர்கள்

Advertisement

Advertisement
பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2012,23:59 IST
அருமை
பிடிச்சுருக்கு
பரவாயில்லையே
ஒன்பதாம் வகுப்பில், முழுமையாக தமிழ் வாசிக்க, எழுத தெரியாத மாணவர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககம், தமிழகத்தில், 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புக்கான கல்வித்தரத்தை மேம்படுத்த, பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், 9ம் வகுப்பில் மாணவர்களின் இடைநிற்றல் அதிக அளவில் இருப்பதால், அதில் இருக்கும் சிக்கல்களை களைய, "அச்சீவ்மென்ட் டெஸ்ட்' என்ற சாதனை கண்டறியும் சோதனை, அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டது.
இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் உள்ள, 9ம் வகுப்பு மாணவ, மாணவியரிடம் தாய்மொழியான தமிழை முழுமையாக வாசிப்பதிலும், எழுதுவதிலும், திறன் இருப்பது கண்டறியப்பட்டது. எந்த அளவுக்கு மாணவர்களின் கற்றல் பயன் அவர்களிடம் சேர்ந்து, அதனால் திறன் பெற்றிருக்கின்றனர் என்பதை கண்டறியும் வகையிலும் வினாத்தாள் அமைக்கப்பட்டது. இதைக் "கற்றல் அடைவு தேர்வு' என, அழைக்கின்றனர்.இச் சோதனைகளில், 20 சதவிகிதத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழை முழுமையாக வாசிக்கவும், எழுதவும் தெரியாத நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள, 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த, "கற்றல் அடைவு தேர்வு'களை நடத்தி, தமிழை முழுமையாக எழுதவும், படிக்கவும் முடியாத மாணவர்களை கண்டறியும் பணி, முழு வீச்சாக நடந்து வருகிறது.
தமிழ் மொழி முழுமையாக தெரிந்தால் மட்டுமே, தமிழ்வழி கல்வியில் படிக்கும் மற்ற பாடங்களையும், பிழையின்றி படிக்க முடியும் என்பதால், தமிழ் மொழியை முழுமையாக கற்றுத்தர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் கண்டறியப்படும் மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம், பள்ளி நேரம் முடிந்த பின்பும், சனிக்கிழமை களிலும், நவீன முறைகளில் தமிழ் மொழி எழுத்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
தாரத்தின்  தவறுகள்
சுட்டிக்கேட்டால்,
இல்லத்தில் இன்னல் தான்.

புயல்  அலைகள்  விண்ணைத்தொடும்.


தாரணி ஆளுவோர் ஊழல்  சொல்ல 
தனியான  தைரியம்  வேண்டும்.
salute to them who are courage to express list of corrupted  ministers. 

வியாழன், அக்டோபர் 25, 2012

ஊழல் பேசினால் உயிருக்கு ஆபத்து.


விடுதலைக்கு முன்.
அவனியல் அச்சமில்லை அச்சமில்லை,
இச் ஜகத்தில் உள்ளோரெல்லாம்
எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை;அச்சமில்லை;அச்சமென்பதில்லையே.(மஹாகவி பாரதி)
விடுதலைக்குப்பின்
அச்சம் உண்டு;அச்சமுண்டு;
அமைச்சரின் ஊழல் சொன்னால்;
அரவிந்த் கேஜறி. சொல் வாளுக்கு .
ஆளும் அமைச்சர் ஊழல் சொன்னால்
ஊருக்குத் திரும்ப மாட்டாய் .
ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில்;
வீர பத்திரர் ;ஹிமாலய முதல்வர்;
வெற்றிபெற்றபின் வெளியில் பதில்.
தோல்வி அடைந்தால்
ஒரு முறைப்பு.
பாவம் நிருபர்.
ஜனநாயக நாட்டில்
ஊழல் பேசினால் உயிருக்கு ஆபத்து.
வாழ்க ஜனநாயகம்.

வையகத்தின் இயக்கம்.



ஆயுதம்  ஒன்று நினைவுகள் அகற்ற;
வையகத்தில் இல்லை.
அப்படி ஒரு  ஆயுதம் ஒன்று உண்டாகின்
வையகம் இல்லை.
ஒரு பிரளயம் தான்.
சிலருக்கு
ஆண்டவனின்  நினைவு.
சிலருக்கு
பொருள் சேர்க்கும் நினைவு.
சிலருக்கு
உலகைக் காக்கும் நினைவு.
சிலருக்கு
இன்னல் தீர்க்கும் நினைவு.
சிலருக்கு
அல்லல் தீர்க்கும் நினைவு.
நினைவுகளும் கனவுகளும்
தான்
வையகத்தின்  இயக்கம்.


அதனால் தான் இன்னல்கள் சூழும் உலகம்நல்லது செய்து நானிலம் காப்பீர்! வையகம் போற்றும்.. அதனாலேயே பதவிகள் இழக்கும் சூழல்.

முப்பெருந்தேவிகளின் 
நவராத்திரி விழா 
முடிந்ததே.
தேவிகள் 
தேடிவந்து 
அருள் தரும் நாட்கள்.
பண்டிகைகள் ,
ஆராதனைகள்,
ஆனால்,
அந்த நாட்களில் 
பக்தர்களின்  பக்தி 
வியாபாரிகளுக்கு சக்தி.
இரண்டு நாவல்பழம் ஒரு ரூபாய்.
பூவின் விலை உயர்வோ 
பூமியை விட்டு விண்ணைத் தொடும்.
விலைவாசி ஏற்றம் தான் 
பண்டிகைகளின்  பலன்.
இந்த மூட பக்தி 
இறைவனின்  அருள்கிட்டவா?
இந்நில  உலகின் பொருள் கிட்டவா?
அதிக விலைவாசி ஏற்றி 
ஆன்மிகம் வாணிகமாவதால் 
ஆண்டவன்  தரும் விலை ஏற்றம்.
பக்தி வெளிப்பகட்டாக மாறியதால்,
மின்தட்டுப்பாடு.
கும்மிருட்டு.
ஆலயம்  செல்வதால்.
யாகம் செய்வதால்,
தண்டனைகுறையும்;
பாவங்கள்  போகும்  என்றால் 
பதவிகள் போவதேன்.
கோடிகள் பல இருந்தாலும் 
நெஞ்சுக்கு  நிம்மதி  இல்லை.
தொல்லைகள் என்பது 
விபத்துக்கள் மூலம்.
நோய்கள் மூலம்.
தோழிகள் மூலம்.
பிள்ளைகள்  மூலம்.
தொண்டர்கள் மூலம்.
எப்படியும் வரும்.
தர்மம் தலை காக்கும்.
செய்த புண்ணியங்கள் 
பலன் தரும்.
பாவங்கள்  தண்டனை தரும்.
இது தேவனின் தீர்ப்பு.
வாழ்க்கையின் அனுபவம்.
அதனால் தான் 
இன்னல்கள் சூழும் உலகம்.
அதனாலேயே 
பதவிகள் இழக்கும் சூழல்.
மனம் திருந்தும் நேரம்பதவி.
பதவி பெற்ற ஊழல் தோல்வி.
சிந்திப்பீர்!செயல் படுவீர்!
பல்லாயிரம் பேருக்கு நமை செய்யும் 
திட்டம் தீட்டுவீர்.
நினைவுச் சின்னங்கள்  சில ஆயிரம் போதும்.
மக்கள் நன்மைகளுக்கு  பல கோடி.
ஒரு துருப்பிடிக்காத  தூண் 
இன்றுமுள்ளது.அதுபோதுமே நினைவுச் சின்னம்.
வெள்ளம் சூழ்ந்து தத்தளிக்கும் மக்கள்.
கண்ணீர் சிந்தும் மக்கள்.
சமாதிபுதுப்பிக்க ,வளைவு வைக்க பலகோடி.
அம்மையீர்! சிந்திப்பீர்!
நிரந்தர முதல்வராக 
அடுத்த  வெள்ளம் 
சாலையிலோடாமல்,
கால்வாயில் ஓடட்டும்.
அம்பத்தூர்,ஆவடி,மடிப்பாக்கம்,பள்ளிக்கரணை 
மக்கள் பாவிகளா?அங்கு வீடு கட்ட அனுமதி அளித்த 
கடன் அளித்த அதிகாரிகளா?அமைச்சர்களா ?
அல்ல இந்த அல்லல்களுக்கு நிரந்தர 
நிவாரணம்  காணா  முதல்வர்களா ?
நல்லது  செய்து
நானிலம் காப்பீர்!
வையகம் போற்றும். 
அசோகர் செய்த கொடுமைகள் மறந்து,
மரம் நட்டார்;சாலைகள் அமைத்தார்  என போற்றும் உலகம்.
அல்லல்பெரும்மக்கள் துயர் தீர்க்க துரவரம்பூண்ட புத்தர்.
சித்தர்கள்.
முற்றிலும் துறந்த மகாவீரர்.
ஆனால் ,இன்று 
வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம்.
நாட்டு மக்கள் ஏழைமக்கள்,நடுத்தர மக்கள் 
பஸ் படிக்கட்டுகளில் தொங்கி மரணம்.
இந்தியா ஏழைநாடா ?
இரக்கமற்ற தலைவர்கள்,
உலகில் நான்காவது பணக்காரி  வாழும் நாடு.
இந்த கோடிகள்  வெறும் கோடித் துணிக்கு.


புதன், அக்டோபர் 24, 2012

மீண்டும் மக்கள் சிந்தனைக்கு


மீண்டும் மக்கள் சிந்தனைக்கு 


தமிழ்நாடு  மழை  பெய்கிறது.

ஏரிகள் விலை நிலமாகின்றன.

இலவசங்கள்  அதனால் என்ன பயன்.
மடிகணினி மடியில்.
மின்சாரம் இல்லை.
இன்டர்நெட் வசதி இல்லை.
அதற்குமாதம் பணம்கட்ட
 வழியுமில்லை.
பாதுகாப்பான மிதிவண்டி பயனத்திர்கேற்ற 
சாலை வசதிகள் இல்லை.

தலைவருக்கு சமாதி அவசியம் தான்.
ஒவ்வொருமுறையும் அதன் வடிவழகு
 மாற்ற கோடிக்கணக்கில் 
சிலவு செய்து மக்களுக்கு 
அடிப்படை வசதிகள் செய்யாமலிருப்பது 
அத்தலைவரின் ஆத்மா துன்புறும்  செயல்.

ஒரு தலைவர் வைத்த வளைவோ என்ற ஐயத்தால் இடிப்பு.
நம் தலைவர்   வைத்தது என அமைப்பு.
கோடிக்கணக்கில் பணம் சிலவு.
யார்  பணம்!!!
இது நமது வரிப்பணம்.
சட்டசபை மாற்றம்.
  கோடிக்கணக்கில்  பணம் விரயம்.
மீண்டும்  பொன் விழா வளைவு .
கோடிக்கணக்கில் சிலவு.
யார் பணம்!!
மடிப்பாக்கம் ,ஆவடி;அம்பத்தூர்,பள்ளிக்கரணை 
ஒவ்வொரு ஆண்டும் மக்கள் படும் அவஸ்தை;
இது மீண்டும் ஊழலுக்காக.
செய்த சிலவே செய்து 
மக்களை   ஏமாற்ற.
 மக்களி ன் அமைதி;
இவர்களுக்கு  வசதி.
நடுத்தர வருமானம் 
போராட வசதியுமில்லை;
வருமானமும் இல்லை.
ஆளுவோருக்கும் அதிகாரிகளுக்கும்,
வட்டங்களுக்கும் மன சாட்சியும் இல்லை.
ஆண்டவனுக்கும் இரக்கமில்லை.
ஆள்வோருக்கும் இரக்கம்ல்லை.
பிரம்ம சக்தி ஆலயம் அமைந்த சாலை;
போக்குவரத்து மிகுந்த  சாலை;
குண்டும் குழியுமாய்  அல்லல் படும்மக்கள்.
பல ஆண்டுகளாய் மக்கள் படும்    துன்பங்கள் தெரிந்தும் 
நிலையான நிவாரணம் செய்ய அரசு.
மனசாட்சி இல்லோரே!
நீங்கள் செய்யும் பாவம்
புண்ணியம்
என்னைப்போன்ற ஆத்மாக்கள் ஏசும் ;போற்றும்.
மரணம் திண்ணம்.





उसमें कमीशन नहीं मिलता।

चुनाव 

देश के हित केलिए चुनाव 

इस केलिए बेकार खर्च।
ये पद स्थाई नहीं हैं;
यों सोच-समझकर 
 करोड़ों की संपत्ति खर्च करके 
बनते हैं विधायक;सांसद;
यह तो अवधि पांच सालकी;
बादमें फिर चुनाव में
 जीतेंगे या हारेंगे ,
नामी दल  फिर  उम्मेदवार चुनेगा या नहीं;
यदि हार जाएँ तो खोटे  सिक्के बन जायेंगे;
अतः इन पांच सालोँ  में जितना चाहे लूटो।
वे नहीं चाहते स्थायीपद;
चाहते तो करते सच्ची सेवा।
ईमानदार ,आदर्श सेवक  चुनाव में हार जातेहैं;
कुल्जारी लाल नंदा अपमानित हुए।
कर्मवीर कामराज,जिनका  बैंक बैलेंस नहीं 
हार गए  चुनाव में;
जनता चाहती है चुनाव में 
धन;
मुफ्त की  घोषणा करके,
जनता के कर पैसों में 
मिक्सी,ग्राइंडर,सायिकिल् लैप-टॉप बांटकर 
देतेहैं  रिश्वत जनता को।
लेपटॉप  देते  हैं  मुफ्त।
बिजली नहीं; इन्टरनेट की सुविधा  नहीं;
जनता के पैसों  को दान जनता को;

सड़कें कच्ची;जलधारा नहीं;
मच्छ्रों    का भरमार । 
समाधी को  नया रूप देने  करोड़।
आर्च  तोड़ने पुनार्निर्माण  करने 
करोड़ों रूपये;
शिला  तोड़ने  शिला फिर स्थापित करने करोड़ों रूपये;

जनता को जल नहीं;
पहले  सड़कें  बनाओ;
जनता को सुख से रखो।

ये देश के सेवक अपनी संपत्ति  जोडने  की,
कमीशन मिलनेकी योजनामें लगे रहते हैं।
गाँव के गाँव खाली  होते हैं 
उसका  ध्यान नहीं रखते।
वर्षा होती हैं;पानीबेकार होता है।
उसको सुरक्षित रखने प्राथमिकता नहींहै;
उसमें कमीशन नहीं मिलता।
यही तमिलनाडु राजनीति।









செவ்வாய், அக்டோபர் 23, 2012

சாதாரண குடிமகன் என்ன செய்ய முடியும். இது ஆன்மீக வரலாறின் சாரம்.

சாதாரண குடிமகன் என்ன செய்ய முடியும். இது ஆன்மீக வரலாறின் சாரம்.

நவராத்திரி ;.தீபாவளி;சூரசம்ஹாரம்.
முஹர்ரம்;ஈஸ்டர் ;

தீய சக்திகளை தேவ சக்திகள் 
அழிக்க முடியாது.
தெய்வமே நேரடியாக வரவேண்டும் 
என்ற 
தத்துவத்தின் சாரம்.

தேவ அரசன் இந்திரன் பதவி 
போகக்கூடாது என்பதற்கு ஓணம்.
வாமனாவதாரம்.
வரம்பெற்ற அசுரனால் 
சிவன் தலை வெடிக்கும் சூழ்நிலை.
மோகனாவதாரம்.
கல் அடி வாங்கிய  முஹம்மது நபி,
சிலுவையில் தொங்கும் ஏசு நாதர்.
இந்த உலக  வாழ்க்கையின் 
அதி பயங்கர நிகழ்வுகள்.
பின்னரும் நாம் 
ஊழல் பற்றி எழுதுகிறோம்.
லஞ்சம் பற்றி எழுதுகிறோம்.
அரசியல்படு கொலைகள் பற்றி ,
நீதிமன்றம் ஜாமீன் விடுதலை பற்றி.
இது நம் முட்டாள் தனம் அல்லாவா?
தெய்வ சக்திகளுக்கே இந்நிலை.
சாதாரண குடிமகன் என்ன செய்ய முடியும்.
இது ஆன்மீக வரலாறின் சாரம்.


திங்கள், அக்டோபர் 22, 2012

பாரத நாடு பாக்கியவான் களுக்கு. பணக்காரர்களுக்கு வாழ்க ஜனநாயகம்.


பாரத நாடு பாக்யவான்களுக்கு.

பணம்படைத்தொருக்கு.
கல்வி வேண்டுமா?
மருத்துவம் வேண்டுமா/
நீதி வேண்டுமா?
கழிப்பறை வேண்டுமா?
கழிவு நீர் வடிகால் வேண்டுமா/
வீடு கட்டவேண்டுமா//
அங்கீகரிக்காமல் கட்டடம் 
கட்ட வேண்டுமா?
தண்ணீர் இணைப்பு வேண்டுமா/
பத்திரப்பதிவு வேண்டுமா?
மின் இணைப்பு வேண்டுமா?
பணம்!பணம்!பணம்!
அரசு ஆரம்பப் பள்ளிகளில் 
மாணவர்களைவிட 
ஆசிரியர்கள் அதிகம்.
அரசு மருத்துவ மனை 
ஆண்டவனுக்கே வெளிச்சம்.
ஊழல்!ஊழல்!ஊழல்!
லக்ஷரூபாய் ஊழல் மந்திருக்கு அழகல்ல.
பல கோடி  ஊழலே மந்திரிக்கு அழகு.
இருநூறு லஞ்சம் வாங்கும் கடைநிலை ஊழியருக்கு தண்டனை.
கோடிக்கணக்கில் ஊழல் செய்தால் 
ஜாமீனில் விடுதலை.
வாழ்க ஜனநாயகம்.

பாரத நாடு  பாக்கியவான் களுக்கு.
பணக்காரர்களுக்கு 
வாழ்க ஜனநாயகம்.

.இயற்கையின் நியதி ஏற்று சமாதானம் அடையத்தான் வேண்டும்.

இயற்கையின் நியதி  ஏற்று சமாதானம் அடையத்தான் வேண்டும்.

அகவை   கூடுகிறது.
ஆற்றல் குறைகிறது.
அன்பான குழந்தைகள்
அழகான பேரன் ,பேத்திகள்,
மகிழ்ச்சிக்கு  குறைவில்லை.
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் .
இருப்பினும் மூப்பு,
தள்ளாமை,
இயலாமை.
அதனால் வரும் கோபம்.
உணவுக்கட்டுப்பாடு.
புதுவகை  உணவுகள்.
நம்காலக் கருத்துகள்.
நிகழ கால கருத்துகள்.
எண்ணெய்  தேய்த்து குளித்தல்.
சின்ன சின்ன விஷயத்திலும்
எவ்வளவு பெரியமாற்றம்.
சாப்பிடும் நேரத்தில்
உடல் நலத்திற்காக
சொன்னாலும்,
அதில் அக்கறை என்று தெரிந்தாலும்
என்ன பாப்பம் செய்தோமோ என்ற  எண்ணம்.


ஈர்க்கவில்லை.
உள்ளத்தில் எதோ சோர்வு.
ஊக்கம்   குறைந்ததாலோ,
என்னவோ,அனைவரும்
ஏளனம்  செய்வதுபோல்  ஒரு
ஐயம்.
முப்பதாண்டு   அகவை வேறுபாட்டால்,
காலத்திற்கேற்ற  அறிவு குறைவுதான்.
அறுபத்தைந்து ஆண்டுகளில் ஆன மாற்றம்.



நாம்படித்த  ஆத்திச்சூடி,கைவீசம்மா கைவீசு,
அம்மா சுட்ட தோசை   சொல்ல,
அவர்கள் தமிழ் வராது என்பதுபோல்
ஆங்கில ஏ ,பி சி,பாடல்
நமக்கு ஒவ்வாததுபோல்,நாம்சொல்வது
அவர்களுக்கும் ஒவ்வாமை ஆகிவிட்டது.

நடந்து சென்றால் நல்லது என்பது,சொல்ல முடியாது.
இப்பொழுது வாசப்படியில் நான்கு சக்கர வாகனம்,
அல்லது இரு சக்கரவாஹனம்.
நாம்பெசுவதேல்லமே காலத்திற்கேற்றார் போல் இல்லை.

இப்பொழுது என்  தாத்தாவின்  நினைவு.
அவர் காந்தி கதை கூறி,
பென்சில்  சிறிதானாலும் எழுதச்சொல்வார்.
வெள்ளைக்காகிதம்  வீணாக்கக் கூடாது என்பார்.
ஒருபென்சில்வாங்கி  இரண்டாக ஒடித்துத்
தருவார்..

அப்பொழுது தாத்தாவின் மீது எரிச்சல்  வரும்
.
இன்று  சிக்கனம் பற்றி பேச முடியாது.

அறிவியல்  வளர்ச்சி.தொலைகாட்சி,கணினி
அதிகம் பார்க்காதே;கண் கெடுதல் என்றால்,
தாத்தாவின் மீது நான் பட்ட எரிச்சல் தானே ,
 பட்ட எரிச்சல்  தானே  பேரன் பத்திகளுக்கும்.
 அவர்களுக்கும்
தாத்தாவின் மீது வரும்.
இவ்வாறு  பல  .

இயற்கையின் மாற்றங்கள்.
அறிவியல்மாற்றங்கள்.
அகவை கூடி ஓய்வு பெறும்போது,
அலைபாயும்  பாயும் எண்ணங்கள்
அறியாமை,ஒவ்வாமை,
ஓஹோ! இது தான்

காலன்  வரும் நேரம்.
காலனை விரும்பி ஏற்கும் நேரம்.
கடமை முடிந்து விட்டது என
நீ   நிம்மதியாகப் போகலாம்
என    சக வயதினர்  பேசும் காலம்.
இயற்கையின் நியதி .
பெருசு அனைத்தும் செய்து சென்றுவிட்டார்.
கல்யாணசாவு  என சமாதனம் செய்து கொள்ளும் காலம்.
இயற்கையின் நியதி
ஏற்று சமாதானம் அடையத்தான் வேண்டும்.